நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
எனக்குள் நான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனக்குள் நான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கருமுட்டைகள்




வேலியிலேறி ஓடி ஒளியும் 
ஓணானில் வேகத்திலோ!

வெள்ளைத்தோல்மீது 
கரும்புள்ளி படிந்த கவலையிலோ!

காற்றைக்கிழிக்கொண்டு கொண்டு செல்லும்
காரில் கிலிபிடித்து அமர்ந்திருக்கையிலோ!

நடுஜாம இரவில் கொல்லைப்புரத்து 
கருஇருட்டில் கண்ணடிக்கும் நிலவிலோ!

உலைகொத்தித்து ஒருதுளி தெரித்து
மேனி சுடும் சூட்டிலோ!

மூன்றாம்விதியை முழுமூச்சோடு
கையாண்டு பறக்கும் விமானத்திலோ!

பூவில் வண்டமர்ந்து தேன்குடித்து
ரிங்காரமிட்டு பூரித்துச் செல்லும் அழகிலோ

மழையை புணர்ந்து 
வயலிடுக்கில் வளரும் புற்க்களின் வேரிலோ!

அப்பாவிகள் பாவிகளால்
சீரழிக்கப்படும் சிதைவிலோ!

முன்பின் அறியாத மனம் 
முகவரி தொலைத்தழும் அழுகையிலோ!

ஒளிந்துகிடக்கும் எனது 
எண்ணக்கரு முட்டைகள்

முண்டியடித்துக்கொண்டு
உடைந்து வெளியேறத் துடிக்கிறது

நான் முன்னே நீ முன்னே என்று
கவிகொஞ்சு பொரிக்க...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

என்றுமே!..


 ”டிஸ்கி”  கொஞ்சம் இடைவெளி விழுந்துடுத்து உங்களுக்கும் எனக்குமான தொடர்பு. வெட்டியா இருந்தாலும் பிஸியாக இருப்பதுபோலவே தெரியுது இங்கே அதாவது நம்ம மண்ணில் அதான் இங்கே உள்ள சுவாரஸ்யமே! ஹி ஹி.  பிஸியா இருந்தாலும் வெட்டியாக இருப்பதுபோலவே தெரியும்.அங்கே அயல்மண்ணில் அதான் அங்க உள்ள கஷ்டமே! [சிலருக்கு இப்படி அப்படியில்லனா அதுக்கு நான் பொருப்பில்லீங்கோ...
இனி  இடைவெளிகள் இல்லாமல் உறவுகள் தொடரும்...

அப்புறம் இன்னொறு சந்தோஷமான செய்தி.
அய்யா திரு வை.கோபலக் கிருஸ்ணன் அவர்கள்  விருது தந்துள்ளார்கள்

அய்யா அவர்களின் 12th AWARD FOR ME
FOR THIS YEAR 2012
12 வது விருதை பெருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நீரோடையில் நீந்தும் நினைவுகள்.

 

கவிபாடினேன் கவியறியாமல்!
வெண்பாக்களோ! மரபுகளோ!
அறியா மனது
ஆரவாரமில்லாமல் அடுக்கடுக்காய்
அள்ளிகொட்டியது
கவிதைச் சொற்களை!
எனக்குத்தெரிந்த என்வரிகளில்!

நான்
கம்பன் வழி வந்தவளில்லை!
கண்ணதாசன் பேத்தியில்லை!
வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
வைரமுத்துவின்
வாசக்காற்றும் பட்டதில்லை!-
ஆனாலும்
கவியெழுதுகிறேன்!

கவியெனக்குள் புகுந்ததா! -இல்லை
கவிக்குள் நான் புகுந்தேனா?
கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்
மனதிடம் -  அது
காட்டிக்கொடுக்க மறுக்கிறது
கவிவந்த வழிதனையே!

நித்தம் நித்தம் புதுக்கனவு!
நீச்சலடித்து பாய்கிறது
நிகழ்கால நிகழ்வுகளோடு!
நீந்தி நீந்திச்செல்கிறது
நிதர்சனமான உண்மைகளை!
நியாப்படுத்தச் சொல்கிறது.

உறக்கமின்றிச் சிலவேளை!
உணவின்றிச் சிலவேளை!
ஊறரியச் சிலவேளை!
ஊமையாகச் சிலவேளை!-

இப்படி

ஒவ்வொரு நாளும் கழிகிறது!
ஓசையின்றி ஒளிர்கிறது!
ஓராயிரம் கனவுகளை! - உள்ளம்
ஒளிவு மறைவின்றி
ஓடவிட்டுப் பார்க்கிறது!.

கவியென்றுச் சொல்கின்றேன்
ஆனாலது!
கவியா? என்பது தெரியவில்லை
ஆனாலும் எழுதுகின்றேன்!- என்
ஆர்வங்கள் மட்டும் ஓயவில்லை!

நீரோடையின் நீருக்குள்ளே!
நினைவுகளை
நீந்தவிட்டுப் பார்க்கின்றேன்!
நீந்திச்செல்லும் நினைவுகளை-அடி
நெஞ்சுக்குள்!
நிலையாய் தேக்கிக்கொள்கின்றேன்...

இக்கவிதை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை” யில் இடம்பெற்றுள்ளது.
  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில் ந[எ]ம்மைப்பற்றி கொஞ்சம் எட்டிப்பாருங்கள். ஹாஹா

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கனவே கலையாதே! 2

 

இருவிழிகளின் கருவிழிகளுக்குள்ளே
காணும் காட்சியாவும் கண்முன்னே!-அது
கனவாவதும் கலைவதும் தினம் தினம்

இரவுநேர இருளுக்குள்ளே
இனம்புரியாதவைகள் சூழ்ந்திருக்க!
 
அசைந்தாடும் காற்றில் பூக்கள்
அள்ளி வீசும் வாசனைகளை
அமங்கலியான பெண் பூக்களும் நுகர!

மாந்தோப்புக்குள்ளே
மஞ்சள் குருவியின் சிறகு படபடக்க!

பொல்லாத குளிருக்கு மயிலும்
போர்வையில்லாது நடுங்க!

கடலுக்குள் கூடிக்கொள்ளும் அலைகள்
கரைக்குவந்து சண்டையிடுக்கொள்ள!

சாலையோர மரங்கலெல்லாம்
சாதி சண்டைகளற்று வரிசையில் நிற்க!

உலகம் உருண்டுவிடாதவாறு
உயர்ந்திருக்கும் மலைகள் தாங்கி நிற்க!

பொட்டலிலும் பாலையிலும்கூட
பச்சை பசேலென இயற்கை காட்சியளிக்க!

வெள்ளிகம்பிபோல் மின்னல் வந்து
விருட்டென்று பயங்காட்டி மறைய!

வெளிர்நிற மேகங்கள்
கருநிற மேகங்களோடு கொஞ்சிக்குலாவ!

வானவில் வட்டமடித்து
வானத்தை அழகுபடுத்த!

வான்மழையை விரும்பி -மண்
வசியம் செய்து அழைக்க!

வாடிய பயிர்களெல்லாம்
வனப்புகண்டு கூத்தாட!

மண்ணிலுள்ள ஜீவன்கள்
மகிழ்ச்சியில் மகிழ்ந்தாட!

நடுங்கும் குளிர்
நாடியை தொட்டு இசைக்க!

காலைத்தென்றலின்  ரிங்காரம்
காதுகளுக்குள் இதமாய் கேட்க!

மிதமான சூட்டோடு
மேனியை மெல்ல மீட்டிய சூரியன்
சுண்டி இழுத்தும் 

சுறுசுறுப்போடு எழும்பாமல் -ஏனோ
சுணங்கிக்கொண்டு மீண்டும் 

கைகால்களை சுருட்டிகிக்கொண்டு
கனவே கலையாதே! -இயற்கைக்
கனவை கலைக்காதேயென
கண்மூடியே கிடக்கசொல்கிறது மனது...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அரசியான கதை [பெயர் காரணம்]

 
 ஓலைக் குடிசை அதனை சுற்றி காவலிருந்த தென்னைவேலி. வேலியை தாங்கியபடி முருங்கைமரங்கள். அதிலிருந்து புறப்படும்குருவிகளின் கொஞ்சும் கானம்.கானத்தை காதில் கொண்டுவந்து சேர்த்தபடி  குளுகுளு தென்றல் அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கிச்சுகிச்சுமூட்ட, இரவுநேர இருளை கிழித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி வெளிச்சத்தை தானம் தந்துகொண்டிருந்தது நிலா.

நான்கைந்து குழந்தைகள் தரையில் அமர்ந்து கைகளை நீட்டியபடியிருக்க அதனை கிள்ளி கிள்ளி.
கிள்ளிப் பிராந்து கியப்பிராந்து கொப்பந்தலையில என்னாப் பூ முருங்கப் பூ முள்ளரிப்பழம் திண்ணட்டப் பூ பாடாகை சூடாகை பத்துமா நாச்சியார் பள்ளாக்கு. ந்னு சொல்லிக்கொண்டே முடித்து கையை திருப்பியபோது.

கள்ளாட்டம் இது கள்ளாட்டம் என் கையை திருப்பனும் அவ கையை திருப்பிட்டா. போடி மல்லி நெல்லி கொத்தமல்லின்னு ஒருத்தி சொல்ல.

ஹூம் ஹூம் அழுதுகொண்டே போய் எறிய மறுத்த அடுப்பை ஊதி எறிய வைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம் ”யாரும்மா எனக்கு இந்தபெயர் வச்சது.எல்லாரும் மல்லிக்கா நெல்லிக்கான்னும். மல்லி கொத்தமல்லின்னும் சொல்லுறாங்க. எனக்கு இந்த பெயரே பிடிக்கலை பணக்கார வீட்டுல பிறந்திருந்தா இதெல்லாம் சொல்லுவாங்களான்னு” சொல்லி அழுதப்ப.

அம்மா சமாதானம் சொல்லி இந்தபெயர் உங்க அப்பா[தந்தையின் தந்தை] வச்சது. அவங்க பொண்ணு ஒண்ணு மலிக்கான்னு இருந்ததாம் ரொம்ப சிகப்பா.ஆறடி கூந்தலோடு. மிகவும் அழகாக.[அழகா அப்படின்னாயின்னா நாமெல்லாம் அதில்கொஞ்சங்கூட இல்லைங்கப்பு..] சிறுவயதிலேயே எல்லாரையும் அனுசரித்து நடக்கக்கூடியதாகவும். ஒழுக்கமாகவும் எல்லாருக்கும் ரொம்ப செல்லபிள்ளையாகவும் இருந்ததாம். ஆனா கொஞ்ச வருசத்துல இறந்துவிட்டதாம்.அந்த பொண்ணுக்கு எல்லாரையும் பிடிக்குமாம். அதேபோல் அந்த பொண்ணுமேல் எல்லாருக்குமே பாசம் அதிகமாம்.அந்த பாசம்தானே பெண்ணுக்கு  வேணும்.

அதற்கு பின் நம்ம குடும்பத்தில் சில பெண்குழந்தைகள் பிறந்தும் அவங்களுக்கெல்லாம் இப்பெயர் வைக்கலையாம். நீ பிறந்ததும் இந்த பெயர்தான் வைக்கனுமுன்னு அப்பா கண்டிப்பா சொல்லிட்டாங்க.
இது ரொம்ப நல்லபெயர்டி செல்லக்குட்டி.பணக்காரவங்கண்ணா என்ன வானத்துலேர்ந்த வந்தாங்க. இந்த உலகத்துல பணம் காசெல்லாம் வரும் போகும். வரவேண்டிய நேரதில் எது வருனுமோ அதுதான் நமக்கு வரும் இறைவன் தரநினைச்சா சில நிமிடம்.

மலிக்கா ன்னா அர்த்தம் என்னா தெரியுமா அரசி.என்று நீ அரசியாட்டம் வாழவேண்டும். வாழ்வாய் பாரேன்.அதே சமயம் இறைவனுக்கு உகந்தவளாக இருக்கவேண்டும்.மற்றவங்க மனமறிந்து அவங்க மனம் கோணாம நடக்கவேண்டும். எப்போதும், போதும் என்ற குணம் இருக்கவேண்டும்.என்ன நான் சொன்னது புரிந்ததா. அதனால் இந்தபெயரில் ஒன்றும் குறையில்லை அதை நீ புரிஞ்சிக்கிடனும்

பசங்கண்டா அப்படியும் இப்படியுந்தான் எல்லாத்துக்கும் கேலிசெய்வாங்க அதுக்கெல்லாமா அழுவாங்க போய் விளையாடுமா என்று சொல்ல. அழுத கண்ணை துடைத்தபடி ஹை அப்ப நான் அரசியா! என்று அம்மாவிற்கு முத்தம் தந்துவிட்டு. நீங்க சொன்னமாதரியே இருப்பேன் சரியாம்மான்னு கேள்வியும்கேட்டு தானே பதிலும் சொல்லிவிட்டு. அரசியென்ற மிடுக்கோடு மீண்டும் விளையாடத் தொடங்கிச்சாம் அந்த குழந்தை.அதாவது இந்தக் குழந்தை.

பெயர்காரணம் சொல்லச்சொல்லி கோபியண்ணா கேட்டு 1 மாதம் ஆகியிருக்குமுன்னு நெனக்கிறேன். என்ன செய்ய கவிதையின்னா கிடுகிடுன்னு வந்திடுது. சொந்தகதையின்னா ம்ஹூம் வரவேமாட்டேங்கிறது எப்படியோ எழுதிட்டேன். அம்மா சொன்ன என்பெயர் காரணம் பிடிச்சிருந்தது.
மதபடி பெருசா காரணம் ஒன்றுமில்லை.

அரசவையில் அரசியாக மணிமகுடம் சூட்டி வாழ்ந்தால்தான் அரசியென்றில்லை. பெற்றவர்களின் மனமறிந்து. கணவரின் உள்ளத்தில் அன்பால்ஆட்சி செய்தாலே அனைத்தும் கிடைத்துபோல்தானே. அன்று ஓலைக்குடிசையில் ஓராயிரம் கனவுகளோடு, மனம்நிறைந்த பாசத்தோடு என் அம்மா சொன்ன வார்த்தைகளும். அவரின் கனவுகள் இதோ இன்று நிஜமாய் அனைத்தும் கிடைத்துவிட்டதுபோன்ற திருப்தி.

இது போதுமென்ற மனமும். இறைவனை நேசிப்பதால் இன்பமும். அரசன்[மச்சான்] நெஞ்சில் அரியணையென்ற அன்பும். குழந்தைகள் நெஞ்சில் கிரீடமென்ற பாசமும் திழைக்க வாழ்வது பெருமையாக உள்ளது.

இதற்கு இறைவனுக்கே நன்றி சொல்லவேண்டும்.நிம்மதியும் மனதிருப்தியும் பணத்திலோ! செல்வத்திலோ! இல்லை. அது அவரவர் மனங்களை பொருத்தது என்பதை உணர்ந்துகொண்டு வாழ்வதால் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள்கூட வெற்றிக்கான அறிகுறியாகவே தெரிகிறது. இறுதிவரை இதேபோன்ற மனநிலையையே தரும்படியே எந்நேரமும் என் வேண்டுதலும் இருக்கிறது.

மற்றவர் மனதில்நான் எப்படின்னு இருக்கேன்னு தெரியவில்லை.ஆனா அம்மா சொன்னதுபோல் பெத்தவங்கபோல மத்தவங்களுக்கும் என்மேலே பாசமாயிருக்கனும் அது இறைவன்தான் அருளனும். என்னால் பிறர் மனது சிறிதளவேனும்  சிரமப்பட்டுவிடாதபடி நடந்துகொள்ளவே விரும்புகிறேன். நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் என் பெயரையும் நினைச்சிக்கோங்க . உங்கள் பாசத்திலும் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் ..

என் செல்லக்குட்டி இன்று தன் வலையில் என்ன பதிவிட்டிருக்குன்னு பார்த்துவிட்டுபோங்களேன்..

அன்புடன் அரசி.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

எதிரி வேறெங்குமில்லை!



உறங்கப்போகும்முன் இவ்வுலகைக்கண்டு  பயப்பட்டு
உறங்கியெழும்போது உதறிவிட்டு விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

கெட்டவர்களைக் கூட
நல்லவர்களென நம்பிக்கை கொள்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தைரியமாக முடிவெடுத்தபின்பும்-சிலசமயம்
தடுமாறி தவறாகி விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

துரோகங்களை கண்டு துவண்டுபோய்
சுதாரிக்கத் தோன்றாமல் கிடக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தெளிவுகள் கண்ணெதிரே தெரிந்தபின்பும்
மறைவானவற்றையே தேடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

மதிசொல்லும் அறிவுரையை ஏற்கமறுத்து-பலசமயம்
சதிகளை விதிகளென நம்பிவிடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பாசாங்குகளை பாசமென நம்பி
பாதாளத்தில்கூட விழத்துடிகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு மத்தியில்
பால்மனம் மாறா பச்சிளமாகவே இருக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பொய்யான உலகில் மெய்யாக வாழ
வெள்ளாந்தியான உள்ளம் அடம்பிடிக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

இப்படி

எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று! 
எண்ணும்போதே எழுந்தது எதிரி 
எனக்குள்ளிருந்து....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அன்புடன் மலிக்காவின் புத்தக வெளியீடு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைவனின் சாந்தியும் அருளும் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

என் கிறுக்கள்களையும் கவிதைகளென்று நினைத்து.தங்களின் அன்பான கருத்துக்களின் மூலம் ஊக்கம் தந்து என்னையும் ஒரு கவிதை தொகுப்பு வெளியிடுமளவிற்கு கொண்டுவந்த உங்கள் அனைவருக்கும். என் நன்றிகலந்த கண்ணீரை தாரை வார்க்கிறேன் மனநெகிழ்வோடு..
வரமுடிந்தவர்களின் அன்பான வருகையையும். வரமுடியாச் சூழலிலிருப்பவர்களின். அன்பான பிராத்தனைகளையும். எதிர்பார்த்திருக்கும்
உங்கள் அன்புடன் மலிக்கா

 
இன்ஷாஅல்லாஹ் வரும் 25/02/2011 வெள்ளிக்கிழமை அன்று
மாலை 6 மணிக்கு. லேண்ட் மார்க் ஹோட்டல் அல் நாசர் ஸ்கொயர் துபாயில்.பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்தும் இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற இருப்பதோடு,என்னுடைய முதல் கவிதை தொகுப்பான
                                                ”உணர்வுகளின் ஓசை”
புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது. தாங்கள் அனைவரும் வந்து இவ்விழாவினில் கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இடம்: லேண்ட் மார்க் ஹோட்டல், அல் நாசர் ஸ்கொயர் துபாய்.

நாள்: 25-2 -2011 வெள்ளிக்கிழமை

மாலை 6.00 மணி

சிறப்பு விருந்தினர்கள் :

டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை.

டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்.

கவிச்சித்தர்.மு.மேத்தா

கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை

இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை

அனுமதி இலவசம்!!
அனைவரும் வாருங்கள். விழாவை சிறப்பாக்கித் தாருங்கள்.

அன்புடன்
மலிக்கா ஃபாரூக்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கற்றறிந்தவர்களும் கத்துக்குட்டியும்..


சிறுகதை எழுத்தாளரும். பத்தரிக்கை ஆசிரியருமான
 திருச்சி சையது அண்ணன் அவர்களின்
புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள்
என்ற 367 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில்
 மிகப்பெரும் புகழ்பெற்றவர்களைப் பற்றி தொகுத்துள்ளார்கள்.
இந்நூல்மிக அருமையாக வந்துள்ளது அதில் என்னப்பற்றியும் சில,,,
கண்ணே! கண்மணியே! 


கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால் என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்

கருச்சோதனைக் கருவியோடு-என்
வயிற்றுக்குள் நடக்குது போராட்டம்
உன்உருவத்தைப் பார்க்க
என் உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்

அன்னை அழுது புலம்புகிறேனே
அமுதே என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா!
புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே என் தவிப்பு
உனக்கு புரியலையா!

பூமியைப் பார்க்க உனக்கு
விருப்பமில்லையா -இல்லை
இந்த அப்-பாவித் தாயை
பார்க்கப் பிடிக்கவில்லையா!

மருவித் தவிக்கின்றேன்
மன்றாடித் துடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக
உருகித்தான் போகின்றேன்

பதுமையே பதுமையே
எனை காணக் வருவாயா!
பட்டுப் பூவினமே
என்னை பதறவைப்பாயா!

காத்திருக்கிறேன் கண்மணியே
உயிருக்குள் உருகியபடி
வசந்தமான உனைக்காண
என் வயிற்றை வருடியபடி

ஒவ்வொரு பெண்ணுக்கும்
தாய்மைதான் முழுமையின்
அடையாளம்
அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும் வரம்..




அறம் செய மற

அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவஞ்சனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்
தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே

செய்து பாருங்களேன்........

அதில் என்றும் இளமைக் காதல்எங்களுக்குள் மற்றும் திரு தந்தை ஜின்னாஹ் ஷ்ரிபுதீன் அவர்கள் எனக்கு விருதுகொடுத்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு என்று, நமளோட கவிதைகளும். கட்டுரைகளும்  வந்துள்ளது.பெரும் புகழ்பெற்ற  ஜாம்பவான்களுக்கு மத்தியில்.
மிக சாதரணமான இந்த கத்துக்குட்டியும் இருப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.  பெரும் புகழ்பெற்ற பெரியவர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்தமைக்கு திருச்சி சையது அண்ணன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலினை சுடர் வம்சம் தொண்டு நிறுவனம் துபாய் கெனடியன் பல்கலைக்கழக அரங்கில் 11.2.2011 அன்று வெளியிட்டது. முதல் பிரதியினை தொழிலதிபர் கருணாகரன் வெளியிட தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான சீனா தானா அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாவில் கலைமாமணி டாக்டர் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சுடர் வம்சம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரகுராஜ் தலைமை தாங்கினார். புத்தகத்தைபற்றி மிகச்சிறப்பாக பாராட்டி பேசினானார்  திரு அத்தாவுல்லா அவர்கள்.
விழாவில் சிறுமி வித்யாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி நிவேதிதா தொகுத்து வழங்கினார். விழாவில் துபாயில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நூல் விற்பனை மூலம் கிடைக்கும் முழுத்தொகையும் ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.!
நூல் வாங்க விரும்பும் உள்ளவர்கள் சுடர் வம்சம் திரு. ரகுராஜ் அவர்களை (050 2164375) தொடர்பு கொள்ளவும். ஈமெயில் முகவரி :
sudarvamsam@yahoo.co.in

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இன்று வயது இறக்கிறது..


வயது ஏற ஏற
  வாழ்க்கை குறைகிறது

வாழ்க்கை குறையக் குறைய
  வசந்தம் தேய்கிறது

வசந்தம் தேயத் தேய
  ஆரோக்கியம் ஓய்கிறது

ஆரோக்கியம் ஓய ஓய
   ஆயுள் அழிகிறது

ஆயுள் அழிய அழிய
  ஆட்டம் நிற்கிறது

ஆட்டம் நிற்க நிற்க
   அனைத்தும் அடங்குகிறது

இன்று வாழ்க்கையில் மறக்கமுடியா, மறக்கயிலா நாள்,
என்வயது இறக்கும் நாள் அதாவது என்பிறந்தநாள். இதிலென்ன விசேசம், பூமியில் படைக்கப்படும் மனிதர்களில் நானும் ஒருத்தி, இதில் விசேசமோ விந்தையோயில்லை என்றபோதும். எனக்குள் ஓர் ஆனந்தம். ஆகா நாமும் இந்த பூலோகத்தில் பிறந்தது, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். என்ற வகையில் சந்தோஷமிருந்தாலும். மறுபுறம் அச்சோ. மனிதனை மனிதனே கொன்று குவிக்கும். பொதுநலநலம் குறைந்து சுயநலம் மிகுந்த சூனியம் நிறைந்திருக்கும். மனங்களை விட காகித பணத்திற்கு மதிப்பளிக்கும். ஆற்றிவு கொடுக்கப்படும் மடைமைகளுக்குள் மூழ்கியிருக்கும். சூது வாது.பொய் பொறாமையென பேராபத்துக்கள் குடிகொண்டுடிருக்கும். மாய உலகில் பிறந்து அதற்குள் ஒன்றாக நாமும் ஆகிவிட்டோமே என்ற வருத்தமும் மறுபுறம் இருந்தபோதும். இந்த இறப்பையும் அதனுடன் இணைத்து வைத்தானே இறைவன் அதை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்..

என் பிறப்பை என் குடும்பமே வரவேற்றதாம் அதுவும் ஒரு பெண்குழந்தையை என்றெண்ணும்போது என்குடும்பதின்மேல் ஒருதனிபிரியமும் மரியாதையும் உள்ளது [ஏனெனில் இன்றளவும் பெண்பிள்ளையென்றால் ஒரு முகச்சுளிப்பு இருக்கதான் செய்கிறது இதைஇல்லையென யாரும் மறுக்கயிலாது] அப்படியிருக்கும்போது என் வரவுக்காக காத்திருந்தவர்களை எண்ணி எண்ணி இறைவனிடம் அவர்களுக்காக வேண்டுகிறேன். என்பிறப்பால் என்னை படைத்தவன் முதலில் திருப்தியடையவேண்டும். பிறப்பின் பலனாய் ஈருலகிலும் எனக்கு நன்மைகிடைக்கவேண்டும்.என் பிறப்பு எனக்கு நன்மையளிப்பதைவிட, என்னால் பிறருக்கு தீங்குயேற்றுபட்டுவிடாமல் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பதுதான் என் பேராவல்.

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும்,நம் ஒவ்வொரு வயது இறக்கிறது. ஆயுள் குறைகிறது.ஆக ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று மறைகிறது.இப்பிறந்தநாள் வருவதே நாம் பூமிக்கு வந்து இத்தனை காலமாகிவிட்டது. இதுநாள்வரை நாம் என்ன செய்தோம்? இனி என்ன செய்யபோகிறோம்? இதுநாள்வரை செய்ததில் நன்மையதிகமா? தீமையதிகமா? இனி வரபோகும் காலங்களில் எதனுள் மூழ்கப்போகிறோம் நன்மையின் பக்கமா? தீமையின் பக்கமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்கவே அந்நாளை நினைவில் நிறுத்தி நம் பூமிக்கு வந்த நோக்கத்தின்.வரவு செலவு கணக்குபார்கவேண்டுமென்பதற்காக இருக்கவேண்டுமே தவிர, வீண் ஆடம்பரத்துக்காக அல்ல என்பது என்கருத்து..

ஒரு சின்ன வேண்டுகோள்.. சின்ன பசங்களுக்கோ, பெரியவர்களுக்கோ. பிறந்தநாளென்று பார்ட்டி வைப்பது அவரவர் விருப்பம். அதை வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ வைத்துக்கொள்ளுங்கள். பொது இடங்களான பார்க்[பூங்காக்களில்] வைப்பது சிறந்ததல்ல ஏனென்றால். என்னதான் வெளிநாட்டிற்கு வந்து வாழ்ந்தபோதும், நம்நாட்டில் இருப்பதைவிட வசதிகளில் மிக மிக குறைந்தவர்கள் சூழ்நிலையின் காரணமாக வெளிநாடுகளில் வந்து குடும்பமாக தங்கும் வாய்ப்புயேற்பட்டுவிடுகிறது. வெளிநாடுவந்தவர்களெல்லாம் பெரும்பெரும் வசதியானவர்கள்தாம் என நினைத்துக்கொள்வது தவறு. அப்படியிருக்கும்பட்சத்தில் நீங்க இப்படி பொது இடங்களில் கொண்டாட்டம் போடும்போது. அதை சுற்றிநின்று வேடிக்கப்பார்க்கும் பிஞ்சுமனங்களில் ஒருவித ஏக்கமும், கவலையும் அதனையறியாமல் வந்து ஒட்டிக்கொள்கிறது. தம் தாய் தந்தை இதுபோல் நமக்கு செய்ததில்லையேயென. இதை நேற்று இரவு நான் பார்க்கில் நேரடியாக கண்ட உண்மை.

9 வயது குழந்தைக்கு பிறந்தநாளாம். பார்ட்டி சகலமும் வந்து சுட சுட இறங்கிகொண்டிருந்தது. பெரிய கேக் மேடையில் வைக்கப்பட்டு, சுற்றி பலூன்கட்டி அங்கு நின்றிருந்தவர்கள் கைதட்ட கேக் வெட்டப்படுகிறது. இத்தனைக்கும் அவர்களும் ஒன்றும் பெரிய வசதியானவர்களிலில்லை. ஆனால் பிரஷ்டீஜ்.கடனையுடனைவாங்கியாவது பார்ட்டிகொண்டாடும் கூட்டங்களும் இருக்கு.

அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.ஓடிவந்து அம்மா அம்மா. இதுபோல் எப்போமா எனக்கும் செய்வே என முந்தானையைபிடித்து இழுத்து வா அங்கே என்கிறான். உடனே தாயின் முகம் சுறுங்கி சுற்றுமுற்றும் பார்த்தபடி தலை தாழ்ந்தது. சட்டென என்னை ஓரக்கணால் பார்த்துக்கொண்டே அவனை அப்புறம் அழைத்து நல்லபிள்ளையில்ல அப்பாவிடம் சொல்லி செய்யலாம். போம்மா இப்படிதான் போனவாட்டி பார்க்கிற்குவந்தபோது, அந்த அண்ணன் கேக்வெட்டிச்சில்ல அப்போதும் இப்படிதான் சொன்னேன் ஆனா நீயும் அப்பாவும் செய்யல.சின்னகேக் வாங்கிதந்து ஏமாத்திட்டீங்க.. இதமாதரி பலூன் கட்டனும். எல்லாரும் வந்து கைதட்டனும். நானும் கேக்வெட்டனும். ஒரே அழுகை. தாயும் அழுக. என்கூட பக்கதிலிருந்த அக்காவும். இதுப்போல் வந்து செய்றாங்க பாவம் பச்சபிள்ளைகள் ஆங்காங்கே அழுவுதுபார் என நீட்டிய இரு இடங்களில் இதே காட்சி. குழந்தைகளுக்கு தெரியாதல்லவா.

நாடுவிட்டு நாடுவந்து நாழு சுவற்றுகுள்ளே அடங்கியே கிடக்கும் பலபேர் நேரம் கிடைக்கும் சமயங்களில் மனதையும் ரிலாக்ஸாக்கி குழந்தைகளுக்கும் விளையாட்டுக்காட்டி செல்ல்லாமென இப்படி பூங்காக்களுக்கு அழைத்துவந்தால் போகும்போதும் இன்னும் இன்னும் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்படும்படி மற்றவர்கள் நடந்துகொள்வதுதான் காலக்கொடுமை. இது நிறைய பேருக்கு புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் சந்தோஷம் அவர்களுக்கு பெரியது மற்றவர்களைப்பற்றிய அக்கரையை அவர்கள் ஏன் கொள்ளவேண்டும். இருந்தாலும்,,,,,,,,,

நம் சந்தோஷத்தால் பிறர் மகிழ்ச்சியடையாவிட்டாலும். நம் சந்தோஷத்தால் பிறர் சங்கடத்துக்குள்ளாவதை தவிர்க்கப்பார்க்கலாம்.
[நீ சொல்லிட்டா யாரும் செய்யாம நின்னுடப்போறாகளா சும்மா போவியா... சரி சரி ]

பிறந்த நாள் கேக்கின் வடிவத்தைபோல் வாழ்க்கை தரப்பட்டிருக்கிறது. அதை வெட்டி முதலிரண்டுதான் நமக்கே ஊட்டப்படுகிறது. நாமே நம் ஆயுளை விழுங்குகிறோம். அப்புறம் கேக் வடிவத்திலிருக்கும், நம்முடைய ஆயுளையும் வாழ்க்கையும் பிறருக்கு பங்குபோட்டு தரப்பட்டு அதை அவர்கள் விழுங்குகிறார்கள். ஆகா நம்முடைய வயது கூடி ஆயுள் இறக்கும் தருணமெல்லாம், நாம் எச்சரிக்கையோடு நடக்கவேண்டுமென்பதை விடுத்து வீணானவைகளில் நம் காலத்தை கழிப்பது தவிக்கலாம் என்பதும் என்கருத்து..

உங்கள் அனைவரின் பிராத்தனைகள்தான் முக்கியமாக வேண்டும். உங்களுக்காக இறைவனிடத்தில் கையேந்தி நிற்கும்போது, எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அதில் சிறு பிராத்தனையும் சேர்ந்திருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

டிஸ்கி/.அதிகாலையிலேயே அன்போடு என் செல்லங்கள் வாழ்த்தியது. நிறைவாக இருந்தது. முகநூலில் எனக்காக   பிராத்தனைகளும் செய்த முகமறியா நட்புகளின் நல்லுள்ளங்கள் அனைத்திற்கும் என் அன்பான நன்றி நன்றி நன்றி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கவிதையே! உன்னை காதலித்ததால் எனக்குமுதலிடம்..




















முக நூலில் கவிதை சங்கமம் நடத்திய கவிதைப்போட்டியில்
எனது கவிதையான ”வாய்ப்பும் வியப்பும்” கவிதை
முதலிடத்தை பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காற்றாய்...மலராய்...
நீராய்... நெருப்பாய்...
என்னுள் குடிக்கொண்டு...
என்னை
என்னாலேயே தேடவைக்கும்....!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

அழுகையாய்... சிரிப்பாய்...
யதார்த்தமாய்... இயந்திரமாய்...
இப்படி
எல்லா நிலையிலும்
எனை வடிக்கும்..!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

உலக உருண்டைக்குள்
ஓடிவிளையாடி...
ஓயாது விடைதேடி
ஒளிந்து மறந்து வியப்பூட்டும்...
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்...

கனவில் கருகொண்டு...
நினைவில் நிலைகொண்டு....
நெஞ்சத்தில்
நீங்காயிடங்கொண்டு... எனை
நிலைகுலையச் செய்யும்
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காணும் காட்சியாவும்
கண்ணுக்குள் குடிகொள்ள
நிகழும் நிகழ்ச்சியாவும்
நெஞ்சிக்குள் புதைந்துகொள்ள
புலனுக்கு புலப்படா
புதிர்களையும்
தோண்டிப் பார்க்கவைக்கும்
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்

கவிதை சங்கமத்தில்-எனக்கொரு
வாய்ப்பாய் கவியெழுத வைத்து
விருதாய் முதலிடத்தை
வியக்கும்படி தந்து
விழிநீர் வழிய வழிய
வசந்தத்தைத் தேடித்தந்த
கவிதையே.. உன்னைக்
காதலிக்கிறேன்..

இறைவன் எனக்களித்த
இந்த இன்றியமையா
வாய்ப்புதன்னை
போற்றி காப்பதுடன்
இதில்வரும்
புகழில் மயங்கிடாமல்
இருதயத்தை பாதுகாத்துக்கொண்டே
கவிதையே!... உன்னைக்
காதலிப்பேன்......

டிஸ்கி// இரண்டாம் இடம்.
திரு இராமன் அப்துல்லா அவர்களுக்கு.
மூன்றாம் இடம்.
திரு கோயம்புத்தூர் பால சுப்பிரமணியன் அவர்களுக்கு.
இருவருக்கும் மனமார்ந்த பராட்டுக்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வந்தாச்சி வந்தாச்சி வசந்தம் க[கொ]ண்டு வந்தாச்சி.

அன்பு நெஞ்சங்களே
அரவணைக்கும் உள்ளங்களே

ஆனந்தமாய் ஓடிவந்து
ஆவலோடு கேட்கின்றேன்

அனைவரும் நலமா
அனைவரும் சுகமா

இந்தியா சென்றுவிட்டு
இளைப்பாறி வந்துவிட்டேன்

இருந்தும் போதவில்லை
இன்னும் இளைப்பாற சமயமில்லை

இந்தியாமீது கொண்ட
ஈர்ப்பு மட்டும் குறையவில்லை

நானில்லாத சமயத்திலும்-என்
கவிதைகளை கண்டுவிட்டு-என்னை
கெளவுரவித்து கருத்துதந்தீர்

இதைநான் என்றென்றும் மறக்கமாட்டேன்
இதற்கு எந்நாளும் நன்றி சொல்வேன்.

என்தாயைக் கண்டுவிட்டு
என்தாய்நாட்டைக் கண்டுவிட்டு

மீண்டும் வந்துவிட்டேன்
மிகுதியாய் புத்துணர்வும் பெற்றுவிட்டேன்

அன்பெனும் ஆதரவாலே
அள்ளித் தருவேன் ஆக்கங்களை

நீங்கள் தரும் ஊக்கத்தாலே-இனி
நீரோடையை நிரப்புவேன் கவிதைகளாலே.....


டிஸ்கி/// என்னம்மாஎல்லாரும் எப்படியிருக்கீங்க.
உங்கள் அனைவரின் நலமறிய மிகுந்த ஆவல்.
வந்தாச்சி வந்தாச்சி வசந்தம் கண்டுவந்தாச்சி. கூடவே
வசந்தமும் கொண்டு வந்தாச்சி. இனி விளையும் என்மூன்று தளத்திலும் முப்போகம்.

தற்போது நோன்புக் காலமாக இருப்பதால் என் இறைவனோடு அதிகதொடர்புகொள்ளவேஆசை. அதனால்.அடிக்கடி என்தளம் மற்றும் பிற தளங்களின் பக்கம் வருவது சிரமம். நோன்பு முடிந்ததும் எப்போதும்போல் வருவேன் அதுவரை உங்கள் அனைவரின் ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தொடர்ந்து கவிதைகளுக்கு கருதிட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அன்புள்ள தமிழ்நாடே...

இரண்டு வருடங்கள் கழித்து
இளைப்பாற வருகிறேன்
இனிப்பாய் இளநீர் தந்து
இன்பமுறச் செய்வாயென

தங்கத்தமிழ்நாடே உனைக்கான
தகதகக்கும் வெயிலை
துடச்சி எரிஞ்சிவிட்டு
தவிப்பாய் ஓடிவருகிறேன்

தாய் தங்கைகண்டு எனைத்
துரத்தி விளையாண்ட
தோழிகளைக் கண்டு
சுகத்தையும் சோகத்தையும்
பகிர்ந்துவிட்டு

மீண்டும்
பாலைவனம் வந்துசேரவேண்டும்
பட்டினியில்லா சோறுதிங்கவும்
பந்தங்கள் பாசமாய் எங்களோடு
ஒட்டி உறவாடவும்

மீண்டும்
ஓடிவரவேண்டும்
ஓயாது உழைக்கும் என்னவனுக்கு
ஒத்தாசையாக இருக்கவேண்டும்

ஆகையால்

அன்புள்ள தமிழ்நாடே-என்னை
ஆசையாய் வரவேற்று
அன்போடு உபசரித்து
இன்முகத்தோடு திரும்ப அனுப்பிவை

ஏனெனில் நான் என்றுமே
என் தாயகத்தின் திருமகளே....
நீரோடையில் நீந்த மீண்டும் 15 நாள் கழித்து வருவேன் அதுவரை மறந்துவிடாதீங்கப்பா நீங்க மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். மீண்டும் வருவேன் எழுத்தாய். வரியாய். கவிதையாய். கவிதைகள் அப்பப்ப வந்துகொண்டிருக்கும். கருத்துக்கள் எழுதாமல் போய்விடாதீர்கள். அனைத்துக்கும் திரும்பியதும் பதில் தருவேன்.
அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுவது

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனைநேசி இன்பம் பெறுவாய்.

நானும் கவிதையும் 200,ரையும் தாண்டி...

அன்பு நெஞ்சங்கள் அனைவரையும் என்னுடைய 205 வது [நீரோடையில் மட்டும்]பதிவில் அன்போடு வரவேற்கின்றேன்.

இது நூறாவதுபதிவு நேரமிருப்பின் கிளிக் செய்யவும்
கவிதையும் நானும் 100 ,ரையும் தாண்டி

தகதகவென ஜொலிக்கும் தங்கமகன் விருதை அளித்த ஜெய்லானி அண்ணாவின் துஆக்களோடு இருநூற்றி ஐந்தாவது பதிவில் அடியெடுத்துவைக்கிறேன். தங்கமங்கையாக [அச்சோ தங்கம் விற்கும் விலைக்கு கடத்திடப்போறாங்க பாத்து இருங்கோன்னு ஆரோ சொல்லுறது காதில் கேட்குது அதெல்லாம் கவனமாக இருப்போமுல்ல தங்க கிரில்போட்ட கூட்டுக்குள்..ஹி ஹி ஹி]


வலையில் விழுந்து இன்றோடு 11 மாதங்களாகிறது.
ஆரம்பத்திலிருந்தே என் பதிவுகளுக்கு ஆதரவும், கருத்துக்களும், என்னை மென்மேலும் எழுத்தூண்டியது. அதன்காரணமாக. பலமேடைகளில் கவிதைகள் வாசிப்புகள். நாளேடுகளில். மற்றும் பலபுத்தங்களில் என் கதை. கவிதைகள்.பல தளங்களில் என்கவிதைகள். 100 கவிதைகள் குறுகியகாலத்தில் எழுதியதற்காக வாங்கிய விருது மற்றும் என் அன்புவலைப்பதிவாளர்கள் அள்ளிதந்த விருதுகளென அதீத சந்தோஷத்தோடு ஆரவாரமில்லாமல் அன்போடு அடியெடுத்து வைக்கிறேன். இருநூற்றி ஐந்தாவது பதிவில்.

என் எழுத்துக்களால் அதிரை யுனிக்கோட் உமர்தம்பி அவர்களுக்காக முயற்சிசெய்து வெற்றியடைந்தது. என் கவிதைவரிகளால் 2.வருடங்கள் பிரிந்திருந்த[குழந்தையில்லாததால்]செல்வி,முத்தையா தம்பதியர்கள்.
முத்தையா வெளிநாடு சென்றுவிட்டு கடிதப்போக்குவரத்தோ தொலைபேசித்தொடர்போ இல்லாதிருந்தவர்கள். எதேச்சையாக தளங்களில் என்கவிதைகளை படிக்கநேர அடுத்தடுத்தும் படித்துவிட்டு தபால் போட்டதாகவும்.என் எழுத்துக்களில் ஏதோ இருந்து அவர்களை மீண்டும் இணைத்ததாகவும் தெரிவித்திருந்தார்கள். மனமார பாராட்டியிருந்தார்கள்.

அதேபோல் ஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் நாத்தனார் என்றபெயரில் அண்ணனை பிரித்துவைத்து வெளிநாடு அனுப்பிவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழ்குடும்பத்தில் என்கவிதைகளை படித்து அதை அவருக்கு அனுப்பிவைக்க நெடுநாள்களாக பேச்சிச்தொடர்பே இல்லாதிருந்தவர்கள் யார் இதை எழுதியது என பேசத்தொடங்க அதிலிருந்து தற்போது நல்லபடியாக இருப்பதாகவும். மனமகிழ்வுடன் நன்றியும் சொன்னார்கள். அப்பெண்ணைப்போல் மற்றவர்களும் ஆகக்கூடாதென கவிதையும் எழுதச்சொன்னார்கள். எழுத்துக்கள் எல்லாம் செய்யும் என்பதை உணர்ந்தேன். [உணரவைத்தார்கள்]. என்எழுத்துக்கள் என்மனதை சந்தோஷங்களைக்கொண்டு நிரப்பிய செயல்களைக் கண்டு வியந்தேன்.

என் எழுத்துக்களால் சிலராவது பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் எழுதவே தொடங்கினேன். பயன் கிடைத்தது. அதிலும் உறவுகள் நட்புகள். சகோதர சகோதரிகள் தாய்தந்தைகள் என வலையுலகில் என்னைச்சுற்றி பந்தங்களும் சொந்தங்களும் வலைபோல்பின்ன அதில் கட்டுண்டுக் கிடக்கிறேன். இது ஒன்றுபோதாதா என் எழுத்துகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
தாய் தந்தையாய் எனைத்தேற்றுவதும். சகோதர சகோதரியாயிருந்து வளர்ச்சிக்கு தூண்டுகோளாயிருப்பதும். நட்புகளாய் தோள்கொடுப்பதும் என சகலமுமாய் எனக்கு நீங்களனைவரும் கிடைத்து பாக்கியமே!

நான் இதுவரை எழுதிய பதிவுகளில் எந்தவொரு கருத்துரைகளும் என்னை பாதித்ததில்லை அப்படியாரும் என்னை பாதிக்கவைத்ததில்லை.
பலதளங்களுக்கு செல்கிறேன் அனானி என்ற பெயரில் தரகுறைவான வார்த்தைகளால் வசைப்பாடியிருப்பார்கள். அப்போதெல்லாம் மனதில் பயம்தோன்றும். இதுபோன்று எக்குதப்பாக யாரும் நமக்கு கருதுரையிடுவார்களோ என, ஏனென்றால் நான் எழுதிய பதிவும் அதேபதிவும் சிலசமயம் ஒன்றாக இருக்கும் வார்த்தைகள்தான் வேறுபட்டிருக்கும். அதிலிருந்தே புரிந்துகொண்டேன்.நம்முடைய எழுதுக்களில் நம்மையறியாமல் நன்மையிருக்கிது. அதைவிட இங்கே வந்துசெல்லும் அனைவருமே ரொம்ப ரொம்ப நல்லவங்க எனவும் அறிந்துகொண்டேன்.

யாரையும் எவ்விததிலும் நம்முடைய எழுத்துக்களால் நோகடித்துவிடக்கூடாதென்று மிக கவனமாக எழுதுகிறேன். இனியும் எழுதுவேன்.இதுவரை நான் எழுதியதில் எதுவும் தாங்களின் மனது சங்கடப்படும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என் தவறை மனதார மன்னித்துவிடுங்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவு என்றென்றும் வேண்டும் அதை தருவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது. இன்னும் நான் நிறைய நல்லவைகளுக்காக, நல்லதையே, எழுத இறைவனிடம் பிராத்தியுங்கள். உங்களோடு என்னையும் ஒரு தோழியாய். சகோதரியாய். மகளாய். ஏற்றுக்கொள்ளுங்கள்...
என் பாசமுள்ள அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் பல பல பல.

அப்புறம் ஒரு முக்கியச்செய்தி. நான் சட்டம்படித்தவள் இல்லை. பள்ளிப்படிப்பே அறைகுறைதான். நான் சட்டம் பயின்றவளென நினைத்து சிலர் உதவிகேட்கிறர்கள். இப்போது நினைக்கிறேன்,நாமும் படிதிருக்கலாமேயென. இருதோழிகளிகளும். ஒரு சகோதரரும்.[பெயர் வேண்டாம்].தாங்களின் நல்ல மனதுக்கு எல்லாம் நன்மையாக முடியும். எதற்கும் கவலைப்படாதீர்கள் இறைவன் இருக்கிறான் வெகுவிரைவில் தாங்களுக்கு நல்லது நடக்கும் நானும் இறைவனிடம் பிராத்திக்கிறேன்.


நான்காம் வகுப்புத் தாண்டா
நங்கை யொருத்திய
நல்லெண்ணெத்தோடு
நடைபயின்றாள்
வலைதளத்தில்

அன்னை மொழிக்கொண்டு
அழகுக் கவிகிறுக்கி
அன்போடு நடைபோட்டாள்
வலைகளத்தில்

வாசித்த நெஞ்சங்கள்
வாழ்த்திடவே
வாகைசூடிய கருத்துக்கள்
வழங்கிடவே

இருநூறு படைப்புகள் படைத்திட்டாள்-பல
இதயக்கூட்டுகுள் நுழைந்திட்டாள்
தலைக்கணம் ஏதும்வேண்டாமென
தன் இறையிடம் அழுது வேண்டிட்டாள்

மகிழ்ச்சி கடலில் குதித்திட்டாள்
மனமார நன்றிகள் தந்திட்டாள்
மேலும் மேலும் எழு[ந்]திடவே
மனதார வாழ்த்துக்கள் கேட்கின்றாள்

குறைகள் ஏதும் இருந்ததென்றால்
தயங்காமல் தட்டிக் கேட்டிடுங்கள்
நிறைகள் நிறைந்து இருந்ததென்றால்
நெஞ்சார தட்டிக் கொடுத்திடுங்கள்....

என்றும் உங்கள் நினைவுகளோடு
நிலைக்க விரும்பும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்களுக்கு
தொடர்ந்து ஊக்கம் தாருங்கள் அன்போடு.

நிஜமாய்..



டிஸ்கி// எதாச்சையாக ஒரு தளத்துக்குசென்றேன் அங்கே இப்படத்தைப்போட்டு கவிதயெழுதச்சொல்லியிருந்தாகோ. அப்போ அங்கே எழுதமுடியலை!
அதான் இங்கேவந்து கிறுக்கிவிட்டேன். என்ன படத்தைபார்த்து எழுதச்சொன்னாங்க நான் படத்துக்குள்ளேயே சின்ன சின்ன இதயம்வச்சி எழுதிட்டேன் எப்புடியிருக்கு..


இப்படத்திற்க்கு ஷேக் என்கிற ஸ்டார்ஜன் எழுதியது.

ஒருமுறை பார்க்க தோன்றும்
நிலவொளியில் உன் முகம்
அடிக்கடி பார்க்கத் தூண்டும்
போட்டி உனக்கும் நிலாவுக்கும்
ஜெயிப்பது நீயாக இருந்தால்
என் ஓட்டு உனக்குதான் அன்பே..
பிடிச்சிருக்கு அவளை மட்டும்
விரல் கோர்த்து வீதியில்
உலா வருவேன் கூட நீயும்.

அதாறு ஷேக். மச்சிதானே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

நீயின்றி நானேது!....


எனைத்தொடரத்தான்
உனைப் படைத்தானோ!
இல்லை-எனக்குள்
உனைப் புதைத்துதான்
எனைப் படைத்தானோ!

என்னில் நீ
முழுமையாகி -நான்
எழும்போதும் விழும்போதும்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
முன்னும் பின்னும்
என் எல்லா நிலைகளிலும்
எனக்குளாகிவிட்டாய்!

சிலவேளை
உனைக்கண்டு நான் அதிர!
பலவேளை
எனைக்கண்டு நீ மிரள!

என்னைப்போலவே நீயிருந்தும்
எலும்புகள் ஏதும் உனக்கில்லாததும்!
என் உருவம் அழகாய் இருக்கையில்
எனக்குளிருக்கும் நீ
நிழலாய் தெரிவதும்
உலகப் பாடம் படித்திடவே
மனசாட்சி
நிழல்ப் படமாய் தெரிகிறதோ!

நான் தவறிடாவாறு
கண்கானிக்கிறாய்-என்
மனம்போன போக்கை
கண்டிக்கிறாய்!
மனசாட்சியாய் தண்டிக்கிறாய்!
நிழல்சாட்சியாய் நிந்திக்கிறாய்!

நீ
என்கூடவே வரும்வரை
என்னக்கில்லை மரணம்
நீ
என்னைவிட்டுப் பிரிந்தபின்
எனக்கேது உலகிலே உறைவிடம்.

டிஸ்கி// இப்படத்திற்கான /சிநேகிதன்/ அக்பரின் கவிதை
மரக் காதல்
நீ அமுதை பொழிகிறாய்
நான் அன்பை பொழிகிறேன்
இந்த நேரத்தில்
செங்கதிரோனுக்கு
இங்கு என்ன வேலை?
நீ ஓடி விடாதே நில்..

அக்பர் அங்கேயே நிற்கச்சொல்லி நிலாவுக்கு தூது அனுப்பிச்சாச்சி ஓகேயா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

நிழல் தடம்..........

நன்றி கூகிள்

டிஸ்கி// யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு என் வித்தியாச சிந்தனை
.
 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!

வீழ்வேன் என்று நினைத்தாயோ!


வாழவந்திருக்கும் பூமியில்
வசதிகளும் வாய்புகளும்
ஏராளம் ஏராளம்- அதை
வகையாய்
வகைப்படுத்திக்கொண்டால்
வசந்தம் கைகூடும் எந்நாளும்.

சாதிக்கத்துணிந்த பின்னே
சோதனைகளைகண்டு
சோகமெதற்கு-மனம்
அழுக்கானவர்களைக் கண்டு
அச்சம்கொண்டு
அடங்குவதெதற்கு- நீ

மறைவதுபோல
தோன்றிடும் இருட்டு-ஆனால்
மறுநாளே விடிந்திடும்
மங்கள கிழக்கு.

முக்காடிட்டு மறைத்திருப்பது
முகத்தையே தவிர
மூளையையல்ல –நீ
முன்னுக்கு வரும்வழியில்
முட்டுக்கட்டைகளைக்கண்டு
முடங்கிவிடாதே!

முயற்சிசெய்தால்- அதே
முட்டுக்கட்டைகளைக்கொண்டு
மேடைகளாக்கு! மேதைகள் கையால்
மாலைகள் கிடைக்கும்
மாபெரும் இறைவனின் அருளால்
மதிப்புகள் உயரும்.

உலகம் என்பது
ஒரு நாடகமேடை –அதில்
உலவும் மனிதரோ
ஓ ராயிரம் வகை
ஒவ்வொரு மனங்களும்
ஒவ்வொருவிதம்-அதில்
ஓடும் எண்ணமோ பலபல ரகம்

வீசிடும் தென்றலில்
வாஞ்சையுமுண்டு கோபமுமுண்டு
வாஞ்சையாய் நீயும் கோபத்தைப்பாரு
வருத்ததை உதறி வாரியணைத்து -உன்
வாஞ்சையை பகிரு
வந்துசேருமே- ஒன்றாய்
வசந்தங்கள் நூறு

கவிதை எழுதும் கடுகொ ன்று அங்கே
காலுன்றிகொண்டு வேரூன்றிவிடுமோயென
கவலை கொள்வோரின் முன்னே!
கவனமாய் நீயும்
கடந்திடு பெண்ணே-உன் கவனமெல்லாம்
களைகளைக் கலைந்து -நற்
க விதைகளை விதைப்பது தானே!

விசால மண்ணில்
[க]விதைகளை விதைத்து-அதில்
விசமில்லாத உரமும் தூவி-
விளைமண்ணைமுட்டி மோதிக்கொண்டே
வீரிட்டு எழுந்திடு!
வேர்விட்டு வளர்ந்திடு

வெட்டிதள்ளினும்
வேர்விட்டு தளைத்திடும்
ஆலமரம்போல
வரம்புமீராத உன்
வாழ்கையினாலே வளர்ச்சிகண்டிடு
ஆலம்விழுதினப்போல
வல்லோன் நினைத்தால் அதற்குமேலும்
வாழந்துகாட்டிடு
வாழையடி வாழை....

டிஸ்கி// சென்னை //ரஸ்மி// என்ற ரஸ்தாமாவிற்காக இக்கவிதை..
சிலர் சிலரை உயர்த்துவதும் தாழ்த்துவதும். தவறாக எடைபோடுவதும் .[ அவங்களுக்கு மட்டுமா எங்கும் இதுபோன்ற விசமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.குறுகியமனதோடு]
பூமியில் சகஜம். அதையெல்லாம் தாண்டி சாதிக்கத்துணிந்தவன்.
அது [செருப்பு தைய்பதாகட்டும்.
சிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.

தோல்வியன்றபோதும் தொடர்ந்த முயற்சி ஒருபோதும் வீணாகாது. ஒருமனிதனின் சிறு சாதனையும்  அது சிலமனிதர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் சிலமனிதர்களை சங்கடத்திற்குள்ளாகும்.
நம்மைவிட அவன் முன்னேறுவதா என மனதுக்குள் முனங்கிக்கொண்டே வெளிவேசமாய் உலவும் மனிதர்கள் நிறைய இப்பூமியிலே!
உனக்கென்று எது கிடைக்க இருக்கிறதோ அது கிடைத்தேதீரும்
யார் தடுத்தாலும். ஆனால் உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.
 இது இறைவனின் வாக்கு!
எவன்வசம் எல்லாம் இருக்கிறதோ அவன்வசமே அனைத்தும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வாஞ்சை!!!

வெள்ளைக்காகிதத்தில்
வரைந்து முடிக்கவில்லை
மலரை
வந்தமர்ந்தது வண்ணத்துப்பூச்சி

வாசத்தை காணவில்லை
வண்ணங்களும் இதற்கில்லை
ஆனாலும்
அழகிய மலராக
ஆடி நிற்பதைக்கண்டு
அது வாடிடக்கூடதென்று
தன் பட்டுச்சிறகை
கருத்த மலரின் உடல்மேல்
மெல்லவிரித்து-தன்
வண்ணங்களை உதறியது

பென்சிலின்
கருநிற உதட்டால்
உடல்பெற்ற மலரோ
வண்ணங்கள் பட்டதும்
உயிர்பெற்று எழுந்தது
வனப்போடு நின்ற
மலர்மேனியைக்கண்டதும்
வண்ணத்துப்பூச்சி
மெளனமாய் -தன்
முகம்கொண்டு
வாஞ்சையோடு உரசிச்சென்றது

வண்ணமில்லா
வாசனை இல்லா
மலர்கூட
வண்ணத்துப்பூச்சியின்
வாஞ்சையினால்
வசந்தம்பாடி நின்றது...

//டிஸ்கி ஒரு நாளுன்னு சொல்லி ஒரு வாரம் லீவ் எடுத்தாச்சி.பள்ளிகூட்டத்தில் எடுப்பதுபோல். லீவில் சும்மா இருந்தா எப்புடி அதான் கொஞ்சம் வரஞ்[ரைந்து]சிபார்ப்போமுன்னு.
அதென்னன்னா இப்படி ஆகிப்போச்சி சரி எவ்வளோ சகிச்சிக்கிட்டீக இதையும் அப்படியே அப்படியேஏ... நல்லாக்குதான்னு சொல்லிட்டுபோங்க//


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது