இருளும்!!!ஒளியும்
எதற்கு
இறைவனின் அருளை- நாம்
பெறவேண்டுமே
அதற்கு
மனிதா!
உன் கருவறை தொடங்கி
உன் கல்லறை வரையில்
உன்னை இருளென்னும்
சோதனையைக்கொண்டு
சோதிப்பதே இறைவனின் வேலை!
அதை
தன்னம்பிக்கையென்னும் மனதில்
இறைநம்பிக்கையென்னும்
உறுதியைக்கொண்டு
வெற்றிபெறவே வைத்துள்ளான்
மனிதனுக்கு மூளை!
வெளிச்சத்தில்
அமர்ந்திருக்கும் மனிதனுக்கு
திடீரென்று
இருட்டு சூழ்ந்துகொள்கிறது-உடனே
மனதில் பயம் புகுந்துகொல்[ள்]கிறது
உள்ளத்தில் உதறல் எடுத்தபோதும்
இருட்டிய இருளுக்குள் அமர்ந்து
அதை உற்றுப்பார் உற்றுப்பார்-
இன்னும் உற்றுப்பார்
அப்போது தோன்றும் ஒரு சிறு ஒளி
அதுதான் உன் ”மனஉறுதி”
மனிதனாய் பிறந்து
மனசாட்சியோடு வாழ்வதற்கும்
மனிதனாய் பிறந்ததற்காக
மனிதத்துடன் இறப்பதற்கும்
மனிதனுக்கு நிச்சயம் வேண்டும்
மனஉறுதி!
அந்த வெண்நிலவை
சற்று கவனித்துப்பார்
அதிலும்கூட
இருளின் கலவை இருக்கும்
தனக்குள்
இருளுள்ளதே என்பதற்காக
ஒளிராமல் இருக்கிறதா
இல்லையே!
வாழ்க்கை முழுவதும்
சோதனையில்லாமல்
வாழ்ந்தவர் எவருமில்லை
அப்படி இருந்தால்
அவரிடம் கேட்டுப்பார்
ஏதோ ஒருவகையில்
இருளென்னும் சோதனைக்குள்
இன்னுமும்
ஏதோஒரு வெளிச்சமென்னும்
வெற்றியை
தேடிக்கொண்டிருப்பதை
விவரிப்பார்
இருளைவிட்டு உடனடியாக
ஒளியை கண்டால்
உன் கண்கள் உடனே மூடிக்கொண்டு
இருளைத்தேடும்
அதை உணர்ந்தபின்னே
ஒளியையை நாடும்
இருளில்லாமல் ஒளியில்லை
சோதனையில்லாமல்
வாழ்க்கையில்லை
ஆதலால்
சோதனையிலும்
வெற்றிபெற்றுவாழ்க்கை
வாழ்ந்திட
இருளை உணர்ந்து
ஒளியை பெற்றிட
இருளிலும் ஒளியிலும்
இறைவனை நினைத்திடு
ஈருலகிலும் மகத்தான
வாழ்வினை பெற்றிடு...
இக்கவிதை அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் மாதஇதழில் வெளிவந்த
என்கவிதை
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்த்துகள் கவிதை அருமையாக உள்ளது
பதிலளிநீக்கு//அதை உற்றுப்பார்,உற்றுப்பார்-
பதிலளிநீக்குஇன்னும் உற்றுப்பார், அப்போது தோன்றும்!
ஒரு சிறு ஒளி- அதுதான் உன் ”மனஉறுதி”//
ஊக்கமளிக்கும் வரிகள்.எளிமையான,அருமையான கவிதை!
//வாழ்த்துகள் கவிதை அருமையாக உள்ளது/
பதிலளிநீக்குஅருமையான கருத்துக்கு அன்பான நன்றி தியா
//ஊக்கமளிக்கும் வரிகள்.எளிமையான,அருமையான கவிதை//
பதிலளிநீக்குமுதல் வருகையிலேயே ஊக்கமுடன் கருத்துக்கள் தந்த velji .என் மனமார்ந்த நன்றி,
மீண்டும் மீண்டும் வருக கருத்துக்களை தருக