நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் மலிக்காவுக்கு பாராட்டு

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு



துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை அல் கூஸ் பகுதியில் உள்ள சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.

இசையும் பாடலும் எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை நிகழ்ச்சியினை காவிரிமைந்தன், அபுதாபி பழனி உள்ளிட்டோர் நடத்தினர். கவிதை நிகழ்வில் முகவை முகில், அத்தாவுல்லா, நர்கிஸ், ஜியா, கலையன்பன், ஒகளூர் நிலவன், ஜின்னாஹ் ஷரீபுத்தீன், முத்துப்பேட்டை சர்புதீன், ஜெயா பழனி உள்ளிட்ட கவிஞர்களுடன் அனீஷா என்ற 7 வயது சிறுமியும் கவிதை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து இசையும் பாடலும் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது.

மேலும் மிகக் குறுகிய காலத்தில் நூறு கவிதைகளுக்கும் மேல் எழுதிய முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு நினைவுப் பரிசினை பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக இலங்கை அமைப்பாளர் கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் வழங்கி பாராட்டிப் பேசினார்.

அவர் தனது உரையில் யாப்பிலணக்கனத்தை முறையாகக் கற்றவர்களுக்குக் கூட கவிதை எழுத வருவதில்லை. ஆனால் ஆரம்பப் படிப்பே படித்த கவிஞர் மலிக்கா சிறப்பான முறையில் கவிதை எழுதி வருவதனை பாராட்டுவதாக தெரிவித்தார். அவர் கவித்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினார்.

கவிஞர் மலிக்கா தனது இத்தகைய சிறப்புக்கு காரணம் தனது கணவரின் ஊக்கப்படுத்துவதன் காரணமே எனக் குறிப்புட்டு கணவருடன் நினைவுப்பரிசினை பெற்றுச் சென்றார்.

நிகழ்வில் கவிதை ஆர்வர்லர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நியூஸ் – Muduvai Hidayath..

இது முத்துப்பேட்டை ஓ ஆர் ஜி, யில் வெளியிடப்பட தொகுப்பு...

எனக்கு கிடைந்த இந்த விருது உங்கள் அனைவராலும் கிடைத்தது
இது உங்களுக்கும் சொந்தமானது


அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கும். தோழமைகளுக்கும்.

அன்று நிகழ்ந்த நிகழ்ச்சியில் சந்தோசப்படவைத்ததைவிட என்னை கண்ணீர்விட வைத்தது என்பதே உண்மை.


இதை  ஏற்பாடுசெய்திருந்த முகம் தெரியாத நல்லுள்ளங்கள் [உங்களைனவரைப்போன்று] -தந்தை திரு ஷேக் சிந்தா மதார்.சகோதரர் திரு கமால் ஆகியவர்களை நான் இதுவரை நேரில் கண்டதில்லை. சகோதரர் திரு திருச்சி சையது. அவர்களை இரண்டொருமுறை தமிழ்தேர் சிறப்பு விழாக்களில் பார்த்திருக்கிறேன்.மற்றும்
வானலை வளர்தமிழ் தமிழ்தேரும் .இணைந்து

என் எழுத்துக்களுக்கும் ஓர் அங்கிகாரம் தரும் விதமாக
சிவ்ஸ்டார் பவனில்
வானலை வளர்தமிழான தமிழ்தேர் இசையும் பாடலும் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்
பொருமைகாத்து அனைத்தையும் கேட்டு நிகழ்ச்சியின் இறுதியில்

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான

கவிஞர் திலகம்.தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்
கைகளால் இப்பரிசினைப்பெற்றது மிகுந்த நெகிழ்ச்சிகலந்த மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

[என்றபோதும் மிகவும் வருத்தப்பட்டேன். ஏனென்றால் காலசூழ்நிலை நேரம் போதாமையும் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததாலும் என்னால் பேசதிணருவதுபோல் இருந்ததாலும் யாருக்கும் நன்றி கூட சொல்லமுடியவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது ]

இதற்காக நான் அன்று நடத்தித்தந்த அத்தனை உள்ளங்களுக்கும்
எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

அத்தோடு தமிழ்குடும்பம் வெப்சைட்டின் தலைவர் தமிழ்நேசன் அவர்களுக்கும். அதன்மூலம் என்னையழைத்து வானலை வளர்தமிழான தமிழ்தேரை எனக்கு அறிமுகம் செய்த சிம்மபாரதிக்கும்.நான் எழுதிப்படித்த கவிதைகளுக்கு எனக்கு கைதட்டி ஊக்கமூட்டிய தமிழ்தேர் அங்கத்தினர்கள் அனைவர்களுக்கும்.வானலை வளர்தமிழான தமிழ்தேரை வழிநடத்த தன் பெரும்பங்கை ஏற்றிருக்கும் சிவ்ஸ்டார் பவன் ஓனர் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும்.

என்முகம் காணாமல், நான் இதுவரை கண்டிராமல் எனக்கு இந்த நல்வாய்ப்பை தந்த அந்த தூய உள்ளங்களுக்கும்.

என்கவிதைகளை படித்துவிட்டு எனக்கும் கவிதை எழுதவரும் என்று என்னை ஊக்கப்படுத்தி எனக்கு தன் கவிக்கரங்களால் பரிசை வழங்கிய தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கும்.

 அதற்கு மேலாக நான் எழுதும் அத்தனை கிறுக்கல்களையும் ஒன்றுவிடாமல் படித்து இது நல்லது இது கெட்டது, இதில் பிழைகளிருக்கு என ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டி எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து என்னை இந்த அளவிற்க்கு கொண்டுவந்து சேர்த்த

என் வலைப்பூ அன்புச் சகோதர சகோதரர்கள். என் அன்பு தோழமைகள். பெரியவர்கள். அனைவர்களுக்கும். இந்த செய்தியை

 http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3831&Country_name=Gulf&cat=new‏
 தினமலர் நாழிதல். மற்றும்

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=838  முதுகுளத்தூர் .காம்


http://kadayanallur.org/?p=2842 கடையநல்லூர் .காம்

http://muthupet.org/?p=1495  முத்துப்பேட்டை.ஓ ஆர் ஜி.

ஆகியவற்றில் வெளிவரக்காரணமாக இருந்த சகோதரர் முதுவை ஹிதாயத்துல்லா அவர்களுக்கும்.

என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றியென்ற ஒன்றைமட்டும்
சொல்லிவிட்டு போகாமல் என்னால் நம் தமிழுக்கு என்ன செய்யமுடியுமோ அதை என்தமிழ் எழுத்துக்களின் மூலம் இவ்வுலகிற்கு தர எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக!

எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்.

என்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மாளானவைகளான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்து மேலும் அவர்களை சிறந்த படைப்பாளிகாக வெளிவர நாம் அனைவரும் முயச்சிப்போமாக....


[இதைப்பற்றி நிறைய எழுதனும் என்றிருந்தேன் 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் எழுத முடியவில்லை.]



என்றென்றும்
உங்கள் அன்புக்காக
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது