நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஜீவராகம்..


நானும் நீயும் ஒன்றடா-என்
நாணம் சொல்லும் கேளடா
உன்வார்த்தை ஒன்று போதுமே
என் ஜென்மம் நீளுமே!

காற்று உந்தன் காதிலே
எந்தன் காதல் வந்து சொல்லுமே
அதை கேட்டு நீயும் பாரடி
உனைத் தேடுமென் ஜீவனடி

வான வீதிப் பாதையில்
வாசம் வீசும் பூங்குயில்
ராகம் சொல்லி பாடுதடா
ரகசியமாய் தினமும் தேடுதடா

உயிரும் மெல்ல உருகுதடி-அதில்
ஊணும் சேர்ந்து கரையுதடி
உண்ணும் உணவும் யாவுமே
உன் நினைவாய் உடலில் சேருதடி

நானும் நீயும் ஒன்றடா -அந்த
நாளும் பொழுதும் ஒன்றடா
நகரும் நொடியும் ஒன்றடா
நம் காதலும் அதனினுல் நன்றடா

காலந்தோரும் உன்னுடன்
கைசேர்ந்து கலந்து வாழனும்
இறுதி மூச்சு நாள்வரை-நம்
இதயம் இணைந்தே இருக்கனும்

வானம் பூமியாவுமே-நம்மை
வாழச்சொல்லி வாழ்த்துமே -அந்த
வசந்தமும் நம்முடன் சேர்ந்துதான்
விளையாடி மகிழுமே!

”நானும் நீயும் ஒன்றடா”
”நம் ஜீவன் இரண்டும் ஒன்றடி”


டபுள் டிஸ்கி//இதையெல்லாம் பாட்டுன்னு நெனச்சி யாரும் பாடிடாதீங்கோ சும்மா ஒளறி வச்சிருக்கோம் அவ்வளவுதேன் ஹா ஹா
சேதி தெரியுமா இப்படி நாம ஒளறி வக்கிறதக்கூட சுட்டுகிட்டுபோய் அவங்க எழுதின பாட்டா போட்டுக்கிறாங்கன்னு ஒருத்தர் வழக்கு தொடர்ந்திருக்காம். ஒன்னோடதெல்லாம் யாரு சுடுவாங்குறீங்களா அதுவும் சரிதான் ஹி ஹி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது