நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விழிப்”புணர்வு”



விழியே
கதை எழுதி எழுதி ஏங்கவைப்பதே
உன் விளையாட்டாகிவிட்டது

எழுதும் கதைகளை
வாசித்தும் வாசிக்காமலும்
மனங்களெல்லாம் மருகித்தவிக்கிறது


விழியே உன் வழியே-பல
விபத்துக்கள் நேர்க்கின்றன

உன்னால் பலர் வழுக்கிவிழுவதும்
வாழ்வு இழப்பதும்
வழக்கமாகிக்கொண்டே போகிறது

விழியே ஒளிதரும் உனக்கு
பிறறின் இருள் எதற்கு

உன்னால் மன ரணங்களும்
மரணங்களும் நிகழ்கிறது

விழியே! விழிப்புணர்வோடு இரு
இல்லையென்றால் உனக்கும்
விபத்துக்கள் வந்தடையகூடும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

4 கருத்துகள்:

  1. //உன்னால் பலர் வழுக்கிவிழுவதும்
    வாழ்வு இழப்பதும்
    வழக்கமாகிக்கொண்டே போகிறது//

    உண்மைதான்.....

    இந்த மாதம் வானலை வளர் தமிழ் கவிதை நிகழ்ச்சிக்கு நீங்கள் வரவில்லையே....

    பதிலளிநீக்கு
  2. தாங்களின் கருத்துக்கு மகிழ்ச்சி

    இம்மாதம் நோன்புகாலமாக இருப்பதால் அந்நேரத்தில் வரமுடியவில்லை

    இன்ஷாஅல்லாஹ் வரும்மாதம் வருவேன்.

    பதிலளிநீக்கு
  3. தலைப்பு ஒன்றே போதும் இக்கவியின் அழகு சொல்ல.. அருமை :-)

    பதிலளிநீக்கு
  4. //தலைப்பு ஒன்றே போதும் இக்கவியின் அழகு சொல்ல.. அருமை :-)//

    தாங்களின் முதல் வருகைக்கும்
    அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி
    உழவன்,
    ஊக்கம் தருவதுதான் கருத்துக்கள்
    அடிக்கடி வந்து ஊக்கப்படுத்துங்கள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது