
அடி வான தேவதையே
என் ஆசைக்காதலியே
உனக்குள் நான்வந்து புகுந்ததை அறிவாயா
உன்மேகமூட்டத்துக்குள் என்மூச்சுக்காற்றை உணர்ந்தாயா
ஆணுக்குள் பெண்வந்தால் அவன்அந்தரத்தில் பறப்பானாம்
அடிஉனக்குள் நான்வந்ததும் ஆகாசத்தில் மிதக்கிறேனடி
உன்வட்டநிலாக் கண்ணத்தை தொட்டுவிடத்துடிக்கிறேன் -அது
முடியாமல் போகவே தினம் தினம் தவிக்கின்றேன்
விமானமானநான் வானமான உன்னுள்வரும்போது
என்னுள் இருப்பவர்களுக்கு நமக்குள் நடக்கும்
காதல் நாடகம் எதுவுமே தெரியாது
நம்மிருவருள்ளும் துடிக்கும்துடிப்பு எவருக்கும்புரியாது
கீழிலிருந்து நம்மை பார்ப்பவர்களெல்லாம் -ஏதோ
நான்உன்னை உரசிச்செல்வதாய் உரக்கப்பேசுகிறார்கள்
அவர்களுக்கு தெரியாதடி நமக்குள் இருக்கும்இடைவெளி
இருந்தபோதும் நமக்குள் என்றும்உண்டு அன்பொளி
பல பல காதல்களை பூலோகம்கண்டிருக்கும் -ஆனால்
இதுபோன்றொரு காதலை இந்தவிண்ணுலகம் கண்டதுண்டா
உலகம் அழியும்வரை உன்னுடன்மட்டும்தான்
என்காதல் வாழ்க்கை
என் வாழ்க்கை உள்ளவரை இந்தவானம்தான்
என்காதல் கோட்டை
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்