விடிந்தும் விடியாத வானம்
கலைந்தும் கலையாத கார்மேகங்கள்
கம்பளிப்போர்வையை இழுத்துப்போர்த்தியபடி நடக்கின்றேன்
புகைப்புகையாய் வந்தகறுப்புக்காற்று என்கன்னங்களை உரச
உதட்டை குவித்து ஊதிப்ப்பார்த்தேன்
கன்னத்தின்வழியே சென்றகாற்று வாயின்வழியே
வெளியேவந்தது நடந்தபடியே கண்களை ஓடவிட்டேன்
பச்சையின்மேல் இச்சைகொண்ட பனித்துளி
புல்வெளியின்மேல் படுத்து உறங்கிக்கொண்டிருக்க
பலவண்ணப்பூக்களும் குளிரில் குளித்து நடுங்க
பூக்களுக்கும் போர்வை நெய்யவேண்டும் என்று
எண்ணியபடி எட்டுவைத்து நடந்தேன்
தூரத்தில் கைக்குள் கைகோர்த்துக்கொண்டு
நடையில்கூட பிரிவினையை விரும்பாத காதலர்கள்
காலோடு கால்கள் பின்னியபடி நடந்துசெல்ல
சூரியகாந்தி பூக்கள்மட்டும் சற்றுதலைதாழ்த்தியபடி
தன் சூரியகாதலனின் வருகையை எதிர்நோக்கி நின்றன
காற்றையும் மீறி கொலுசின் ஓசை காதுக்குள் வந்தது
சுற்றும் முற்றும் பார்த்தபடி வேகமாய் நடைநடந்தேன்
எதிரே மலையரசி தன்மானத்தை பச்சைப்பட்டால்
மறைத்து நிற்க அவளின் இடையோரம்
வழிந்தோடும் வெள்ளையருவி சலங்கை ஒலியோடு
தன் நீரையெல்லாம் பூமிக்குதானம் தந்துகொண்டிருந்தது
இதையெல்லாம் கண்டுரசித்தபடி
குயில்கள்களின் கானங்களைக் கேட்டபடி
மலையின் மகள்மடியில் சற்று அமர்ந்து
கண்களைமூடி கண்டுவந்ததையெல்லாம்
அசைபோட்டுக்கொண்டிருக்கையில்
இருகரங்கள் என் தோள்களை அசைத்தன
கண்விழித்து பார்த்தபோதுதான் தெரிந்தது
கண்டதெல்லாம் அதிகாலை கனவென்பது
கனவுகள் கலைந்தும்
கலையாமல் நான்,,
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
கவிஞர் மலிக்கா,
பதிலளிநீக்குஉங்களோடு நாங்களும் கூடவே வந்து
அந்தக் காட்சிகளையெல்லாம் கண்டு
இரசித்ததுபோல் இருந்தது.
படித்து முடித்ததும் பார்த்தால்... கனவு!
நல்ல வர்ணனை...அதற்கேற்ப்படங்கள்....இரசிக்கும்படியாக இருந்தது...வாழ்த்துக்கள்....!
பதிலளிநீக்கு//கவிஞர் மலிக்கா,
பதிலளிநீக்குஉங்களோடு நாங்களும் கூடவே வந்து
அந்தக் காட்சிகளையெல்லாம் கண்டு
இரசித்ததுபோல் இருந்தது.
படித்து முடித்ததும் பார்த்தால்... கனவு!//
ரொம்ப சந்தோஷம் அண்ணா என்னோட கணவுகளின் காட்ச்சிகளை நீங்களும் கண்டு ரசித்தமைக்கு,
நன்றி
//நல்ல வர்ணனை...அதற்கேற்ப்படங்கள்....
பதிலளிநீக்குஇரசிக்கும்படியாக
இருந்தது...வாழ்த்துக்கள்....//
மிகுந்த சந்தோஷம் வாழ்த்துக்கு மிக்க நன்றி
மல்லிக்கா,அழகான வலைத்தளம்.
பதிலளிநீக்குஅதில் இயற்கையின் பசுமை.
அதற்குள் உங்கள் கவிதை அழகோ அழகு.வர்ணனை அற்புதம்.பாராட்டுக்கள்.