நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிழலைத் தேடும் நிஜங்கள்..

நளினவேடந்தரித்து
நடக்கும் அத்தனையும்
நிஜமென்று நம்பி
நடக்கும் மனமே!

நிழல்கூட நம்கூடவரும்போது
நிஜமாகிறது
நிழலாய் நடப்பதை
நிஜங்களென நினைக்கவைத்து

நிழலை நிஜமென நினைத்து
நிஜத்தை இழந்துவிடும் நெஞ்சமே!
நிஜங்கள்கூட நிஜங்களல்ல
நிலையற்ற இவ்வுலகில்

நிஜமான நட்பு
நீங்கும் பிரிவாக
கண்காணும்போதே
கானல் நீராகி

நிஜமான காதல்
நிழலென்ற கருப்பாக
நினைவிருக்கும்போதே
நீங்கிய வெறுமையாகி

நிஜமான பாசம்
நிலையற்ற நேசமாக
நிலையில்லா உலகைப்போல்
நிலை தடுமாறி

நிஜமான அத்தனையும்
நிழலாகிப் போகிறது
நிலையற்ற அத்தனையும்
நிஜமாக ஆகிறது

நிழலும் நிஜமும்
நிலையற்றுவிட்டதால்
நிலையான ஒன்றைதேடி
நிதமும் அலையும் மனம்

நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
நிழலுக்கு அலைகிறதே!
நிலையற்ற மனம்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வந்தாச்சி வந்தாச்சி வசந்தம் க[கொ]ண்டு வந்தாச்சி.

அன்பு நெஞ்சங்களே
அரவணைக்கும் உள்ளங்களே

ஆனந்தமாய் ஓடிவந்து
ஆவலோடு கேட்கின்றேன்

அனைவரும் நலமா
அனைவரும் சுகமா

இந்தியா சென்றுவிட்டு
இளைப்பாறி வந்துவிட்டேன்

இருந்தும் போதவில்லை
இன்னும் இளைப்பாற சமயமில்லை

இந்தியாமீது கொண்ட
ஈர்ப்பு மட்டும் குறையவில்லை

நானில்லாத சமயத்திலும்-என்
கவிதைகளை கண்டுவிட்டு-என்னை
கெளவுரவித்து கருத்துதந்தீர்

இதைநான் என்றென்றும் மறக்கமாட்டேன்
இதற்கு எந்நாளும் நன்றி சொல்வேன்.

என்தாயைக் கண்டுவிட்டு
என்தாய்நாட்டைக் கண்டுவிட்டு

மீண்டும் வந்துவிட்டேன்
மிகுதியாய் புத்துணர்வும் பெற்றுவிட்டேன்

அன்பெனும் ஆதரவாலே
அள்ளித் தருவேன் ஆக்கங்களை

நீங்கள் தரும் ஊக்கத்தாலே-இனி
நீரோடையை நிரப்புவேன் கவிதைகளாலே.....


டிஸ்கி/// என்னம்மாஎல்லாரும் எப்படியிருக்கீங்க.
உங்கள் அனைவரின் நலமறிய மிகுந்த ஆவல்.
வந்தாச்சி வந்தாச்சி வசந்தம் கண்டுவந்தாச்சி. கூடவே
வசந்தமும் கொண்டு வந்தாச்சி. இனி விளையும் என்மூன்று தளத்திலும் முப்போகம்.

தற்போது நோன்புக் காலமாக இருப்பதால் என் இறைவனோடு அதிகதொடர்புகொள்ளவேஆசை. அதனால்.அடிக்கடி என்தளம் மற்றும் பிற தளங்களின் பக்கம் வருவது சிரமம். நோன்பு முடிந்ததும் எப்போதும்போல் வருவேன் அதுவரை உங்கள் அனைவரின் ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தொடர்ந்து கவிதைகளுக்கு கருதிட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

இறுதியில் தொடக்கம்.

கண்டேன் கண்டேன்
மரணத்தைக் கண்டேன்
கண்ணிரெண்டும் அசைக்காமல்
கண்ணெதிரே கண்டேன்

மரணித்த முகமதனின்
நேரெதிரே நின்று
நடப்பதத்தனையும்
நகராமல்  கண்டேன்

ஓடியாடியக் கால்களிரெண்டும்
ஓய்வுபெறவே -அதனிரு
பெருவிரல்களும்
ஒருசேரக் கட்டக்கண்டேன்

கண்ட காட்சிகளெல்லாம்
கண்ட கண்கள் களைத்துபோய்
இறுக்கிமூடி
இளைப்பாறக் கண்டேன்

ஓயாது பேசிய வாயோ
ஒரு அசைவுமில்லாது -பசைதடவி
ஒட்டியதுபோல்
ஒட்டிக் கிடக்கக் கண்டேன்

உயிர்க் காற்றை சுவாசித்த
இதயமது
இயங்காது நின்றிடவே

உயிரது வெளியேறி
உடலது உருமாறி
வெற்றுடலாய்
வீற்றிறுக்கக் கண்டேன்

சுற்றங்கள் சுற்றியமர்ந்து
சோகமதை வெளிப்படுத்த
இருந்தநொடி இல்லாத பாசம்
இறந்தநொடி
இலந்தைக் கொடியாய் படர

இதுதான் மனிதனது வாழ்க்கை
இதற்குத்தான் இத்தனை இன்னல்
இதையெல்லாம் அறிந்திருந்தும்கூட
இப்படியே வாழ்கிறோமோ நாளும்

மரணத்தை மறந்த நாமும்
மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
மரணத்தை நினைத்தபடியே
மனிதனாய் வாழநினைப்போமா.


அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ]

மாதம் புனித மாதம்- புதிதாய்
பிறக்கும் ஒவ்வொரு வருடம்

அறம் நல்லறம் கொண்டுவரும்
நோன்பு என்னும் புனித விரதம்

அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம்
இறைவனின் சன்னிதானம் அடையப்பெறும் மாதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட புனிதமான மாதம்

சங்கைமிகு லைலத்துல் கத்ர்
[ஆயிரம் மாதங்களைவிட
சிறந்த இரவு] வந்து இறங்கும் மாதம்
தீங்குசெய்யும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம்

இறைவனிடம் கேட்டதும் கிடைக்கபடும் மாதம்
இறைச்செய்தி இறக்கப்பட்ட இன்பமான மாதம்
தக்வா என்னும் இறையச்சத்தின் பயிர்ச்சிக்கான மாதம்

சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம்
நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதம்

விடிய விடிய வணக்கங்கள் செய்யப்படும் மாதம்
விடிந்தபின் விரதங்கள் போற்றப்படும் மாதம்

திக்ருகளும் தஸ்பீஹ்களும் ஓதப்படும் மாதம்
தீமைகளை விட்டுவிட்டு தவிர்ந்திருக்கும் மாதம்

நன்மைகளை செய்து நல்லருள் பெறும் மாதம்
நன்மை ஒன்றுக்கு பத்து என பெருக்கித்தரும் மாதம்

ஜக்காத் என்னும் கொடைகள் கொடுக்கப்படும் மாதம்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரிவழங்கும் மாதம்

மலையளவு தவறுகளும்- மனமுருகி
கேட்கும்போது மன்னித்தருளும் மாதம்

இறையச்சத்தால் செய்யப்படும் நன்மைக்கேற்ப
முன்செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் மாதம்.

நோன்பு இது நோன்பு –இதை
நோற்போருக்கு கிடைக்கும் மான்பு

சிறு அரும்பும் விரும்பி வைக்கும்
அருமையான நோன்பு

நீக்கும் இது நீக்கும்
மனித உடலின்- நோயினை நீக்கும்

போக்கும் இது போக்கும்
மனித மனதின்- மாசுவைப் போக்கும்

கொடுக்கும் இது கொடுக்கும்
புதிய சக்தியை இதுகொடுக்கும்

செழிக்கும் அருள் செழிக்கும்
மனித வாழ்வில் அருள் செழிக்கும்

புனித மாதத்தில்;
தீமைகளைவிட்டு விலகியிருங்கள்

நன்மைகளின் பக்கம் திரும்பியிருங்கள்
இறையச்சம்கொண்டு இறையருளை பெற்றிடுங்கள்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

உன்னோடு நான்.

அன்பே!

உனை நினைத்து உருகும்
உன் நினைவோடு இயங்கும்
உனை நினைத்து துடிக்கும்
இதயத்தை கேட்டேன்.
இறைவனிடம்

மறுப்பின்றி
மறுமொழியின்றி
மாண்போடு தந்தான்
மனதிற்கு தாளின்றி.

உனைவிட்டு
ஊர் சென்றபின்னும்
தங்கு தடையின்றி
ஊஞ்சலாடும்
உன் நினைவுவோடு
உலா வருகிறேன்.

உன்னோடும்
உன் நினைவோடும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது