நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலங்காதே



[இது விழி வலி]
கருவிழியே ஏன் கண்கலக்கிவிட்டாய்
வேண்டுமென்றா செய்தேன்
வெறுமையாக கிடந்த விழிகளுக்கு

விபரமறியாமல் விரல் நுனியில்
மையெடுத்திட்டுவிட்டேன் அது
விழியோரத்தில் உரசிவிட்டது

அதற்காகவா
விழிவலிக்க விம்மி விம்மி குமைகிறாய்
கண்மணிகள் கரைய கரைய அழுகிறாய்

கலங்காதே
கல்நெஞ்சமல்ல எனக்கு
நீ கலங்கும்போது கனக்கிறது நெஞ்சம்

அழாதே
உன்னை அமைத்திப்படுத்த அதேவிரல்களால்
விழிகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறேன்...

[இது மனவலி]

மலரே மனதிற்குள் என்ன
மெளனபோராட்டம்

இரவு உறங்காமல் உன்தேகத்தில்
தெரியுது வாட்டம்

இதழ்களில் என்ன பனிதுளிபோல்
கண்ணீர்துளி

கலங்காதே காலையில்தெரியும்
கதிரவன் ஒளி....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது