நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மறந்தமைக்கு மன்னிப்பாயா


உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் எனக்கு இந்த எழுத்தோவியம்
மிளிர்ந்து என்னிலிருந்து மேலோங்கி 
என்னை எனக்கே வெளிச்சமிட்டு காட்டியது..

2009 தில் உன் வலையில் விழுந்தேன்
உன்னை ஆரத்தழுவினேன்
என்னை உன் வலைதளத்தில் வலம்வரச்செய்தாய்
என் எழுதுலக வாழ்வுக்கு வழிவகுத்தாய்…

உன்னால் எனக்கு கிடைத்த பொக்கிஷங்கள் பலபல
உறவுகளாய் நட்புகளாய் சொந்தங்களாய் விருதுகளாய் பாராட்டுகளாய் பலமேடைகளாய்

உன்னைமறந்து 
இத்தனைநாள் இருந்தமைக்கு
வருந்துகிறேன் 
உன்னுள் கொட்டிவிடுவேன் 
என் சுகதுக்க சந்தோஷ வருத்தங்களை
நீதான் என் மனவெளி
இனி
நமக்குள் வேண்டாம் இடைவெளி
வந்துவிட்டேன் மீண்டும் உன்னுள்
இழுத்துக்கொள் என்னை உன் வலைக்குள்..

என்னை இணைத்துக்கொண்டவள் நீ
உன்னை இனி பிரியேன் நான்

அன்புடன் மலிக்கா🦋 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மல்லியின் காதலுடன்..என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் நீயும்!

நிறைகுடமாய் தளும்புகிறது நெஞ்சம்
நினைவோ உன் நிழல்சார்ந்து புகுந்துகொண்டது உனக்குள் தஞ்சம்!

தென்றலால் தலைகோதிக்கொள்ளும்
தென்னங் குருத்தோலையாய்
உன்னிருப்பை என்னுள் சாட்டினாய்..

நீயற்ற தருணத்தை
காற்றற்ற நிமிடங்களின்
அழுத்தத்தை உணர்த்தும்
வலியாக்கிக் காட்டினாய்..

காளைவால் கடிப்பட்டோடும் வேகத்தை நெஞ்சாங்கூடும்
கடும் வறட்சிகொண்ட பாலைதாகத்தை
தொண்டைக் குழியுமடைய

பாவையுள்ளத்தை பதம்பார்த்து
கனவுப்போருக்குள் கண்கத்திகொண்டு
பார்வை யுத்தம் புரிகிறாய்....

கள்ளிக்காட்டு
கருவேலங்குயிலின் ஏக்கமும்
கார்காலமேகத்தைத் தேடும்
கானமயிலின் எதிர்பார்ப்புமாய்

நித்தம் நித்தம் நெஞ்சோடு
நீங்காதிருக்கிறாயென் கண்ணோடு
என்றும் என் நினைவில் நீ என்னோடு
விட்டுத்தரமாட்டேன் எதற்கும் யாரோடும்...
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

போட்டிக்கவிதையில் வென்ற
#மல்லி
பெற்றாள் காதல் ராணி..பட்டம்

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மீண்டும் நான் உங்களோடு..
முயற்சி செய் 
முடியாததென்று எதுவுமில்லை!
முட்டுக்கட்டைகளையும்
முட்ப்பாதைகளையும்
கடந்தே வா
முல்லை வாசத்தோடு
முன்னேற்றப் பயணத்திற்கான
முன்வாசல் திறக்கும்..

 திறந்துவிட்டதே 
இதுதான் இலக்கோ என்றெண்ணிமட்டும்
தொடராது விட்டுவிடாதே!
இலக்கை அடைந்துவிட்டோமென                                                                                       நினைக்கும்போதே அடுத்தகட்டத்திற்கான                                               அடியெடுத்துவைக்கமாட்டாய்...
தெளியும் நீரோடையாய் ஓடிக்கொண்டேயிரு!
உணர்வுத்தேடல்கள் தீரும்வரை
உணர்வலைகள் உயிர்கடற்கரையோடு                                                                                சங்கமங்கள் நிகழ்த்திக்கொண்டேயிருக்குவரை..


மணிமேகலைப்பிரசுரத்தின் எனது மூன்றாவது நூல் வெளியீட்டுவிழாவின்போது...
நடிகை லக்‌ஷி அவர்கள் பொன்னாடைபோர்த்த
நடிகர் சிவக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்கள்..
டைரட்கடர் திரு எஸ் பி முத்துராமன் ஐயாவும்

வானொலி அறிப்பாளர் கிரிகெட் வர்ணனையாளர்
சாத்தான்குளம்
திரு அப்துல் ஜப்பார் (வாப்பா) அவர்கள் நிகழ்வுக்கு வருகைதந்ததோடு நூல்வெளியீட்டில் கலந்துகொண்டது எனக்கு மட்டற்ற மகிழ்வை தந்தது..
.
//ஒட்டாத உறவுப்பாலங்கள்//..
ஒட்டி வாழ்க்கைப்பயணங்கள் தொடரவேண்டும் என்றென்றும் அன்புடன்..

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது