நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கிடைக்குமா ஓர்வரம்



நம் விழிகள் இரண்டும் விபத்துக்குள்ளானபோது
இடம் மாறிக்கொண்டன இதயங்கள்

எடுத்துசென்ற இதயத்தில் எவ்வித எண்ணங்களையும்
இணைத்துவிடாமல் திருப்பித்தந்துவிடு

தடுமாறி வந்த இதயத்தில் இருக்கிறதாம் ஒரு ஓட்டை
இனி கொஞ்சநாள்தான் நான் சுவாசிக்க முடியுமாம் காற்றை

"ஆதலால்"


தாழ்மையுடன் கேட்கிறேன் தயங்காமல் தந்துவிடு

என் இறப்புக்குப்பின் நீ இயந்திரமாக வாழ்வதை
நான் விரும்பவில்லை

விரும்பி வந்தவளே நான் வெறுத்துவிட்டேன் என்றெண்ணி
உன் வாழ்க்கையை வசந்தமாக்கிக்கொள்-என்று
உன்னிடம் சொல்லிவிட்டேனே தவிர

தவிக்கின்றேன் தினம் தினம் -உன்னோடு
இணைந்து வாழ கிடைக்குமா ஓர்வரம்
என நினைத்து ஏங்குது என்மனம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

10 கருத்துகள்:

  1. அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. காதலால் கசிந்துருகி...

    மிக நன்றாக உருகியிருக்கின்றீர்கள்.

    அருமையா இருக்குங்க..

    பதிலளிநீக்கு
  3. //அருமையான படைப்பு வாழ்த்துக்கள்//

    அருமையான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தியா

    பதிலளிநீக்கு
  4. //அருமையான படைப்பு வாழ்த்துக்கள்//

    அருமையான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தியா

    பதிலளிநீக்கு
  5. //காதலால் கசிந்துருகி...

    மிக நன்றாக உருகியிருக்கின்றீர்கள்.

    அருமையா இருக்குங்க..//

    நன்றாக உருகியிருக்கேனா சந்தோஷம்,

    உருகியது எனக்காக அல்ல
    என் தோழமைக்காக அவர் வலியை என் எழுத்துக்களின் மூலம் உருகித்தொடுத்துள்ளேன் கவிவடிவில்

    தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நைஜீரியா இராகவன்.

    பதிலளிநீக்கு
  6. //தடுமாறி வந்த இதயத்தில் இருக்கிறதாம் ஒரு ஓட்டை
    இனி கொஞ்சநாள்தான் நான் சுவாசிக்க முடியுமாம் காற்றை//

    இந்த வரிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

    பதிலளிநீக்கு
  7. பயணங்கள் முடிவதில்லையா?

    வாழ்வே மாயமா?

    நன்றாக இருக்கிறது

    அன்புடன் புகாரி

    பதிலளிநீக்கு
  8. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    //தடுமாறி வந்த இதயத்தில் இருக்கிறதாம் ஒரு ஓட்டை
    இனி கொஞ்சநாள்தான் நான் சுவாசிக்க முடியுமாம் காற்றை//

    இந்த வரிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு/

    பிடித்தவரிகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக நன்றி வசந்த்..

    பதிலளிநீக்கு
  9. /அன்புடன் புகாரி கூறியது...
    பயணங்கள் முடிவதில்லையா?

    வாழ்வே மாயமா?

    நன்றாக இருக்கிறது/

    இரண்டும் கலந்ததுவோ இது,
    நன்றி ஆசான்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது