நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாழ்க்கையின் வ[லு]லி...

வானத்திற்க்கு கீழ்
வீட்டைக்கட்டிவிட்டு

வான் மழைக்கும்
வீசும் புயலுக்கும்
வருத்தும் துன்பத்துக்கும்
வாட்டும் வேதனைக்கும்
வருந்துவதா? வாடுவதா?
விவாதிக்கிறது மனம்

வாழ்க்கை வலியுடையது
வளையும்போதும் நிமிரும்போதும்
வலிக்கிறது
வேதனை வருத்துகிறது

வாஞ்சையோடு வார்த்தைகள்
ஆறுதல் அளித்தபோதும்
அவஸ்த்தையோடு மனம்
அவதிப்படுகிறது

கருவறையில் இருந்தவரை
கவலைகளில்லை கனவுகளில்லை
கண்விழிக்க தொடங்கியதும்
கவலைகளும்
கனவுகளும் விடுவதாயில்லை

வலியுடைய வாழ்க்கையை
வலுவுடையதாக்குவது
மனவலிமையிலிருக்கிறதென
வரமறுக்கும் தைரியத்தை
வம்புசெய்து வரவழைத்துகொண்டேன்

வருவது வரட்டும்
வானத்தின்கீழ் வாழவந்துவிட்டேன்
வருவது வரட்டும்
தேற்றிக் கொள்கிறேன் என்னை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

30 கருத்துகள்:

  1. வருவது வரட்டும்

    //

    இது தான் பலரின் தாரக மந்திரம்..

    கவிதை நல்லாயிருக்கு..

    பதிலளிநீக்கு
  2. //கருவறையில் இருந்தவரை
    கவலைகளில்லை கனவுகளில்லை
    கண்விழிக்க தொடங்கியதும்
    கவலைகளும்
    கனவுகளும் விடுவதாயில்லை//

    unmaiyana varikal akka. kavi arumai.

    பதிலளிநீக்கு
  3. கருவறையில் இருந்தவரை
    கவலைகளில்லை கனவுகளில்லை
    கண்விழிக்க தொடங்கியதும்
    கவலைகளும் கனவுகளும் விடுவதாயில்லை நிதர்சனமான உண்மை.. சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. //கருவறையில் இருந்தவரை
    கவலைகளில்லை கனவுகளில்லை
    கண்விழிக்க தொடங்கியதும்
    கவலைகளும்
    கனவுகளும் விடுவதாயில்லை//

    இந்த வரிகள் ஒவ்வொருவரின் மனதையும் நெருடி இருக்கும். அருமையாக உள்ளது சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும். நலாமா சகோதரி? இனி எல்லாம் சுகமே,வருமே கவலை வேண்டாம்.
    -----------------------------------
    மனது திடமாகிவிட்டால்,மண்டைக்குள் நிம்மதி முளைக்கத்தொடங்கிவிடும்.
    துன்பங்கள் துவன்டுவிடும்.இன்பம் வீடு தேடிவர விலாசம் விசாரிக்கும்.
    பின் மீதி துன்பமும் நாள் செல்ல ஓடி மறைந்துவிடும்,மருபடியும் நமைத்தேடிவர சோம்பல் கொண்டுவிடும். நம்பிக்கை காற்று வீசும்,மெல்ல இனிச்சாகும் அவ நபிக்கையும். கூடிவிடும் அவள் நம்பிக்கையும்.

    பதிலளிநீக்கு
  6. வலியையே வலுவான வழியாக மாற்றி யோசிக்கும் உங்கள் எண்ணங்கள் வாசிப்பவருக்கும் வரமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. கவிதையை படித்தவுடன்..ஒரு புத்துணர்ச்சி ,உத்வேகம்....அருமை சகோதரி....இன்ஷா அல்லாஹ் எல்லாம் நன்மையாகும்....துவா முக்கியம்

    பதிலளிநீக்கு
  8. //வாழ்க்கை வலியுடையது
    வளையும்போதும் நிமிரும்போதும்
    வலிக்கிறது
    வேதனை வருத்துகிறது //

    இததான் உண்மை அதிலிருந்து வெற்றி காண்பதுதான் மனிதர்களின் லட்ச்சியம் அதில் வீரிடுபவரும் உண்டு வீலுபவரும் உண்டு நாலு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடித்து பொழுதை வீணடிப்பார்கள் என்ற எண்ணம் மாறி சாதித்து காண்பிப்போம் என்று உறுதி கொள்வோம்.

    கருவறையில் இருக்கும் நாம் கண் விழித்தப் போதுதான் கஷ்ட்டம் தெரிகிறது.

    உங்கள் கவிதைகளின் தொகுப்பு அருமை.

    நீரோடை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

    எல்லாப் பதிவும் படித்த பிறகு நேரம் இருந்தால் என்னுடைய தளத்திற்கு வாருங்கள் எழுதிப் பழகும் நான், படிக்கிறதுக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கிறேன்.அப்புறம் நானா எழுதி நானா படிக்க வேண்டிய சூல்நிலையாகிவிடும்.
    http://naattamain.blogspot.com/

    இப்படித்தான் இசையை கொஞ்சம் அப்படியும் இப்படியும் கற்றிருந்த ஒரு இசை கலைஞர்,தாம் பாடும் பாடலைக் கேட்பதற்கு ஆள் கிடைக்காமல் வருத்தமாக இருந்தார்.ஏதோ அவர் ஓரளவுக்கு நல்லா பாடுவார்,இருந்தப் போதிலும் யாரும் அவரை கட்ச்சேரிக்கு அழைப்பது இல்லை ரசிகர்கள் இல்லாத காரணத்தால்,மனம் உடைந்த பகவதருக்கு நம்பிக்கை திலகமாய் ஒரு கடிதம் வந்தது தூர் தரசனிலிருந்து அன்பு பகவதருக்கு வணக்கம் கிராமிய நிகழ்ச்சியை நடத்தும் உங்களுக்கு ரசிகர்கள் இல்லாத காரணத்தால் நாம் உம்மை இத்தொலைக்காட்சி மூலம் அறிமுகப் படுத்தப் போகிறோம் ஆகையால் நாளை காலை ஆறுமணிக்கெல்லாம் ஆபிசுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    கையும் ஓடலை காலும் ஓடலை மனுஷன் அப்படியே சிலை மாதுரி கல்லாகி விட்டார்,இஷ்ட்ட தெய்வங்களை வணங்கினார்.காலையில் சென்று ரிக்கார்டிங் சென்டரில் பாடிட்டும் வந்துட்டார்.
    வேகமாக கடைக்குப் போயி இரு நூறு கடிதம் வாங்கினார் அதில் பல ஊரின் அட்ரசுகளை இட்டு பல மக்கள்கள் எழுதிய மாதுரி ஆகா..ஓகோ..என்று அவரைப் பற்றியே புகழ்ந்து எழுதி நேராக தபால் நிலையத்திற்கு சென்று போஸ்ட் செய்தார் ஏன் என்றால் அவர் பாடிய பாட்டை கேட்டு மக்கள்கள் பகவதரைப் பாராட்டி எழுதிய மாதுரி கடிதம் எழுதினார்.

    அன்பு தூர்தரசன் நிர்வாகிகளுக்கு வணக்கம் எங்கள் ஊரை சேர்ந்த பாகவதரின் பாட்டை கேட்டு நாங்கள் மிக மகிழ்ச்சி அடைந்தோம் அவரைப் போன்ற கிராமத்து பாடகரை காண்பது அரிது ஆகையால் அவரை உங்களின் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு பயன் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இப்படி எழுதி போஸ்ட் பண்ணிவிட்டு ஊரு முழுக்க மக்கள்களிடம் தண்டோரா போட்டார் நாளைக்கு எனது பாட்டு நிகழ்ச்சி தொலைக் காட்ச்சியில் வருது கண்டிப்பா எல்லோரும் பாக்கணும் என்று.

    காலையில் மூணு மணிக்கே பாகவதர் தொலைக்காட்சி முன்பே அமர்ந்து விட்டு மணியையும் டீவியையும் பார்த்துக் கொண்டிருந்தார்,சரியாக ஆறு மணி டிங்.டிங்.டிங்.டிங்.டிங்.டிங்.கடிகாரம் அடித்ததுமே மனுஷன் ஆடிப் போயிட்டார், ஏன் என்றால் டீவியில் அவர் பாடும் நிகழ்ச்சிக்குப் பதிலாக...ட்யூங்..ட்யூங்..ட்யூங்..ட்டுஊங்..என்று இசை ஒழிக்க ஆரம்பிச்சிருச்சு,தேசியத் தலைவர் மண்டையைப் போட்டதுனாலே அன்றே ப்ரோக்ராம் எல்லாம் கேன்சல்.

    மறுநாள் காலையில் தூர்தர்சனிலிருந்து பகவதருக்கு கடிதம் வந்தது நீங்கள் பாடிய பாட்டைக் கேட்டு இருநூறு பேரு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று.

    அந்தக் கதையா நம்மக் கதை ஆகிடக் கூடாது பாருங்கள் அதுக்குத்தான் இந்தக் கதை.

    சாரி அக்காள் உங்கள் பக்கத்தை வேஸ்ட் பண்ணிட்டேன் மன்னிக்கவும்.உங்களின் தத்துவக் கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. //கருவறையில் இருந்தவரை
    கவலைகளில்லை கனவுகளில்லை
    கண்விழிக்க தொடங்கியதும்
    கவலைகளும்
    கனவுகளும் விடுவதாயில்லை//

    நல்ல வார்த்தை ஜாலம்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. இது சுயமா அல்லது சுற்றுமுற்றும் நோக்கிப் பெற்றதா என்ற தெளிவில்லை சகோ.

    சுயமெனில், கழிவிறக்கம் உங்கள் தன்மையோடு முரண்படுகிறது. 

    //வருவது வரட்டும் 
    தேற்றிக் கொள்கிறேன் என்னை...//

    என்பதுபோல்...

    எப்பொழுதும்போல் தைரியமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் சகோ.

    புனைந்த கவிதை எனில், வார்த்தைகளாலேயே வலி வரவழைக்கும் உணர்வுபூர்வமான ஆக்கம் இது.

    பதிலளிநீக்கு
  11. மனவலியின்....வேதனையின் வெளிப்பாடுதான் இக்கவிதை...
    நான் ஏற்கெனவே சொன்னதுதான்...

    வழுக்கும் பாறை கொண்ட
    வாழ்க்கைப் பாதையில்
    சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும்...! - அச்
    சறுக்கல்களை
    சமாளித்து.......
    சமதளப் பாதையாக்கினால்...
    சிகரத்தை தொடும் காலம் வெகுவிரைவில்....!
    *****
    மனமே நீ... நாணல்...!

    பெருவெள்ளமும்...
    பெரும்புயலுமா...
    உன்னை வீழ்த்த முடியும்...!

    வெள்ளத்தின்
    வேகம் உன்னை
    வீழ்த்த நினைத்தால்... நீ
    வளைந்து....
    வெள்ளம் வடிந்ததும்...
    மீண்டும் நிமிர்ந்து நிற்கும்.. நாணல்... நீ...!

    வேரோடு வீழ்வதற்கென்ன
    நீ என்ன பனைமரமா...!

    மனமே நீ...
    உன் "நம்பிக்கை" "உறுதி" "முயற்சி" எனும்
    விழுதுகளை கொண்ட வைரம் பாய்ந்த ஆலவிருட்ஷம்...!
    உன்னை...! இந்த வடமேற்கு பருவக் காற்றா வீழ்த்தும்...!

    மனமே நீ... பீனிக்ஸ்...!

    சூரியனே
    சூட்டேரித்தாலும்...
    சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை... நீ..!
    உன்னை... இச்சிறு தீப்பொறியா செயலிழிக்க செய்யும்....!

    வீழ்ச்சி என்பது... எழுச்சியின் முதல்படி...!
    வீழ்வது என்பது உக்கிரமாய் எழுவதற்க்குதான்....!
    தங்கள் கவிவரிதான் உண்மை... "வலி"தான் "வலு"...!

    இக்கவி
    வரிகளை பாராட்ட
    வார்த்தைகளை தேடிகொண்டிருக்கிறேன்...!

    நட்புடன்...
    சகோ. காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  12. / வருவது வரட்டும்
    வானத்தின்கீழ் வாழவந்துவிட்டேன் /

    இது தான் நம்பிக்கை...

    கவிதை அருமை..

    பதிலளிநீக்கு
  13. கலங்கிய எங்களுக்கு நல்கருதுகள்மூலம் ஆறுதல் தரும் உனக்கு கவலையா?
    வருத்தமா வேதனையா. எதுவென்றபோதும் வெல்லபோவது நீதான். அதெல்லாம் உனக்குமுன்னே. அதை நான் சொல்லவேண்டியதிலைமகளே!
    எல்லாம் நிரந்தரமல்ல. என்பதை எனக்கு உணர்த்தியவளே நீதான்.
    கடவுள் துணையிருப்பார் கவலைபடாதே.
    இதுவும் கடந்துபோகும் வெகுவிரவில் நல்லது நடக்கும் வெகு வெகுவிரைவில்.
    உனக்காக என்றும் வேண்டும் அன்னை..

    பதிலளிநீக்கு
  14. வாழ்க்கை வலியுடையது
    வளையும்போதும் நிமிரும்போதும்
    வலிக்கிறது
    வேதனை வருத்துகிறது./

    உண்மைதான் சகோ.
    வலிக்கும்போதுமடுமே அதுபுரியும்.

    கவலைவேண்டாம் சீக்கிரம் நல்லது நடக்கும் தாங்களின் நம்பிகைக்கு..

    பதிலளிநீக்கு
  15. வருவது வரட்டும் என்கிற துணிவே போதும் வாழ்வை எதிர்கொள்ள !

    பதிலளிநீக்கு
  16. என்னசொல்ல நான் வேதனையும் சோதனையும் மாறி மாறி வருது. இது எனக்கு எழுதியதா மல்லி..

    நான்மிகுந்த வேதனையில் இருந்தேன் இக்கவிதையைக்கண்டு சற்றே ஆறுதல் அடைந்தேன்.

    எல்லாம் நன்மையாக நடக்கும் என்ற ந்ம்பிக்கையில் உன்னுடன் நானும்..

    பதிலளிநீக்கு
  17. //வான் மழைக்கும்
    வீசும் புயலுக்கும்
    வருத்தும் துன்பத்துக்கும்
    வாட்டும் வேதனைக்கும்
    வருந்துவதா? வாடுவதா?
    விவாதிக்கிறது மனம் //

    குழம்பிய குட்டையிலேயே
    மீன்கள் அகப்படுகிறது
    குழம்பிய மனமே பலதும்
    சிந்திக்கிறது. முடியா(த ) வேளையில்
    பூனை புலியாகிறது
    அழும் வீனையே
    இன்னிசையாகிறது

    வளைந்து குடுக்கும் நானலுக்கு புயலேது மழையேது.
    மின்னி மறையும் மின்னல்
    போல தடை பல வந்தாலும் காட்டாறு
    தடம் மாறுமோ இல்லை
    தடுமாறுமோ

    வாழ்வின் படிக்கட்டுகள் நேராக
    இருந்து விட்டால் ஏறத்தான் முடியுமோ
    இல்லை இறங்கத்தான்
    முடியுமா


    அருமையான கவிதை ,
    ஒரு சிறுகவி யில்
    பெரிய தத்துவம்

    பதிலளிநீக்கு
  18. என் வலியை மறக்கடிக்க நீ தந்த கவிதை வார்தையிலையே உன்னை வாழ்த்த. துன்பம் உனை நெருக்கவே பயப்படும் மலிக்கா கவலைப்படதே கவலையில் மிதப்பவன் சொல்கிறேன் உன்னை கவலை நெருங்காது,,...

    பதிலளிநீக்கு
  19. "ஜெய்லானி" எனும் ஓர் சிறந்த கவிஞரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  20. வெல்வது வீழ்வது இவ்வுலகில் சகஜம் தானே.

    படைத்தவனின் சிந்தனையில் வாழ்கையில் ஏற்படும் வலியை ஓரங்கட்டலாமே.

    உடல் வழிக்கு மருந்து தர மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

    மன வலிக்கு ஒரே மருந்து படைதவனுக்கு நன்றி செலுத்தி பிரார்த்தனை செய்வது மட்டுமே.

    cheer up Sister.

    துஆவுடன் அன்பு சகோதரன்

    தாஜுதீன்

    பதிலளிநீக்கு
  21. /////வருவது வரட்டும்
    வானத்தின்கீழ் வாழவந்துவிட்டேன்
    வருவது வரட்டும்
    தேற்றிக் கொள்கிறேன் என்னை../////

    அருமை தன்னடக்கமான வரிகள் வாழ்த்துக்கள்....

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    பதிலளிநீக்கு
  22. //வாஞ்சையோடு வார்த்தைகள்
    ஆறுதல் அளித்தபோதும்
    அவஸ்த்தையோடு மனம்
    அவதிப்படுகிறது//

    ஆறுதலான இரண்டொரு வார்தைகள் தான்
    மனதிர்க்கு உத்வேகத்தை கொடுக்கும் ஆனால்,?

    (அவஸ்த்தையோடு மனம் அவதிப்படுகிறது!!!)

    பதிலளிநீக்கு
  23. ம்ம்ம்...மலிக்க உங்கள்

    வரிகள் வலிகளை சுமந்து கொண்டு துலிகளாய் வானத்தில் இருந்து .....

    இங்கே விருது வழங்கியிருக்கிரென் வந்து பெற்றுக்கொள்ளவும்.

    http://naanentralenna.blogspot.com/2010/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  24. கவிதையில் சூழ்நிலையில் விவரித்த விதம் நல்லாயிருந்தது, முடிவு பளீச் என இருந்தது. நீண்ட நேரம் யோசித்த பின், எடுத்த முடிவு போன்று இருந்தது.
    கவிதையிலுள்ள சோக வரிகள், கவிதை எழுத வேண்டும் என்பதற்காக இருக்கட்டும். எப்படியாயினும் இறைவன் உங்களுடன் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  25. கவிதையில் சூழ்நிலையில் விவரித்த விதம் நல்லாயிருந்தது, முடிவு பளீச் என இருந்தது. நீண்ட நேரம் யோசித்த பின், எடுத்த முடிவு போன்று இருந்தது.
    கவிதையிலுள்ள சோக வரிகள், கவிதை எழுத வேண்டும் என்பதற்காக இருக்கட்டும். எப்படியாயினும் இறைவன் உங்களுடன் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  26. //உடல் வழிக்கு மருந்து தர மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

    மன வலிக்கு ஒரே மருந்து படைதவனுக்கு நன்றி செலுத்தி பிரார்த்தனை செய்வது மட்டுமே//

    பதிலளிநீக்கு
  27. இறைவன் கொடுத்த இவ்வுலக வாழ்வு உயர்வானது .இறைவன் ஒரு காரியத்திர்க்காகவே படைத்துள்ளான் வீண் பொழுது போக்கிற்காக அல்ல .அவன் கொடுத்தவைகளை நாம் முறையாக பயன் படுத்தினோமா என்று அல்லாஹ் கேட்பான். நாம் நீண்ட நாட்கள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்து படைத்தவனை தொழுது வருவதனை அல்லாஹ் விரும்புகின்றான். கிடைத்த வாழ்வினை நேசிக்க வேண்டும் .

    பதிலளிநீக்கு
  28. தாங்களின் பகிர்தலுக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    எல்லாருக்கும் சோதனையுண்டு அதையெல்லாம் தாண்டிவந்தால்தானே வாழ்க்கை வலுபெறும் என்ற பாடத்தைகற்றுக்கொடுக்கிறது இப்போது நடக்கும் சோதனை. நடக்கட்டும். எதுவென்றபோதும் தாங்கிதான் பார்போமேன்னு தாங்கும் நேரம்.

    இறைவன் அனைத்தையும் நன்மையக்கிதருவான் நல்லது நடக்கும்என்ற நம்பிக்கையோடு..

    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது