அடியே அன்னகிளி
அடி கானகருங்குயிலே
கரிசல்காட்டு பொன்மயிலே
மாலவேளயிலே
உன்னகட்டிய மச்சான்
நாவருவேன்
தளதளன்னுசேலகட்டி
தலநிறைய பூவச்சி
தங்கச்சிலையாட்டம்
தமிழச்சியே காத்திருடி
சோலக்காட்டுக்குள்ள
நாம சோடிசேந்து போகையில
நம்ம காட்டிகொடுத்துவிடும்
உன் கெரண்டகால்கொலுசு
கெலட்டி வைச்சிபுட்டு
என்கைபுடிச்சி வாடிபுள்ள
கம்மாகரவோரம்
கதகதையா பேசிக்கொள்ள
உன் செந்தூரகண்ணத்துல
குழிஒன்னு இருக்குபுள்ள
அதகண்டுகொண்டே வருகையில
உனக்குள்ள விழுந்தேன்புள்ள
உதட்டோர மச்சமொன்னு
என்ன மொரச்சி மொரச்சி
பாக்குதடி
உயிரோடு கோக்கச்சொல்லி
என்கிட்ட உத்தரவு
கேக்குதடி
ஆயிரம் மையில்தாண்டி,
ஆசமச்சான் கனவுகண்டுகாத்திருக்கேன்
ஆதரவா ஒருவார்த்த
அன்னக்கிளியே தூதுவிடு.
அடுத்தமாதம் வந்திடுவேன்
எதிர்பர்த்திடு அன்போடு.......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வட்டார வழக்கில் வட்டில் அப்பமா
பதிலளிநீக்குஅன்புடன் புகாரி
எளிமையான உரைநடை .. கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குஎளிமையான உரைநடை .. கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குகிராமத்து கவிதை அருமை ..........அத்துடன்
பதிலளிநீக்கு"இறைவனை நேசி இன்பம் பெறுவாய்" நல்லவரிகள்...
"இறைவனை அறிந்தால் பேரின்பம் அடைவாய்"
இப்படி சொல்வது ஞானவரிகள்.......
இப்போதுதான் முதன்முதலில் இங்கு வருகிறேன்... நல்லா இருக்கு... இனி தொடர்ந்து வருவேன் மலிக்கா..
பதிலளிநீக்குவட்டார வழக்குல எழுதுன இந்த கவிதை
கிராம சந்தத்தில் இணைந்து பட்டையை கிளப்புகிறது..
நல்லாதானே எழுதி இருக்கீங்க தந்தானே தானா
இன்னும் நெறைய எழுதுங்க தில்லாலே லேலோ
வாழ்த்துக்கள் மலிக்கா....
//வட்டார வழக்கில் வட்டில் அப்பமா?
பதிலளிநீக்குஅன்புடன் புகாரி//
இனிக்கிறதா? கவிதை
தங்களின் கருத்துக்கு நன்றி
//எளிமையான உரைநடை .. கவிதை சூப்பர்//
பதிலளிநீக்குமிக்க நன்றி சாருக்கா
//கிராமத்து கவிதை அருமை ..........அத்துடன்
பதிலளிநீக்கு"இறைவனை நேசி இன்பம் பெறுவாய்" நல்லவரிகள்...
"இறைவனை அறிந்தால் பேரின்பம் அடைவாய்"
இப்படி சொல்வது ஞானவரிகள்.....//
முதலில் தங்களின் வருகைக்கு நன்றி,
"இறைவனை அறிந்தால் பேரின்பம் அடைவாய்”
இந்த ஞான வரிகளுக்கு இரண்டாவது நன்றி,
கருத்துக்களுக்கு மூன்றாவது நன்றி,
ஞானவரிகளை என் மற்றோரு வலைப்பூவிற்கு [கலைச்சாரல்] வைத்துக்கொள்ளலாமா?
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
கிளியனூர் இஸ்மத் அவர்களே:
//இப்போதுதான் முதன்முதலில் இங்கு வருகிறேன்... நல்லா இருக்கு... இனி தொடர்ந்து வருவேன் மலிக்கா..
பதிலளிநீக்குவட்டார வழக்குல எழுதுன இந்த கவிதை
கிராம சந்தத்தில் இணைந்து பட்டையை கிளப்புகிறது..
நல்லாதானே எழுதி இருக்கீங்க தந்தானே தானா
இன்னும் நெறைய எழுதுங்க தில்லாலே லேலோ
வாழ்த்துக்கள் மலிக்கா....//
முதன் முதலில் வந்ததோடு கருத்தைகளையும் தந்ததோடு
வாழ்த்துக்களையும் சொல்லியதோடு
”தந்தானே தானா”
”தில்லாலே லேலோ”
சந்தங்களும்படிய கோபியவர்களே
வருக வருக வருக
தினமும் வந்து கருத்துக்களை தருக
எளிய நடையில் உங்கள்.. கவிதை அருமை.
பதிலளிநீக்குஆஹா கிராமிய மணம், தூள் கிளப்புது போங்க, ஒரு மெட்டு போட்டு பாடிப்பார்த்த நல்லாத்தேன் இருக்கும்.
பதிலளிநீக்கு//எளிய நடையில் உங்கள்.. கவிதை அருமை//
பதிலளிநீக்குஅதிரை அபூ தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
//ஆஹா கிராமிய மணம், தூள் கிளப்புது போங்க, ஒரு மெட்டு போட்டு பாடிப்பார்த்த நல்லாத்தேன் இருக்கும்//
பதிலளிநீக்குபாடிப்பாத்திங்களா ஷஃபி
ரொம்ப சந்தோஷம் தூள்கிளப்பி கருத்துக்களுக்கு மிக்க நன்றி