
அசுரனை ஒழித்ததால்
அமர்க்களப்பட்ட பட்டாசுகள்
அசுரவேகத்தில் பறந்து
ஆகாயத்தை
கீறிப் பார்க்க முயன்று
தோற்றுப்போய் சீற
அடுக்கடுக்காய்
சிதறிய காதிதங்களோடு-தீயின்
சிறுபொறியொன்றும் சேர்ந்து
கீழ்நோக்கியபோது
தீட்டென
தள்ளிவைத்திருக்கும் கூரையை
தீண்டிப் பார்த்தும்
சீண்டாமல் சென்றது
”தீ”ண்டாமையால்
தீண்டப்பட்ட அக்குடில்
தகதவென எரிந்தது
எரியூட்டப்பட்ட தீயினால் அல்ல
ஏற்ற இறக்கம் தந்த நோயினால்
பட்டாசு வெடிச்சும்
புத்தாடை அணிந்தும்
பலகாரம் செய்தும்
பரிபூர்ண பயனில்லை
”ஏனெனில்”
பலயிடங்களில்
அரக்ககுணமான தீண்டாமையெனும்
அசுரன்[கள்] இன்னும் அழியவில்லை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .