நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நானும் கவிதையும் 200,ரையும் தாண்டி...

அன்பு நெஞ்சங்கள் அனைவரையும் என்னுடைய 205 வது [நீரோடையில் மட்டும்]பதிவில் அன்போடு வரவேற்கின்றேன்.

இது நூறாவதுபதிவு நேரமிருப்பின் கிளிக் செய்யவும்
கவிதையும் நானும் 100 ,ரையும் தாண்டி

தகதகவென ஜொலிக்கும் தங்கமகன் விருதை அளித்த ஜெய்லானி அண்ணாவின் துஆக்களோடு இருநூற்றி ஐந்தாவது பதிவில் அடியெடுத்துவைக்கிறேன். தங்கமங்கையாக [அச்சோ தங்கம் விற்கும் விலைக்கு கடத்திடப்போறாங்க பாத்து இருங்கோன்னு ஆரோ சொல்லுறது காதில் கேட்குது அதெல்லாம் கவனமாக இருப்போமுல்ல தங்க கிரில்போட்ட கூட்டுக்குள்..ஹி ஹி ஹி]


வலையில் விழுந்து இன்றோடு 11 மாதங்களாகிறது.
ஆரம்பத்திலிருந்தே என் பதிவுகளுக்கு ஆதரவும், கருத்துக்களும், என்னை மென்மேலும் எழுத்தூண்டியது. அதன்காரணமாக. பலமேடைகளில் கவிதைகள் வாசிப்புகள். நாளேடுகளில். மற்றும் பலபுத்தங்களில் என் கதை. கவிதைகள்.பல தளங்களில் என்கவிதைகள். 100 கவிதைகள் குறுகியகாலத்தில் எழுதியதற்காக வாங்கிய விருது மற்றும் என் அன்புவலைப்பதிவாளர்கள் அள்ளிதந்த விருதுகளென அதீத சந்தோஷத்தோடு ஆரவாரமில்லாமல் அன்போடு அடியெடுத்து வைக்கிறேன். இருநூற்றி ஐந்தாவது பதிவில்.

என் எழுத்துக்களால் அதிரை யுனிக்கோட் உமர்தம்பி அவர்களுக்காக முயற்சிசெய்து வெற்றியடைந்தது. என் கவிதைவரிகளால் 2.வருடங்கள் பிரிந்திருந்த[குழந்தையில்லாததால்]செல்வி,முத்தையா தம்பதியர்கள்.
முத்தையா வெளிநாடு சென்றுவிட்டு கடிதப்போக்குவரத்தோ தொலைபேசித்தொடர்போ இல்லாதிருந்தவர்கள். எதேச்சையாக தளங்களில் என்கவிதைகளை படிக்கநேர அடுத்தடுத்தும் படித்துவிட்டு தபால் போட்டதாகவும்.என் எழுத்துக்களில் ஏதோ இருந்து அவர்களை மீண்டும் இணைத்ததாகவும் தெரிவித்திருந்தார்கள். மனமார பாராட்டியிருந்தார்கள்.

அதேபோல் ஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் நாத்தனார் என்றபெயரில் அண்ணனை பிரித்துவைத்து வெளிநாடு அனுப்பிவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழ்குடும்பத்தில் என்கவிதைகளை படித்து அதை அவருக்கு அனுப்பிவைக்க நெடுநாள்களாக பேச்சிச்தொடர்பே இல்லாதிருந்தவர்கள் யார் இதை எழுதியது என பேசத்தொடங்க அதிலிருந்து தற்போது நல்லபடியாக இருப்பதாகவும். மனமகிழ்வுடன் நன்றியும் சொன்னார்கள். அப்பெண்ணைப்போல் மற்றவர்களும் ஆகக்கூடாதென கவிதையும் எழுதச்சொன்னார்கள். எழுத்துக்கள் எல்லாம் செய்யும் என்பதை உணர்ந்தேன். [உணரவைத்தார்கள்]. என்எழுத்துக்கள் என்மனதை சந்தோஷங்களைக்கொண்டு நிரப்பிய செயல்களைக் கண்டு வியந்தேன்.

என் எழுத்துக்களால் சிலராவது பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் எழுதவே தொடங்கினேன். பயன் கிடைத்தது. அதிலும் உறவுகள் நட்புகள். சகோதர சகோதரிகள் தாய்தந்தைகள் என வலையுலகில் என்னைச்சுற்றி பந்தங்களும் சொந்தங்களும் வலைபோல்பின்ன அதில் கட்டுண்டுக் கிடக்கிறேன். இது ஒன்றுபோதாதா என் எழுத்துகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
தாய் தந்தையாய் எனைத்தேற்றுவதும். சகோதர சகோதரியாயிருந்து வளர்ச்சிக்கு தூண்டுகோளாயிருப்பதும். நட்புகளாய் தோள்கொடுப்பதும் என சகலமுமாய் எனக்கு நீங்களனைவரும் கிடைத்து பாக்கியமே!

நான் இதுவரை எழுதிய பதிவுகளில் எந்தவொரு கருத்துரைகளும் என்னை பாதித்ததில்லை அப்படியாரும் என்னை பாதிக்கவைத்ததில்லை.
பலதளங்களுக்கு செல்கிறேன் அனானி என்ற பெயரில் தரகுறைவான வார்த்தைகளால் வசைப்பாடியிருப்பார்கள். அப்போதெல்லாம் மனதில் பயம்தோன்றும். இதுபோன்று எக்குதப்பாக யாரும் நமக்கு கருதுரையிடுவார்களோ என, ஏனென்றால் நான் எழுதிய பதிவும் அதேபதிவும் சிலசமயம் ஒன்றாக இருக்கும் வார்த்தைகள்தான் வேறுபட்டிருக்கும். அதிலிருந்தே புரிந்துகொண்டேன்.நம்முடைய எழுதுக்களில் நம்மையறியாமல் நன்மையிருக்கிது. அதைவிட இங்கே வந்துசெல்லும் அனைவருமே ரொம்ப ரொம்ப நல்லவங்க எனவும் அறிந்துகொண்டேன்.

யாரையும் எவ்விததிலும் நம்முடைய எழுத்துக்களால் நோகடித்துவிடக்கூடாதென்று மிக கவனமாக எழுதுகிறேன். இனியும் எழுதுவேன்.இதுவரை நான் எழுதியதில் எதுவும் தாங்களின் மனது சங்கடப்படும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என் தவறை மனதார மன்னித்துவிடுங்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவு என்றென்றும் வேண்டும் அதை தருவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது. இன்னும் நான் நிறைய நல்லவைகளுக்காக, நல்லதையே, எழுத இறைவனிடம் பிராத்தியுங்கள். உங்களோடு என்னையும் ஒரு தோழியாய். சகோதரியாய். மகளாய். ஏற்றுக்கொள்ளுங்கள்...
என் பாசமுள்ள அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் பல பல பல.

அப்புறம் ஒரு முக்கியச்செய்தி. நான் சட்டம்படித்தவள் இல்லை. பள்ளிப்படிப்பே அறைகுறைதான். நான் சட்டம் பயின்றவளென நினைத்து சிலர் உதவிகேட்கிறர்கள். இப்போது நினைக்கிறேன்,நாமும் படிதிருக்கலாமேயென. இருதோழிகளிகளும். ஒரு சகோதரரும்.[பெயர் வேண்டாம்].தாங்களின் நல்ல மனதுக்கு எல்லாம் நன்மையாக முடியும். எதற்கும் கவலைப்படாதீர்கள் இறைவன் இருக்கிறான் வெகுவிரைவில் தாங்களுக்கு நல்லது நடக்கும் நானும் இறைவனிடம் பிராத்திக்கிறேன்.


நான்காம் வகுப்புத் தாண்டா
நங்கை யொருத்திய
நல்லெண்ணெத்தோடு
நடைபயின்றாள்
வலைதளத்தில்

அன்னை மொழிக்கொண்டு
அழகுக் கவிகிறுக்கி
அன்போடு நடைபோட்டாள்
வலைகளத்தில்

வாசித்த நெஞ்சங்கள்
வாழ்த்திடவே
வாகைசூடிய கருத்துக்கள்
வழங்கிடவே

இருநூறு படைப்புகள் படைத்திட்டாள்-பல
இதயக்கூட்டுகுள் நுழைந்திட்டாள்
தலைக்கணம் ஏதும்வேண்டாமென
தன் இறையிடம் அழுது வேண்டிட்டாள்

மகிழ்ச்சி கடலில் குதித்திட்டாள்
மனமார நன்றிகள் தந்திட்டாள்
மேலும் மேலும் எழு[ந்]திடவே
மனதார வாழ்த்துக்கள் கேட்கின்றாள்

குறைகள் ஏதும் இருந்ததென்றால்
தயங்காமல் தட்டிக் கேட்டிடுங்கள்
நிறைகள் நிறைந்து இருந்ததென்றால்
நெஞ்சார தட்டிக் கொடுத்திடுங்கள்....

என்றும் உங்கள் நினைவுகளோடு
நிலைக்க விரும்பும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்களுக்கு
தொடர்ந்து ஊக்கம் தாருங்கள் அன்போடு.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது