எல்லைகள் கடந்து
எதையுமே எதிர்கொண்டு
எதிர் திசையில் நின்றபோதும்
ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும்
பச்சைப் பசுமையின்மேல்
மையம் கொண்டு
பறக்கும் திறனையும்
கற்றுக் கொண்டு
பூக்களின்மேல்
மஞ்சம் கொண்டு
பூந்தென்றலாய் வீசுவதும்.
புயலாய் வருவதும்
புண்படுத்திப்
புறபட்டுப் போவதும்
புழுதியாய் வருவதும்
புகையேற்படுத்தி
புழுங்க வைத்துப் போவதும்.
வசந்தமாய் வருவதும்
வருடிச் செல்வதும்
தென்றலாய் வருவதும்
தாலாட்டிச் செல்வதும்.
மனரணம் அதிகரித்து
மண்டியிட்டு கிடக்கும்போது
மாசற்ற உன்தழுவலால்-மனதை
மயக்கங் கொள்ளச்செய்வதும்.
உடலென்னும் கூட்டுக்குள்
உன் ஊடுருவலில்லாமல்
உயிரது வாழதென அறிந்து
உள்ளும் புறமுமாய்
உறவாடி வருவதும்.
பட்டுடலையும் தீண்டி
பரம்பொருளையும் தூண்டி
பசியைக்கூட சீண்டி
பஞ்சாய் பறக்கவைப்பதும்.
வேடிக்கையாய் சிலநேரம்
விபரீதமாய் சிலநேரம்
வித விதமாய்
விஸ்வரூபம் எடுப்பதும்.
உருவமில்லாது
ஒருவார்த்தை சொல்லாது
உலுக்கியெடுத்து
உதறித் தெளித்து
உலகையே ஆட்டிவைப்பதும்
உனக்கு கைவந்தக்கலை
என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!
உனக்குத் துணையாய்
எனைச் சேர்த்து
இவ்வுலகையே
என் கனவுக் கூட்டுக்குள்
கொண்டுவர வைத்ததேனோ!.....
திண்ணை யில் வெளியாகியுள்ள என்கவிதை..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
வாழ்த்துக்கள் மலிக்கா . உங்கள் கவிதை வந்துள்ள அதே இதழில் என் கவிதையும் வந்துள்ளது
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்திக்..
பதிலளிநீக்குஅப்படியா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குVazhththukkal akka.
பதிலளிநீக்குkavithai romba nalla irukku.
திண்ணையில் வெளியான கவிதை, நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமனதை வருடிச்செல்கிறன வரிகள்
பதிலளிநீக்குமனரணம் அதிகரித்து
பதிலளிநீக்குமண்டியிட்டு கிடக்கும்போது
மாசற்ற உன்தழுவலால்-மனதை
மயக்கங் கொள்ளச்செய்வதும்.
உடலென்னும் கூட்டுக்குள்
உன் ஊடுருவலில்லாமல்
உயிரது வாழதென அறிந்து
உள்ளும் புறமுமாய்
உறவாடி வருவதும்.//
எப்படி உனக்கு மட்டும் வரிகளை வசியம் பண்ணதெரிகறது
அப்பப்பா அத்தனை வரிகளும் வாரி ஒற்றிகொள்ளலாம் அப்படியிருக்கு கன்பட்டுவிட்டும் திருஸ்டி சுத்திப்போடு..
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக அருமை மிக வழ்த்துக்கள் மட்டும் சொல்வதில்லை மனதார பாராட்டுகிறேன். இதை திண்ணையிலும் படித்தேம்மா.
பதிலளிநீக்குஉன் திறமை சபாஷ் போடவைக்கிறது..
இன்னும் பல ஆயிரம் கவிதை நீ தொடுக்கவேண்டும்.
பாசமுடன் கோவிந்தன்
அருமையான கவிதை வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉருவமில்லாத காற்றை பற்றி சும்மா “பிச்சி பிச்சி “ எழுதிடீங்க...”ஜில் “ லின் தாக்கமா ?? அருமை சகோதரி நான் மிகவும் ரசித்த வரிகள்
பதிலளிநீக்கு“என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!”
பட்டுடலையும் தீண்டி
பதிலளிநீக்குபரம்பொருளையும் தூண்டி
பசியைக்கூட சீண்டி
பஞ்சாய் பறக்கவைப்பதும்.
வேடிக்கையாய் சிலநேரம்
விபரீதமாய் சிலநேரம்
வித விதமாய்
விஸ்வரூபம் எடுப்பதும்..//
அருமையான வரிகளை அருமை வந்திருக்கு மலிக்கா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
காற்றுக்குள் இத்தனையுண்டு என்பதை அழகாய் சொல்லி அதனோடு தன் காதலையும் இணைத்த கவியே வாழ்க நீ பல்லாண்டு..
பதிலளிநீக்குஎன் சுவாசக்காற்றே!
பதிலளிநீக்குஎன்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!
எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சு இருக்கு அக்காள், நான் இப்போ பதிலுக்கு கவிதைலாம் எழுத முடியாது, ஏன் என்றால் இப்போ நாட்டாமை வேஷத்தை கலைத்துவிட்டு, அந்நியன் வேடம் போட்டிருக்கேன்(?) ஆதலால் தொண்டையை இருக்கப் பிடிச்சுகொண்டுதான் இப்போ பேசுறேன், அந்நியன் படத்தில் விக்ரம் பேசுற மாதுரி.
என்னவனின் சுவாசத்தை எடுத்து விட்டால், என்னவன் செத்து விடமாட்டானா ?
சிநேகிதி கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஃபாயிஜா..
சே.குமார் கூறியது...
Vazhththukkal akka.
kavithai romba nalla irukku.
அன்பான கருதுக்களுக்கு மிக்க நன்றி குமார்..
Chitra கூறியது...
பதிலளிநீக்குதிண்ணையில் வெளியான கவிதை, நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.//
ஓகே மேடமக்கா ரொம்ப நன்றி மகிழ்ச்சியோட..
dineshkumar கூறியது...
பதிலளிநீக்குமனதை வருடிச்செல்கிறன வரிகள்.//
ரொம்ப நன்றி தினேஷ்..
சுகந்தி. கூறியது...
பதிலளிநீக்குமனரணம் அதிகரித்து
மண்டியிட்டு கிடக்கும்போது
மாசற்ற உன்தழுவலால்-மனதை
மயக்கங் கொள்ளச்செய்வதும்.
உடலென்னும் கூட்டுக்குள்
உன் ஊடுருவலில்லாமல்
உயிரது வாழதென அறிந்து
உள்ளும் புறமுமாய்
உறவாடி வருவதும்.//
எப்படி உனக்கு மட்டும் வரிகளை வசியம் பண்ணதெரிகறது
அப்பப்பா அத்தனை வரிகளும் வாரி ஒற்றிகொள்ளலாம் அப்படியிருக்கு கன்பட்டுவிட்டும் திருஸ்டி சுத்திப்போடு..
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.//
சுகந்திமா தாங்களின் அன்பில் நனைகிறேன்.. பாசம் நிறைந்த கருதுக்களுகு மனம் மகிழ்கிறேன்.
நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்லி சந்தோஷம் அடைகிறேன்...
கோவிந்தன் கூறியது...
பதிலளிநீக்குமிக அருமை மிக வழ்த்துக்கள் மட்டும் சொல்வதில்லை மனதார பாராட்டுகிறேன். இதை திண்ணையிலும் படித்தேம்மா.
உன் திறமை சபாஷ் போடவைக்கிறது..
இன்னும் பல ஆயிரம் கவிதை நீ தொடுக்கவேண்டும்.
பாசமுடன் கோவிந்தன்.//
தாங்களின் முதல் வருகைக்கும் பாசமான கருதிற்கும் பாசத்துடன் நன்றிகள். தொடர்ந்து படியுங்கள். கருதுக்களை பகிருங்கள்..
நேசமுடன் ஹாசிம் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான கவிதை வாழ்த்துகள்..//
வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ஹாசீம்..
//ers கூறியது...
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்.//
மிக்க நன்றி நேரம்கிடைக்கும்போது இணைக்க முயல்கிறேன்..
Yasir கூறியது...
பதிலளிநீக்குஉருவமில்லாத காற்றை பற்றி சும்மா “பிச்சி பிச்சி “ எழுதிடீங்க...”ஜில் “ லின் தாக்கமா ?? அருமை சகோதரி//
காற்றோடு உறவாடும்
என் மூச்சைப்போல
கவிதையோடு உறவாடும் என்மூச்சுகாற்றும்.
ஜில் வருவதற்குமுன்னே இதுபோன்ற ஆக்கங்கள் வந்துடுத்து காக்கா..
// நான் மிகவும் ரசித்த வரிகள்
“என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!”//
மிக்க நன்றி யசிர் காக்கா..
தேடும் மனம். கூறியது...
பதிலளிநீக்குபட்டுடலையும் தீண்டி
பரம்பொருளையும் தூண்டி
பசியைக்கூட சீண்டி
பஞ்சாய் பறக்கவைப்பதும்.
வேடிக்கையாய் சிலநேரம்
விபரீதமாய் சிலநேரம்
வித விதமாய்
விஸ்வரூபம் எடுப்பதும்..//
அருமையான வரிகளை அருமை வந்திருக்கு மலிக்கா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும். மிகுந்த நன்றி தேடும் மனம்..
எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சு இருக்கு அக்காள், நான் இப்போ பதிலுக்கு கவிதைலாம் எழுத முடியாது, ஏன் என்றால் இப்போ நாட்டாமை வேஷத்தை கலைத்துவிட்டு, அந்நியன் வேடம் போட்டிருக்கேன்(?) ஆதலால் தொண்டையை இருக்கப் பிடிச்சுகொண்டுதான் இப்போ பேசுறேன், அந்நியன் படத்தில் விக்ரம் பேசுற மாதுரி.
பதிலளிநீக்குஎன்னவனின் சுவாசத்தை எடுத்து விட்டால், என்னவன் செத்து விடமாட்டானா //
வாங்க நாட்டமா சொம்பெல்லாம் கொண்டு வந்தேளா..
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
//
அப்படின்னா என்னவன் மூச்சு
விடும் சுவாசத்தை காற்றில் வழியே
எடுத்துவந்து நான் சுவாசிக்கும் தருணம் அதை என்னுள் புகுத்தி
அப்படிதான் இதன் அர்த்தம் இப்போது புரியுதோன்னோ..
புயலும்
பதிலளிநீக்குபுழுதிக் காற்றும்கூட
உங்கள்
வர்ணனைக்கு வயப்பட்டு
கவிதையோடு கைகோர்த்து
பிராண்வாயுவாகவே
பயணிக்கிறது.
வாழ்த்துக்கள்.
//என் சுவாசக்காற்றே!
பதிலளிநீக்குஎன்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ! //
படித்ததும் ஓவரா குளிரடிக்குதே..!! :-)) சூப்பர் வரிகள்
அருமையான வார்த்தைக் கோர்வைகள் எப்பவும்போல தோழி.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி. நீங்கள் கற்றது காற்றலவா?அதனால் தான் கண்ணுக்குத்தெரியாமல் கருத்திலும்,கவிதையிலும் பட்டம் வாங்கி காற்றில் பறக்கிறது. என்றும் பறக்கட்டும் பல நூல்களில்(புத்தகத்தில்). அது காற்றாடி என்றழைக்கபடுவதும் கூட எவ்வளவுப்பொருத்தம்? மேலும், நானும் காற்றாடியாய் பறக்கிறேன் உங்கள் கவிதையை படித்ததும் வானத்தில்.தரையில் மற்றுமொரு (காத்தஆடி)விசிறி உங்களுக்கு.வாழ்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை,, ரசிக்கும்படியா இருந்தது வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குகவியரசிக்கு வாழ்த்துக்கள்..அருமையான வரிகள்..
பதிலளிநீக்குnalla aakkam parattugal
பதிலளிநீக்குpolurdhayanithi
அழகான வரிகள் மலிக்கா!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
sabeer கூறியது...
பதிலளிநீக்குபுயலும்
புழுதிக் காற்றும்கூட
உங்கள்
வர்ணனைக்கு வயப்பட்டு
கவிதையோடு கைகோர்த்து
பிராண்வாயுவாகவே
பயணிக்கிறது.
வாழ்த்துக்கள்
//
வாங்க சகோ. தாங்களின் வாழ்த்துக்கும் வர்ணனையான கருத்துக்கும் மிக்க நன்றி..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு//என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ! //
படித்ததும் ஓவரா குளிரடிக்குதே..!! :-)) சூப்பர் வரிகள்//
குளிரடிக்குதா. அப்படியே பொட்ட வெயிலில் வந்து நில்லுங்க அண்ணாத்தே. அப்படியே தூரமா பாருங்க புயல வருதான்னு..
ஹேமா கூறியது...
பதிலளிநீக்குஅருமையான வார்த்தைக் கோர்வைகள் எப்பவும்போல தோழி.வாழ்த்துகள்.//
தோழி வந்தாச்சா ஊர்லேர்ந்து..
மிகுந்த மகிழ்ச்சி தோழி வாழ்த்துக்கும் வருகைகும்..
வெறும்பய கூறியது...
அருமையான கவிதை வாழ்த்துகள்..
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெறும்பய..
crown கூறியது...
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி. நீங்கள் கற்றது காற்றலவா?அதனால் தான் கண்ணுக்குத்தெரியாமல் கருத்திலும்,கவிதையிலும் பட்டம் வாங்கி காற்றில் பறக்கிறது. என்றும் பறக்கட்டும் பல நூல்களில்(புத்தகத்தில்). அது காற்றாடி என்றழைக்கபடுவதும் கூட எவ்வளவுப்பொருத்தம்? மேலும், நானும் காற்றாடியாய் பறக்கிறேன் உங்கள் கவிதையை படித்ததும் வானத்தில்.தரையில் மற்றுமொரு (காத்தஆடி)விசிறி உங்களுக்கு.வாழ்துக்கள்.
//
வாங்க சகோ வாங்க. தாங்களின் முதல் வருகைக்கும்.
காத்தாடியாக்ன கருத்துக்கும். விசிறியான ஃபேனுக்கும்.
மனமார்ந்த வாழ்த்துக்கும்
மகிழ்ச்சி கலந்த நன்றி..
எம் அப்துல் காதர் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான கவிதை,, ரசிக்கும்படியா இருந்தது வாழ்த்துகள்!!//
வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும். மிக்க நன்றி சகோ..
//அஹமது இர்ஷாத் கூறியது...
கவியரசிக்கு வாழ்த்துக்கள்..அருமையான வரிகள்.//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இர்ஷாத்.
polurdhayanithi கூறியது...
பதிலளிநீக்குnalla aakkam parattugal
polurdhayanithi.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சகோதரர் அவர்களே..
ஆமினா கூறியது...
பதிலளிநீக்குஅழகான வரிகள் மலிக்கா!
வாழ்த்துக்கள்..
வாங்க ஆமீனா வாங்க
நலமா சுகமா.. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
ஆமினா கூறியது...
பதிலளிநீக்குஅழகான வரிகள் மலிக்கா!
வாழ்த்துக்கள்..
வாங்க ஆமீனா வாங்க
நலமா சுகமா.. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
கவிதை நன்றாக இருக்கிறது, பல உண்மைகளை சொல்கிறது.
பதிலளிநீக்குபூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருக்கிறது, பல உண்மைகளை சொல்கிறது.//
வாங்க வாங்க தோழமையே நல்லாயிருக்கீங்களா. அம்மா. அப்பா. தம்பி. அம்பி. அனைவரும் சுகமா? தற்போது ஊரிலா? வரிசையாய் கேள்விகள் கேட்டுகொண்டே போகிறேன்.
மீண்டும் வலைக்குள் வந்தமைக்கு மகிழ்ச்சி!
1xbet - Best Bet in 1xBet - Download or Install for Android
பதிலளிநீக்கு1xbet is the best betting jancasino.com app in the world created for esports. It is a wooricasinos.info one of the safest and most trusted names among players. It offers 1xbet korean a user friendly https://deccasino.com/review/merit-casino/ interface