ஊமையான உணர்வுகள்..
ஒரேஒரு கிளிக்
நரம்பருந்த வீணைபோல்
நாதமிழந்த சந்தங்களாய்
நாட்டியத்தின்போது
அறுத்துக்கொண்ட சலங்கைகளாய்
நயமிழந்து, சுதிகுறைந்து,
சுகவீனமாய் சுருளும் உள்ளம்
அறுத்து ஓடும் ரத்தம்போல்
ஆழ்மனதில் ஓடிடும் ஆரா ரணம்
ஆற்றவும் தேற்றவும் ஆளில்லாமல்
அயர்ந்து சோர்ந்து திண்டாடும் தினம்
சுகங்களை இழந்த சோலைகள்போல
சோகங்கள் சூழ்ந்த இருளின் தேகம்
சுற்றமிருந்தும் சொந்தமில்லாமல்
சுகமாய் இருபதாய் நாளும் நடிக்கும்முகம்
வித வித கனவுகள் கண்ட வாழ்க்கை
விதிவழியைக் கடந்து வேகமாய் ஓட
வாழ்க்கையின் அர்த்தம் விளங்க மறுத்து
வசைவுகள் நாளும் வாங்கிக் குவித்து
விபரமறியா குழந்தையாகி
விம்மி விம்மி வெதும்பும் மனம்
வெடித்து சிதறும் மனதின் உணர்வு-அதை
வெளியே சொல்லா முகத்தின் அறிவு
விடியும் தருவாய் எதிர்நோக்கி
வெளிச்சம் தேடும் விசித்திர நெஞ்சம்
மனமிணையாத மணக்கோலம்
மார்பைத் தாக்கும் வீசிய சொல்லும்
மரபுகளென்று வகுத்த கோலம்
மல்லுக்கு நிப்பதோ விதண்டாவாதமென்று
மறைத்து வாழும் மங்கைகள் ஏராளம்
ஊமையின் கனவு ஊமையாகும்
ஊரறிச் செய்தால் கேலியாகும்
உலகம் சுற்றும் வரையில் ஊர்கோலம்
ஊர்வசிகளின் உள்ளத்தில்
உணர்வுகளின் தேக்கம்
உதறி வெடித்தால் சிதறிப்போகும்
சிதையவும் வழியில்லை சீரழிய மனமில்லை
சிந்தும் கண்ணீரில் சிறுதுளியும் பொய்யில்லை
சீராகும் வாழ்க்கையென்ற சீரிய எண்ணத்தில்
சிறக்கிருந்தும் பறக்காமல் சிறைக்குள் பறவைகள்
பாவம் பாவைகள் படிதாண்டா பேதகைகள்
பதறும் மனங்கள்கொண்டு அல்லாடும் கோழைகள்
பாசமற்ற புழுக்கதிற்குள் மாட்டிக்கொண்ட கோதைகள்
பாழும் உலகினில் படுகிறதே பல பலவேதனைகள்...
டிஸ்கி.//என்னுடைய இந்த கவிதை தமிழ்குறிஞ்யில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
////சுற்றமிருந்தும் சொந்தமில்லாமல்////
பதிலளிநீக்குஅழுத்தமான வரிகள் அருமை வாழ்த்துக்கள்....
முதலில் தமிழ்க்குறிஞ்சிக்கும் அதன்பின் அற்புத கவிதைக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மாலிக்கா, கவிதை இயல்பாக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குகவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஎத்தனை வீடுகளில் இதுபோன்று நடபெருகிறது. அதை சொல்லமுடியாமல் அழும் மனங்களை படம்பிடித்து காட்டியதுபோலிருக்கு மலிக்கா.
பதிலளிநீக்குஉன் கவிதையின் நுணுக்கம் ஆச்ச்ர்யப்படவைக்கிறது. கடவுள் உனக்கு ஆயுள்பலதையும் ஆரோக்கியதையும் தர வேண்டுகிறேன்மா..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குஅருமையான கவிதை மலிக்கா
அருமையான கவிதை சகோதரி...
பதிலளிநீக்குஉணர்வுகள் உணர்வுகளாய் மிக அருமையாய் வெளிப்பட்டிருக்கு வாழ்த்துக்கள் மலிக்கா
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்.மனதிற்குள் உள்ள சோகத்தை ஒரு பெண்ணாய் இருந்ததால் அப்படியே வடிக்கமுடிந்த நிலையில் மிக அருமையான வார்தை குறிப்புகள்.ஆனால்,அன்பு சகோதரிக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.
பதிலளிநீக்குநீங்கள் மார்கம் தெரிந்த நல்ல ஒரு கவிஞர்.பிறர் வாழ்துகிறார்கள் என்பதற்காக எழுதாத நேர்மையான சிந்தையாளர்.அப்படி இருக்க இந்த வரி எழுதியது, பெண் படித்தாண்டாதது குற்றமா? அல்லது படித்தாண்டாததால் அவள் பேதையா? நீங்கள் வேன்டுமென்றே அவ்வாறு எழுதி இருக்க வாய்பில்லை.வார்தை வந்து விழும் வேகத்தில் உங்களையும் அறியாமல் அதன் போக்கில் எழுத்து போய்விட்டதாகவே அறிகிறேன். அங்கே அவர்கள் படித்தான்டா பத்திணிகள் அல்லது வேறு பொருத்தமான சொல் வந்திருக்க வேண்டும் என்பது என் அறிவிற்கு எட்டியது. அந்த இடம் சரியென்றால் நான் மறை முகமாய் பெண் படித்தாண்ட தூண்டும் பாவத்தை வல்ல அல்லாஹ் முன் சுமக்க விரும்மவில்லை. அல்லாஹ் அணைவரை காப்பானாக ஆமீன்.
//சிறக்கிருந்தும் பறக்காமல் சிறைக்குள் பறவைகள்//
பதிலளிநீக்கு”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்றான் பாரதி.ஆனால் அந்நிலை முழுமையாக வரவில்லை.வரவேண்டும்.பறவைகள் சிறகடித்துப் பறக்க வேண்டும்.
அருமையான கவிதை!வாழ்த்துகள்.
அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ....
பெண் படித்தாண்டாதது குற்றமா? அல்லது படித்தாண்டாததால் அவள் பேதையா? நீங்கள் வேன்டுமென்றே அவ்வாறு எழுதி இருக்க வாய்பில்லை.வார்தை வந்து விழும் வேகத்தில் உங்களையும் அறியாமல் அதன் போக்கில் எழுத்து போய்விட்டதாகவே அறிகிறேன். அங்கே அவர்கள் படித்தான்டா பத்திணிகள் அல்லது வேறு பொருத்தமான சொல் வந்திருக்க வேண்டும்.//
பதிலளிநீக்குஇதன் அர்த்தங்கள் அவ்வாறல்ல சகோதரர் அவர்களே!
படிதாண்டுவதென்பது பல நிலைகளைகுறிக்கும் சொல்லாக நினைத்துதான் அவ்வாறு எழுதியுள்ளேன்.
வீட்டுக்குள் அவள்படும் வேதனைகளை வெளியில் சொல்லமுடியா ஒருத்தியால் அதிலிருந்து மீழ்வது எப்படின்னு புரியாதவளாக தவிப்பதை உணர்த்தியுள்ளேன். அதேசமயம் படிதாண்டிவிட்டால் பத்தினியல்ல என்பது சரியல்ல.
படிதாண்டாமலே பலகெட்டபெயர்களை எடுக்கும் பேதைகளாய் வாழ்வதும் நடந்துவரும் கொடுமைகளாக இருக்கிறது.
கெட்டவழியில் செல்லும் [குறிப்பாக மார்க்கவழியிலிருந்து பாதைமாறி]கணவரை எவ்வளவோமுயன்றும் திருத்தமுடியாத சூழலில் அவனிடமிருந்து வெளியேறுவதா வேண்டாமா என சிந்திக்கும் கோதைகளாகவும் வாழ்ந்துவருகிறார்கள் .
மார்க்க ரீதியில் மார்க்கதிற்குபுறம்பான செயல்களில் ஈடுபடும் கணவனை திருத்தபாடுபட்டு அதில் தோல்வியடைந்த பெண்கள் அவரிடமிருந்து விலகிக்கொள்ளலாமென்றும் ஹதீஸ்களில் படித்துள்ளேன். ஆனாலும் அதனுள்ளே இருந்து கடைசிவரை போராடி ஜெயிக்க நினைப்பர்வளுக்காக எழுதப்பட்டதே இவ்வரிகள்.
உண்மையான உள்ளதோடு தூயமார்க்கத்தின் நெறியோடு வாழ்நினைக்கும் யாரும் இதைவேறுவிதமாக நினைக்கமட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான்.
வல்ல இறைவன் அனைத்தையும் அறிந்தவன் நாம்மையறியாமல் நடக்கும் தவறுகளை மன்னிக்கப்போதுமானவன்.
//பாவம் பாவைகள் படிதாண்டா பேதகைகள்
பதிலளிநீக்குபதறும் மனங்கள்கொண்டு அல்லாடும் கோழைகள்
பாசமற்ற புழுக்கதிற்குள் மாட்டிக்கொண்ட கோதைகள்
பாழும் உலகினில் படுகிறதே பல பலவேதனைகள்...//
உணர்வுகளை வலிகளுடன் பதிவு செய்துள்ளீர்கள் அருமை...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி..
நலமா சகோ
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ
விஜய்
கொண்ட கனவுகளை
பதிலளிநீக்குஅடைகாப்பதே கண்ணியம்
பிள்ளை பெற்று
பேனி வளர்ப்பதே
பெண்ணியம்
பொல்லாத கணவனையும்
பொறுத்துப் போவதே
புண்ணியம்
எண்ணியும் பார்க்க
இயலாத விலங்குகள்
எத்தனை?
"படிதாண்டா" என்ற வார்த்தையை 'மொழித்தமிழாக' சகோதரி எடுத்தாண்டு இருக்கிறீர்கள். சகோ. க்ரவுனோ 'வழக்குத்தமிழாக' புரிந்திருக்கிறார். அவரவர் கோணங்களில் இருவர் எண்ணங்களும் போற்றத்தக்கதே.
கொண்ட கனவுகளை
பதிலளிநீக்குஅடைகாப்பதே கண்ணியம்
பிள்ளை பெற்று
பேனி வளர்ப்பதே
பெண்ணியம்
பொல்லாத கணவனையும்
பொறுத்துப் போவதே
புண்ணியம்
எண்ணியும் பார்க்க
இயலாத விலங்குகள்
எத்தனை?
"படிதாண்டா" என்ற வார்த்தையை 'மொழித்தமிழாக' சகோதரி எடுத்தாண்டு இருக்கிறீர்கள். சகோ. க்ரவுனோ 'வழக்குத்தமிழாக' புரிந்திருக்கிறார். அவரவர் கோணங்களில் இருவர் எண்ணங்களும் போற்றத்தக்கதே.
ம.தி.சுதா கூறியது...
பதிலளிநீக்கு////சுற்றமிருந்தும் சொந்தமில்லாமல்////
அழுத்தமான வரிகள் அருமை வாழ்த்துக்கள்.//
வாங்க மதி சுதா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
சே.குமார் கூறியது...
பதிலளிநீக்குமுதலில் தமிழ்க்குறிஞ்சிக்கும் அதன்பின் அற்புத கவிதைக்கும் வாழ்த்துக்கள் அக்கா.//
வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்..
நித்திலம்-சிப்பிக்குள் முத்து கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மாலிக்கா, கவிதை இயல்பாக அழகாக இருக்கிறது.
ரொம்ப சந்தோஷம் நித்திலம். தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
//S Maharajan கூறியது...
கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகராஜன்..
சுகந்தி கூறியது...
பதிலளிநீக்குஎத்தனை வீடுகளில் இதுபோன்று நடபெருகிறது. அதை சொல்லமுடியாமல் அழும் மனங்களை படம்பிடித்து காட்டியதுபோலிருக்கு மலிக்கா.
உன் கவிதையின் நுணுக்கம் ஆச்ச்ர்யப்படவைக்கிறது. கடவுள் உனக்கு ஆயுள்பலதையும் ஆரோக்கியதையும் தர வேண்டுகிறேன்மா..
என்னமா செய்வது எல்லாராலும் எல்லாதையும் வெளியில் சொல்லயிலா சுழக்லில் சிக்கிக்கொள்ளும்போது யாராவது ஒருவர் எடுத்துச்சொல்லத்தானேவேண்டும். தீர்வுகள்காண தெளிவான சிந்தனையும் தெளிவான முடிவுகளுமே..
தொடர்ந்த தாங்களின் ஊக்கக்கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்மா
// ஆமினா கூறியது...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான கவிதை மலிக்கா.//
அலைமுஸ்ஸலாம் நன்றி.
ஆமினா க்கா.
//வெறும்பய கூறியது...
அருமையான கவிதை சகோதரி.../
மிக்க மகிழ்ச்சி சகோ..
சிவா கூறியது...
பதிலளிநீக்குஉணர்வுகள் உணர்வுகளாய் மிக அருமையாய் வெளிப்பட்டிருக்கு வாழ்த்துக்கள் மலிக்கா.//
வாங்க . சிவா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ரோசிணி எப்படியிருக்கா. வாண்டின் வால் [குறும்]பெல்லாம் எப்படியிருக்கா.
சென்னை பித்தன் கூறியது...
பதிலளிநீக்கு//சிறக்கிருந்தும் பறக்காமல் சிறைக்குள் பறவைகள்//
”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்றான் பாரதி.ஆனால் அந்நிலை முழுமையாக வரவில்லை.வரவேண்டும்.பறவைகள் சிறகடித்துப் பறக்க வேண்டும்.
அருமையான கவிதை!வாழ்த்துகள்.//
வாங்க .சென்னை பித்தன் . சில இடங்களில் பெண்களின் நிலை இப்படிருக்கு. அவர்களின் மனநிலையின் வலிகளையும் வேதனைகளையும் புரிந்துகொண்டு அதை சரிப்படுதவோ அல்லது அதிலிருந்து மாறுதல் கிடைக்கவோ அவரவரின் குடும்பங்களும்ஒத்துழைக்கவேண்டும்.
வரம்புமீறுவோருக்கு வகுதல்ல வரையரையோடு வாழ்நினைபோருக்குக்காததான் இவ்வரிகள் .
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Mohamed Ayoub K கூறியது...
பதிலளிநீக்குஅருமை.
வாழ்த்துக்கள் சகோ//
வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
//Chitra கூறியது...
Congratulations!//
தேங்ஸ் சித்ராக்கா..
மாணவன் கூறியது...
பதிலளிநீக்கு//பாவம் பாவைகள் படிதாண்டா பேதகைகள்
பதறும் மனங்கள்கொண்டு அல்லாடும் கோழைகள்
பாசமற்ற புழுக்கதிற்குள் மாட்டிக்கொண்ட கோதைகள்
பாழும் உலகினில் படுகிறதே பல பலவேதனைகள்...//
உணர்வுகளை வலிகளுடன் பதிவு செய்துள்ளீர்கள் அருமை...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி..//
வாங்க மாணவன் . வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..
விஜய் கூறியது...
பதிலளிநீக்குநலமா சகோ
வாழ்த்துக்கள் சகோ
விஜய்.//
ரொம்ப நல்லாயிருக்கூம் சகோ. அங்கு அனைவரும் நலமா வீட்டில் அனைவரையும் விசாரித்தாக சொல்லவும்..
வாழ்த்துக்களுகும் விசாரிப்புக்கும் மிக்க நன்றி சகோ..
sabeer கூறியது...
பதிலளிநீக்குகொண்ட கனவுகளை
அடைகாப்பதே கண்ணியம்
பிள்ளை பெற்று
பேனி வளர்ப்பதே
பெண்ணியம்
பொல்லாத கணவனையும்
பொறுத்துப் போவதே
புண்ணியம்
எண்ணியும் பார்க்க
இயலாத விலங்குகள்
எத்தனை?
"படிதாண்டா" என்ற வார்த்தையை 'மொழித்தமிழாக' சகோதரி எடுத்தாண்டு இருக்கிறீர்கள். சகோ. க்ரவுனோ 'வழக்குத்தமிழாக' புரிந்திருக்கிறார். அவரவர் கோணங்களில் இருவர் எண்ணங்களும் போற்றத்தக்கதே.
//
வாங்க சகோதரரே! தமிழில் ஒரே சொல்லுக்கு பலவித அர்த்தங்களிருக்கிறது. அதை அந்தந்த இடங்களுக்கு தகுந்தார்போல் வகைபடும்போது சிலருக்கு வெவ்வேறு அர்ததங்கள் தோன்றுவது இயல்பே! சாகோ கேட்டதிலும் தவறில்லை தன்னையறியாமல் தன் சகோதரி தவறுகள் செய்துவிடக்கூடாது என்பதில் அக்கரை கொள்வதே ஒரு சகோதரனின் பாசக் கடமை அதைக்கண்டு நான் மகிழ்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அன்புடன் மலிக்கா சொன்னது…
பதிலளிநீக்குsabeer கூறியது...
கொண்ட கனவுகளை
அடைகாப்பதே கண்ணியம்
பிள்ளை பெற்று
பேனி வளர்ப்பதே
பெண்ணியம்
பொல்லாத கணவனையும்
பொறுத்துப் போவதே
புண்ணியம்
எண்ணியும் பார்க்க
இயலாத விலங்குகள்
எத்தனை?
"படிதாண்டா" என்ற வார்த்தையை 'மொழித்தமிழாக' சகோதரி எடுத்தாண்டு இருக்கிறீர்கள். சகோ. க்ரவுனோ 'வழக்குத்தமிழாக' புரிந்திருக்கிறார். அவரவர் கோணங்களில் இருவர் எண்ணங்களும் போற்றத்தக்கதே.
//
வாங்க சகோதரரே! தமிழில் ஒரே சொல்லுக்கு பலவித அர்த்தங்களிருக்கிறது. அதை அந்தந்த இடங்களுக்கு தகுந்தார்போல் வகைபடும்போது சிலருக்கு வெவ்வேறு அர்ததங்கள் தோன்றுவது இயல்பே! சாகோ கேட்டதிலும் தவறில்லை தன்னையறியாமல் தன் சகோதரி தவறுகள் செய்துவிடக்கூடாது என்பதில் அக்கரை கொள்வதே ஒரு சகோதரனின் பாசக் கடமை அதைக்கண்டு நான் மகிழ்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
-----------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நான் சொன்னதை என் மன சாட்சியாக சகோ.சபீர் காக்கா சொல்லியவையும், நான் வழக்கு(வழங்கு)முறையில் சகோதரியை யாரும் தவறாக எண்ணிவிட கூடாது என்ற ஆதாங்கம் அவர்கள் சார்பாகவே அவர்கள் எண்ணத்தை வெளிப்படுத்த விரும்பியே கேட்டேன்.அதையும் சரியாகவே புரிந்துகொண்ட சகோதரியும் அவரின் விளக்கமும் அப்பாடா என நிம்மதி கொள்ள செய்தது.அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.