நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிரே உயிரே உருகாதே


மனபாரம் அதிகமாவதால்
மருந்துக்கு பதிலாக
விசமென்று தெரிந்தும்
விதைக்கிறாய்
உன் உதட்டில்


உதடு காய்யும்போதெல்லாம்
நாக்கால்
உமிழ்நீர்கொடுத்து உதவுகிறாய்
அதை
உள்வாங்கிய குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறது
உன்குடலை

நெருபென்று தெரிந்தும்
கொழுத்திகொள்கிறாய்
குடலை வருத்திக்கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்துபோகிறாய்
உயிரை இழக்கப்போகிறாய்


உன்வசம் நீனில்லை
எதற்க்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு
இதை உணர்ந்தால்
நீ  என்றும் உனக்கு
இல்லையேல்
விடியாது கிழக்கு

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

10 கருத்துகள்:

  1. //இதை உணர்ந்தால் நீ, என்றும் உனக்கு
    இல்லையேல் விடியாது கிழக்கு//

    உண்மைதான்..

    சிந்திக்க வேண்டிய வரிகள்

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்களுக்கு மிக்க சந்தோஷம் ஃபாயிஜா

    பதிலளிநீக்கு
  3. வருகைதந்து கருத்துக்கள் பதிந்த வசந்த அவர்களுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. நான் காதல் கவிதை என்றுதான் முதலில் நினைத்தேன்.
    ஆனால், அது, சாதலை தடுக்கும் கவிதை என பின்பு
    தெரிந்தது.

    சிகரெட்டின் ஒரு முனையில் நெருப்பு; மறுமுனையில்
    முட்டாளின் உதடு.

    எனவே நல்ல கருத்து!

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்துக்கள், எளிமையா புரியும்படி கவி நடையில் சொல்லி இருக்கீங்க. புகைப்பவர்கள் இதனை படித்து பகைத்தால் நலம். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை அழகாக கூறியிருக்கிறீர்கள் , புகைபடங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  7. புகைபிடிப்பதால் வரும் கேட்டினை படம் +கவிதை கொண்டு கலக்க்கிட்டீங்க மலிக்கா

    பதிலளிநீக்கு
  8. //உன்வசம் நீயில்லை
    எதற்கிந்த புகையிலை//

    நல்ல கேள்வி மலிக்கா

    அன்புடன் புகாரி

    பதிலளிநீக்கு
  9. //நான் காதல் கவிதை என்றுதான் முதலில் நினைத்தேன்.
    ஆனால், அது, சாதலை தடுக்கும் கவிதை என பின்பு
    தெரிந்தது//

    நிஜாம் அண்ணா, பலரை நோய்வாய்படுத்தி சாகடிக்கும், புகையை
    ஏன் பகைக்க மறுக்கிறார்கள் என்பதுதான் விந்தையாக இருக்கிறது

    தாங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது