நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒளியற்ற விழி!

நன்றி கூகிள்
கலர்கனவுகளை சுமந்து
கானலைக்கூட
காணமுடியா காரிருள் சூழ்ந்த
கருவிழிகள்

வெளிச்சமென்றால் என்னவென்று
விபரமறியா கேள்விக்கேட்டு
வெளிறிக் கிடக்கும்
வெள்ளைவிழிகள்

வண்ணத்தை பார்க்கிறதா?
வடிவத்தை பார்க்கிறதா?
விளங்காமல்
விழிக்கும் இருவிழிகள்

வாழ்கையை பார்க்கமுடியா -தன்
வதனத்தை பார்க்கமுடியா
வேதனையில்
வேகிறது  மனச்செல்கள்

விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்டும்
விதிவிலக்கானதே விடியல்

காலங்கள் கடக்கிறது
கறுமையின் வெறுமையில்
காற்றோடு கேட்கிறது
கண்ணொளியின் உணர்தல்

கலிகால யுகத்தில்
கண்ணிருந்தும்
குணத்தளவில்
குருடனாயிப்பதைவிட

குருடனாயிருந்து
காலத்தை கழிப்பதே மேலென
கருதுக்கும் சொன்னாலும்
கலங்குகிறது நெஞ்சம்

மனம் கல்லானவருக்கெல்லாம்
மங்கள ஒளியிருக்கும்போது
மென்மையான மனகொண்டோருக்கு
மங்கிய ஒளிகூட முன்னுக்குவர
மறுக்கிறதே யென!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது