நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தகுதியற்ற தார்மீகம்!



நேசிக்கத்தான் நினைக்கிறது
ஆனால்
நிலைதவறிய தந்தையை
நேசிப்பதற்கே தெரியாமல்!

அன்பு பாராட்டத்தான் துடிக்கிறது
ஆனால்
அரவணைக்க தகுதியற்ற தந்தையை
அன்புகொள்ளவே முடியாமல்!

உறவென சொல்லதான் தவிக்கிறது
ஆனால்
வெறுத்தொதிக்கி சென்ற தந்தையை
உறவுக்கொள்ள மனம் ஏற்காமல்!

தார்மீக பொறுப்பற்று
கட்டியவளை தண்டிப்பதாயெண்ணி
பெற்ற குழந்தைகளையும் தண்டிப்போருக்கு
தந்தையர்களென்ற
மகத்துவத்துக்கு தகுதியில்லை!

குழந்தைகளின் மனங்களை
கொலைசெய்துவிட்டு              
குடும்பத் தலைவனென
கொக்கரிக்கும் சில தறுதலை[தந்தை]கள்!

கோடாரியாய் தான்மாறி
குடும்பவேரை சாய்த்துவிட்டு
தான்மட்டும் நிம்மதிதேடும்
தன்னலவாத பச்சோந்திகள்

இல்லையில்லை
மனக்கொலைகள் புரிந்துகொண்டு
மகத்தானாவனென சொல்லித்திரியும்
மன்னிக்கமுடியா தீவிரவாதிகள்....


டிஸ்கி// இது கவிதையல்ல, திருமணமணமுடித்து,கருகொடுத்து உருவந்தபின், கனவுகள் கலைந்ததுபோல் காணாமல் போகும், சிலது கூடயிருந்தே பிரயோசனமற்று வாழும்,  தறுதலை[தந்தை]களின் உண்மைநிலை!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது