நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விசித்திர இயந்திரம்.

கண்ணுக்குள் குடிகொண்டு
காணும் காட்சியாவும்
நீயாகிப் போனாய்-எனைவிட்டு
நீங்காமலே

நினைவுகளை சுமந்துக்கொண்டு
நிலாவின் வெளிச்சத்தில்
நித்திரையின்றித் தவித்தேன்

நான்போகும் வழியெங்கும் -உன்
நிழலில் பிம்பம் எனைத்தொடர்ந்து
நீந்திவர
நீயாகவேயானேன் நான்

எனையும் உனையும்
இணைத்தது எதுவென
என்மனதிடம் கேள்விகேட்டால்
எதுகை மோனையோடு
எகத்தாளமாய் பதிலளிக்கிறது

இதுகூட தெரியா ஏமாளியா நீ
கோடையில்லாமல் எரியும்போதும்
வாடையில்லாமல் குளிரும்போதும்
தெரியவில்லையா!
இது அதுதானென

ஆணானப்பட்ட ஆட்களே இதனால்
ஆடிநிற்கும்போது
அடிப்பெண்ணே நீமட்டுமென்ன
விதிவிலக்கா?

விரட்டாமல் மூச்சுவாங்கி
விழாமல் அடிவாங்கி
விளக்கம் தெரியாமல்
விழித்து நிற்கவைக்கும் வினோதம்

அதுதானுனக்கு அவஸ்தையாய்
அதிசயமாய் தெரியும் விசித்திரம்
அதுதான் காதலென்னும்.
அன்பை இயக்கும் இயந்திரம்..

டிஸ்கி//கடல்கடந்து வந்து கானகத்தில் தங்கி மீண்டும் கடல்கடந்து
தாயகம் சென்று திரும்பிவரும்வரையில். கவிதைகள் வந்துகொண்டிருக்கும்.அதற்கு கருத்துக்களென்னும் ஊக்கம் தந்துகொண்டிருங்கள்.
வந்ததும் உற்சாக பதிலளிக்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது