நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வார்த்தையும் வாழ்க்கையும்




வார்த்தை மிக வலிமையானது
ஒரு வார்த்தைதானே என்று வீணடித்து விடாதே
அது உன் வாழ்க்கையாகவும் இருக்கலாம்

உதிர்க்கும் வார்த்தையை உயர்ந்ததாக உதிரப்பழகு
பிறரை உருக்குலைக்கும்படியாக செய்துவிடாதே

உன் வார்த்தையில் வலியும் உண்டு வாஞ்சையும் உண்டு
அதை நீ பயன்படுத்தும் முறையில், வாஞ்சையே மேன்மை

வார்த்தை அம்பு போன்றது அதை செலுத்தும்முறை
தெரியாவிட்டால் விட்டவனிடமே வந்து சேரும்

ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தைக் கொல்லும் என்பார்கள்


நம் வார்த்தை நம்மை வெல்ல வைக்காவிட்டாலும்
பிறரை கொல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

வார்த்தை நெருப்பைவிட மோசமானது தவறான
ஒரு சொல் சுற்றத்தையே சுட்டெறித்துவிடும்

நம்மிடம் வார்த்தை சுத்தமாக இருக்கவேண்டும்
வார்த்தைதவறியவன் தன்னிலிருந்து ஒருபடி கீழிறங்கிவிடுகிறான்

ஒரு வார்த்தைதானே என நினைத்தால்
அது நம் வாழ்க்கையையே மாற்றிவிடும்

ஒரு பொன்தானே தவறிவிட்டால் என்ன விடுவோமா?
அதைவிட பலமடங்கு மேன்மையானது வார்த்தை

வாயிலிருந்து வழுக்கிவிழும் வார்த்தை
வாளைவிடக் கூர்மையானது

வார்த்தைகளை வசப்படுத்த தவறியன்
வாழ்க்கையை வழுவிலக்கச்செய்கிறான்

வார்த்தைக்குள்தான் வாழ்க்கை இருக்கிறது
ஆதலால்
வார்த்தைகளை உதிர்ப்பதற்கு முன்னால்

ஒருமுறைக்கு பலமுறை யோசி
வாழ்க்கை வாழ்வது ஈசி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது