நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதல் துதி..

கிளிக் கிளிக்

என்னை தொலைத்தேன் உன்னுள்
உன்னைப் புதைத்தேன் என்னுள்

மூச்சை சுவாசித்தேன் உன்னுள்
அதை அடைகாத்தேன் என்னுள்

நிறைவைக் கண்டேன் உன்னுள்
அதை நிரப்பிக்கொண்டேன் என்னுள்

உணர்வுகள் கண்டேன் உனக்குள்
அதை உடுத்திக்கொண்டேன் எனக்குள்

எனையே உருக வைத்தாய் எனக்குள்
நான் உருமாறி புகுந்தேன் உனக்குள்

என்ன செய்தாய் என்னை
ஏன் நித்தமும் நினைக்கிறேன் உன்னை

அன்பு கொண்டாயோ என்மேல்
அதை அருந்திவிட்டேனோ நீர்போல்

துடிக்கிறது உனக்காக நெஞ்சம்
துதிபாடி அழைகிறேன் புகுந்துவிடு
எனக்குள் தஞ்சம்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

21 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.
    காதல் துதி பாடி அழைத்தாள் சதி.
    ஆட்கொண்டான் பதி.
    அவள் அவனுக்குள் ஆனாள் சரிபாதி. ஆனாலும் அவனை ஏற்றுச் சொன்னால் என் பதியே! நீயே என் என் காதல் ராசியந்தின் அதிபதி!. நன்றாகத்தான் இருக்குது இந்த இனைந்த இதயமும்,இடமாற்றி கொண்ட விதம்.அதற்கு தூதாய் சகோதரி உம்முடைய கவிதையே பாடுது துதி,இது உனக்கு காலம் இட்ட விதி.அருமை.

    பதிலளிநீக்கு
  2. இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
    நன்றி தமிழ்குறிஞ்சி.


    ..... Thats nice. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. //என்ன செய்தாய் என்னை
    ஏன் நித்தமும் நினைக்கிறேன் உன்னை//

    நல்ல கேள்வி...!
    ம்...காதல் எப்படி எல்லாம் எழுத வைக்கிறது...!

    தமிழ்குறிஞ்சியில் இடம் பெற்றதிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. crown கூறியது...
    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.
    காதல் துதி பாடி அழைத்தாள் சதி.
    ஆட்கொண்டான் பதி.
    அவள் அவனுக்குள் ஆனாள் சரிபாதி. ஆனாலும் அவனை ஏற்றுச் சொன்னால் என் பதியே! நீயே என் என் காதல் ராசியந்தின் அதிபதி!. நன்றாகத்தான் இருக்குது இந்த இனைந்த இதயமும்,இடமாற்றி கொண்ட விதம்.அதற்கு தூதாய் சகோதரி உம்முடைய கவிதையே பாடுது துதி,இது உனக்கு காலம் இட்ட விதி.அருமை
    //

    வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ
    அன்பான கவி கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர் வருகைக்கு மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  5. கவித...!
    காதல் கவித...!

    நல்லாத்தான் இருக்கு...!

    பதிலளிநீக்கு
  6. Chitra கூறியது...
    இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
    நன்றி தமிழ்குறிஞ்சி.


    ..... Thats nice. வாழ்த்துக்கள்!//

    அப்ப அதுதான் நல்லாயிருக்கா.

    என்னோட கவித ஹூம் ஹூம் ஏன் சித்துக்கா இப்படியெல்லாம்.

    சரி வாழ்த்துசொல்லியிருக்கீங்க ரொம்ப நன்னி. அதாங்க நன்றி[சும்மா லோலாயி]]

    பதிலளிநீக்கு
  7. தமிழ்க்குறிஞ்சியில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் மல்லி , கவிதை ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் மல்லி , கவிதை ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  10. காதல் காதல் காதல்
    ரெக்கட்டி கலக்குறீங்க மல்லி
    அனைத்திலும்..

    அருமையான காதல் கவி..

    பதிலளிநீக்கு
  11. காஞ்சி முரளி கூறியது...
    கவித...!
    காதல் கவித...!

    நல்லாத்தான் இருக்கு...!//

    அதென்ன இப்பவெல்லாம் நல்லாதானிருக்கு அப்படின்னு ஒரு இழுவ..

    பதிலளிநீக்கு
  12. sakthi கூறியது...
    தமிழ்க்குறிஞ்சியில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சக்தி..




    சாருஸ்ரீராஜ் கூறியது...
    வாழ்த்துக்கள் மல்லி , கவிதை ரொம்ப நல்லா இருக்கு.//

    வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சிக்கா

    பதிலளிநீக்கு
  13. கண்ணெதிரே...
    கலாச்சாரத்திற்கு
    கல்லறை எழுப்பும்போது... இந்த
    காதல் கசக்குதையா...!

    இருப்பினும்...
    தங்கள் கவிவரிகள் அற்புதம்...
    வாழ்த்துக்கள்...!

    அப்படா...! போதுமா...!

    பதிலளிநீக்கு
  14. காதல் கவிதை அருமை...

    தமிழ்க்குறிஞ்சியில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான கவிதை
    காதல்கலந்த காதல் உரை..

    பதிலளிநீக்கு
  16. நீண்ட நாட்களுக்கு பிறகு நீரோடையின் பக்கம் எந்தன் பயணம்...

    எல்லாம் பார்க்கவே படிக்கவே கண்ணிற்கு குளிர்ச்சியாய்....

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்......!
    வாழ்த்துக்கள்...........!

    பதிலளிநீக்கு
  18. தமிழ்குறிஞ்சியில் இடம் பெற்றதிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது