நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எச்சில் பூக்கள்


நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகங்கள் அத்துமீரும்போது-இந்த
அல்லிப்பூக்கள் அறுவடைக்கு வருகிறது

பெற்றோரின்
முகம்காணாயிந்த மொட்டுக்கள்
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும்
சிறகொடித்த பறவைகள்

தன் சுகங்களை மட்டுமே
பெரிதென எண்ணிவாழும்-சில
மனித ஜென்மங்களால்
ஜனனத்தில்கூட ஜடமாகிபோகும்
இச்சின்னஞ்சிறிய சிசுக்கள்

தான் அனாதையாக்கப்பட்டோம்
என்பதையறியாமலே
ஆதரவற்ற நிலையில்
அனாதையில்லத்தில்
அல்லாடும் இத்தளிர்கள்
தான் யாரென அறிந்த பின்னே
துடியாய்த் துடிக்கும்
இந்த பிஞ்சு மனங்கள்

கலாச்சாரத்தின் குரல் வலையை
காலடியில்யிட்டு மிதித்து
நாகரீகத்தின் பிடியில்
சிக்கிச் சீரழியும்
நவநாகரீக கன்றுகளே!

தன்கற்பு எனும் மானத்தை
காத்துக் கொள்ளுங்களேன்
அனாதை என்ற ஒன்றை
இல்லாமல் ஆக்குங்களேன்!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்..

9 கருத்துகள்:

  1. எச்சில் பூக்கள் - எத்தனை பேருக்கு புதிய பாதை கிட்டும்.

    வலியோடு கலாச்சார சீரழிவை சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. பாவம் இந்த இளம் மொட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. தாய் தந்தையரின் முகம்காணாத இந்த மொட்டுக்கள்
    தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் தனிமை
    வயிற்றுப்பசிக்கூட பிறறிடம் கையேந்தி தவிக்கும் கொடுமை//

    ஆம் ரொம்பவும் வேதனையான விசயம்..கவிதையாக எடுத்துகூறியுள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  4. //எச்சில் பூக்கள் - எத்தனை பேருக்கு புதிய பாதை கிட்டும்.

    வலியோடு கலாச்சார சீரழிவை சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்//

    புதிய பாதை கிட்ட இறைவன்தான் வழிவகுக்கவேண்டும்

    தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. உணர்வு பூர்வமாய் வலியுணர வைக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. //தன்கற்பு என்னும் மானத்தை காத்துக்கொள்ளுங்களேன்
    அனாதை என்ற ஒன்றை இல்லாமல் ஆக்குங்களேன்!!//

    இதை இன்னும் உரக்கச்சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  7. இவ்வாறான அனாதைக் குழந்தைகளை
    எண்ணி வேதனையுற்று தாங்கள்
    இயற்றிய இக்கவிதைப் படித்து
    நானும் சற்றே வேதனையுற்றேன்.
    அவர்களைப் பற்றிக் கவலைப்படும்
    ஆத்மா நீங்கள் மற்றும் நாம் செய்யும்
    வேண்டுதலை ஏற்று இறைவன்
    அருள் புரிவானாக்!

    பதிலளிநீக்கு
  8. //மனதை தொட்ட கவிதை.....//

    மிகுந்த மகிழ்ச்சி கிளியனூர் இஸ்மத்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது