கோ ஓஓஒஒஒ என்ற ஓசையுடன்
தன் பரிவாரங்களை
பின்னால் இழுத்துக்கொண்டு
புறப்பட தயாரானது
புகைவண்டி
இருவரிக்கவிதைகளாய்
இணைந்திருந்த
தண்டாவளத்தின்மேல்
தன்நீண்ட இரும்பு உடலை
இழுத்துக்கொண்டு தனக்கு
இணையில்லை
என்பதுபோல்
தன்னை ஆட்டி ஆட்டிச் செல்கிறது
அதன் ஓசைகள்
ஏழு ஸ்வரங்களையும்
ஒன்றாய் இணைத்ததுபோல்
ஒவ்வொரு சமயத்திலும்
ஒவ்வொரு ஓசை எழுப்பியபடி
ஒய்யாரமாய் ஓடும்
அதன் உள்ளுக்குள் அமர்ந்திருக்கும்
அத்தனை பேருக்கும் ஆனந்தத்தில்
ஆழ்த்துவதுபோல் மனம் ஆர்ப்பரிக்கும்
கூட்டமாய் போகும்போது
கும்மாளம் அடிக்க,
காத[லி]லன் கூடபோகும்போது
பார்வைகளை பறிமாறிக்கொள்ள,
கணவருடன் போகும்போது
தோள்களே தூளியாக்க,
தனியாய் போகும்போது
மனதின் நினைவுகளை
அசைபோட்டுக்கொள்ள,
தன்னை சன்னலோரம் சாய்த்தபடி
சந்தித்தவைகளையும் சிந்தித்தவைகளையும்
நினைவுகளுக்குள் நிலைநிறுத்திக்கொள்ள,
புதியவர்களாக இருந்தால்
நட்புகளை பகிர்ந்துகொள்ள
என
அதனுள்
பலவித பரிமாணங்களை
பார்க்கலாம்
ரயில் ஸ்நேகம்
சிலநேரம் நம் ரணங்களுக்கு
மருந்தாகும்
அதுவே சில நேரம்
நம் உணர்வுகளை ரணமாக்கும்
பாலங்களை கடக்கும்போது
தடக் தடக் டடக் டடக்
ஒரு அச்சம் கலந்த இம்சை
அதுவும் ஒருவகையில்
ஆனந்த அவஸ்தை
எதிரே அசையும்
பச்சை புடவையை பார்த்ததும்
ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஊஊஉம்
என்ற உருமலோடு
இந்த இரும்பு மனிதனும்
தன் உடலனைத்தைம்
தன் கட்டுக்குள் கொண்டுவந்து
சன்றென்று நிறுத்திடுவான்
எதையோ
விட்டு விட்டுபோவதுபோல்
இதுவரைகூட வந்த
அத்தனை
நிஜங்களையும் நிழல்களையும்
நினைத்தவாறு
நின்ற இடத்திலிருந்து
திரும்பித்திரும்பி பார்த்தபடி போவோம்
இந்த
நிலையில்லா உலகை நினைத்தபடி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அருமையாக இருக்கு
பதிலளிநீக்குஅருமைக்கு அருமையான நன்றி
பதிலளிநீக்குசாருக்கா
புகைவண்டி பயணம் ஒரு பயணந்தான்!! இங்கு இது போன்ற பயணங்கள் கிடைப்பதிலலை!!
பதிலளிநீக்குஇதோ இங்கும் வந்துவிட்டது ஷஃபீக்ஸ், [துபையில்தானே]
பதிலளிநீக்குஆனால் என்ன புகையில்லை கோஓஓஓஓஒ என்ற சத்தமில்லை,
தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
இங்கு சவூதியில் ரியாத்தில் இருக்கிறது, ஆனால் நாங்கள் இருக்கும் ஜித்தாவில் இன்னும் வரவில்லை, இங்கிருந்து மக்காவிற்க்கு ரயில் இணைப்பு விரைவில் வரப்போவதாக சொல்கிறார்கள். நான் ஒரு முறை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை சென்ற ரயில் பயணம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று, மீண்டும் செல்ல வேண்டும் போல் இருக்கு.
பதிலளிநீக்கு