நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வருவாயா வருவாயா


வண்ணத்துப்பூச்சியே வர்ணத்துப்பூச்சியே
உன் வண்ணங்களைகண்டு
நான்வாயடைத்துப்போனேன்
இத்தனை
வர்ணங்களையும் சுமந்துகொண்டு
நீ
சுகமாய் பறப்பதை பார்த்து
நான் பூரிப்புகொண்டேன்


நீ
வளைந்து நெளிந்து
காற்றில் மிதப்பது கண்டு
கண்சிமிட்ட
மறந்து நின்றேன்

மலர்களிமேல்
மட்டும்தான் உன்பிரவேசமா-
இந்த
மங்கைமேல்லெல்லாம்
கிடையாதா


அழகிய வண்ணமே
உன்னை என் தோழியாய்
அழைக்கிறேன்
நானும் மலர்தானே
எனைநாடிவருவாயா
என்தோளில் அமர்வாயா

என் தோட்டத்து முற்றத்தில்
என் முட்டுக்காலை கட்டியபடி
அந்தமுழுநிலவை ரசித்தபடி
நான் தனிமையில்
அமர்ந்திருக்கும் வேளையில்
என்உள்ளங்கையில்
வந்து அமர்வாயா


உன் வண்ணமான
வர்ணங்களை
என் கைகளில் ஏந்தி
காணவேண்டும்
உன் பஞ்சு மேனியை
என் பிஞ்சு
விரல்களால் தொட்டுத்தீண்ட
வேண்டும்


சுற்றித்திறியும் சுகந்தமே
சொல் சொல்
எப்போது வருவாய் என
உனைக்காண
சுறுசுறுப்பாய் நானிருக்கிறேன்
உன்னைச்
 சொந்தங்கொண்டாடக்
 காத்திருக்கிறேன்.




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

2 கருத்துகள்:

  1. உங்களின் எண்ணங்களில் உதித்த கவிதைகள் யாவும் இந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை போல அழகாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
    உங்களின் எண்ணங்களில் உதித்த கவிதைகள் யாவும் இந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை போல அழகாக இருக்கிறது..//

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி பூங்குன்றன்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது