நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சாட்டையடி

வீட்டைவிட்டு கிளம்பும்போது
விருட்டென சென்றது
வாசல்வழி வந்தபூனை

வாசலிலேயே நின்று
வடக்கு பார்த்தும்
வாஸ்து பார்த்தும் -மனதில்
விசமத்தோடு சென்றான்

வீதியிலொருப் பூனை-தன்
வயிற்றுப் பசிபோக்க 
எதிர்திசையில் கிடந்த -தன்
இரணத்தை எடுக்க ஓடியது

கூறுகெட்ட மனிதன்-அதன்
குறுக்கே போக
சர்ரென போனவண்டி-அதன்மீது
சட்டென ஏறியதும்

இறந்தது பூனை
இடிவிழுந்ததுபோல் நின்றான்
எல்லாம் கற்றறிந்த
இன்றைய மனிதன்

மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-அவன்
மனதில் விழுந்தது சாட்டையடி
மனசாட்சியின் ஓசையால்......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

28 கருத்துகள்:

  1. சரியான சாட்டையடிதான் எல்லா கோணத்திலும் யோசிப்பீங்களோ சபாஷ் மலிக்கா.

    பாவம்தான் பூனை அதற்குதெரியாது மனித சகுனத்தைப்பற்றி எவ்வள விசமானதென்று.. ஹி ஹி..

    பதிலளிநீக்கு
  2. சாட்டையடி!! சரியான அடி...ஜூப்பர் கா...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. அப்பப்பா சூப்பர் கவியாலே எல்லாம் சொல்லிடுவீங்க போல அசத்துறீங்க சகுனம் பார்பதே கூடாதுன்னு நினைக்கிறவ்ன் நான் எல்லாம் கடவுள் விட்டவழி அதன்படியே நடக்கும் அதனால் இதானால் என்று நம்மை நாமே ஏமாத்திக்கிறோம்

    நல்ல கவிதை மல்லி....பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. supeeeeeeeeeeeer kavithai

    adissaa neththiyadi appadippoodu poodu adissippoodu kaviyaalee..

    பதிலளிநீக்கு
  5. மூட நம்பிக்கைக்கு ஏத்த அடிதான்.. நல்லாயிருக்கு மலிக்கா..

    பதிலளிநீக்கு
  6. Interesting.... Just now, I saw this youtube video in a forwarded mail.

    http://www.youtube.com/watch?v=I2ac8sHzzGY

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க‌ வேண்டிய‌ க‌விதை.. ந‌ல்லாயிருக்கு ம‌லிக்கா அக்கா.. :)

    பதிலளிநீக்கு
  8. மரித்தது பூனை
    மனிதனின்
    சகுனம் சரியில்லாததால்

    சரியான எழுத்துகள் உரைக்கும் வார்த்தைகள்

    பதிலளிநீக்கு
  9. தலைப்புக்கு ஏத்த கவிதை.தாயகம் போயிட்டு வந்த பிறகு ரொம்ப அசத்த மாதிரி இருக்கும்மா...

    பதிலளிநீக்கு
  10. அந்த பூனைக்கு சகுனம் சரியில்லை.. அதான் காரணம் ஹி...ஹி.. இல்லையா மலீகாக்கா..!!

    பதிலளிநீக்கு
  11. மரித்தது பூனை
    மனிதனின்
    சகுனம் சரியில்லாததால்-அவன்
    மனதில் விழுந்தது சாட்டையடி
    மனசாட்சியின் ஓசையால்......]]

    வீர்யம்

    பதிலளிநீக்கு
  12. சிந்தனையைத் தூண்டும் கவிதை . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. பாவம் ஒரு உயிர் அநியாயமா போயி விட்டது.
    எல்லோரும் பூனையைத்தான் குற்றம் சொல்லுகிறார்கள்.
    பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை.
    ஏன் குட்டி போட்ட பூனை மாதுரி நடக்குறே.
    அந்த பூனைக் கண்ணுகாரன் என்னையேப் பார்க்கிறான்.
    பூனைக் கத்தினால் மரணம் ஏற்ப்படும்.
    கல்ச்சள்ளப் போனப் பூனை பாலை நக்கிப் புருச்சு.
    உங்கள் கவிதை மூலமாவது அந்த பூனைக்கு ஒரு விடிவு காலம் பொறக்கட்டும்.
    நாட்டாமைன்னு ஒரு ப்ளாக் தொறக்கப் போறேன் வந்து கலந்துகுருங்க அக்கா..

    ஏலே .மர்க்காணி அடுப்படிலே எண்ணலா ஒரு சத்தம் .

    பேதிலே போனப் பூனை கோழிக் கொழம்பை கொட்டி விட்டிருச்சு அய்யா.

    எடுலே.. எந்திர.. துப்பாக்கியை அந்தப் பூனையை சுட்டு சூப்பு வச்சுப் புடறேன்.

    பதிலளிநீக்கு
  14. மிளகாய் போன்று காரமான கவிதை!
    நல்லாயிருக்கு கவிஞரே!

    பதிலளிநீக்கு
  15. மூட நம்பிக்கைக்கு நல்ல "சாட்டையடி"...!

    கதையும்...
    கவிதையும்....
    அருமை...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  16. ஓர் தகவல்..
    ******************

    அன்று.... (செப்டம்பர் 2009 )

    "தடயம் தேடி"

    இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Tuesday, September 01, 2009 /

    vote - 0

    *********************************************************************************************************

    இன்று... (செப்டம்பர் 2010)

    சாட்டையடி

    இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Wednesday, September 01, 2010 /

    vote - 29


    இது எப்புபுபுபுபுபுபுபபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுடி....?

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  17. சரியான சாட்டையடி கவிதை இன்றும் உலவுகிறார்கள் இதுபோன்ற மனித ஜென்மங்கள்.

    சூப்ப்ர் வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  18. ஒ ரசிக்கும் சீமானே மெட்டில் பாடவும் .

    ஓ..ஓ ..ஓ .ஓஹோ ..ஒஹோ..ஓஹ்ஹோ .ஒஹோ ஓ ..
    ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்.
    மனக்கும் மல்லிகையுடன்
    மரிக்கொழுந்துடன் பிச்சியே.எ .எ .
    வாசம் அடுக்கும் மல்லிகையுடன்
    அமைந்த முல்லையின் ரோஜா
    அற்ப்புத மனரஞ்சிதமே.

    ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்......

    வாடா மல்லி மகிழம்பு மாலை.
    பன்னீர் பரிஜாதத் தாழம்பூவின் வேலை.
    வாடா மல்லி மகிழம்பு மாலை.
    பன்னீர் பரிஜாதத் தாழம்பூவின் வேலை

    வெகு சித்திரக் கலைஞரினாலே
    அற்ப்புதத்தினாலே ஒரு இரத்தின
    மாலையைத் தொடுத்தேன் ...ன்..ன் .ன்
    வெகு சித்திரக் கலைஞரினாலே
    அற்ப்புதத்தினாலே ஒரு இரத்தின
    மாலையைத் தொடுத்தேன் ...ன்..ன் .ன்
    சபை மதிப்பிற்குரிய மாலை
    மதி போல் ஜொலிக்கும் வேலை
    நீரோடை ...வீட்டினிலே .

    ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்...

    செந்தாமரை செவ்வந்திப் பூ செண்டு......
    அதில் சேர்ந்த நந்தியும் வட்டம் உண்டு.
    சினம் சிறிதும் சிதரிடாமல்
    மனம் பெரிதும் உடைந்திடாமல்
    உனது... திறமையை நான் கண்டேன்.ன் .ன் .ன்
    கவி படைக்கும் நீயோ பாவை.
    மதி போல் ஜொலிக்குது சேவை.
    உந்தன் வீட்டினிலே. ( நீரோடை)

    ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்.
    மனக்கும் மல்லிகையுடன்
    மரிக்கொழுந்துடன் பிச்சியே.எ .எ .
    வாசம் அடுக்கும் மல்லிகையுடன்
    அமைந்த முல்லையின் ரோஜா
    அற்ப்புத மனரஞ்சிதமே.
    -----------------------------------------------------

    சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லாக் கவிதையையும் படித்தேன்
    இது நீங்கள் மட்டும் தொகுக்கிறதா ? இல்லை கூட உங்கள் கணவரின் ஒத்துழைப்பு இருக்கா ?அக்காள்



    .

    பதிலளிநீக்கு
  19. சாட்டையடி!! பலமாத்தான் விழுகிறது

    பதிலளிநீக்கு
  20. மூடப் பழக்க முடம்போக்க வந்தவுன்
    ’பா’டம் படித்து வியப்பு

    “கவியன்பன்” கலாம்

    பதிலளிநீக்கு
  21. மூட நம்பிக்கையின் கன்னத்தில் “பளார்” என்று அடி விட்டு விட்டீர்கள் இணையக்கவியரசியாரே...இன்னும் எழுதுங்கள் இது போன்ற “ பளார் “களை...கன்னம் வீங்கட்டும்

    பதிலளிநீக்கு
  22. காஞ்சி முரளி கூறியது...
    ஓர் தகவல்..
    ******************

    அன்று.... (செப்டம்பர் 2009 )

    "தடயம் தேடி"

    இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Tuesday, September 01, 2009 /

    vote - 0

    *********************************************************************************************************

    இன்று... (செப்டம்பர் 2010)

    சாட்டையடி

    இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Wednesday, September 01, 2010 /

    vote - 29


    இது எப்புபுபுபுபுபுபுபபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுடி....?

    நட்புடன்...
    காஞ்சி முரளி...//


    முரளியண்ணா! நல்ல நோட்டம் உங்களோடது. எவ்வளவு சின்சியரா கவனிச்சி இத தேடிப்புடிச்சி எடுத்து கொடுத்திருக்கீங்கள் ரொம்ப நன்றி.

    ஒருவருக்குள் இருக்கும் திறமையை ஊக்கமென்னும் கருத்துக்கள் ஜொலிக்கவைக்கமுடியும் என்பதை இந்த வலையுலகில்மூலம் அதும் உங்களைப்போன்ற நட்புகளின் மூலம் கண்டுகொண்டேன்.

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே அவன் நாடியபடியே அனைத்தும் நடக்கும்..

    மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  23. அன்பான கருத்துக்களின் மூலம் என்னை ஊக்கப்படுத்தும் அத்தனை உள்ளங்களுகும் என் மனமார்ந்த நன்றி.நன்றி நன்றி..

    தொடர்ந்து உங்கல் ஆதரவையும் கருத்துக்களையும் என்றென்றும் எதிர்பார்க்கும்
    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு
  24. சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லாக் கவிதையையும் படித்தேன்
    இது நீங்கள் மட்டும் தொகுக்கிறதா ? இல்லை கூட உங்கள் கணவரின் ஒத்துழைப்பு இருக்கா ?அக்காள் .///

    உங்கள் அன்புக்கு மிகுந்த மகிழ்ச்சி
    அய்யூப்.
    எனக்காக ஒரு பாட்டை தொகுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    எல்லாம் எனக்கு இறைவன் தந்தது உங்கள் அனைவரையும் சேர்த்துதான்.

    என் எழுத்துக்களுக்கு உறுதுணையாக இருப்பது என் மச்சான் மற்ற்ம் என் குழந்தைகள்.அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் இந்த அளவுக்கு எழுத முடியாது. என் எண்ணங்களுக்குள் ஓடும் அத்தனையும் கவியாக்க முயச்சிப்பவள் நான் அது கவியா என்று எனக்குத்தெரியாது ஆனால் கவியாக நினைத்து எழுதுகிறேன்.

    என் எழுத்துக்கள் அத்தனையும் என்னைச்சார்ந்தவையே!எழுதுவதிருந்து படம் தேர்வுசெய்வதிலிருந்து
    இதில் இணைப்பவரை என்னுடைய வேலைதான். ஆனால்

    அதற்கு முழு ஒத்துழைப்பு என் மச்சான். என் இல்லற வேலைகளை பங்குகொள்ளும்போது. இவ்வேலைகளுக்கு எனக்கு சிரமங்கள் ஏதுமில்லை. அவ்வகையில் இதில்வரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
    என் மச்சானுக்குதான்..

    மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  25. மரித்தது பூனை
    மனிதனின்
    சகுனம் சரியில்லாததால்-
    சாட்டையடி அருமை.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது