நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாசமற்று நாசமாகுதே!


இயற்கை அழியுதே இயற்கை அழியுதே!
இப்பூமியின் வனப்பும் அழிந்துபோகுதே!

செயற்கை பெருகுதே! செயற்கை பெருகுதே!
                                               சீக்கிரம் பூமி அழியப்போகுதே!

விலாசம் தேடும் மண்வாசத்திற்க்கோ
வீதிகளையும் மனிதபுத்தி சதிசெய்யுதே!

மண் தெருவையெல்லாம் மாற்றி
சிமிண்ட் ரோடாக்கியதே! ச[ஜ]ல்லிக் காடாக்கியதே!

மழை வர மறுப்பதால் சாலையெல்லாம்
சிதறி வெடிக்குதே! ஆங்காங்கே குதறிக்கிடக்குதே!

சின்னச்சிறுசுகளையும் சிராய்த்துவிடுதே!
சற்று தடுமாறினாலும் எலும்பை சட்டென முறிக்குதே!

வெயிலின் கொடுமையோ
தேகத்தையெல்லாம் வேகவைக்குதே!

சிரித்த முகத்தையெல்லாம்
சிடுசிடுப்பாக்கி கருக்குதே!

சில்லென்ற காற்றுகூட
சுல்லென்று சுட்டு மிரட்டுதே!

குளிர்காலமிங்கே
கொளுந்துவிட்டெரியுதே!

மண்ணையெல்லாம் 
மறைத்து வருகிறதே சிமிண்ட் சாலை

மண் வாசத்தையிழந்தது தவிக்கிறதே
மனச் சோலை

மழைபொழிந்த போதுமில்லையே
மண்ணின் வாசம்

விலாசம் தேடியாலையுதே ஆங்காங்கே
இயற்கையின் தேசம்

மனிதன் செய்துவருகிறான்
மண்ணுக்கும் அவனுக்கும் சேர்த்து நாசம்

இயற்கையெல்லாம் செயற்கையாகினால்
இன்னல்களால் அவதியுருமே மனிதயினம்..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது