நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடைக்காதே! அடையாதே!


கிளிக் கிளிக்

அப்புறம் ஒருசந்தோஷ செய்தி
வேண்டுகோள் விடுக்கிறது.என்ற என்கவிதை முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாம் கட்டதேர்வுக்கு செல்கிறது. என்கவிதைக்கான ஓட்டுகளையும் கருத்துகளையும் அளித்து முதல் சுற்றில் தேர்வாக்கியதுபோல் மற்ற இரண்டு சுற்றிலும் தேர்வாக்க தாங்களின் ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

முழுவதும் பொக்கிஷமாய்...


கிளிக் கிளிக்
இக்கவிதை முதுகுளத்தூர் .காம்மில் வெளியாகியுள்ளது.

நன்றி முதுகுளத்தூர் .காம்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மெய் தீண்டும் மை விழியே!..

கிளிக்

இக்கவிதை கவிதை சங்கமத்தின்
மெய் தீண்டும் மை விழியே தலைப்பின் போட்டிக்காக எழுதியுள்ளேன்.
ஏற்கனவே அங்கும் இதே தலைப்பில் வேறொரு கவிதை பதிந்துள்ளேன்..

இந்த விருதை அன்போடு  செந்தில்குமார்  தந்துள்ளார்கள்
மிக்க நன்றி செந்தில்குமார்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதை நீரால்.

விடியலை நோக்கி,


முகநூலில். கவிதை சங்கமம் நடத்திய கவிதைபோட்டியில். “வாய்ப்பும் வியப்பும்” என்ற என் கவிதை முதல் இடத்தை பெற்றிருந்தது. அதற்கான பரிசாக இப்புத்தகத்தை சங்கமம் குழுவினர்கள் மனமார்ந்த வாழ்த்துகளோடு இதை அனுப்பிவைத்துள்ளார்கள் கூரியரில்.நேற்றுதான் இது கிடைக்கபெற்றது. இம்மகிழ்ச்சியான விசயத்தை உங்களோடு  பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம்.

இன்பமும் துன்பமும் நிலைப்பதில்லை இந்த நிலையில்லா உலகைப்போல். சிரமமும் சந்தோஷமும் கலந்துதான் வாழ்க்கை  என்பதை உணர்த்துகிறது வாழ்க்கைப்பாடம் சிறுசந்தோஷத்தை தந்த இறைவன் சீரிய நல்லதை தந்து,சிரமத்தையும் நீக்கவழிசெய்வான் என்ற நம்பிக்கையில்...


வெளுத்த வானத்தை
கருத்தமேகம் சூழ்ந்து
வெளிச்சக்கதிரை
மறைக்க முயழ

சுற்றி வீசும் தென்றல்
சூழ்ந்த மேகத்தை கலைத்து
வெளிச்ச ஒளியை
உலகில் பரப்ப

கருத்த மேகமலையை -தன்
ஊடுருவல் உளியால் செதுக்கி
மெல்ல மெல்ல புகுந்து
வெண்ணிற வானத்தை அடைய

தென்றல் புகுந்த கீறலின் வழியே
தெரியப் பார்க்கும்
வெளிச்சக் கோடுகளை வரவேற்று
விடியலை நோக்கும் பூமியாய்

கவலைகள் சூழ்ந்துள்ள
மனதிற்கு சிறுமகிழ்வாய்
சந்தோஷக் கீறல்கள்
சில சில வந்தபோதும்

நிஜ விடியலை எதிர்பார்த்து
நிறைவைக் காணத் துடிக்கும்
நிலைகுலைந்த நெஞ்சம்
நிறைவைத் தரச்சொல்லி புகுந்தது
இறைவனிடம் தஞ்சம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
கவிஞர்களையும். இலக்கிய ஆர்வர்வலர்களையும். ஊக்கும்விக்கும்வகையில் செய்ல்படும்  கவிதை சங்கமத்திற்கு
மனமார்ந்த நன்றிகள்..

வாழ்க்கையின் வ[லு]லி...

வானத்திற்க்கு கீழ்
வீட்டைக்கட்டிவிட்டு

வான் மழைக்கும்
வீசும் புயலுக்கும்
வருத்தும் துன்பத்துக்கும்
வாட்டும் வேதனைக்கும்
வருந்துவதா? வாடுவதா?
விவாதிக்கிறது மனம்

வாழ்க்கை வலியுடையது
வளையும்போதும் நிமிரும்போதும்
வலிக்கிறது
வேதனை வருத்துகிறது

வாஞ்சையோடு வார்த்தைகள்
ஆறுதல் அளித்தபோதும்
அவஸ்த்தையோடு மனம்
அவதிப்படுகிறது

கருவறையில் இருந்தவரை
கவலைகளில்லை கனவுகளில்லை
கண்விழிக்க தொடங்கியதும்
கவலைகளும்
கனவுகளும் விடுவதாயில்லை

வலியுடைய வாழ்க்கையை
வலுவுடையதாக்குவது
மனவலிமையிலிருக்கிறதென
வரமறுக்கும் தைரியத்தை
வம்புசெய்து வரவழைத்துகொண்டேன்

வருவது வரட்டும்
வானத்தின்கீழ் வாழவந்துவிட்டேன்
வருவது வரட்டும்
தேற்றிக் கொள்கிறேன் என்னை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

காதல் துதி..

கிளிக் கிளிக்

என்னை தொலைத்தேன் உன்னுள்
உன்னைப் புதைத்தேன் என்னுள்

மூச்சை சுவாசித்தேன் உன்னுள்
அதை அடைகாத்தேன் என்னுள்

நிறைவைக் கண்டேன் உன்னுள்
அதை நிரப்பிக்கொண்டேன் என்னுள்

உணர்வுகள் கண்டேன் உனக்குள்
அதை உடுத்திக்கொண்டேன் எனக்குள்

எனையே உருக வைத்தாய் எனக்குள்
நான் உருமாறி புகுந்தேன் உனக்குள்

என்ன செய்தாய் என்னை
ஏன் நித்தமும் நினைக்கிறேன் உன்னை

அன்பு கொண்டாயோ என்மேல்
அதை அருந்திவிட்டேனோ நீர்போல்

துடிக்கிறது உனக்காக நெஞ்சம்
துதிபாடி அழைகிறேன் புகுந்துவிடு
எனக்குள் தஞ்சம்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அத்தனைக்கும் ஆமெனில்...


ணந்துவந்தவளின் மனதையறிந்து
மாராப்புக்குள் ஒளிந்திருக்கும் மனத்திற்குள்
மறைவாக ஒளிந்திருக்கும்
மங்கையவளின்
மனயெண்ணங்களை உணர்ந்ததுண்டா!

ன்னோடு உண்டு, உன்னோடு உறங்கி
உன்னோடு அழுது, உன்னோடு சிரித்து
உனக்காகவே வாழவந்திருக்கும்
உள்ளத்தின்
உணர்வுகளை புரிந்ததுண்டா

னைவியானவளின் மகிழ்ச்சியில்
மர்மத்திரை விழுந்து
மூடிக்கிடக்கையில்
மனதிற்கு இதம்கொடுத்து
மனசங்கடத்தை விலக்கியதுண்டா!

டலும் கூடலும் வரவும் செலவும்
உண்பதும் உறங்குவதுமட்டுமே
வாழ்வன்று
உன்னோடு ஒட்டி உறவாடும்
உன் வம்சத்தை விருத்தி நிலையாக்கும்
உள்ரங்கத்தின்
ஓசைகளை கேட்டதுண்டா!

றைக்கா ரகசியங்கள் ஏதுமின்றி
மனதுக்குள் ஒளிவுமறைவு ஒன்றுமின்றி
மணமுடித்த துணைவியோடு
மனமொத்த வாழ்க்கை
வாழ நினைத்ததுண்டா!

பெண்மனதையறிந்து
புன்னகையை சிந்தி
பொன்மானின் நெஞ்சம்
ஆனந்தமடைய
பூக்களின் மென்மையாய்
பூபளத்தின் தன்மையாய்
பாசங்களை பகிர்ந்ததுண்டா!

சுடுசொற்கள் அள்ளிவீசி
சுருட்டிப்போடும் பேச்சு
சுமைகளாக மாறி அவளைச்
சுற்றிக்கொள்ளும்போது
ஆறுதலான ஓரிரு வார்த்தை சொல்லி
அவளின் அகத்தை மகிழ்வித்ததுண்டா!

முகம்பார்த்தறிந்து
அவள் மெளனத்தின்
மொழிகள் புரிந்ததுண்டா!
கேட்டுக் கேட்டு கொடுத்ததைவிட
கேட்காமல்
அவளின் தேவைகளறிந்ததுண்டா!

ன்ன வாழ்க்கையிது
என்றெண்ணிவிடாவாறு
எண்ணங்கள் விதைத்ததுண்டா!
என்றுமே இதுபோன்றொரு
வாழ்க்கைவேண்டுமென
எண்ண வைத்துண்டா!

ரு மனங்கள் இணைந்து
இளமனங்களுக்குள்
இன்பம் நிலைத்திருக்கா!
இதயங்கள் இணைந்தபின்னே
இல்லத்தில் ஒளிமயம் கண்டிருக்கா!

அத்தனைக்கும் ஆமெனில்,,,

ல்லத்தில் இனிமைக்கும்
இன்பதுக்கும் குறைவேது!
ல்லையெனில்
இல்லறத்தில் என்றுமே நிறைவேது!

டிஸ்கி// எனது இக்கவிதை முதுகுளத்தூர்.காம் மில் வெளியாகியுள்ளது

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அடியே! அன்னக்கிளி...


                                                                     கிளிக் கிளிக்

இது ஒரு மீழ் பதிவு [அதிலிருந்து சிறு மாற்றங்களோடு]
இக்கவிதை தமிழ்குறிஞ்சியிலும் வெளியாகியுள்ளது
இத இப்படியும் செய்து பார்த்தேன் சும்மா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வலையுலகத்தில் நான்.


பதிவெழுத வந்ததால் கிடைத்த நிகழ்வுகளும் சில நெகிழ்வுகளும், காலங்கள் கடந்துவிட்டபோதும் மனதில் கிடக்கும் சந்தோஷ தருணங்கள்.அதை பகிர்வதில் மகிழ்ச்சியே!
தனக்குள் உதிக்கும் அத்தனையும் எல்லாரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலோங்கவே நானும் பதிவர்களில் ஒருத்தியாக வலம்வர நினைத்து. ஏதோ எனக்கு தெரிந்தவைகளை கவிதைகளென்னும் பெயரில் கிறுக்கிவருகிறேன்.
என் எழுத்துக்கள்கூட சிலருக்கு பிடித்திருக்கிறது எனநினைக்கும்போது மனது சந்தோதங்களை உணர்கிறது. அப்படி எழுத தொடங்கியதின் விளைவு. பல நல்ல உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றுதந்தது என்றால் அதுமிகையாகது.வலையுலகத்தில் நானுமிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியே

கடந்த 28-8-2010. அன்று எங்கள் வீட்டில் விசேசத்திற்காக 15 நாள் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது சில நல்ல உள்ளங்களையும் காணவும்
அன்பு பொங்கிய மனங்களிடம் பேசவும் வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் அன்பு சாரதாம்மாவிடம் பேசியனேன். போனிலேயே பாசத்தை பொழிந்து தள்ளிவிட்டார்கள். தாய்மையின் அன்பும் பேச்சும் என்னை நெகிழவைத்தது அவர்களால் வரயிலாது கன்னியாகுமரியில் இருக்காங்க நானும் போகமுடியாச்சுழல். அதனால் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம்.
சாராதாம்மா நிச்சயமாக வருவேம்மா.அடுத்த லீவில் உங்களைபார்க்க!

அப்புறம் நேரில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திய சகோதரர் காஞ்சி முரளியென்னும் முரளிதரன் அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று வீட்டின் விசேசமன்று வந்திருந்தார்கள். நெடுந்தூரம் என்றபோதும் உடல்நிலை சற்று ஒத்துழைக்காபோதும். என் எழுத்துக்களின் வாசகராய். விமர்சகராய். பிழைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராய். எங்கள்சகோதரராய்.தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு. என் அன்னையிடம் என்னைபற்றி இது புகழ்ச்சிக்காக சொல்லவில்லை இப்படியொருமகளை பெற்றெடுக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் அவரின் எழுத்துக்கள் பலரையும் சென்றடைந்துள்ளது என சிலபல நல்லவாக்கியங்கள் சொல்லியபோது, பொறுப்பாலும். மனதாலும்.வயதாலும்.எவ்வளளோ பெரியவங்க சிரமம் பாராமல் எங்களைக் காணவந்ததே சந்தோஷத்தை தந்தது.அதுவும் அன்பு மனைவி, அருமை மகள், பாசமான அக்கா பசங்கள் ஆகியோரோடு வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது.அண்ணி வசந்தியையும். மருமகள் சாருவையும் எனக்கும் என்வீட்டாருக்கும் ரொம்ப பிடித்துபோனது.

அடுத்து கோலங்கள் சாரூக்காவிடம் போனில் பேசினேன் மிகக்குறுகிய காலமாக இருந்ததால் அக்காவால் எங்க ஊருக்கு வரவோ நான் கும்பகோணம் செல்லவோ நேரில் சந்திக்க முடியாமல்போனது மனதுக்கு வருத்தம்தான்.அக்காவிடம் பேசும்போதே நேரில் சந்தித்த திருப்தி குட்டிச்செல்லங்களிடம்தான் பேசமுடியவில்லை. அக்காவின் அம்மா ஊர் தஞ்சையென்றாலும் அக்கா இருப்பதோ கும்பகோணம் என்ன செய்ய நான் இருப்பதோ மு. அ. வில் இன்ஷா அல்லாஹ் வரும் லீவில் கண்டிபாக சந்திக்கனும்.யக்கோவ் தேடுதா? .

அடுத்து சுஜி, அவரிடமும் போனில் பேசினேன்.அன்போடு அழகாய் பேசிய சுஜி,  அக்கா உங்கள் கவிதைகளை புக்காக தொகுத்து வெளியிடுங்களேன் என்று தன் விருப்பதைசொன்னார் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் வெகுவிரைவில் அதுவும் வந்துவிடும் சுஜி.
அடுத்து. என்தந்தையின் ஊரான அதிரை யுனிக்கோட்
”தேனி”திரு உமர்தம்பி அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.தேனி உமர்தம்பி அவர்களின் கணினி சேவையை பாராட்டி அவர்கள் பெயரில் கோவை செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என அமைத்து அவர்களை  கவுரவித்தது தமிழக அரசு.அதற்கு சில முயற்சிகள் செய்தது நானும் என்னோடு சேர்ந்து சில நல்லுள்ளங்களும்[இங்கு கிளிகினால் முழுவிபரம்] எங்கள் தெருவுக்கு முதல் தெருவு அதுவும் என் தந்தையின் மிக நெருங்கிய பால்ய சினேகிதரின் உறவுக்காரர்தான் என எனக்கு அங்கு அவர்களின் வீட்டில் பேசியபோதுதான் தெரிந்தது.

தந்தை ”தேனி”உமர்தம்பியின் மனைவி அவர்களிடமும்,மற்றும் மருமகள் அவர்களிடமும் பேசினேன்.
தற்போது உயிரோடு இருந்திருந்தால் இவ்விருது கிடைத்தமைக்கு எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பார்கள் என மனமுடைந்து அவர்களின் மனைவி கூறியபோது எனக்குள் இனம்புரியாத வருத்தம் இறுக்கிப்பிடித்தது. எந்த ஓர் ஆத்மாவுக்கு அது செய்த நன்மையின் பலனை எவ்வழியிலாவது வழங்கிவிடுவான் இறைவன்.அதோடு மறுமையிலும் நற்பாக்கியதை வழங்குவான் என அவர்களுக்கு ஆறுதல் சொல்லியதோடு நோன்புக்காலம் என்பதால்,நிறையநேரம் இருக்கமுடியாததால் கிளம்பினேன் 10.நிமிடந்தான் என்றபோதும் மனநிறைவாக இருந்தது.என் எழுத்துக்களால் இன்னும் நிறைய நல்லவைகள் செய்யவேண்டுமென மனதுக்குள் நினைத்தவன்னம் வெளியேறினேன்.

நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் எல்லாம் சிறந்தவைகளாக இருக்கும் என்ற இறைவனின் வாக்குப்படி. அதை வலியுறுதும் பெரியோர்களின் சொல்படி.நமது எண்ணைங்களை தூய்மையாக்கி அதன் வெளிப்பாட்டில் எழும் எழுத்துக்களை அழகாக்கி பிறரின் மனதையும் நிறைவாக்க முயற்சிக்கவேண்டும்.

இவ்வலைதளத்தின் மூலம் கிடைக்கபெற்ற சந்தோஷ தருணங்களை மனதில் நிலைநிறுதியவளாய் இன்னும் கிடைக்கபோகும் பாச நேசங்களையும். அன்பு அறிவுரைகளையும் எதிர்நோக்கியவளாக!
என் எழுத்துக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டும் தோழமைகளாக. உங்களின் பாசத்தை என்றும் விரும்புபவளாக.என் எழுதுப்பயணத்தை தொடரவிரும்பும்
என்றுமே மாறா அன்புடன்

உங்கள்
அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

 கலைச்சாரலில் இப்படியும் ”கடி”நோய்கள் 

ஊமையான உணர்வுகள்..























 ஒரேஒரு கிளிக்

ரம்பருந்த வீணைபோல்
நாதமிழந்த சந்தங்களாய்
நாட்டியத்தின்போது
அறுத்துக்கொண்ட சலங்கைகளாய்
நயமிழந்து, சுதிகுறைந்து,
சுகவீனமாய் சுருளும் உள்ளம்

றுத்து ஓடும் ரத்தம்போல்
ஆழ்மனதில் ஓடிடும் ஆரா ரணம்
ஆற்றவும் தேற்றவும் ஆளில்லாமல்
அயர்ந்து சோர்ந்து திண்டாடும் தினம்

சுகங்களை இழந்த சோலைகள்போல
சோகங்கள் சூழ்ந்த இருளின் தேகம்
சுற்றமிருந்தும் சொந்தமில்லாமல்
சுகமாய் இருபதாய் நாளும் நடிக்கும்முகம்

வித வித கனவுகள் கண்ட வாழ்க்கை
விதிவழியைக் கடந்து வேகமாய் ஓட
வாழ்க்கையின் அர்த்தம் விளங்க மறுத்து
வசைவுகள் நாளும் வாங்கிக் குவித்து
விபரமறியா குழந்தையாகி
விம்மி விம்மி வெதும்பும் மனம்

வெடித்து சிதறும் மனதின் உணர்வு-அதை
வெளியே சொல்லா முகத்தின் அறிவு
விடியும் தருவாய் எதிர்நோக்கி
வெளிச்சம் தேடும் விசித்திர நெஞ்சம்

னமிணையாத மணக்கோலம்
மார்பைத் தாக்கும் வீசிய சொல்லும்
மரபுகளென்று வகுத்த கோலம்
மல்லுக்கு நிப்பதோ விதண்டாவாதமென்று
மறைத்து வாழும் மங்கைகள் ஏராளம்

மையின் கனவு ஊமையாகும்
ஊரறிச் செய்தால் கேலியாகும்
உலகம் சுற்றும் வரையில் ஊர்கோலம்
ஊர்வசிகளின் உள்ளத்தில்
உணர்வுகளின் தேக்கம்
உதறி வெடித்தால் சிதறிப்போகும்

சிதையவும் வழியில்லை சீரழிய மனமில்லை
சிந்தும் கண்ணீரில் சிறுதுளியும் பொய்யில்லை
சீராகும் வாழ்க்கையென்ற சீரிய எண்ணத்தில்
சிறக்கிருந்தும் பறக்காமல் சிறைக்குள் பறவைகள்

பாவம் பாவைகள் படிதாண்டா பேதகைகள்
பதறும் மனங்கள்கொண்டு அல்லாடும் கோழைகள்
பாசமற்ற புழுக்கதிற்குள் மாட்டிக்கொண்ட கோதைகள்
பாழும் உலகினில் படுகிறதே பல பலவேதனைகள்...

டிஸ்கி.//என்னுடைய இந்த கவிதை தமிழ்குறிஞ்யில் வெளியாகியுள்ளது

நன்றி தமிழ்குறிஞ்சி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

ஓடிவாங்க கானம் அழைக்கிறது [தொடரோ தொடர்]

என்ன எல்லாரும் வந்தாச்சா ஒன்னுமில்லைங்கோ பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் வேணுமுன்னு சின்னப்புள்ளைங்க கேட்டுகிட்டாகளா. நாமளும் அவங்களோட கூட்டாச்சா அதாங்க [சின்னப்புள்ளையாச்சே] அதான் அவங்களோட கூட்டுசேந்துட்டேன் அப்படியே அவங்க சொன்னதையும் நம்ம ரசனைக்கு தகுந்ததுபோல் தேர்ந்தெடுத்துட்டேன் நல்லாக்குதான்னு கேக்கதான் கூப்பிட்டேன் நால்லாக்குதா

ஆசை

 புல்வெளி புல்வெளி தன்னில்
 பனித்துளி பனித்துளி வந்து
 தூங்குது தூங்குது பாராம்மா அதை
 சூரியன் சூரியன் வந்து
 செல்லமாய் செல்லமாய் கிள்ளி
 எழுப்புது எழுப்புது ஏனம்மா

 இலைகளில் ஒளிர்கின்ற பூக்கூட்டம்
 எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
 கிளைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
 எனைக்கண்டு எனைக்கண்டு இசைமீட்டும்.

இயற்கை ரசித்து ரசித்து ஆனந்தப்படவைத்து அதனுள் மூழ்கவைக்கும் கானம்..

 மேமாதம்.

மார்கழிப்பூவே மார்கழிப்பூவே உன்
மடிமீது ஓரிடம் வேண்டும்.
மெத்தைமேல் கண்கள் மூடவுமில்லை
உன்மடிசேர்ந்தால் கனவுகள் கொள்ளை

வாழ்க்கையின் ஒருபாதி நானிங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நானிங்கு ரசிப்பேன்
காற்றிலொரு மேகம்போல் நான் என்றும் மிதப்பேன்.

தனக்குள் எழும் எண்ணத்தையெல்லாம் வர்ணனையோடு
வடிக்கும் வண்ணமிகு  கானம்.

 மெளன ராகம்.

சின்ன சின்ன வண்ணக்குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாட்டும் தேன்மொட்டு நானா நானா.

சொல்லதான் எண்ணியும் இல்லையே பாசைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்..

விலகிய அன்பு நெருங்கும்போது ஏற்படும் உணர்வை 
வெளிச்சமிட்டுகாட்டி வெக்கப்படவைத்து புரியவைக்கும் கானம்

 அலைபாயுதே.

 எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
 தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதை
 தவனை முறையில் நேசிக்கிறேன்.

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி

அழகாய வரிகளால் இதயசெய்திகளை
இளகியகுரலில் சொல்லும் கானம்.


ஆட்டோகிராஃப்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..

யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒருகனவுகண்டால் இதை தினம் முயன்றால்.

சோர்ந்துகிடக்கும்  மனஉணர்வுகளை தட்டி எழுப்பும் கானம்


மெல்லத் திறந்தது கதவு

ஊருசனம் தூங்கிருச்சி
ஊதக்காத்தும் அடிச்சிருச்சி
பாவிமனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே!

உன்னெ எண்ணிநானே உள்ளம் வாடிபோனேன்
கன்னிபொண்ணுதானே ஏன்மாமனே
ஏன் மாமனே!

தன்மன எண்ணத்தை ஊரடங்கியபின் உரக்கபாடி
உள்ளத்தில் உள்ளத்தை ஊரறியச்செய்யும்  கானம்

 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
எங்கே எனது கவிதை
கனவிலே! எழுதிமடித்த கவிதை.
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதோ
கவிதைதேடிதாருங்கள் இல்லையென்
கனவை மீட்டுத்தாருங்கள்

தொலைத்த காதலை தொலைக்கமுடியாமல்
தவிக்கும் தவிப்பை உணர்த்தும் கானம்

 தீபாவளி

 கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் ஒருமயக்கம் அதை ஏற்று நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
ரெக்கை விறிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே!

காதலுக்கான எதிர்பார்ப்பில் தன்காத்திருத்தலை 
வெளிப்படுத்தும் காதல்  கானம்

ரோஜா
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவைத்த ஆசை
வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

நிறைவேறா ஆசையென்றபோதும் அதை நிறைவேற்ற
துடிப்பதுபோல் தூண்டிவிடும் கானம்.

வைதேகி காத்திருந்தாள்
அழகு மலராட அபிநயங்ககூட
சிலம்பொலியும் புலம்புவதைக்கேள்.
 விரல்கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பலயிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது..

பூங்காற்று மெதுவாக தொட்டாலும்கூட
பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றதே!

ஓர் விதவையின் உணர்வுகளையும் வலிகளையும்
வழியும்கண்ணீரோடு வதைவதை  உணர்த்தும் கானம்..

டிஸ்கி// இந்த தொடரை எழுத அழைத்த ரோஜாப்பூந்தோட்டம்...
மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி
மாணவியரின் படைப்புலகம்  அவர்கள்.அழைத்த அழைப்பையேற்று
இத்தொடர்..

ஏதோ நமக்கு தெரிந்தவரை எழுதியாச்சி கவிதை ரசனைகளோடு கலந்த கானங்கள் மிகப்பிடிக்கும். ஆனால் நமக்கு அவ்வளவாக சினிமா சம்மந்தான தொடர்பு கிடையாதுங்கோ.
தொடரில் பங்குள்ள விடுத்த அழைப்பையேற்று இவைகளை தொகுத்துள்ளேன் பிடித்திருந்தால் கருத்திடுங்கள்
அவர்கள் சவாலுக்கு அழைத்த கவிதை இங்கே பதிந்துள்ளேன் அதையும் பாருங்க

அட என்ன போறீங்க நில்லுங்க நில்லுங்க விதிமுறையே இதை தொடரனுமுன்னுதான். இத்தொடரை எழுத நான் அழைப்பது

ஆமினா [க்கா]

ஜெய்லானி அண்ணாத்தே!

வினோ!

வெறும்பய.

அப்பாடா நம்ம வேலை முடிஞ்சது இப்ப கிளம்புங்கோ வர்ட்டா...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கல்யாணச் சந்தையிலே!...























போட்டோ மேல் ஒரு கிளிக்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

எங்களுக்கும் அருள்வாயாக!

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
அண்ட சராசரத்தின் அதிபதியே!
அருளும் அன்பும் நிறைந்தவனே!

ஆதம் நபியை மண்ணால் படைத்து
அவரிலிருந்து பல சந்ததிகளை
அற்புதமாக மனிதரில் விதைத்து
அகிலத்தை வலம் வரவைத்த
ஆற்றல் மிகுந்த மறையோனே!

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறு காலக் கட்டங்களில்
வெவ்வேறு நபிகளை உலகுக்கனுப்பி
விபரங்கள் விளக்க மக்களுக்கு
வாய்ப்பளித்த வல்லவனே !

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராஹீம் [அலை]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை
அனைவருக்கும் அறியத்தந்து
மனிதர்களின் பொறுமைக்கும்
மனஉறுதியான இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத் தந்து
மகத்துவத்தை ஏற்படுத்திய
மாபெரும் அருளாளளனே!

இப்ராஹீம் நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும் நாள்வரைக்கும்
இம்மக்கள் மறந்திடாதவன்னம்
இத்தியாகத் திருநாளாம்
ஹஜ்ஜுப் பெருநாளை
ஹிதாயத்தோடு தந்தத் தூயவனே!

இறையில்லமிருக்கு மக்காவிற்கு
இறுதிக் கடமையை நிறைவேற்ற
இனிதே சென்றுள்ள மக்களங்கே
இன்னலை நீக்க கண்ணீர் மல்க
இருகரமேந்திய இறையச்சதுடன்
இறைஞ்சி வேண்டி கேட்போர்க்கு
இன்முகம் நோக்கிப் பார்ப்பவனே!
இன்பத்தை வாரிக் கொடுப்பவனே!

எங்களுக்கும் இதுபோன்றொரு
வாய்ப்பளிக்கச் சொல்லி
எங்களின் கல்பும் இங்குருக
விரும்பி விம்மி விசும்பியழுது
வேண்டி நிற்கிறோம் தினம் தொழுது
வேண்டியதை நிறைவேற்றி
எங்கள் விருப்பங்களை கபுளாக்கி
வசந்தத்தை தந்து வாழ்வளித்து
எங்கள் வாட்டங்கள் போக்க அருள்புரிவாயாக
எங்கள் நாட்டங்கள் நிறைவேற வகைசெய்வாயாக.

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
உன்னை மட்டும் நாடுகிறோம்
உன்னிடமே உதவி தேடுகிறோம்...


ஹஜ் செய்வதோடு மட்டும் நம் கடமை முடிவதில்லை ஹஜ்ஜின் காரியங்களை முடித்து நாயனின் அருள் கிடைத்து நாடு திரும்பிவந்த பின், அதன்படி நடக்க வேண்டும். நாம் செய்த ஹஜ்ஜின் கடமை இறுதிவரை பலன் தருவதுபோல் நடக்கவேண்டும். பாவங்களைபோக்கிவிட்டு வந்து நல்லதை செய்து நன்மையின் பக்கம் நன்மை முதன்மைப்படுதல் வேண்டும். இதுவே நாம் ஹஜ் செய்ததிற்கான நற்பலனைத்தரும்..

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இப்பாக்கியத்தை தந்து ஈருலகிலும் நமக்கு நல்லருள் புரிவானாக .. ஆமீன்



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

என் எலும்பின் வழியே!...























டிஸ்கி//
கிளிக் போட்டோவின் மீது ஒரு கிளிக்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

காற்றோடு காற்றாய்...





எல்லைகள் கடந்து
எதையுமே எதிர்கொண்டு
எதிர் திசையில் நின்றபோதும்
ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும்

பச்சைப் பசுமையின்மேல்
மையம் கொண்டு
பறக்கும் திறனையும்
கற்றுக் கொண்டு
பூக்களின்மேல்
மஞ்சம் கொண்டு
பூந்தென்றலாய் வீசுவதும்.

புயலாய் வருவதும்
புண்படுத்திப்
புறபட்டுப் போவதும்
புழுதியாய் வருவதும்
புகையேற்படுத்தி
புழுங்க வைத்துப் போவதும்.

வசந்தமாய் வருவதும்
வருடிச் செல்வதும்
தென்றலாய் வருவதும்
தாலாட்டிச் செல்வதும்.

மனரணம் அதிகரித்து
மண்டியிட்டு கிடக்கும்போது
மாசற்ற உன்தழுவலால்-மனதை
மயக்கங் கொள்ளச்செய்வதும்.

உடலென்னும் கூட்டுக்குள்
உன் ஊடுருவலில்லாமல்
உயிரது வாழதென அறிந்து
உள்ளும் புறமுமாய்
உறவாடி வருவதும்.

பட்டுடலையும் தீண்டி
பரம்பொருளையும் தூண்டி
பசியைக்கூட சீண்டி
பஞ்சாய் பறக்கவைப்பதும்.

வேடிக்கையாய் சிலநேரம்
விபரீதமாய் சிலநேரம்
வித விதமாய்
விஸ்வரூபம் எடுப்பதும்.

உருவமில்லாது
ஒருவார்த்தை சொல்லாது
உலுக்கியெடுத்து
உதறித் தெளித்து
உலகையே ஆட்டிவைப்பதும்
உனக்கு கைவந்தக்கலை

என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!

உனக்குத் துணையாய்
எனைச் சேர்த்து
இவ்வுலகையே
என் கனவுக் கூட்டுக்குள்
கொண்டுவர வைத்ததேனோ!.....

திண்ணை யில் வெளியாகியுள்ள என்கவிதை..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

தீப ஒளிபோல் தகதகக்கும் கவிதை.























முதலில்
தீபஒளியில் திழைக்கும் மனங்கள் அத்தனைக்கும்
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தித்திப்போடு வாழ்த்துக்களை வழங்குவதில்
திருப்தியடையும் மனம்..
[மறந்துடாம தித்திப்பு பார்சல் அனுப்பிடுங்கப்பு]

அப்புறம்
என் அன்புமகன் எழுதிய முதல் கவிதை. நேற்று இரவு திடீரென்று மம்மி நான் ஒரு போயம்[poem]] சொல்லவான்னா சொல்லுங்களேன்பார்ப்போம் அப்படின்னே. உடனே இந்த கவிதையை இருவரிகள்சொல்லி முடிக்கும் சமயம் என் கன்னங்களில் கைவைத்து மம்மி ஒரு இதயம்தானே மம்மி இருக்குன்னு அவன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு தலையை சாய்த்து என்முகத்தை நோக்கிய அழகிருக்கே!!!!!!!!! அப்பப்பா அதை சொல்லில் வடிக்க இயலாது.
அத்தனை அன்பா என்மேல் உனக்கு என்றேன்.
பின்னே இருக்காதா என்செல்ல மம்மியாச்சேன்னு கட்டிக்கொண்டே.
[இன்னமும் அந்த சிலிர்ப்பு போகவில்லை]
நிறைய மனசுக்குள்  கவிதை இருக்கு மம்மி  அப்பப்ப சொல்லுவேன் ஓகேவான்னா. ட்ரிப்ள் ஓகே என்றேன்.. .

நாம்பெற்ற பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களும் நம்மை அசரவைக்கிறத்து. அது நடையாகட்டும் உடையாகட்டும் செயலாகட்டும் சிரிப்பாகட்டும். அதுசாதரணமாகவேயிருந்தாலும். ஏதொ நம்குழந்தை சாதித்துவிட்டதைபோன்ற ஓர் உணர்வுகள்தான் நம்மை ஆட்கொள்ளும்.

மரூஃப்பிற்கு ஃபுட்பால் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம். அதேபோல் ஆர்ட் டிலும்,  எதைகாண்கிறானோ அதை வரைந்துவிடுகிறான்.
இளகியமனம், யாரின்முகமும் வாடியதுபோல் தெரிந்தால்,
பாவம்மம்மி அவங்க. என்பதலிருந்து பிறருக்கு உதவுவத்தில் முன் நிற்பதுவரை. நல்லபாசமுள்ளவன் அனைவரின்மேலும்.  வாப்பா [அப்பா] என்றால் அலாதிப்பிரியம்,அவர்களிடம்கிண்டலடித்துக்கொண்டேயிருப்பான்.
என்னிடம் நல்ல ஐஸ்வைப்பான், தப்புப்பண்ணிவிட்டதுபோல் தெரிந்தால்போதும் மம்மி மம்மின்னு வந்து என்கன்னத்தில் கைவைத்து
நான் சிரிக்கிறது நல்லாயிருக்கா அப்படின்னு சொல்லி கன்னத்தைகிள்ளி நல்லா மணக்குது மம்மி அப்படின்னு சொல்லி அப்படியே சிரிப்பான்.

தேவையில்லா எப்பொருளையும்வாங்கமாட்டான்.எதையும்  வேண்டும்தான் எனபிடிவாதம் பிடிக்கமாட்டான்,சூழ்நிலைகள்புரிந்து நடந்துகொள்வான்..ஆகமொத்தத்தில் நல்லபிள்ளை அண்ட். செல்லப்பிள்ளை..

டிஸ்கி//எப்படியிருக்கு செல்லமகனின் முதல் கவிதை.
மகனின் ஒருஎழுத்தானாலும் ஒருவரியானலும்
அது அம்மாவிற்கு கவிதைதான் இல்லையா..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மனக்குவளைக்குள்... .








ஒரு கிளிக் செய்யுங்கள் படத்தின்மேல்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வேண்டுகோள் விடுக்கிறது...



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையாகிறது

”இனியாவது”
கலந்து ஆலோசியுங்களேன்
கருகலைப்புகள் என்ற பெயரில்

தாயின் கர்பத்துகுள்ளே நாங்கள்
தகர்த்து எரியப்படாமலிருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்
உள்ளமிருப்போருக்கு - கேட்குமா!
இக்கூக்குரல்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மிதக்கும் மின்சாரம்...


















இப்படத்தின்மேல் கிளிக்செய்யவும்.

டிஸ்கி// இந்த போட்டோ எனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு சொல்லி போட்டோவை அனுப்பி இதுக்கு கவிதையெழுதிதாங்கக்கா
என்று சுஜி கேட்டதால் வந்த வினை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

"கரை சேரா படகுகள்”




















படத்தின்மேல் கிளிச் செய்தால் பெரிதாக்கிப் படிக்கலாம்

டிஸ்கி//இது முகநூல் கவிதை சங்கமத்தின்
"கரை சேரா படகுகள்” தலைப்பில் கவிதைப்போட்டிக்காக எழுதியது. போட்டியில் கவிதை கரை சேர்ந்திடுமா! நீங்களும் சொன்னாத்தானே தெரியும். சொல்லுவீகள்ள..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

இன்று வயது இறக்கிறது..


வயது ஏற ஏற
  வாழ்க்கை குறைகிறது

வாழ்க்கை குறையக் குறைய
  வசந்தம் தேய்கிறது

வசந்தம் தேயத் தேய
  ஆரோக்கியம் ஓய்கிறது

ஆரோக்கியம் ஓய ஓய
   ஆயுள் அழிகிறது

ஆயுள் அழிய அழிய
  ஆட்டம் நிற்கிறது

ஆட்டம் நிற்க நிற்க
   அனைத்தும் அடங்குகிறது

இன்று வாழ்க்கையில் மறக்கமுடியா, மறக்கயிலா நாள்,
என்வயது இறக்கும் நாள் அதாவது என்பிறந்தநாள். இதிலென்ன விசேசம், பூமியில் படைக்கப்படும் மனிதர்களில் நானும் ஒருத்தி, இதில் விசேசமோ விந்தையோயில்லை என்றபோதும். எனக்குள் ஓர் ஆனந்தம். ஆகா நாமும் இந்த பூலோகத்தில் பிறந்தது, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். என்ற வகையில் சந்தோஷமிருந்தாலும். மறுபுறம் அச்சோ. மனிதனை மனிதனே கொன்று குவிக்கும். பொதுநலநலம் குறைந்து சுயநலம் மிகுந்த சூனியம் நிறைந்திருக்கும். மனங்களை விட காகித பணத்திற்கு மதிப்பளிக்கும். ஆற்றிவு கொடுக்கப்படும் மடைமைகளுக்குள் மூழ்கியிருக்கும். சூது வாது.பொய் பொறாமையென பேராபத்துக்கள் குடிகொண்டுடிருக்கும். மாய உலகில் பிறந்து அதற்குள் ஒன்றாக நாமும் ஆகிவிட்டோமே என்ற வருத்தமும் மறுபுறம் இருந்தபோதும். இந்த இறப்பையும் அதனுடன் இணைத்து வைத்தானே இறைவன் அதை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்..

என் பிறப்பை என் குடும்பமே வரவேற்றதாம் அதுவும் ஒரு பெண்குழந்தையை என்றெண்ணும்போது என்குடும்பதின்மேல் ஒருதனிபிரியமும் மரியாதையும் உள்ளது [ஏனெனில் இன்றளவும் பெண்பிள்ளையென்றால் ஒரு முகச்சுளிப்பு இருக்கதான் செய்கிறது இதைஇல்லையென யாரும் மறுக்கயிலாது] அப்படியிருக்கும்போது என் வரவுக்காக காத்திருந்தவர்களை எண்ணி எண்ணி இறைவனிடம் அவர்களுக்காக வேண்டுகிறேன். என்பிறப்பால் என்னை படைத்தவன் முதலில் திருப்தியடையவேண்டும். பிறப்பின் பலனாய் ஈருலகிலும் எனக்கு நன்மைகிடைக்கவேண்டும்.என் பிறப்பு எனக்கு நன்மையளிப்பதைவிட, என்னால் பிறருக்கு தீங்குயேற்றுபட்டுவிடாமல் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பதுதான் என் பேராவல்.

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும்,நம் ஒவ்வொரு வயது இறக்கிறது. ஆயுள் குறைகிறது.ஆக ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று மறைகிறது.இப்பிறந்தநாள் வருவதே நாம் பூமிக்கு வந்து இத்தனை காலமாகிவிட்டது. இதுநாள்வரை நாம் என்ன செய்தோம்? இனி என்ன செய்யபோகிறோம்? இதுநாள்வரை செய்ததில் நன்மையதிகமா? தீமையதிகமா? இனி வரபோகும் காலங்களில் எதனுள் மூழ்கப்போகிறோம் நன்மையின் பக்கமா? தீமையின் பக்கமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்கவே அந்நாளை நினைவில் நிறுத்தி நம் பூமிக்கு வந்த நோக்கத்தின்.வரவு செலவு கணக்குபார்கவேண்டுமென்பதற்காக இருக்கவேண்டுமே தவிர, வீண் ஆடம்பரத்துக்காக அல்ல என்பது என்கருத்து..

ஒரு சின்ன வேண்டுகோள்.. சின்ன பசங்களுக்கோ, பெரியவர்களுக்கோ. பிறந்தநாளென்று பார்ட்டி வைப்பது அவரவர் விருப்பம். அதை வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ வைத்துக்கொள்ளுங்கள். பொது இடங்களான பார்க்[பூங்காக்களில்] வைப்பது சிறந்ததல்ல ஏனென்றால். என்னதான் வெளிநாட்டிற்கு வந்து வாழ்ந்தபோதும், நம்நாட்டில் இருப்பதைவிட வசதிகளில் மிக மிக குறைந்தவர்கள் சூழ்நிலையின் காரணமாக வெளிநாடுகளில் வந்து குடும்பமாக தங்கும் வாய்ப்புயேற்பட்டுவிடுகிறது. வெளிநாடுவந்தவர்களெல்லாம் பெரும்பெரும் வசதியானவர்கள்தாம் என நினைத்துக்கொள்வது தவறு. அப்படியிருக்கும்பட்சத்தில் நீங்க இப்படி பொது இடங்களில் கொண்டாட்டம் போடும்போது. அதை சுற்றிநின்று வேடிக்கப்பார்க்கும் பிஞ்சுமனங்களில் ஒருவித ஏக்கமும், கவலையும் அதனையறியாமல் வந்து ஒட்டிக்கொள்கிறது. தம் தாய் தந்தை இதுபோல் நமக்கு செய்ததில்லையேயென. இதை நேற்று இரவு நான் பார்க்கில் நேரடியாக கண்ட உண்மை.

9 வயது குழந்தைக்கு பிறந்தநாளாம். பார்ட்டி சகலமும் வந்து சுட சுட இறங்கிகொண்டிருந்தது. பெரிய கேக் மேடையில் வைக்கப்பட்டு, சுற்றி பலூன்கட்டி அங்கு நின்றிருந்தவர்கள் கைதட்ட கேக் வெட்டப்படுகிறது. இத்தனைக்கும் அவர்களும் ஒன்றும் பெரிய வசதியானவர்களிலில்லை. ஆனால் பிரஷ்டீஜ்.கடனையுடனைவாங்கியாவது பார்ட்டிகொண்டாடும் கூட்டங்களும் இருக்கு.

அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.ஓடிவந்து அம்மா அம்மா. இதுபோல் எப்போமா எனக்கும் செய்வே என முந்தானையைபிடித்து இழுத்து வா அங்கே என்கிறான். உடனே தாயின் முகம் சுறுங்கி சுற்றுமுற்றும் பார்த்தபடி தலை தாழ்ந்தது. சட்டென என்னை ஓரக்கணால் பார்த்துக்கொண்டே அவனை அப்புறம் அழைத்து நல்லபிள்ளையில்ல அப்பாவிடம் சொல்லி செய்யலாம். போம்மா இப்படிதான் போனவாட்டி பார்க்கிற்குவந்தபோது, அந்த அண்ணன் கேக்வெட்டிச்சில்ல அப்போதும் இப்படிதான் சொன்னேன் ஆனா நீயும் அப்பாவும் செய்யல.சின்னகேக் வாங்கிதந்து ஏமாத்திட்டீங்க.. இதமாதரி பலூன் கட்டனும். எல்லாரும் வந்து கைதட்டனும். நானும் கேக்வெட்டனும். ஒரே அழுகை. தாயும் அழுக. என்கூட பக்கதிலிருந்த அக்காவும். இதுப்போல் வந்து செய்றாங்க பாவம் பச்சபிள்ளைகள் ஆங்காங்கே அழுவுதுபார் என நீட்டிய இரு இடங்களில் இதே காட்சி. குழந்தைகளுக்கு தெரியாதல்லவா.

நாடுவிட்டு நாடுவந்து நாழு சுவற்றுகுள்ளே அடங்கியே கிடக்கும் பலபேர் நேரம் கிடைக்கும் சமயங்களில் மனதையும் ரிலாக்ஸாக்கி குழந்தைகளுக்கும் விளையாட்டுக்காட்டி செல்ல்லாமென இப்படி பூங்காக்களுக்கு அழைத்துவந்தால் போகும்போதும் இன்னும் இன்னும் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்படும்படி மற்றவர்கள் நடந்துகொள்வதுதான் காலக்கொடுமை. இது நிறைய பேருக்கு புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் சந்தோஷம் அவர்களுக்கு பெரியது மற்றவர்களைப்பற்றிய அக்கரையை அவர்கள் ஏன் கொள்ளவேண்டும். இருந்தாலும்,,,,,,,,,

நம் சந்தோஷத்தால் பிறர் மகிழ்ச்சியடையாவிட்டாலும். நம் சந்தோஷத்தால் பிறர் சங்கடத்துக்குள்ளாவதை தவிர்க்கப்பார்க்கலாம்.
[நீ சொல்லிட்டா யாரும் செய்யாம நின்னுடப்போறாகளா சும்மா போவியா... சரி சரி ]

பிறந்த நாள் கேக்கின் வடிவத்தைபோல் வாழ்க்கை தரப்பட்டிருக்கிறது. அதை வெட்டி முதலிரண்டுதான் நமக்கே ஊட்டப்படுகிறது. நாமே நம் ஆயுளை விழுங்குகிறோம். அப்புறம் கேக் வடிவத்திலிருக்கும், நம்முடைய ஆயுளையும் வாழ்க்கையும் பிறருக்கு பங்குபோட்டு தரப்பட்டு அதை அவர்கள் விழுங்குகிறார்கள். ஆகா நம்முடைய வயது கூடி ஆயுள் இறக்கும் தருணமெல்லாம், நாம் எச்சரிக்கையோடு நடக்கவேண்டுமென்பதை விடுத்து வீணானவைகளில் நம் காலத்தை கழிப்பது தவிக்கலாம் என்பதும் என்கருத்து..

உங்கள் அனைவரின் பிராத்தனைகள்தான் முக்கியமாக வேண்டும். உங்களுக்காக இறைவனிடத்தில் கையேந்தி நிற்கும்போது, எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அதில் சிறு பிராத்தனையும் சேர்ந்திருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

டிஸ்கி/.அதிகாலையிலேயே அன்போடு என் செல்லங்கள் வாழ்த்தியது. நிறைவாக இருந்தது. முகநூலில் எனக்காக   பிராத்தனைகளும் செய்த முகமறியா நட்புகளின் நல்லுள்ளங்கள் அனைத்திற்கும் என் அன்பான நன்றி நன்றி நன்றி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

இரு எழுத்துக்குள் விருப்பும் வெறுப்பும்.


வா -------------------------------------



இரு எழுத்துக்கிடையில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன அப்பப்பாஆஆஆ.


போ -------------------------------------


டிஸ்கி// அப்பாடா இந்த கவிதை எழுதிமுடிப்பதற்குள் போதும் போதென்றாகிவிட்டது. பின்னே இவ்வளவு நீளமான கவிதை நான் எழுதியதே இல்லை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அழுகிய பரிசு!

தன்னிநிலை மறந்து
தீய வழியை
தேடிப்போகும் உடலுக்கு
தனக்குத்தானே கிடைக்கும்
தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
தேடிய திரிந்த இன்பத்திற்கு
இறைவன் தந்த பரிசு
திக்குமுக்காட வைக்கும்
தீராவியாதி

மாற்றான் தோட்டத்து
மல்லிகையில்
தேனெடுக்க சென்ற
மதியிழந்த வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
அழுகவைக்கும் இந்த எய்ட்ஸ்

தான்பெற்ற இன்பத்திற்கு
தன்துணைக்கும் தன்வாரிசுக்கும்
துன்பத்தைதரும்
திட்டமிட்ட சதிவாதியே!

தவறென்று தெரிந்தும்
தத்தித்தாவி
தித்திப்பென்று தீங்கில் விழுந்து
தீயில் கருகும் மதிகளே!

உயிருள்ளவரை
உள்ளச்சத்துடன் வாழுந்து
உங்களை நம்பியுள்ளோர்களையும்
உருக்குழையாமல் வாழவிடுங்களேன்...

டிஸ்கி// ஏற்கனவே பரிசு என எழுதிய கவிதைதான் இது.
 கூடுதல் வார்தையோடு தற்போது மீண்டும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வலுவிழந்த எந்திரங்கள்!..

ஆளவரமில்லா
அடிமரத்தில் அமர்ந்தபடி
ஆண்ட நினைவுகளை
அடிபிரளாமல்
அசைபோடக் கற்றுக் கொடுத்த
சந்ததிகளை நினைத்துக் கொண்டு
சிதைந்துபோன நாட்களை
சிலிர்ப்போடு
சீண்டிப் பார்க்கும் உள்ளங்கள்

ஆலமர விழுதைப் பார்த்து
அதிசயிக்க முடியவில்லை
அதேபோல் தானிருந்தும்
அதிலிருந்து உதிரும்
இலைகளைபோல்
இன்றைய நிலையானதே யென
இடித்துரைத்த மனச் சோகங்கள்

எண்ணிலடங்கா துன்பச் சுமைகளின்
எல்லைகளைக் கடந்து
இயன்றைவரை
இயந்திரங்கள் போலிருந்து
இளைத்து உழைத்தவர்களையின்று
ஏறெடுத்து பார்ப்பதற்கோ
ஏதென்று கேட்பதற்கோ
இருந்தும் ஆளில்லாத
இன்னல்கள் கொல்லும் ஏக்கங்கள்

ஆட்டம் முடிந்ததும்
கூட்டம் கலைந்ததால்
அதிரும் மனதுக்குள்
ஆயிரம் வருத்தங்கள்
அடுத்தடுத்து சிந்தனைகளென
ஆட்க்கொள்ளும் மனக்கவலைகள்

சுறுங்கிய தோல்களும்
சுறுக்கமில்லா நினைவுகளும்
சுமைகளாய் கூடிநின்று
வெளிறிக் கிடந்த
வெற்றுப் பார்வையில்
வெளிச்சமிடும் வேதனைகள்

தழைக்க வைக்கும் வாழைமரம்
தன்னுயிரை தந்துவிட்டு
தானறுந்து கிடப்பதுபோல்
தன்னந் தனிமையின் தாக்கங்களால்
தனலில் வேகும் தவிப்புகள்

பச்சை புல்வெளிக்கெல்லாம்
பனித்துளிகளின் பிரவேசங்கள்
பாவம் இவர்களுக்கோ
பாடுபடுத்தும் முதுமையின்
ஆசுவாசுவாசங்கள்

வசந்தம் தொலைந்து வலுவுமிழந்து
வயது கடந்து வழுக்கை வந்து
வாழ்க்கையை கழி[ளி]த்து
வாஞ்சை தேடும் மனங்கள்-இனி
வரபோவதையும் வரவேற்க
விதிவிட்ட வழியென
விரக்தியோடு காத்திருக்கும்
வலுவிழந்த எந்திரங்கள்..

டிஸ்கி// என்னுடைய இக்கவிதை  திண்ணை.காம் மில் வெளியாகியுள்ளது..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கவிதையே! உன்னை காதலித்ததால் எனக்குமுதலிடம்..




















முக நூலில் கவிதை சங்கமம் நடத்திய கவிதைப்போட்டியில்
எனது கவிதையான ”வாய்ப்பும் வியப்பும்” கவிதை
முதலிடத்தை பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காற்றாய்...மலராய்...
நீராய்... நெருப்பாய்...
என்னுள் குடிக்கொண்டு...
என்னை
என்னாலேயே தேடவைக்கும்....!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

அழுகையாய்... சிரிப்பாய்...
யதார்த்தமாய்... இயந்திரமாய்...
இப்படி
எல்லா நிலையிலும்
எனை வடிக்கும்..!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

உலக உருண்டைக்குள்
ஓடிவிளையாடி...
ஓயாது விடைதேடி
ஒளிந்து மறந்து வியப்பூட்டும்...
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்...

கனவில் கருகொண்டு...
நினைவில் நிலைகொண்டு....
நெஞ்சத்தில்
நீங்காயிடங்கொண்டு... எனை
நிலைகுலையச் செய்யும்
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காணும் காட்சியாவும்
கண்ணுக்குள் குடிகொள்ள
நிகழும் நிகழ்ச்சியாவும்
நெஞ்சிக்குள் புதைந்துகொள்ள
புலனுக்கு புலப்படா
புதிர்களையும்
தோண்டிப் பார்க்கவைக்கும்
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்

கவிதை சங்கமத்தில்-எனக்கொரு
வாய்ப்பாய் கவியெழுத வைத்து
விருதாய் முதலிடத்தை
வியக்கும்படி தந்து
விழிநீர் வழிய வழிய
வசந்தத்தைத் தேடித்தந்த
கவிதையே.. உன்னைக்
காதலிக்கிறேன்..

இறைவன் எனக்களித்த
இந்த இன்றியமையா
வாய்ப்புதன்னை
போற்றி காப்பதுடன்
இதில்வரும்
புகழில் மயங்கிடாமல்
இருதயத்தை பாதுகாத்துக்கொண்டே
கவிதையே!... உன்னைக்
காதலிப்பேன்......

டிஸ்கி// இரண்டாம் இடம்.
திரு இராமன் அப்துல்லா அவர்களுக்கு.
மூன்றாம் இடம்.
திரு கோயம்புத்தூர் பால சுப்பிரமணியன் அவர்களுக்கு.
இருவருக்கும் மனமார்ந்த பராட்டுக்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

பொக்கிஷ தேவதை..

படத்தின்மேல் டபுள் கிளிக்செய்து  பெரிதாக்கிப் படிக்கவும்


டிஸ்கி// பஞ்சுக்குவியல்போலிருக்கும் இந்த பசுங்கொழுந்து
என் அன்புத்தங்கையின் ஆருயிர் மகள் ஐனுல் ஆதிரா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சரணடைந்தேன்!..


நின்னைச் சரணடைந்தேன்
என்னுயிரே!- உன்
நினைவோடு இருக்கும்
என்மனதே!

நிறைவு பெற்றதாக்குவேன்
என் வாழ்வை-அது
உன் நினைவுகள்
எனக்குள் இருக்கும்வரை!

வாழும் தருணங்களின்
நொடிக் கொடி
வசந்தங்கள்
நடனமாடும் நம்மிடையில்

காலந்தோறும்
உன்னருகில்
கண்மூடிட வேண்டும்
உன்மடியில்

வாழ்ந்திட வேண்டும்
உன் நிழல்தன்னில்
வாழ்வு கழிந்திட வேண்டும்
உன் நினைவில்

நாளைப் பொழுதை
அறிவதில்லை
நம்முணர்வுக்கு என்றுமே
பிரிவுமில்லை..

டிஸ்கி// என்ன படிச்சாச்சா!அப்படியே இதையும் கிளிக் செய்துபாருங்கள். என் செல்லம் என்ன செய்துன்னு.. அப்படியே போயிடாம வந்து கருத்தும் சொல்லிட்டுபோங்க..
.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

முத்தச் சந்தம்..




















இப்படத்திமேல் கிளிக் செய்தால் பெரிதாக்கிப் படிக்கலாம்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

நான் இறந்துபோயிருந்தேன். [மீண்டும்]























படங்களை கிளிக் செய்தால் பெரிதாக்கி படிக்கலாம்

 டிஸ்கி//பாரத்... பாரதி... "நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை... நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின் இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு, இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத் தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை../
என சவால் விட்டுட்டாங்களே நமக்கு தெரிந்ததை எழுதுவோமுன்னு எழுதி நேற்றுபோட்ட பதிவை காணலையே கருதுக்களும் வந்திருந்ததே! அச்சோ என்னப்பாயிது காலைவரையிருந்த என் போஸ்ட் எங்கே???????
அதுவும் இறந்துபோயிருக்குமோ.

நல்லாத்தானே போயிக்கிட்டுயிருந்துச்சி இதில் ஏன் இப்படின்னு புரியலையே! சேவாகியிருகுமுன்னுபார்த்தா அதுமில்லை
எரார்ன்னு காட்டுது  யாரோ டெரர் வேலை செய்திருக்காங்களோ. இல்லை சூனியம் வச்சிட்டாங்களோ.. என்ன ஆனாலும் சரி நாங்க விடுவோமா இதோ மறுபடியும் போட்டுட்டோம். பார்ப்போம் இது என்னாகுதுன்னு..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சந்தேகக் கேள்விகளில் பதில்கள் பகுதி[2]



நேரடியாக பதிலுக்கு போய்விடலாம் இல்லையின்னா  ஆட்டோ ஸ்கூட்டரெல்லாம் அன்பளிப்பா கேக்குறாங்கப்பூ நெறீய எழுதினா
இது முன்குறிப்பு:
இதற்க்குமுன்  உள்ள கேள்வியும் பதிலும்

இது அடுத்த கேள்விக்கான பதில்
2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி
அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?

எந்த ஒன்றுமே ஒன்றோடு சரிக்கு சரியாக இருந்தால்தானே சரிசமம். இதில் ஆணும் பெண்ணும் எப்படி ?
உடலாலும் மனதாலும், வெவ்வேறு வகைகளாய், வெவ்வேறு உருவ அமைப்புகளாய் படைக்கப்பட்டு, பெண் என்பவள் இன்ன தகுதிகளைக் கொண்டவள். ஆண் என்றவன் இன்ன தகுதிகளைக் கொண்டவன் எனவும்.
அதில் பலங்களும், பலவீனங்களும், புகுதப்பட்டு.ஆணுக்கு இல்லாத தகுதியான தாய்மையை பெண்ணுக்குத் தந்து பலப்படுத்தி.
மென்மையான இளகிய மனதை படைத்து பலவீனப்படுத்தி,பெண்ணுக்கு இல்லாத குண நலன்களை ஆணுக்குள் புகுத்தி. இப்படி பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசங்களால் படைக்கப்பட்டிருக்கும்
ஆணும் பெண்ணும் எப்படி சரிசமம்

பேச்சுக்கும் வார்த்தைக்கும் வேண்டுமென்றால் சொல்லலாம் சமமென,தன்னை தாக்கவரும் ஆணிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே பெண்களால் இயல்வதில்லை சிலபலமும், பல பலவீங்கனங்களைதாங்கி நிற்கும் பெண்ணால் ஆணோடு சமமாக முடியுமோ.
சொல்லிக்கொள்ளலாம். ஏன் பலம்கொண்ட மங்கைகளில்லையாயென! விதிவிலகாய். ஆங்காங்கே, ஆணின் உணர்வுகளோடும் பலத்தோடும் பெண்ணும். பெண்ணின் உணர்வுகளோடு,பலவீனத்தோடும் ஆணும் இருக்கலாம் இது படைப்பியல் நுணுக்கம் படைதவன் மட்டுமே அறிவான்.

இன்றைய பெண்கள்ஆண்களோடு சரிசமமாய் நிலவுக்கே செல்கிறர்கள். ஏன் அதற்க்கு மேலாகவே பலயிடங்களில் கால்பதிக்கிறார்கள்.சாதிக்கிறார்கள்
ஆண்களைவிட பலதகுதிகள் கூடியவர்களாக வலம் வருகிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை.அவர்களுக்குத்தெரியும் அந்த நிலைக்கு வருவதற்கு ஆணைவிட தான் எவ்வளவு சிரமங்கள், சங்கடங்களை அனுப்பவித்திருப்பார்களென. இதை மனபூர்வமான சொல்பவர்கள் சிலபேர். அதெல்லாமில்லையென சொல்லாமல் மார்தட்டிகொள்பவர்கள் பலபேர் எப்படியிருந்தபோதும்,ஒரு பெண் ஆணோடு சமம் என்பது,,,,,, ?

பெண்களின் மனநலம். உடல்நலம் அறியாதவர்கள் உலகில் உண்டா! என்னதான் தன் கணவனிடமோ,தன் தந்தையிடமோ,மற்ற அந்நியர்களிடமோ.துணிச்சலோடு எதிர்த்துபேசக்கூடிய ஆற்றலிருந்தாலும் உள்ளுக்குள் ஓர் உதறலிருக்கும்.பிறவியிலேயே பெண்கள் மென்மையானவர்கள் [இப்போது பூவுக்குள்ளும் பூகம்பம்வெடிக்கிறது அதுவேறு] அவர்களின் மென்மை ஆணுக்கு இருக்காது.
ஆண்கள் பிறவியிலேயே சற்று கடினமானவர்கள்[அவர்களுக்குள்ளும் மென்மையுண்டு அதுவேறு] அவர்களின் கடினம் பெண்ணுக்கு இருக்காது
இது இயற்கை. அப்படியிருக்க எப்படி சமம்.நானும் நீயும் ஒன்று. அதனால் எதைச்செய்தாலும் நானும் செய்வேன் என பெண்கள் இறங்கினாலென்னவாகும் நிலமை. [என்னவாகும் அதான் ஆகிவிட்டதே ஆங்காங்கே!என்கிறீர்களா]

பத்துகுழந்தைபெற்றும் ஆண் அப்படியேயிருக்கிறான் ஆனால்
ஒருபெண் அப்படியா?[ஆணா குழந்தை பெற்றடுக்கிறான் என்னம்மா சொல்லுறே]
ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்.[அதெல்லாம் மேக்கப்பு அப்படிங்கிறீங்களா ஹ ஹா ஹா]

ஆண் பெண் சமத்தால் ஆண்களுக்கு ஆதாரம் பெண்களுக்கு சேதாரம்.
எப்படியெனில்.ஆணுக்கு நிகராய் ஆடைகளில் போட்டி போடுவதால்.
அதில்மட்டும் எதிர்மறையாய்.
அவன் ஆடைகளை அடுக்கடுக்காய் கூட்டிக்கொண்டே போகிறான்.கோட் சூட்டென,ஆனால் பெண்ணோ இதற்கு நேர்மாறாய் இதில்வேறு
அதிரடி தள்ளுபடியாய் ஆங்காங்கே!அச்சோ எங்கேபோய்சொல்ல.
கேட்டால் சமத்தையும் தாண்டி  ஒருபடியாவது மேலே போய் முன்னுக்கு வந்து காட்டத்தான்.தானும் தாழ்ந்து மற்றவைறையும் அதனோடு உள்ளிழுக்கும் செயல்.

அடுத்து
இந்த சமத்தால் சீர்கெடுவது யாரென நினைக்கிறீர்கள் அவர்களின் சந்ததிகளே!அவர்களின் நிலைதான் இன்று நிலைகுலைந்து, சீர்கெட்டு,தங்கள் வாழ்கையையே பறிகொடுத்துவிடுகிறார்கள் சிலசமயம் உயிரையும் கொடுத்துவிடுகிறார்கள். ஆணுக்கு இணையாய் குடும்பத்தை காக்க வேலைக்குபோவது தவறல்ல, ஆனால்! அந்த குடும்பமே கலைந்து சிதைய காரணியாக இருப்பது சரியா! ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை சம்பாதிக்கிறார்களேயொழிய தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்த வரங்களை வலுவிழக்கசெய்துவிடுவதோடு

தான் பெற்றகுழந்தைகளை மிகச்சின்னசிறிய வயதிலேயே அதாவது பிறந்த கொஞ்சநாளிலே பேபிசிட்டிங்கிலும்.வளர்ந்து அதற்க்கு என்ன ஏது எனவிபரமறியாபருவத்திலே ஹாஸ்டலிலும்.விட்டுவிட்டு இருவருவரும் சரிக்கு சமமென போட்டிப்போட்டுவதால்.இக்குழந்தைகளின் நிலையை எண்ணிப்பார்க்க மறந்து பணமட்டுமே வாழ்க்கையாய், இருவரும் சமம் என்பது மட்டுமே குறிக்கோளாய். தான்பெற்ற குஞ்சுகளின் வாழ்க்கையை வீணடித்துவிடுகிறார்கள்.

கண்டிக்க, ஏனென்றுகேட்க ஆளில்லாமல்.பள்ளியிலிருந்து வரும்பிள்ளை பசியோடு ஃபிரிஜை திறந்து அதனுள் 1 வாரத்திற்க்கு தேவையான.
உணர்வற்ற உணவுகளை எடுத்துண்டு. தனிமையெனும் கொடுமைக்கு ஆளாக்கி.நான்குசுவற்றுக்குள்ளே அடைப்பட்டு,
சீரழிக்கும் சினிமா பார்த்து, கூடதா பலக்கவழங்கள் ஏற்பட்டு.மன உலைச்சளுக்கு ஆளாகி. அன்புக்கு ஏங்கித்தவித்து, மனதளர்ச்சி உடல்தளர்ச்சி நரம்புத் தளர்ச்சியென அவதிப்பட்டு அல்லல்படும் சிறார்களை கண்கூடே காணும்போது,என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் என மனம் அவர்களுக்காய் ஆதங்கப்படும் .ஒருமுறை மடியில் தலைசாய்த்து அழுத சிறுமியின் அழுகை.தாய்தந்தையின் சமமென்ற சண்டையால் வீட்டுக்குள்ளே பெண்களின் உணர்வுகளோடு வளரும் சிறுவன் என அடிக்கடிபார்க்க நேரும் சந்தர்ப்பங்களால் அவர்களை பெற்றவர்களின்மீது கோபம்வரும்.

அவர்கள் சொல்வதுபோல் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. இதை தன் சுயலாபத்திற்கா மட்டும் வாழ்வது சரியா?
கேட்டால் பிள்ளைகளுக்குதானே!என அவர்கள் மேலேயே பழியை சுமத்திவிடுவது. அதிகம் இரண்டாகி.இரண்டு ஒன்றாகி.தற்போது ஒன்றாகிவிட்டபோதிலும் அந்த ஒன்றை வைத்து [அது வளரும் வரையிலாவது]பார்க்கமுடியாத பெற்றோர்களாகி.]
அதைவிடக்கொடுமை.அழகுபோய்விடுமென்றும் ஆணுக்கு நிகராய் போட்டிபோட்டு முன்னேற தடையென்றும்.திருமணம் ஆகியும் குழந்தைபெற்றுக்கொள்ளாமல் இருபோர்கள்.ஆகா சமம் சமம் என்று சருக்கலிலேயே வாழ்க்கை கழிகிறது பல இடங்களில்.
ஆணும் பெண்ணும் சமம். இதனால் பிள்ளைகளின் வாயில் பன்.

அரையும் அரையும் ஒன்று
ஆணும் பெண்ணும் ஒன்று என்பது நன்று
இதில் தவறில்லை, ஆனால் சமமென சொல்லிக்கொண்டு நடுவீதியில் சடுகுடு ஆடுவது சரியல்ல ஏனெலில் இது வருவோர் போவோருக்கு ஓர் இலவச கண்காட்சியாகுமே தவிர.
இனியஇலக்கை நோக்கிப்போகாது. சமமென்று வேலைவாய்ப்புகளின் சதவீதங்களிலும் சாதனைகளிலும் சதமடிக்கட்டும்,
அதுவும் தன்னை தற்காத்துக்கொள்ளும் திறன்களோடு.
சிலநேரம் அதற்கும்  சார்தல் தேவைப்படும்.

எதுவென்றபோதும் ஆண் ஆணாகவும்.பெண் பெண்ணாக இருந்தால்தான் அந்ததந்த இனங்களுக்கே ஓர் மதிப்பு!ஆகமொத்தத்தில் இருவரும் சமம் என்பதில்,மிக மிக சில பலன்கள்தான். ஆனால் அதில் பாதிப்புகள் அதிகமதிகம்.இதையறிந்தும் அறியாதோர்போல் எக்குதப்பாய் யோசித்து எடக்குமடக்காய் கேள்விகேட்போர்களுக்கல்ல இக்கருத்து.அவரவர்களுக்கு ஆயிர கருதுக்கலிருக்கலாம்.ஆனாலிது எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

உனக்குநான் எனக்கு நீ என்பதில் சமமாகலாம்.
உன்னைவிட நான் என்னைவிட நீ என்பதிலல்ல
அப்படியிருந்தால்,
ஆண்பெண் சமம் சமாதானமாகது.
ஆட்டங்கண்டு அறுந்துவிடும்.
அன்பான வாழ்க்கை.

டிஸ்கி// மக்களே மக்களின் மக்களே!தவறோ! சரியோ
 இதுதானுங்க நம்மபளுக்கு தெரிஞ்சது !
ஆனாலிது சரின்னு எனக்குப்பட்டது அதனாலிங்கு எழுதப்பட்டது.
உங்களுக்கு தவறென்று பட்டால் அதற்கு இந்நிர்வாகம் பொருப்பாகாது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கூடலில்லா ஊடல்.























கவிதையை பெரிதாகிப் படிக்க அதன்மேல் கிளிச்செய்யவும்.
டிஸ்கி// சந்தேக கேள்விகளின் அடுத்தபதில் ஞாயிறு வரும். அதுவரை இது சும்மா பிரேஏஏஏஏஎக்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்,
இந்தநீரோடை நிரம்பிவழியும் கவிதைநீரால்.

சந்தேக கேள்விகளின் பதில்கள். [பகுதி 1]

வாங்க வாங்க உக்காரவெல்லாம் நாற்காலிபோடலை அதனால நின்னுகிட்டே படிச்சிட்டுபோங்க [அச்சோ அச்சோ நாங்க ஏற்கனவே சேர்போட்டுஉக்காந்துகிட்டுதானே இங்கேயே வந்தோம் ஹா ஹா]

கிட்டதட்ட இந்த பதிவை 440 மேற்பட்டவர்கள் பார்த்தும்
நான் கேட்ட கேள்விகளுக்கு ஏனோ  யாரும் பதில்
சொல்ல முன்வரவில்லை[ஒரு சிலரைத்தவிர] அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில், ஏதோ ஒன்று தடுக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை. இல்லை அப்படி கேட்கக்கூடாத கேள்வியா? என்றும் புரியவில்லை.

சரி சரி விசயத்துக்கு வா என முனங்குவது கேட்கிறது. என் பதில்கள் பிறருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனாலும் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டிய விசயத்தை சொல்லிவிடவேண்டும் சந்தர்பங்கள் கிடைக்கும்போது ஆகவே எனக்கு தெரிந்த நான் அறிந்த வகையில் சொல்கிறேன்.

எனது பதில் தமிழ்நாட்டுக் கலாசாரத்தை சார்ந்தது. ஏனெனில் நான் தமிழச்சி.இங்கு [நீரோடைக்கு]வந்துபோகும் அனைவரும் தமிழைச்சார்ந்தவர்களேயென நினைக்கிறேன்[ஹி ஹி தமிழை தமிழர்தான் படிப்பார். சில வெளிநாட்டவர் தமிழ்படிக்கும் ஆர்வளர்களும் உண்டுதான்] ஆக நாம் எப்படியுள்ளோம். எப்படியிருக்கிறோம் எப்படியிருக்கப்போகிறோம் அதுதானிங்கே. மேலைநாட்டில் இப்படி. கீளைநாட்டில் அப்படி அதெல்லாம் இங்கில்லை. தமிழ்நாட்டில் எப்படி?

இவைகள் நான் கண்டதும். கேட்டதும். பார்த்ததும்.
முதலில்:

நாடுகடந்த சுதந்திரம்.
மனிதப் பிறப்பே மனிதப் பிறப்பே
மகத்துவமானதாக-அதை
மறந்து திரிந்தான் மறந்து திரிந்தான்
சுதந்திரமாக!

சுதந்திரமென்ற தென்றல் ஆனது
சூராவளியாக!-அதைச்
சுற்றிக்கொண்டபல மனிதரையிங்கு
சூறையாடுதே வேங்கை புலியாக!

சுதந்திரமென்ற பூக்கள் ஆனது
பூகம்பமாக! -அதை
சூடிக்கொண்டபல மனிதரையிங்கு
சுருட்டி போட்டதே சுக்கு நூறாக!

நல்ல சுதந்திரம் நல்ல சுதந்திரம்
நாடு கடந்ததிங்கே! -அயல்ச்
நாட்டு சுதந்திரம் பட்டாப் போட்டதும்
நிலைகுலைந்ததிங்கே!
நல்லறங்களெல்லாம்
நிலைகுலைந்ததிங்கே!
1ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?

ஆண்பெண் சுதந்திரம். அது தற்போதைய காலத்தைப் பொறுத்தவரை சற்றல்ல மிதமாகவே மிதமிஞ்சியே இருக்கிறது. நல்ல கலாச்சாரங்கள் கடந்துபோய் மிகவும்
பின் தங்கியுள்ளதால் நாகரீகமென்ற நாளொருகூத்து சுதந்திரமென்ற பெயரில் சுற்றிவலைத்து சூறையாடுகிறது. மனிதமனதையும் உடலையும்.

தினம் தினம் மீடியாக்களிலும். செய்திநாளிதள்களிலும் அக்கம் பக்கமும். அப்பப்பா தாங்கமுடியலப்பா எந்தபக்கம் போனாலும் இதேதான் என ஒருநாளாவது தனக்குள் நீங்கள் சொல்லி வருதங்கொண்டது கிடையாது?. அப்படி வருத்தங்கொண்டிருந்தால் இதிலுள்ள வரிகள் புரியும்.

ஓகே விசயத்திற்கு வருவோம். சில சில துளிகள் மட்டுமிங்கே கோடிட்டுகாட்டியுள்ளேன். அவ்வளவுதான்

தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு, காலை 10 மணிக்கு, திருமணம் என்றபோது 9.30 யாருக்கும் தெரியாமல் ஓடிப்போவதும் அதனால் பெற்றோர்கள் இறந்தாலும். மனமிழந்தாலும்  .கேட்டால் சுதந்திரம்
என் சுதந்திரத்துக்கு தடை. அதனால் என்னை பெற்றவர்களுக்கு தண்டனை. எனசர்வசாதாரணமாக சொல்லும் பிள்ளைகள்.

தன்பிள்ளைகளை சுதந்திரமாய் திரியட்டுமென சினேகம் என்றஒரு தூய்மையானவற்றின் பெயரில், ஆணோடு பெண்ணையும், பெண்ணோடு ஆணையும், சுதந்திரமாய் வலம்வரவைத்துவிட்டு பின்பு அதனால் அடையும் மனவருத்தங்களும், மனச்சிதைவுகளும். ஏன்பலநேரம் மானத்தையே இழக்கும் தருவாயையும் உருவாக்கி உருகுலைக்க வைக்கிறது இன்றைய சுதந்திரம்.
போய் கேட்டுப்பாருங்கள் மனசாட்சியுள்ள டாக்டர்களிடமும். வீட்டு வைத்தியர்களிடமும்.திருமணத்துக்குமுன்னே கருகலைப்புகாக வந்து நிற்கும் சுதந்திரத்தை.

இது ஒரு மனிதமுள்ள மனிதரின் [காஞ்சி முரளி] பார்வையில்
இது என்னுடைய ஒரு பதிவில் கருத்துக்களாக போட்டது

//நீங்கள் துபையில் வசிக்கிறீர்கள்... இங்கு வந்து பாருங்கள்.... touristஆக அல்ல... ஓர் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ வசித்து பார்த்தால்... இங்கு நடக்கும் அலங்கோலங்களை காணலாம்... 'பெண் விடுதலை' என்ற பெயரில் நடக்கும் அநியாங்களை பிரதான சாலைகளிலும் - பீச்சிலும் - தியட்டர்களிலும் குறிப்பாக ஸ்டார் ஹோடேல்களிலும் காணலாம்... இது தமிழ்நாடா என்று வியந்து போவீர்கள்...
மனிதன், .............விட கேவலமாய் சாலைகளில்....

என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...
"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...

சாலைகளில்...
பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....

காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."

கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்.... //

மிக ஆழமாக இதைவிடசொல்லமுடியாது சுதந்திரமென்றபெயரில் சுற்றித்திரியும் அவலங்களை!

இதைவிடக்கொடுமை. மானத்தைகாற்றில்விட்டு திறந்துதிரியும் கூட்டம் சில, மானத்தை மூடிமறைக்கும் சிலரை வசைபாடுவதுதான். பிறரை சுண்டியிழுக்கும் அங்க அவங்களை மூடிச்செல்வதால் அடுதவர்களுக்கென்ன பாதிப்பு?. பிறரையும் பாதித்து தன்னையும் பாதிக்கும் ஒரு பாதகச்செயலிலிருந்த தன்னை காத்துக்கொள்வது சுதந்திரத் தடையா?ம். சுதந்திரத்திற்குச்சுமையாய் இருக்கிறதென சுமப்பவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை காணும் குற்றக்கண்கள் தன் கற்பனைக்குதிரைக்கு கடிவாளத்தை திறந்து ஓடவிட்டு தனக்கு வருத்தமளிப்பதுபோல் நினைத்துக்கொண்டு, பிறரை வருத்தப்படுதுவதுதான். வேடிக்கை..

இங்கே கொஞ்சம்தான் சொல்லியிருக்கேன் மற்றவைகளை சொல்லிதான் தாங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றில்லை. தெரிந்தும் தெரியாமலிருப்போருக்கு நான் பொருப்பல்ல.
இவைகள் மேலை நாடுகளில் நடந்தால் இந்தக் கேள்விகளுக்கே இடமில்லை, ஏனெனில் அவர்கள் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை வெற்றுப்பார்வையில் பார்ப்பவர்களே அன்றி அதில் வாழ்பவர்களில்லை,வாழ்ந்தவர்களில்லை. [ஆனாலும் உலக நாடுகளில் நம்நாட்டுக்கென்ற ஒரு தனிமதிப்பு வேறுநாட்டுகில்லையென்பதே உண்மை அந்த மதிப்பே பலங்கால நல்லொழுக்கம்தான்] ஆனால் எந்நாடு சென்றபோதும் தமிழ்நாட்டுகென்ற மரியாதையையும். கலாச்சாரத்தையும்.தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்பவந்தானே தமிழன். சென்றிருக்கும் அந்நாட்டு [அ]நாகரீகத்தை கற்றுக்கொள்ளும் மனிதன் தன்நாட்டு ஒழுக்கத்தையும். கலாச்சாரத்தையும் ஒதுக்கிவிடுவது ஏன்? [ஓ கால சூழலுக்கேற்ப எதையும் மாற்றும் திறனோ மாற்றுவதைதான் மாற்றலாம் தன்மானத்தை?]ஏனெனில் இதில் பல கட்டுபாடுகள். இப்படிதான் வாழவேண்டுமென்ற கோட்பாடுகள் இவைகளெல்லாம் அவனுக்கு சுதந்திரத் தடையாக இருக்கிறது.

பல்லாண்டுகால பாரம்பரியங்களையும். கட்டுப்பாடுகளையும். இன்றும் பெருமையாய் பேசப்படுகிறதே ஏன்? அதில் நன்மையுண்டு அதனால் தீமைகளின்பக்கம் போகாமலிருக்க தடையுண்டு, ஆனால். அதை விளங்கியும்கூட விளங்காமலிருக்கும் மனிதனைக்கண்டுதான் வியப்பாகவும் உண்டு. வருத்தமாகவும் உண்டு.

திருமணத்துக்கு முன் கருகலைக்கும் கூட்டமாக!
தான்தோன்றிதனத்தால் தன்னையிழக்கும் இனங்களாக!
அங்கங்களை அடுதவர்களின் பார்வைகளுக்கு விருந்துபடைக்கும் படையலாக!
அயல்வீட்டுகாரரைக்கூட அடுத்துக்கொள்ளாத அன்னியனாக!
சொகுசு விடுதிகளில் சொக்கியாடி கொக்கிபோடும் கேடுகளாக!
எழுத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லைமீறும் எந்திரங்களாக!
முதியோர் இல்லங்களை நிரப்பும் மனசாட்சியற்ற மனங்களாக!
அனாதையில்லங்களை அகலப்படுத்தும் அவலங்களாக!
நான்கு சுவற்றுக்குள் நடக்கும் புனிதங்களை
நடுரோட்டில் அரங்கேற்றும் அசிங்கங்களாக!

இப்படி, இன்னும் இன்னும். ஆண்பெண் சுதந்திரம் மிக மிக பலவீனமாகி பாதிப்பை உண்டாக்கும் கேடாகத்தானிருக்கிறது.
சிலபல விதிவிலக்குகளைத்தவிர.

சரி எப்படியிருக்க வேண்டும்.? [இத நீ என்னத எங்களுக்குச் சொல்றது எங்களுக்கு தெரியும் என்பவர்களுக்கல்ல இது]

ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கம்
முறையான ஒழுக்கம்
இதனுள் அத்தனையும் அடங்கும்.

காணும்இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமோ-இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும்
நான்குகால் மிருகமோ அல்ல மனிதன்,

மனிதன் மிகுந்த மதிப்பு மிக்கவன்
தன்னுடைய சுய ஒழுக்கம். தனக்கென்று ஒருகம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை. தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன என்பதை உணர்ந்தால் நிச்சயம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகிய செயல்களின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு, சுதந்திரமென்றால் என்ன? அது நம்மை எவ்வாறு சுற்றியிருக்கவேண்டும். அல்லது நாம் எவ்வாறு அதனைச் சுற்றிக்கொள்ளவேண்டும். என்பதையறிந்து சுதந்திரமென்னும் சுத்தமான சுகந்தத்திற்குள் சுகமாய் சுற்றித்திரிவதோடு,தன்னை சுற்றியுள்ளவர்களையும்
தன் சுழல்சியில் சேர்த்துக்கொள்வான். சுதந்திர சுகமாய் வாழ்வான்..

அப்பாடா ஒருவழியா முடிச்சிட்டேன் இந்த ஒருகேள்விக்கே முதுகும். விரல்களும் கண்களும். ஒரு வழியா வலியாயிடுத்துபா. இன்றைக்கு இதுபோதும் மீதம் அடுத்தடுத்து. இடையிடையே பிரேஏஏஏஏஏஏஎக்கும் விடுவோம். உங்க அளவுக்கு என்னால் யோசிக்க முடியாவிட்டாலும் ஏதோ என்னளவுக்கு அதாவது என் மூளைக்குள் சென்று இதயத்தை அடைந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். இதில் பிழைகளிருந்தால் பொருந்திக்கொள்ளவும்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது