நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரித்துபோன ”மனிதம்”




ஓர் நூற்றாண்டின் முடிவில்
பிறந்து
ஓர் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
மரிக்கப் போகிறவர்கள்

பிரபஞ்சத்தின்
பரிணாம வளர்ச்சியின்
உச்சத்தில்
உருவான நிகழ்வுகளில்
வாழ்க்கிறவர்கள்
வாழ்கிறார்கள்..

அக்காலத்தில்
வாழ்ந்தவர்களை
விஞ்சிவிட்டார்கள்
இக்காலத்தவர்கள்
விண்ணையே!
மண்ணிடம்
மண்டியிட வைத்த
வியத்தகு அறிவியல்
மாற்றங்களால்..

வீட்டில் விளக்கில்லாமல்
விடிய விடிய
இருளிலேயே கழித்த
இரவுகளிருந்தது அன்று

இரவுகளை பகலாக்கும்
வெளிச்ச விளக்குகள்
விழுங்குறது
இருளையே இன்று..

வெளிச்சங்கள் மட்டும்
விரிந்திருதென்ன பயன்
இன்றுள்ள
மனிதர்களின்
மனங்களிலோ
இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
இதயங்களில்
இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..

மனிதன்
இயற்கையோடு
இணைந்திருந்த அன்று
மனிதம் தழைத்திருந்தது..

செயற்கையாய்
செயல்படத் துவங்கிய இன்று
மனதோ மரத்துபோனது!
மனிதம் மரித்துப்போனது!...

இந்த கவிதை சகோ காஞ்சி முரளி அவர்களின் ”பனை ஓசையிலிருந்து”.
அதில் சில வரிகளையும். சில மாற்றங்களையும் செய்தது என் சிந்தனைகள்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது