நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்


இறைவனின் துணைக்கொண்டு
இனிதே நிறைவேறியது
நோன்பென்னும் புனித விரதம்

இம்மாதம் முழுவதும் மகிழ்ந்த மனம்
கரையேரும் நோன்பை நினைத்து வருந்தும்
இனிதினம்

முடியும் மாதத்தை நினைத்து வருத்தம் ஒருபுறம்
முடிந்தபின் முதல் நாள் வரும் பெருநாளை நினைத்து
சந்தோஷம் மறுபுறம்

நாளை வரும் பெருநாளை வரவேற்கின்றேன்
இன்றே,
உங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்கின்றேன்

உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
தோழமைகளுக்கும் உள்ளங்களுக்கும்
என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்

11 கருத்துகள்:

 1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நானும் உங்களுடன் இணைந்து வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 3. வருத்தத்தையும் சந்தோஷத்தையும் ஒருசேர
  இணைத்து எழுதப்பட்ட கவிதை.
  கவிஞர் மலிக்கா, அருமையான கவிதை!
  அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா!

  இன்று கிடைத்த இன்பமும் உற்சாகமும்
  என்றும் நல்ல உடல்நலத்துடன் கிடைத்திட
  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து

  எனது இதயங்கனிந்த ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை உனக்கும் உன் குடும்பத்திற்கும் சமர்ப்பிக்கும்

  உன் அன்புத் தம்பி கவித்தோழன்.

  http://kavithozhan.blogspot.com

  பதிலளிநீக்கு
 5. மலிக்கா தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தாற்கும் இனிய ரமலான் வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. உங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும், எங்களுடைய இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. மேனகா சத்தியா

  ஷஃபீக்

  தியா

  தங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 8. //வருத்தத்தையும் சந்தோஷத்தையும் ஒருசேர
  இணைத்து எழுதப்பட்ட கவிதை.
  கவிஞர் மலிக்கா, அருமையான கவிதை!
  அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!//

  சதோகரர் நிஜாமுதீன் தாங்களின் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி நிஜாம் அண்ணா

  பதிலளிநீக்கு
 9. அன்புத்தம்பி கவித்தோழனே;
  தாங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி, தாங்களின் வருக்கைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி

  பதிலளிநீக்கு
 10. சாருக்கா, கீதா,
  தாங்களுடைய ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை பெரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்,

  மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது