நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கொண்டவனல்ல கொடும்பாவி..


கட்டிய மனைவி
கண்மணிக் குழந்தைகள்
கதறும்படி செய்துவிட்டு
காணாதூரம் போன உன்னை

காவல் காக்கவேண்டியவன்
காக்கும் கவலையை மறந்து
கஷ்டப்பட வைத்துவிட்டு
காணாமல் போன உன்னை

ஊரார் பேசும்படி
உடம்பெல்லாம் கூசும்படி
ஒற்றையாய் தவிக்கவிட்டு
ஓடிப்போன உன்னை

ஏனென்று கேட்க
ஏறெடுத்தும் பார்க்க
நாதியற்றுப்போய்
நடுத்தெருவில் விட்ட உன்னை

என்ன சொல்வேன்
நான் உன்னை
என்ன செய்வேன்

மனமில்லா உன்கூட
மணமுடித்துக் கொடுத்ததினால்
மற்றவர் சொல்கேட்டு
மணந்தவளை பிரிந்தாயே

ஆயிரம்பேர் சொன்னாலும் -உன்
அறிவெங்கே போனதடா
அன்பு வச்சேன் உன்மேல
அத்தனையும் கானலடா

பரிதவிக்கவிட்டு போய்விட்ட-நான்
படும்பாடு பார்க்காம
பிள்ளைகளும் என்கூட
படுகிறதே பலவேதனைகள்

கொண்டவனே உன்னை நம்பி
கைப்பிடித்து வந்ததற்கு
கொடுத்துவிட்டாய் கைமேல்கூலி
கழுத்தை நெறித்துவிட்டு

பந்த பாசங்கள் மறந்துவிட்டு
பாதியில போனவனே
சீர்கெட்டு போவேன்னு
சிறிதளவும் நினைக்காதே!

தன்னந் தனியாக நின்று
தங்கங்களை வளர்த்திடுவேன்
தரம்கெட்டுப் போகாம
தன்மானம் உள்ளவளாய்
தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சந்திப்போமா! சென்னையில்.


அன்பு உள்ளங்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு.
சந்திக்கலாமா! சென்னையில், ஆவலாக இருக்கிறேன் வாருங்கள்
”எங்கே”   ”எப்போது” 
முதலில் இதைபடித்துவிட்டு கடைசிபக்கத்துக்கு வாருங்களேன் சொல்கிறேன்.

சமையல் அட்டகாசம் ஜலீலாக்காவை தெரியாதவர்கள் யாருமிருக்கமுடியாதுன்னு நினைக்கிறேன்.
அவர்கள் சென்ற 2 வாரங்களுக்கு முன்  ஊருக்கு சென்றுள்ளார்கள். ”எங்கே” ”வேறெங்கே சென்னைக்குதான்” அவர்களின் தங்கை மகள் திருமணத்திற்காக சென்றுள்ளார்கள்,திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

இன்னொறு முக்கிய செய்தி நல்லதை ஏற்றுக்கொள்வதுபோல் சில சங்கடங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதாய் அவர்களின் தந்தைக்கு காலில் ஆப்ரேஷன் செய்துள்ளர்களாம்.வயது ஆக ஆக உடலில் பலகோளாறுகள் ஏற்படுவதும் அதனோடு போராடுவதுமே வாழ்க்கையாகிவிட்டது. எவ்வளவோ மருத்துவசதிகள் வந்தபோதும் மனச்சங்கடத்தைபோக்க மருந்துகளில்லையே! ஆறுதல்கள்தரும் வார்த்தைகளைதவிர.அவர்களின் தந்தை நல்லபடியாக குணமாவும், உடல் ஆரோக்கியத்துடன் வாழவும்,எல்லாம் வல்ல இறைவனிடம் அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்.ஆப்ரேஷன் முடிந்து இன்றோடு நான்காம் நாள் ஆகிறது, நான் அடிக்கடி அக்கவிடம் போனில் தொடர்புகொள்கிறேன்.

அப்புறம் இன்னொரு விசயம். இம்மாத இறுதிக்குள் [31]ஜலீலாக்கா துபை வந்துவிடுவார்கள், அதனால் அவர்களை சந்திக்க நினைக்கும் பதிவர்கள் நாளை மாலை 5-9 மணிவரை  சந்திக்கலாம். ”எங்கே”
’அவங்க கடையில்தான்’ ’கடையெங்கேயிருக்கு’    ”இதோ இங்கேதான்”


Chennai plaza
ideal shop for ladies garments,fancy items, hand bags,
food wear,cosmetics,kids wear etc.
stockists in all types of burkha, abaya,scarf, sahal,dupatta,hijab,etc.

Chennai plaza
No.277/30,Pycrofts Road, ist Floor,[opp:shopa],Thiruvallikkeni ,Chnenni-600 005.

phone: 044 4556 6787
E-mail:Chnenniplazaik@gmail.com


இது மொய்தீன் பாய் போன் நம்பர் 7845367954
மொய்தீன் பாய் அவர்களிடம் ஜலிக்காவைபற்றி தொடர்புகொள்ளலாம்.
இது கபீர்அவர்களின் போன் நம்பர் 9677288721. இவர்களையும் தொடர்புகொள்ளலாம்.

இருங்க இருங்க. இன்னொரு முக்கியமான செய்தி சொல்லமறந்துட்டேனே!
இதேமுகவரியில், இதேகடையில், எனது கவிதை தொகுப்பான உணர்வுகளின் ஓசை கவிதை புத்தகமும் கிடைக்கும். வாங்கிப்படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிப்பீர்கள் என்று எதிர்பார்கிறேன். ஜலிக்காவின் ஏற்பாடுதான் இது. பதிவர்கள் சந்திப்பில் நானும் இருப்பேனுல்ல கவிதை தொகுப்பாய் எப்புடி .

மணிமேகலை வெளியீடு
புத்தகத்தின் விலை 55: ரூ

 என் முதல் கவிதை  தொகுப்பு இது. இதில் வரும் வருவாயை சில நல்லவைகளுக்காக கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். நாமும் ஒன்றும் பெரும் வசதி வாய்ப்புகள் நிறைந்தவர்கள் அல்ல, ஆனபோதும்  நம் எழுத்துக்களால் சில ஆன்மாக்களாவது பயனடையட்டுமே என்ற எண்ணம்தான்.
 மீண்டும் சொல்கிறேன் வாங்கிபடித்துவிட்டு தங்களின் அன்பான கருத்துக்களை பகிருங்கள்.குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.அப்பதான் அடுத்த தொகுப்பு போட இன்னும் ஊக்கம் வரும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தவறு யார் மீது?


டிஸ்கி//
காலத்தின் கோலம்
தன் திசைகளில்
கோளாறென்று
திசையே இல்லாப் பக்கம் 
திசையென நினைத்து 
திசைமாறிப் பறக்கத் துடிக்கும் 
தான்தோன்றி இனங்களாய்-சில
தற்கால மனிதப்பறவைகள் .
 அதனால் எழுதத் தோன்றியது
மேலே உள்ள கவிதை வரிகள்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இறவா நட்பு..


நன்றி முதுகுளத்தூர்.காம் 

என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” 
ராசல் கைமாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இருந்த பத்திரிகை நிரூபர் திரு முதுவை ஹிதாயத் அண்ணன் அவர்களுக்கும். ”தந்தை”பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்களுக்கும். எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் இதனைபற்றிய முழுவிபரத்தை இங்கு சென்று பார்க்கவும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஒலிவடிவில் என்கவிதைகள் [இணைய தமிழ் ரேடியோவில்]

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

உங்கள் அனைவருக்கும் தெரிந்ததிருக்கும் என் முதல் கவிதைதொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” வெளியானது. அது வெளியானதிற்கு பின்பு கற்றறிந்தவர்களும். கவிமேதைகளும். நல்லுள்ளம் நிறைந்தவர்களும். என்னை வாழ்த்தியும், என் எழுத்துக்களைபற்றி பாராட்டியும் நிறைய மெயில்வழி கடிதங்கள் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சியும் புகழும் இறைவன் ஒருவனையே சேரும்.

அப்படி வந்த மெயிலில்  சந்தோஷசெய்தியையும் சுமந்துவந்த மெயில்தான். சாத்தாங்குளம்  பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்.மற்றும். திரு.அப்துல் ஜப்பார் அவர்களிடமிருந்து வந்த அந்த மெயிலைகண்டதும் மனம் சந்தோஷபட்டதுடன் உடனே சஜதாவிலும் விழுந்தேன் இறைவனுக்கு நன்றி சொல்லி,

இறைவன் தந்த இந்த உலகவாழ்க்கையில். மனம் நிறைந்த மணவாழ்க்கை, முத்தான குழந்தைகள். பாசம் மிகுந்த குடும்பத்தார்கள். என எல்லாத்தையும் தந்த இறைவன். எனக்குள் எழும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அதையும் உலகறிசெய்ய வாய்ப்பளித்துள்ளானே இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும் நிறைவு. இப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைதந்த இறைவனை அனுதினமும்   நேசிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

 ”அப்படி என்ன எழுதியிருந்தார்கள்  என்று கேட்கிறீர்களா?” இதோ அவர்கள் எழுதிய அன்பான  கடிதத்தலிருந்து சிலவற்றை  இங்கே உங்கள் பார்வைக்கு

அன்புள்ள ‘பேத்தி’
அஸ்ஸலாமு அலைக்கும்,
.உங்களின் படைப்பான “ உணர்வுகளின் ஓசை” என் கைகளில் கிடைத்தது.
நேற்று உங்கள் நூலை வாசித்தேன். பாசாங்குகள் இல்லாத பாணி. எளிய-இனியநடை. சொல்லும் முறையில் ஒரு துல்லியம். உணர்வுகளின் வெளிப்பாட்டில் ஓர் அடர்த்தி.அதன் வடிவமைப்பில் ஒரு நேர்த்தி. புலம் பெயர்ந்தும் - கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் வாழும் என் இனப் பெண் ஒருத்தி இவ்வளவு கெட்டிக்காரியா...?-----வியந்து போனேன். One time wonder - ஆக நின்று விடாமல் இனியும் பல நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்பது என்னுடைய ஆசை - ஆசி. வாழ்க....வளர்க...தொடர்க...!

இன்ஷா அல்லாஹ் நான் தாயகம் திரும்பியதும் உங்களின் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து ஒலிபரப்புச் செய்ய எண்ணியுள்ளேன். உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பையும் சலாத்தையும் தெரிவியுங்கள்.
வஸ்ஸலாம். ஹுதா ஹஃபிஸ் -
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

அவர்கள் சொன்னதுபோல் இதோ இன்று என் கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் http://worldtamilnews.com/ இணைதளத்தில்,
திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் கம்பீரக்குரலால் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
அவர்களில் கம்பீரக்குரலால் வாசிக்கப்படுவதை கேட்டு, என் உடலும் உள்ளமும் சிலிர்கிறதுது . இன்னும் அடுத்தடுத்து இடையிடையில் மற்ற தேர்வுக் கவிகளும் வாசிக்கப்படுமாம்
அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். முடிந்தால் அங்கிருக்கும் ஃபீட் பேக்கில் என் கவிதைகளைபற்றி உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்..

எத்தனையோ கவிபடைப்போர்களுக்கிடையில் என்னுடைய கவிதைகளையும்படித்துவிட்டு அதனை பாராட்டி கடிதம் எழுதியதோடில்லாமல், தான் சொன்னதையும் சொன்னபடி நிறைவேற்றிய ”அப்பா” அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்து இன்னும் என்னைபோன்ற வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதோடு .

என்கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/ இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான சாத்தாங்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களுக்கும் எங்களின்   அன்புநிறைந்த நன்றிகளை பாசத்தோடு சொல்லிக்கொள்கிறோம் ..

இன்ஷா அல்லாஹ் இன்னும் இதோன்று நல்லுள்ளங்களின் வெளிப்பாடுகளை இடையிடையே வெளியிடுவேன்.

என் மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் தாங்கள் அனைவருக்கும் பங்குண்டு.
அன்பாலும் பாசத்தாலும் ஊக்கமென்னும் கருத்துக்களாலும் தாங்கள் அனைவரும் என்னை தூண்டிக்கொண்டிருக்கிறீகள். இன்னும் பல நல்ல ஆக்கங்களை தருவதற்கு தூண்டுகோல் இருக்கவேண்டுமெனவும். இறைவனிடம் வேண்டும் உங்களின் பிராத்தனைகளில் எங்களுக்கும் சேர்த்து வேண்டும்படியும் கேட்டுகொள்கிறேன்...


என்றும் உங்கள் அன்பில் வாழநினைக்கும்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

பெண் எழுத்து...

என் எழுத்து அதாவது பெண் எழுத்து இதைபற்றிய தொடர்தான் இது.  இன்று மார்ச் 17  எங்களின் இரு மனங்கள் இணைந்ததிருமணநாளில் என்னெழுத்தைபற்றி எழுத அழைத்த ஸாதிகா அக்காவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எழுத்து இது எல்லோருக்கும் சொந்தம். எழுதப்படிக்கத்தெரியாதவர்கூட எண்ணும் எண்ணத்தை இதயத்தில் எழுதிக்கொள்ளலாம் நியாபங்களாக என்ன சரிதானே! எழுத்து இதன் எழுச்சியை கடந்த சிலகாலங்களாகதான் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன் அதனை உளமாற நேசிக்கிறேன்.உள்ளதை சொல்லவேண்டுமென்றால் இப்போதுதான் எழுதிப்படிக்க கற்றுக்கொள்கிறேன்.

எழுத்தால் எதையும் உயர்தலாம். அதேபோல் எதையும் தாழ்த்தலாம் என்பதையும் உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் இவ்வுலகத்தில். எழுத்துச்சுதந்திரம் இருப்பததென்பதற்க்காக எதையும் எழுதிவிடலாமென்று நினைப்பதல்ல, அது ஆணெழுத்தாக இருக்கட்டும். பெண்ணெழுத்தாக இருக்கட்டும்.தன் சுயலாபத்திற்காக தனக்கு எழுத்துச்சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் நினைத்து தாகதவைகளையும் தான்தோன்றிதனத்தையும். எழுத்துக்கள் மூலம் பரப்பி, பிற மனவுணர்வுகளை நோக்கடிப்பதிலும்.ஏன் சிலநேரம் அவ்வெழுத்தினால் உயிர்களைகூட சாகடிப்பதிலும் என்ன லாபம்?

ஆண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், குளிரூட்டி குவித்தும். கிளர்ச்சியூட்டி சிலிர்த்தும். கோபக்கனல்கொண்டு கொதித்தும். எழுத்துக்களை படைக்க நினைக்கிறான். படைப்பான் எல்லைக்கோட்டைத்தாண்டி. பலநேரங்களில் அகம்புறம் அனைத்தும் கூனிக்குறுவதுபோலவும் அமையும். பெண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், மென்மையாகவும். அதே சமயம் அதனுள் அடங்கிய பொருளை அழுத்தந்திருத்தமாகவும் தன் எழுத்துக்களால் படைக்க நினைக்கிறாள் படைப்பாள்.சிலநேரம் சற்று அத்துமீறி. ஆணைபோன்று எழுதுவதற்கு பெண்ணுக்கு தெரியாமல் அல்ல, ஆனால் அங்கேதான் பெண்மையின் ரகசியமிருக்கிறது.அதை வெளிப்படுத்திவிட்டால் அப்புறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடுமே! வித்தியாசங்கள் வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையிலும் சரி. மற்றவைகளிலும் சரி. ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.

ஆண் பெண் படைப்புகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், வெவ்வேறு மாற்றங்களோடுதான் படைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் உணர்ந்திருந்திருக்கிறோம் உணர்த்தப்பட்டிருக்கிறோம்.இருவரும் வெவ்வேறு மாற்றங்களோடு படைக்கப்பட்டிருந்தாலும், இருவருக்கும் ஏற்படும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஒன்றாகயிருக்கும்போது அதை வெளிப்படுத்தும் முறைகளில் வித்தியாசங்கள் ஏற்ப்படும் இது இயற்கை.சிலநேரம் இதையும்மீறி ஒன்றிபோயிருக்கும் அது விதிவிலக்கு.

எழுத்துக்கள் என்பது விருட்ச்சத்தை தரக்கூடிய விதை.நல்லெண்ணங்களால் உருவாகும் நல்லெழுத்துக்கள் நற்விதைகளாகி நல் விருட்ச்சத்தைத்தரும் இந்த நானிலமே போற்றும்படி. தீய எண்ணங்களால் உருவாக்கப்படும் எழுத்துக்கள். சட்டென முளைத்து, சடசடவென பரவி, பட்டென சருகாகும் பலரின் சாபத்திற்குள்ளாகி. ஒரு எழுதுகோல்[தட்டச்சுவிரல்கள்] அதன் பணியை செவ்வன செய்தால் செழித்து நிற்கும் பலரின் வாழ்வு. அதே சீர்கெட செய்தால் செத்தொழியும் பல பலரின் மனவுணர்வு. 

ஆணின் சுதந்திரம்போல் பெண் சுதந்திரம் எதிர்பார்ப்பது சரியா? அது விபரீதத்தை உண்டாக்குமல்லாவா? அதேபோல் பெண் எழுத்துக்களிலும் ஓர் வரையரை வகுத்துக்கொள்வது நல்லது. அதேபோல் ஆண்களும் வகுத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாகும் [இது என் கருத்து யார்மீதும் திணிக்கவல்ல]  வரையரையோ எல்லைகளையோ பெண்ணுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை அது தானே வந்துவிடும்.[வராவிட்டால் அதுக்கு நாம் பொருப்பல்ல] நம் எண்ணங்களை எப்படி அமைத்து அதை எப்படி செயல்படுத்தவேண்டும் என்று தனக்கென்ற ஓர் எல்லை வகுத்துக்கொண்டு,[எழுத்துக்கு எல்லையில்லை என்று வீண்வாதங்கள் செய்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை] சொல்லவந்த செய்திகளை தீர்க்கமாகவும். அதே சமயம் தெளிவாகவும். சொல்லிவிட்டால் அதுவே தன் செயலுக்கும், தன் எழுத்துக்கும். கிடைத்த முதல்வெற்றி .

அதையே கொஞ்சம் வரையரையை மீறி மூர்க்கமாகவும்.முகம்சுழிக்கும் வார்த்தைகளாகவும் எழுதிப்பாருங்கள். சொல்லிப்பாருங்கள். என்ன கிடைக்குமென்று!.

நம்மிடமிருந்து உதிரும் வார்த்தைகள். அது வாயிலிருந்தாகட்டும். பேனாவிலிருந்தாகட்டும். அல்லது கணினிப்பலகையிலிருந்து தட்டச்சு செய்யும் விரல்களிருந்தாகட்டும். அவை மிக உயர்ந்தாக இருக்குமானால் நம் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிந்ததுபோலிருக்கும். காலங்கள் பல கடந்தபின்னும் பலமனங்களில் உன்னதமாக நிலைத்திருக்கும்..

ஏதோ எனக்கு தெரிந்தவைகளை உளறிவிட்டேன். எதுவும் கூடக்குறைய எழுதியிருந்தால் பொருந்திக்கொள்ளவும்.
என்னுடைய கருத்து பிறருக்கும் பிடித்துதான் ஆகவேண்டும்.அல்லது என்கருத்தோடு ஒத்துதான் போகவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிடித்திருந்தால் அதை ஏற்க்க மனமிருந்தால் அதைவிட சந்தோஷம் வேறுயில்லை.

அப்புறம் ஒன்றை சொல்லமறந்துட்டு போயிடப்போகிறேன். இது தொடர், அழைக்கனுமே  யாரையாவது. பெண்களாக அவர்களைபற்றி சொல்லிக்கொண்டிருந்தால் எப்புடி அதுக்கு எதிர்மறையான ஆண்களைத்தானே அழைக்கனும்.”யாரை அழைக்கலாம்:  ம்ம் ம்.

வக்கீல். மோகன் குமார்
டாக்டர். Dr PKandaswamyPhD
அய்யா.G.M  பாலசுப்ரமணியன் 
அய்யா  Ramani 


வாங்க  வாங்க வந்து உங்களோட கருத்துக்களையும் 
பதியுங்கள் பகிருங்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த நீரோடை
நிரம்பி வழியும் கவிதைநீரால்.

பேராசை!...


ன்னொரு முறை
இருளுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

ம்சைகளில்லா
இன்பங்களுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

றுக்க மூடியிருந்தும்
இருவிழிகளின் இடுக்கில்
ஒளிகளின்
ஊடுருவலிருந்ததே!

வ்விருளை
அனுபவித்து ரசிக்க
அன்னையின் கருவறையில்

மீண்டும்

ன்னொரு முறை
இருந்து பார்க்க ஆசை
இமைகளைமூடி
இவ்வுலம் மறக்க ஆசை...

இக்கவிதை  திண்ணையில் வெளிவந்துள்ளது
நன்றி திண்ணை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மரித்துபோன ”மனிதம்”




ஓர் நூற்றாண்டின் முடிவில்
பிறந்து
ஓர் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
மரிக்கப் போகிறவர்கள்

பிரபஞ்சத்தின்
பரிணாம வளர்ச்சியின்
உச்சத்தில்
உருவான நிகழ்வுகளில்
வாழ்க்கிறவர்கள்
வாழ்கிறார்கள்..

அக்காலத்தில்
வாழ்ந்தவர்களை
விஞ்சிவிட்டார்கள்
இக்காலத்தவர்கள்
விண்ணையே!
மண்ணிடம்
மண்டியிட வைத்த
வியத்தகு அறிவியல்
மாற்றங்களால்..

வீட்டில் விளக்கில்லாமல்
விடிய விடிய
இருளிலேயே கழித்த
இரவுகளிருந்தது அன்று

இரவுகளை பகலாக்கும்
வெளிச்ச விளக்குகள்
விழுங்குறது
இருளையே இன்று..

வெளிச்சங்கள் மட்டும்
விரிந்திருதென்ன பயன்
இன்றுள்ள
மனிதர்களின்
மனங்களிலோ
இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
இதயங்களில்
இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..

மனிதன்
இயற்கையோடு
இணைந்திருந்த அன்று
மனிதம் தழைத்திருந்தது..

செயற்கையாய்
செயல்படத் துவங்கிய இன்று
மனதோ மரத்துபோனது!
மனிதம் மரித்துப்போனது!...

இந்த கவிதை சகோ காஞ்சி முரளி அவர்களின் ”பனை ஓசையிலிருந்து”.
அதில் சில வரிகளையும். சில மாற்றங்களையும் செய்தது என் சிந்தனைகள்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்ணே உன்னால்!..

உலகிலுள்ள அனைத்து  தாய்மார்கள். தங்கைகள். தோழியர்கள்.சகோதரிகள்.  அனைவருக்கும் என் அன்பார்ந்த ”உலக மகளிர்தின நல்வாழ்த்துக்கள்”

ன்னடி பெண்ணே!
இன்னும் உறக்கம்
இருள் விட்டு விலகி
எழுந்திரு கண்ணே!

ன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்
எதுவென்றபோதும்
எதிர்கொள்ளடி பெண்ணே!

விழித்திருக்கும்போதே
திருட்டுப்போகும் உலகம்
விழி உறங்கும்போதும்
விழிப்புணர்வு நெஞ்சுக்குள்
திடமாய் இருத்தல் வேண்டும்

நீ
எட்டுவைத்து நடக்கும்
ஒவ்வொரு அடியும்
ஏகாந்தமாக வேண்டும்
எச்சரிக்கையும் கூட வேண்டும்
இன்னல்கள் களைய வேண்டும்
இருளகன்று  ஒளிவீசவேண்டும்

தையுமே எதிர்கொள்ள
இயலவில்லை யெனச்சொல்லி
இருந்தயிடத்திலே முடங்கிவிடுவதா?
இல்லை
மூலையில் கிடந்து விடுவதா?
முயற்சி செய்!முயற்சி செய்!
முடியாதது என்று
எதுவுமேயில்லை

முன்னேறி  வருவது
முக்கியமில்லை!
முன்னேறும்போது
பின்னுக்குள்ளத்தை
முறித்துவிட்டேறினால்
முன்னுக்கு வந்தும்
பயனொன்றுமில்லை!

டுப்படியாகட்டும்
அரசவையாகட்டும்
ஆட்சிசெய்யும் போது
அளவுக்குமீறிய
அவசரமோ! ஆத்திரமோ!
ஆணவமோ! அதிகாரமோ!
ஆகாதென்பதை
அறிந்து நடந்தால்

பொருமையைக் கொண்டு
பெருமை சேர்த்தால்
புரியாத மனங்களும்
பூரிப்படையும்
பொன்னான
பெண்ணினம் கண்டு
போற்றி வாழ்த்தும்

சீரழிந்து விடுவது சுலபம்
சீராக வாழ்வது சிரமம்
சிரமத்தில் சிரத்தையெடு
சிறப்புகள் சிதறாமல் வரும்

சிந்தனைகளை
செதுக்கி முடிவெடு
செழித்தோங்கும்
வாழ்க்கை வந்து சேரும்

பெண்ணே!
உன்னால் முடியும்
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது