நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பதிவுலகில் நான் கற்றதும்! பெற்றதும்!...


இந்த பதிவுலகில் வந்த கொஞ்சகாலத்தில் அதாவது 9.மாதத்தில்அதில் 3, மாதம் வெளியுலகம் அறியாமலே. 6 மாதங்களாகத்தான் இந்தபதிவுலகத்தில் நன்கறியப்பட்ட எனக்குகிடைத்த வரவேற்பு [எனது மூன்று தளங்களுக்குமே] என்னை சில சமயம் மெய்மறக்கச்செய்திருக்கிறது.மகிழ்வடைச்செய்கிறது.


இதில் நிறைய கற்றுக்கொண்டேன் கற்றுக்கொள்கிறேன்.

இங்கு தோழமைகளாகட்டும். உறவுகளாகட்டும்.நட்பான உறவுகளாகட்டும். உறவுக்குள் வந்த நட்பாகட்டும் அனைத்தும் அனைத்தும் ஆனந்தத்தைதான் தந்தது.


இங்கு முகம் தெரியாத முகவரியறியாத மனங்களை மாசுகளற்று பார்க்கிறேன்.
தங்கள் எண்ணங்களை என் எண்ணங்களுக்குள் எடுத்தூற்றும் ஊற்றுக்களாய் நினைக்கிறேன்.

பதிவுலகில் எனக்கு கிடைத்தமுதல் விருது சாரூக்கா தந்தது அவர்களின் முதல் விருது என்னை ஊக்கப்படுத்தி மேடையில் காவியத் திலகத்தின் கைகளில் விருதுவாங்கும் அளவுக்கு கொண்டு சென்றது. அடுத்து மேனகா சத்தியா விருது வழங்கும்போது என்னை மறப்பதேயில்லை.

அடுத்து ஜலிலாக்கா இவர்களை தமிழ்குடும்பத்திலேயே அறிமுகம்  அவர்களின் விருது. அடுத்து ஜெய்லானி அப்பால நான்கொடுத்த மலர்விருதை இப்பால எனக்கே கொடுத்தது.

அடுத்து சைவக்கொத்துப்பரோட்டா. என்மூலம் என்மச்சானுக்கு ராஜகிரீடம் தந்தது.
மீண்டும் ஜெய்லானி தானே சொந்தமாக வைரவிருது செய்துதந்து வாசலில் மாட்டச்சொன்னது.  ஸாதிக்காக்கா தந்த வைரக்கிரீடம்.
மகராஜன் தந்த ராஜகீரீடம். சசிகுமார்தந்த ராஜகீரீடம் விருது என

விருதுமழையால் உள்ளம் நனைந்து ஊற்றெடுக்கிறது நல்லெண்ணங்களும்
நல் சிந்தனைகளும் வளமிகுந்த கற்பனைகளும். விருதுகள் என்பது ஊக்கம்கொடுக்கும் உற்சாக டானிக். எண்ணங்களை தூண்டி,
இருளகற்றும் தீபம்.
ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது. நான் பதிவுலகில் பாசத்தையும் அன்பையும் நட்பையும் அளவில்லாமல் அடைந்துள்ளேன் என்றால் அது மிகையாகாது.
என்னை இதுவரை முகம் பார்த்திராத பெரியவர்கள், என்னை தன் குழந்தையாகவே தத்தெடுத்துக்கொண்டதுதான் பெரியபாக்கியம்.
மகளே என்றழைத்து எனக்கு ஊக்கம்தந்து இன்னும் முன்னேறிவா என்ற வார்தைகளின்மூலம் ஊக்குவிக்கும் தாய்களையும்,  தந்தைகளையும் ,நேரில் ஒருமுறையேனும் பார்த்தேயாகவேண்டும்
என்ற எண்ணம் என்னுள்.
அதேபோன்று நட்புகளாக. என் உடன்பிறவா சகோதர சகோதரிகளாக.
உற்ற தோழிகளாக. நிறைய நிறைய. அவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலும் என்னுள்ளே! மிகுதியாய்..
எழுத்துப்பணிக்கென்று வந்துவிட்டோம் அதில் இடரில்லாமல் செல்லவெண்டுமென்பதே எனது எண்ணம்..

சில தளங்களின் அடுத்தவர்மனத்தை காயப்படுத்துவற்காகவே சிலவிசமிகளின் போக்குகள்.
அவரவர் தளமென்னும்போதும் பிறர் மனதை புண்படுத்தும் என்று தெரிந்தும். அடுத்தவர்மீது புழுதிகளைவாரியிறைப்பது காற்றில்பறந்துவந்து தன்மீதும் படியும், தன்கண்களில் விழுந்து உறுத்தும், என்ற எண்ணங்களில்லாமல் நடப்பது வேதனைக்குரியவிச[ய]ம்.


நல்லவைகளை எடுத்துச்சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியுமில்லை.எல்லாம் அறிந்தவளுமில்லை. இருந்தபோதும்.
வாழ்க்கை கொஞ்சகாலம்,வாழும் காலம்வரை நன்மைகளின்பக்கமே நம் நட்புகளும். உறவுகளும். நம் பந்தங்களும் செல்லவேண்டும் என்பது என் ஆவல்!
அதற்காக என்னாலானவைகளை எடுத்துசொல்கிறேன் ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள்வசமே!

என்றும்
உங்களின் அன்பென்னும் ஆதரவையும்.
ஆதரவென்னும் கருத்துக்களையும்.
கருத்துக்களென்னும் ஊக்கத்தையும்.
ஊக்கங்களென்னும் விருதுகளையும்.
விருதுகளென்னும்
உங்களின் ஆத்மார்த்தமான அன்பையும் வேண்டும்
என்றென்றும் உங்களில் ஒருத்தியாய் உலாவர
விரும்பும்
உள்ளமாய் நான் நான் நான்...


பதிவர்களாக பவனிவரும்
பசுமை மனங்கள்
பாசத்தை பகிர்ந்தளிக்கும்
பண்புள்ள குணங்கள்

உலாவரும் வேளையில்
உற்சாகம்தரும் கருத்துக்கள்-இன்னும்
ஊற்றாய் ஊறிவா! ஊரறியவா -என
ஊக்கம்தரும் விருதுகள்.

முகமறியா முகவரிகள்
முல்லைப்பூவின் மணவிரியல்கள்
மாசுகளற்ற பரிமாற்றங்கள்
மனத்தேடல்களின் நினைவோட்டங்கள்

பதிவுலகில் பெற்றதெல்லாம்
பசுமரத்தானிகள் பல படிப்பினைகள்
பாருலகில் உள்ளதெல்லாம்-ஒன்றுகூடி
பங்குபோட்டுக்கொள்ளும் மனக்குறைகள்

புனிதபூமி சுழல்வதிலே
புண்ணியங்களில் பலவகைகள்
பதிவுலகின் சுழற்சியிலே
பண்படாதவைகளும் சிலவகைகள்

நல்லவைகள் எடுத்துக்கொண்டு
தீயவைகளை புறம்தள்ளுங்கள்
நடந்தேறட்டும் நாள்தோறும்
நமக்கான
நன்மையான காரியங்கள் ...

டிஸ்கி// அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால்  அனுதினமும் வந்து ஊக்கம்தரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும்.
பார்வையிட்டு செல்லும் பண்பர்களுக்கும். என் அன்பான அன்பைத்தருவேன் எந்நாளும் இறைவன் உதவியால்!!!!!!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது