தந்தையின் தவிப்பு
எனது அன்பு மகனே
அன்னையைமட்டும்
அணைத்துகொள்கிறாய்
இந்த தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்
ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா
சிலஇடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே
சித்தரிக்கபடுகிறது!
சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா
அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்
அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப்போலவே
பார்ப்பதைதான்
என்னால்
பொறுக்கமுடிவதில்லை
விரோதியல்லடா உன் தந்தை
உன்னை
இவ்வுலகத்திற்கு வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக்கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு
தன்
உயிரைக்கொன்று
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நான்
மகனே
நீ உயிர்வாழ
உன் அன்னை -தன்
உதிரத்தைப்
பாலாக்கித்தந்தாள்
நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,,,,,,,,,,அறிவாயா?
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
மிகவும் அருமை
பதிலளிநீக்குதந்தையின் பாசத்தை எவ்வளவு அழகா சொல்லிருக்கிங்க.சூப்பர்ர்ர்ர் மலிக்கா.
பதிலளிநீக்குமலிக்கா தந்தையின் உணர்வுகளை , மிக அழகாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்கு//sri
பதிலளிநீக்குமிகவும் அருமை//
sri தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தந்தையரின் உள்ளக் குமுறல்
பதிலளிநீக்குதத்ரூபமாய் வெளிவந்துள்ளது.
பல தந்தையர்களுக்கும் தனயர்களுக்கும்
இதுவே பாலம் அமைக்கும். வாழ்த்துக்கள்
தந்தையரின் உள்ளக் குமுறல்களை தத்ரூபமாய் தந்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குபல தந்தையருக்கும் தனயருக்கும் இதுவே பாலம் அமைக்க வாழ்த்துக்கள்
கவிதையை படித்து
பதிலளிநீக்குகண்கலங்கினேன்.......
என் தந்தையை நினைத்து.......
நீங்கள் எழுதியதில்
மிகவும் ஈர்த்த கவிதை............
வாழ்த்துக்கள்.....
நட்புடன்.........
காஞ்சி முரளி.................
சூப்பர்...
பதிலளிநீக்கு2010க்குப்பால..
2016-ல் போடும் கமெண்ட் இது...
எப்புடி...