நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!


இப்பூமியில் பிறக்கும்  ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு +--------- + இறப்பு இவ்விரண்டுக்குமிடையில் இருக்கும் வாழ்க்கை  என்னும் வாழ்வியலில்  ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள், பிறந்த அனைவருக்குமே  வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை, அப்படி அமைந்த வாழ்க்கையிலும் சிலருக்கு நிம்மதியில்லை. அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு ஏக்கம், எதிர்பார்ப்பு , என தனது தள்ளாத வயதுவரையிலும் ஏதோ ஒன்று தடைபடும், ஏதோ ஒன்று விடுபடும்.

அதில் மிகசிலரே வாழ்க்கையில், வருத்தங்கள், சங்கடங்கள்,வேதனைகள், துன்பங்கள், என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சுவாசித்தபோதிலும், கஷ்டங்கள் வந்தபோதிலும், அதனை இவ்வுலகதிற்கான பரிச்சையென்னும் பயிற்ச்சி மறு உலகிற்கான வெற்றிபாதைக்காட்டும் நல்வழியென்ற வாழ்வின் மொத்த பாகங்களையும், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிலர். அதன் வழியிலிலேயே தன் சிறிய வயதுக்குள் வாழ்ந்து நிறைவு காணுவார்கள். அப்படி நிறைவு காண்பவர்கள் பட்டியலில் நானும் ஒருத்தி என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே.

திருமணதிற்க்குபிறகே பெண்ணின் வாழ்க்கையில் பூர்த்திக்கள் ஏற்படுகிறது, அன்பான கணவன், அவர்மூலம் பெற்றெடுக்கும் குழந்தைகள், அவர்களுக்கு திருமணம், அவர்களின் குழந்தைகள், என்ற அழகிய வாழ்க்கைக்கூட்டிற்க்கும் அர்த்தங்களும் ஆனந்தங்களும் கொட்டிக்கிடக்கிடகின்றன, தனது குழந்தைகளுக்கும் அமையும் வாழ்க்கையும் மனதிருப்தியை தந்துவிட்டுவிட்டால் இப்பூமியில் நிறைந்த மனதோடு இருப்பார்கள்,பெற்றோர்களின் சந்தோஷமும் நிம்மதியும் தான்பெற்றுடுத்த பிள்ளைகள் வாழும் வாழ்கையிலிலேயே இருக்கிறது. அப்படியான வாழ்க்கையை எனது மக்களும் பெற்றிடவேண்டும்.  ஈருலகிலும் எங்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கவேண்டும்.

இதோ அப்படியான ஒரு மனநிறைவோடு உங்கள் முன் நான், எனது 34 வது வயதில், எனது மகளின் குழந்தையை கையில் ஏந்தியவன்னம் அல்ஹம்துலில்லாஹ், மிகுந்த சந்தோஷத்திலும் ஆனந்தத்திலும் மனது ரெக்கைகட்டிப்பறக்கிறது. அடுத்து எனது மகனுக்கானது, தற்போதைக்கு படிப்பு [அட இப்பதானே 9 ஆம் வகுப்பு] அது முடிந்ததும் அற்புத வாழ்வு அனைத்தையும் அவனுக்கும் சிறப்பானதாக அமைத்துத்தர வல்ல இறைவன் போதுமானவன்.

சிறுவயதிலிருந்து இறைவன்மீதுமட்டும் எனக்கு அசைக்கமுடியா நம்பிக்கையும், நேசமும். நான் நினைத்தவைகளை நிறைவேற்றித்தரும் வல்லமையுடையவனும் அவன்மட்டுமே. எல்லாப்புகழும் அவன் ஒருவனுக்கே! அவனே வானம் பூமியாவையும் படைத்து அதில் இயற்கைகளையும் அமைத்து, அதனை அனைத்தையும் அனுபவிக்க நம்மையும் படைத்த இறைவனை நேசிப்பதோடு, இப்பூமியில் நமக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே என எண்ணங்கொள்வதுடன், அளவோடு எதையும் எதிர்ப்பார்த்து வாழும்போது உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுக்குள் வசந்தமாய் தவழும் இன்ஷாஅல்லாஹ்.

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கை வாழ்க்கையாய்!
எல்லோரும் வாழ்ந்து விடுவதுமில்லை,
வாழ்க்கையை  நிறைவாய்
ஆனபோதும் வாழ்கிறார்கள்
வாழ்க்கையை
வாழ்க்கையாய்! நிறைவாய்!
அன்புடன் என்னைப் போலவும்..


தற்போது பஃஹ்ரைனிலிருந்து உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது