நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலையுலகத்தில் நான்.


பதிவெழுத வந்ததால் கிடைத்த நிகழ்வுகளும் சில நெகிழ்வுகளும், காலங்கள் கடந்துவிட்டபோதும் மனதில் கிடக்கும் சந்தோஷ தருணங்கள்.அதை பகிர்வதில் மகிழ்ச்சியே!
தனக்குள் உதிக்கும் அத்தனையும் எல்லாரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலோங்கவே நானும் பதிவர்களில் ஒருத்தியாக வலம்வர நினைத்து. ஏதோ எனக்கு தெரிந்தவைகளை கவிதைகளென்னும் பெயரில் கிறுக்கிவருகிறேன்.
என் எழுத்துக்கள்கூட சிலருக்கு பிடித்திருக்கிறது எனநினைக்கும்போது மனது சந்தோதங்களை உணர்கிறது. அப்படி எழுத தொடங்கியதின் விளைவு. பல நல்ல உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றுதந்தது என்றால் அதுமிகையாகது.வலையுலகத்தில் நானுமிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியே

கடந்த 28-8-2010. அன்று எங்கள் வீட்டில் விசேசத்திற்காக 15 நாள் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது சில நல்ல உள்ளங்களையும் காணவும்
அன்பு பொங்கிய மனங்களிடம் பேசவும் வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் அன்பு சாரதாம்மாவிடம் பேசியனேன். போனிலேயே பாசத்தை பொழிந்து தள்ளிவிட்டார்கள். தாய்மையின் அன்பும் பேச்சும் என்னை நெகிழவைத்தது அவர்களால் வரயிலாது கன்னியாகுமரியில் இருக்காங்க நானும் போகமுடியாச்சுழல். அதனால் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம்.
சாராதாம்மா நிச்சயமாக வருவேம்மா.அடுத்த லீவில் உங்களைபார்க்க!

அப்புறம் நேரில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திய சகோதரர் காஞ்சி முரளியென்னும் முரளிதரன் அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று வீட்டின் விசேசமன்று வந்திருந்தார்கள். நெடுந்தூரம் என்றபோதும் உடல்நிலை சற்று ஒத்துழைக்காபோதும். என் எழுத்துக்களின் வாசகராய். விமர்சகராய். பிழைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராய். எங்கள்சகோதரராய்.தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு. என் அன்னையிடம் என்னைபற்றி இது புகழ்ச்சிக்காக சொல்லவில்லை இப்படியொருமகளை பெற்றெடுக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் அவரின் எழுத்துக்கள் பலரையும் சென்றடைந்துள்ளது என சிலபல நல்லவாக்கியங்கள் சொல்லியபோது, பொறுப்பாலும். மனதாலும்.வயதாலும்.எவ்வளளோ பெரியவங்க சிரமம் பாராமல் எங்களைக் காணவந்ததே சந்தோஷத்தை தந்தது.அதுவும் அன்பு மனைவி, அருமை மகள், பாசமான அக்கா பசங்கள் ஆகியோரோடு வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது.அண்ணி வசந்தியையும். மருமகள் சாருவையும் எனக்கும் என்வீட்டாருக்கும் ரொம்ப பிடித்துபோனது.

அடுத்து கோலங்கள் சாரூக்காவிடம் போனில் பேசினேன் மிகக்குறுகிய காலமாக இருந்ததால் அக்காவால் எங்க ஊருக்கு வரவோ நான் கும்பகோணம் செல்லவோ நேரில் சந்திக்க முடியாமல்போனது மனதுக்கு வருத்தம்தான்.அக்காவிடம் பேசும்போதே நேரில் சந்தித்த திருப்தி குட்டிச்செல்லங்களிடம்தான் பேசமுடியவில்லை. அக்காவின் அம்மா ஊர் தஞ்சையென்றாலும் அக்கா இருப்பதோ கும்பகோணம் என்ன செய்ய நான் இருப்பதோ மு. அ. வில் இன்ஷா அல்லாஹ் வரும் லீவில் கண்டிபாக சந்திக்கனும்.யக்கோவ் தேடுதா? .

அடுத்து சுஜி, அவரிடமும் போனில் பேசினேன்.அன்போடு அழகாய் பேசிய சுஜி,  அக்கா உங்கள் கவிதைகளை புக்காக தொகுத்து வெளியிடுங்களேன் என்று தன் விருப்பதைசொன்னார் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் வெகுவிரைவில் அதுவும் வந்துவிடும் சுஜி.
அடுத்து. என்தந்தையின் ஊரான அதிரை யுனிக்கோட்
”தேனி”திரு உமர்தம்பி அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.தேனி உமர்தம்பி அவர்களின் கணினி சேவையை பாராட்டி அவர்கள் பெயரில் கோவை செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என அமைத்து அவர்களை  கவுரவித்தது தமிழக அரசு.அதற்கு சில முயற்சிகள் செய்தது நானும் என்னோடு சேர்ந்து சில நல்லுள்ளங்களும்[இங்கு கிளிகினால் முழுவிபரம்] எங்கள் தெருவுக்கு முதல் தெருவு அதுவும் என் தந்தையின் மிக நெருங்கிய பால்ய சினேகிதரின் உறவுக்காரர்தான் என எனக்கு அங்கு அவர்களின் வீட்டில் பேசியபோதுதான் தெரிந்தது.

தந்தை ”தேனி”உமர்தம்பியின் மனைவி அவர்களிடமும்,மற்றும் மருமகள் அவர்களிடமும் பேசினேன்.
தற்போது உயிரோடு இருந்திருந்தால் இவ்விருது கிடைத்தமைக்கு எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பார்கள் என மனமுடைந்து அவர்களின் மனைவி கூறியபோது எனக்குள் இனம்புரியாத வருத்தம் இறுக்கிப்பிடித்தது. எந்த ஓர் ஆத்மாவுக்கு அது செய்த நன்மையின் பலனை எவ்வழியிலாவது வழங்கிவிடுவான் இறைவன்.அதோடு மறுமையிலும் நற்பாக்கியதை வழங்குவான் என அவர்களுக்கு ஆறுதல் சொல்லியதோடு நோன்புக்காலம் என்பதால்,நிறையநேரம் இருக்கமுடியாததால் கிளம்பினேன் 10.நிமிடந்தான் என்றபோதும் மனநிறைவாக இருந்தது.என் எழுத்துக்களால் இன்னும் நிறைய நல்லவைகள் செய்யவேண்டுமென மனதுக்குள் நினைத்தவன்னம் வெளியேறினேன்.

நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் எல்லாம் சிறந்தவைகளாக இருக்கும் என்ற இறைவனின் வாக்குப்படி. அதை வலியுறுதும் பெரியோர்களின் சொல்படி.நமது எண்ணைங்களை தூய்மையாக்கி அதன் வெளிப்பாட்டில் எழும் எழுத்துக்களை அழகாக்கி பிறரின் மனதையும் நிறைவாக்க முயற்சிக்கவேண்டும்.

இவ்வலைதளத்தின் மூலம் கிடைக்கபெற்ற சந்தோஷ தருணங்களை மனதில் நிலைநிறுதியவளாய் இன்னும் கிடைக்கபோகும் பாச நேசங்களையும். அன்பு அறிவுரைகளையும் எதிர்நோக்கியவளாக!
என் எழுத்துக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டும் தோழமைகளாக. உங்களின் பாசத்தை என்றும் விரும்புபவளாக.என் எழுதுப்பயணத்தை தொடரவிரும்பும்
என்றுமே மாறா அன்புடன்

உங்கள்
அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

 கலைச்சாரலில் இப்படியும் ”கடி”நோய்கள் 

74 கருத்துகள்:

  1. அன்பு மலிக்கா எல்லாத்தையும் சந்தித்தது நீங்க சொல்ல சொல்ல நானும் சந்தித்தது பொல் இருந்த்து,
    அடடா சாரு சென்னையா மிஸ் பண்ணிட்டேனே.


    நேரம் கிடைக்கும் போது புது பகக்த்துக்கும் வாங்க பா
    www.samaiyalattakaasam.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. ஆமாக்கா சாரூக்கா சென்னையில்தான் இருக்காங்க. நாம சேந்துபோயிபார்ப்போம் ஓகேவா..

    நன்றிக்கா.. இதோவாரேன்

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் உங்கள் உறவு தானே?

    பதிலளிநீக்கு
  4. //நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் எல்லாம் சிறந்தவைகளாக இருக்கும் என்ற இறைவனின் வாக்குப்படி. அதை வலியுறுத்தும் பெரியோர்களின் சொல்படி.நமது எண்ணைங்களை தூய்மையாக்கி அதன் வெளிப்பாட்டில் எழும் எழுத்துக்களை அழகாக்கி பிறரின் மனதையும் நிறைவாக்க முயற்சிக்கவேண்டும்.//

    மிக உண்மை...

    பதிலளிநீக்கு
  5. பாரத்... பாரதி... கூறியது...
    நாங்களும் உங்கள் உறவு தானே?//

    என்ன பாரத் இப்படி கேட்டுபுட்டீக. நீங்க எல்லாரும் என் உறவுதான் இதில் சந்தேகமே வேண்டாம்.

    உறவுகள் மூலம் உன்னத அன்பை பலப்படுத்திக்கொள்வோம்..

    பதிலளிநீக்கு
  6. பாரத்... பாரதி... கூறியது...
    //நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் எல்லாம் சிறந்தவைகளாக இருக்கும் என்ற இறைவனின் வாக்குப்படி. அதை வலியுறுத்தும் பெரியோர்களின் சொல்படி.நமது எண்ணைங்களை தூய்மையாக்கி அதன் வெளிப்பாட்டில் எழும் எழுத்துக்களை அழகாக்கி பிறரின் மனதையும் நிறைவாக்க முயற்சிக்கவேண்டும்.//

    மிக உண்மை
    //

    மிக்க நன்றி பாரத்..

    பதிலளிநீக்கு
  7. உன்னை நேரில் காண எனக்கும் ஆவல்தான். இதைபடிக்கும்போதே. ஆசையாக இருக்கு மல்லி.

    உன் எழுத்துக்கள் பிறருக்கு பாடமாக இருக்கிறதென்றால் அதுமிகையாக அதை சொல்லிதெரியவேண்டியதில்லை உணர்வுகளை மிக தெளிவாக சொவதில் நீ கெட்டிக்கரியாக இருக்கிறாய்.

    நாம் சந்திக்கும்நாளை எதிர்பார்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. அழகான பகிர்வு மலிக்கா.
    உங்களின் எழுத்தே கவிதைபோல் அழகாய் இருக்கிறது. உங்க குடும்பதில் யாரேனும் கவிதையெழுவாங்களா மலிக்கா.

    அதுசரி எங்கே ரொம்ப நாளா உங்க சகோ முரளியை காணோம்.

    பதிவெழுதுபவர்களும் அதை வாசிப்பவர்களும் உங்க ஃபேனாயிட்டோம் தெரியுமா
    எல்லாரும் ஒருநாள் சந்திக்கனுமுன்னு ஆவலை தூண்டுறீங்க மலிக்கா..இன்னும் தொடர்ந்து எழுதி சாதிங்க.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. உங்கள் நட்புக்களை பார்த்ததை நல்ல விவரித்து இருக்கிறீர்கள். அடுத்த முறை வரும் பொழுது சென்னையில் எங்கள் வீட்டிற்கு விருந்திற்கு வாருங்கள் சகோ

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வுங்க சகோ.. எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கு.. கூடிய விரைவில்...

    பதிலளிநீக்கு
  11. அருமையான பகிர்வு. உங்கள சந்தோஷங்களை நாங்களும் பகிர்ந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பகிர்வு மலிக்கா.

    பதிலளிநீக்கு
  13. மலிக்காக்கா உங்கள் நட்பு குறித்த பதிவு படிக்கும் போதே மனசுக்குள் விரிகிறது.... ஒரு சுகமான அனுபவம்...
    ஆமா... இப்ப சார்ஜாவில்தானே இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. நல்லா பதிவு செய்து இருக்கீங்க.

    நன்றி

    பதிலளிநீக்கு
  15. ம்ம்ம்... உங்கள் வலைப்பூவின் 250வது வாசகன் அடியேன் தான்...

    பதிலளிநீக்கு
  16. அருமையாக எழுதி இருக்கின்றிங்க...எல்லொருடனும் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி...நீங்க கோலங்கள் சாரு அக்காவையா சொல்லிறிங்க...

    பதிலளிநீக்கு
  17. உங்கள் நட்புக்களை பார்த்ததை நல்ல விவரித்து இருக்கிறீர்கள்.vaazhththukkal

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு விஷயத்தையும் அழகா விவரிச்சு இருகீங்க வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  19. மிக்க நன்றி ராமுமேடம்

    மிக்க நன்றி சுகந்திமா. இறைவன் நாடினால் நிச்சயம் சந்திப்போம்

    மிக்கநன்றி நிஷா.

    நிஷா சகோவிற்க்கு வேலைகள் அதனாலும் இருக்கலாம்.அவாங்க வரவிட்டாலும் அவர்களின் வாழ்த்துக்களிருக்குமென நம்புகிறேன்..

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி சகோ. இறைவன் நாடினால் சென்னை வரும்போது வருகிறேன் சகோ..

    மிக்க நன்றி அன்பரசன்

    மிக்க நன்றி வினோ நீங்களும் எழுதுங்க பகிர்வதிம் ஓர் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  21. என் சந்தோஷம் தாங்களையும் சந்தோஷித்ததில் மகிழ்ச்சி சித்ராக்கா.

    மிக்க நன்றி மகராஜன்.

    மிக்க நன்றி தோழி ஹேமா

    பதிலளிநீக்கு
  22. ஆமாம் குமார் சார்ஜாவில்தானிருக்கேன்.தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகுமார்.

    மிக்க நன்றி ஆசியாக்கா

    பதிலளிநீக்கு
  23. philosophy prabhakaran கூறியது...
    ம்ம்ம்... உங்கள் வலைப்பூவின் 250வது வாசகன் அடியேன் தான்..//

    வாங்க வாங்க பிரபா.
    அப்படியா ரொம்ப சந்தோஷம்
    வருகைக்கும் இணைந்தமைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  24. வாங்க விக்கி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  25. அழகிய பகிர்தல் தாங்களின் நட்புவட்டத்தில் நானும் இணையலாமா?
    உங்கள் கவிதைகளை பல தளங்களின்படித்தேன் அன்புடன் மலிக்கா என்ற பெயரிலேயே அன்பை வைத்துள்ளீர்கள்.
    உங்களின் சீரிய வரிகளும் நல்ல எண்ணங்களின்பால் நீங்கள் சொல்லும் கருதான கவிதைகளும் மனதை ஈர்கின்றன

    இன்றுமுதல் நானும் உங்கள் தோழமை ஏற்பீர்களா?

    என்றும் நட்புடன்
    புகழேந்தி..

    பதிலளிநீக்கு
  26. ஆமா கீதா நம்ம கோலங்கள் சாரூக்காதான். மிக்க நன்றி கீதா.

    மிக்க நன்றி நாட்டமா! அன்னியன்

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப சந்தோஷம் ஆமினா க்கா.
    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  28. புகழேந்தி கூறியது...
    அழகிய பகிர்தல் தாங்களின் நட்புவட்டத்தில் நானும் இணையலாமா?
    உங்கள் கவிதைகளை பல தளங்களின்படித்தேன் அன்புடன் மலிக்கா என்ற பெயரிலேயே அன்பை வைத்துள்ளீர்கள்.
    உங்களின் சீரிய வரிகளும் நல்ல எண்ணங்களின்பால் நீங்கள் சொல்லும் கருதான கவிதைகளும் மனதை ஈர்கின்றன

    இன்றுமுதல் நானும் உங்கள் தோழமை ஏற்பீர்களா?

    என்றும் நட்புடன்
    புகழேந்தி..//

    வாங்க புகழ்.தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

    கருதுப்பரிமாற்றங்கள்தான் படைப்புகளுக்கு பலமாகயிருக்கிறது.அதேபோல் இவ்வலையுலகில் கிடைக்கும் சொந்தங்களும் நட்புகளும் அதிசயயிக்கவைக்கிறது.

    தாங்களும் இணைவதில் மகிழ்ச்சியே!
    தொடரட்டும் நம் நட்புகளின் பந்தம்..

    மிக்க நன்றி புகழேந்தி

    பதிலளிநீக்கு
  29. அழ‌கா விவ‌ரித்து இருக்கீங்க‌ ம‌லிக்கா..நீங்க‌ள் தேனீ உம‌ர்த‌ம்பி அவ‌ர்க‌ள் வீட்டுக்கு சென்ற‌தாக‌ ச‌கோ.தாஜீதீன் என்னிட‌ம் சொன்னார்..நானும் அதே நேர‌த்தில் ஊரில்தான் இருந்தேன் ச‌ந்திக்க‌ இய‌லாம‌ல் போய்விட்ட‌து..அந்த‌ தேனீ உம‌ர்த‌ம்பி வீட்டுக்கு எதிர்புற‌த்தில் வ‌ல‌து ப‌க்க‌த்தில் நான்காவ‌து வீடுதான் எங்க‌ வீடு நீங்க‌ள் வ‌ருவ‌துப் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் தெரிய‌வில்லை ச‌கோ..

    பதிலளிநீக்கு
  30. அட, நிறைய பேரைப் பாத்துட்டீங்க போல!! சரி, அடுத்து அபுதாபி எப்போ? நிறைய தரம் வந்தும் என் வீடு வரமுடியலை; இனி எதாவது சாக்கு சொன்னீங்க இருக்கு.... !!
    :-))))

    பதிலளிநீக்கு
  31. மல்லி நான் இருப்பது கும்பகோணம் சென்னை அல்ல அதனால் தான் நான் அதிராம்பட்டினம் வரதாக இருந்தேன் அல்லது தஞ்சையில் சந்திப்போம் என்று இருந்தோம் இடைவிடாத மழை காரணமாக வர இயலவில்லை அடுத்த முறை அவசியம் சந்திப்போம்.நம் நட்பை அழகாக எழுதியிருக்கீறீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  32. தங்கள் இன்றைய பதிவில் என்னையும் என் குடும்பத்தாரையும்

    ////தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு///
    எனவும்

    ///வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது//// என்று குறிப்பிட்டு...

    எளியோனனான என்னை...
    மிக உயர்ந்த இடத்தில் வைத்து எழுதியுள்ளீர்கள்...

    அந்தளவிற்கு... தங்களைப்போல நான் ஒண்ணும் பெரியாளில்லை சகோதரி...

    நான் சாதரணமானவன்...!
    உங்களைப் போல பெரிய கவிஞரோ... தத்துவவாதியோ... வலைதள புகழ்பெற்றவனோ இல்லை...

    ஓர் சாமானியன்... தன் உடன்பிறவா சகோதரி வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பெரிய விஷயம் இல்லை...

    இருந்தாலும்

    என்னையும்..
    என் குடும்பத்தையும் வலையுலகத்தில் சிறப்பு சேர்த்தமைக்கு

    மிக்க நன்றி...! நன்றி...!

    பதிலளிநீக்கு
  33. அதிராம்பட்டினம் வரை வந்தவர்கள்...கடற்கரை தெருவில் உள்ள எங்க வீட்டு போகாமல் வந்தது வருந்ததக்கது....முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி தெருவில் உள்ள என் தங்கச்சி வீட்டுக்காவது அடுத்த தடவை குடும்பத்துடன் போங்கள்

    பதிலளிநீக்கு
  34. அன்பு சகோதரிக்கு, சலாம்.

    தேனீ, வைகை ஒருங்குறி எழுத்துருவையும், தானியங்கி எழுத்துவையும் உருவாக்கி கணினி தமிழ் வளர்ச்சியில் ஒரு மவுனப்புரட்சி ஏற்படுத்திய தன்னலமில்லா மனிதர் அதிரை உமர்தம்பி அவர்களை ஒரு சிலர் மற்றுமே அறிந்திருந்தார்கள். மேலும் பலருக்கு அவரின் கணினி சேவையை எடுத்துச் சென்று, அரசின் கவணத்திற்கு சரியான வழியில் கொண்டு சென்றதோடு அல்லாமல், தன் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா என்பதை அடிக்கடி follow up செய்து செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் அங்கீகாரம் கிடைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளை செய்தது எனக்கும், உமர்தம்பி அவர்களின் குடும்பத்துக்கும் தெரியவந்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு அன்பு சகோதரர் காஞ்சி முரளி அவர்களின் பங்கு மிக முக்கியம் என்பதை நினைவு படுத்துகிறேன்.

    பொழுதுபோக்கு தவிர எழுத்துக்களால் எவ்வளவோ நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதற்கு அதிரை உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அன்புடன் மலிக்காவின் எழுத்து சேவை ஓர் உதாரணம்.

    பதிலளிநீக்கு
  35. சாருஸ்ரீராஜ் சொன்னது…
    மல்லி நான் இருப்பது கும்பகோணம் சென்னை அல்ல அதனால் தான் நான் அதிராம்பட்டினம் வரதாக இருந்தேன் அல்லது தஞ்சையில் சந்திப்போம் என்று இருந்தோம் இடைவிடாத மழை காரணமாக வர இயலவில்லை அடுத்த முறை அவசியம் சந்திப்போம்.நம் நட்பை அழகாக எழுதியிருக்கீறீர்கள் வாழ்த்துக்கள்.//

    சாரிக்கா. சுஜிதான் சென்னை மாற்றி எழுதிவிட்டேன்.தற்போது மாற்றிவிட்டேன்

    காணமுடியவில்லையேன்னு வருத்தம்தான் மிகுதியாய் இருந்தது.
    ஆமல்ல சரியான மழைவேறு போனதே 15 அதில் 4 நாட்கள் வெளியில் எங்கும் போகவழியில்லை
    நிச்சயமாக அடுதமுறை கண்டிப்பாக சந்திப்போம் இறைவனின் உதவியுடன். சாரூக்கா...

    பதிலளிநீக்கு
  36. அஹ‌ம‌து இர்ஷாத் கூறியது...
    அழ‌கா விவ‌ரித்து இருக்கீங்க‌ ம‌லிக்கா..நீங்க‌ள் தேனீ உம‌ர்த‌ம்பி அவ‌ர்க‌ள் வீட்டுக்கு சென்ற‌தாக‌ ச‌கோ.தாஜீதீன் என்னிட‌ம் சொன்னார்..நானும் அதே நேர‌த்தில் ஊரில்தான் இருந்தேன் ச‌ந்திக்க‌ இய‌லாம‌ல் போய்விட்ட‌து..அந்த‌ தேனீ உம‌ர்த‌ம்பி வீட்டுக்கு எதிர்புற‌த்தில் வ‌ல‌து ப‌க்க‌த்தில் நான்காவ‌து வீடுதான் எங்க‌ வீடு நீங்க‌ள் வ‌ருவ‌துப் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் தெரிய‌வில்லை ச‌கோ..//

    அப்படியா. நீங்க அங்கிருப்பது எனக்கும் தெரியாதே தெரிந்திருந்தால் தகவல் தந்திருப்பேன். இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மறுமுறை லீவில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  37. ஹுஸைனம்மா கூறியது...
    அட, நிறைய பேரைப் பாத்துட்டீங்க போல!! சரி, அடுத்து அபுதாபி எப்போ? நிறைய தரம் வந்தும் என் வீடு வரமுடியலை; இனி எதாவது சாக்கு சொன்னீங்க இருக்கு.... !!
    :-))))//

    இனி சாக்கு சொல்லுவோமா. சாக்கோட வந்துருவோமுல்ல

    வரும் லீவில் ஒருநாள் அபுதாபி வருவோம். அப்ப வந்துட்டாப்போகுது வருவதற்கு முன் தகவல் சொல்லிடுவேன்.
    மெனுவெல்லாம் எதுவும் தரமாட்டேன்
    விருந்து போடும்போது கொஞ்சம் வச்சிராதீங்க அப்படின்னும் சொல்லமாட்டேன் ஓகேவா..

    பதிலளிநீக்கு
  38. காஞ்சி முரளி கூறியது...
    தங்கள் இன்றைய பதிவில் என்னையும் என் குடும்பத்தாரையும்

    ////தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு///
    எனவும்

    ///வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது//// என்று குறிப்பிட்டு...

    எளியோனனான என்னை...
    மிக உயர்ந்த இடத்தில் வைத்து எழுதியுள்ளீர்கள்... //


    அந்தளவிற்கு... தங்களைப்போல நான் ஒண்ணும் பெரியாளில்லை சகோதரி...//

    எளியோனா? யாரூ நீங்களா? ஏன் சகோ. ஆமால்ல உங்க முன்னால நாங்க எளி[சிறி]யவர்கள்தான்


    //நான் சாதரணமானவன்...!
    உங்களைப் போல பெரிய கவிஞரோ... தத்துவவாதியோ... வலைதள புகழ்பெற்றவனோ இல்லை... //

    இப்படி சொல்லியே உசுப்பேத்தி உசுப்பேதி ரணகளம்மாக்கிவிடனும்.
    சாதரணமானவன் அப்படின்னு நீங்க சொல்லிகிட்டா நாங்க நம்பனும்

    //ஓர் சாமானியன்... தன் உடன்பிறவா சகோதரி வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பெரிய விஷயம் இல்லை... //

    அனைவரும் சாமானியர்கள்தான் சகோ அந்த சாமானியருக்கும் நல்லமனம் வேண்டுமல்லவா. சாதரண உடன்பிறவா சகோதரியின் இல்லதிற்கு வந்துபோகவும்.

    //இருந்தாலும்

    என்னையும்..
    என் குடும்பத்தையும் வலையுலகத்தில் சிறப்பு சேர்த்தமைக்கு

    மிக்க நன்றி...! நன்றி...!//

    நன்றியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றென்றும் உங்கள் குடுமபத்தின் அன்பு ஒன்றே போதும் எப்போதும்.

    நன்றிய நாங்க சொல்லிகிறோம் தாங்களுக்கும் தாங்களின் குடும்பதிற்க்கும்.. மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  39. முக்கியமான செய்தியை இங்கு அனைவருக்கும் சொல்வதற்கு இது தான் சரியான தருணம்.

    அதிரை உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைப்பதற்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைத்ததார்கள், சகோதரி அன்புடன் மலிக்காவின் முயற்சியும், இதற்கு சகோதரர் காஞ்சி முரளி அவர்களின் உதவியும் சரியான முறையில் அரசின் கவனத்தை ஈர்த்தது என்பதை நானும் என் நட்பு வட்டாரத்தின் மூலமும் அறிந்த்துக்கொண்டோம்.

    அன்புடன் மலிக்கா என்னும் நபர் போலி, அதிரை உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வந்தவர்கள், அன்பு சகோதரி மலிக்கா அவர்களின் உமர்தம்பி குடும்பத்தை நேரில் சந்தித்தது என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான நிகழ்வாகவே கருதுகிறேன்.

    சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் எனக்கு எழுதி மடலில் சொன்ன அதே வார்த்தையை இங்கு செல்லுவது சரி என்று கருதுகிறேன்.

    //உண்மைகள் நிஜமுகத்துடன் வரும்... அம்முகங்கள் பூச்சுக்கள் (makeup) ஏதுமில்லாமல் இயல்பாய்... கருப்பாகத்தான் இருக்கும்...

    பொய்கள்... போலி முகத்துடன்... முகத்தில் சாயங்கள் இட்டு... அழகை... வசீகரமாய்... வெள்ளை நிறத்துடன் பளிச்சென்றிருக்கும்... //

    http://thaj77deen.blogspot.com/2010/06/blog-post.html

    அன்பு சகோதரி நீங்கள் நிஜம், உங்கள் அனைவரின் முயற்சி உண்மை என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

    என் சார்பாகவும், உமர்தம்பி அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் அன்பு சகோதரிக்கும், சகோதரர் காஞ்சி முரளி அவர்களுக்கும், உறுதுனையாக இருந்த அனைவருக்கும் மீண்டும் நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

    அன்புடன் சகோதரன்

    தாஜுதீன்

    பதிலளிநீக்கு
  40. Yasir கூறியது...
    அதிராம்பட்டினம் வரை வந்தவர்கள்...கடற்கரை தெருவில் உள்ள எங்க வீட்டு போகாமல் வந்தது வருந்ததக்கது....முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி தெருவில் உள்ள என் தங்கச்சி வீட்டுக்காவது அடுத்த தடவை குடும்பத்துடன் போங்கள்.//

    கடற்கரை தெருவென தெரியாதே காக்கா..

    அதுசரி முகைதீன் பள்ளி தெருவில் தங்கை வீடு எங்கிருக்கு காக்கா..

    பதிலளிநீக்கு
  41. எஸ்.கே கூறியது...
    நெகிழ்ச்சியான பதிவு!//

    மிக்க நன்றி எஸ்.கே.

    பதிலளிநீக்கு
  42. யக்கா..!!ஊர் போன குறுகிய காலத்திலும் வலை தொடர்புகள் , போன் தொடர்புகள்...அசத்திட்டேள் ..!! நட்பூக்கள் தொடரட்டும் :-)

    டெரர் சென்னையா..? மீதி பாதியை அது சொல்லவே இல்லையே..!! அவ்வ்வ்வ்..:-))

    பதிலளிநீக்கு
  43. தாஜ்தீன் சொன்னது...

    ///பொழுதுபோக்கு தவிர எழுத்துக்களால் எவ்வளவோ நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதற்கு அதிரை உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அன்புடன் மலிக்காவின் எழுத்து சேவை ஓர் உதாரணம்////

    இது முற்றிலும் உண்மை...!
    இதில் மாறுபாடோ...வேறுபாடோ... யாருக்கும் இருக்காது...! என நினைக்கிறேன்...

    ஆனா... ஒரு முக்கியமான செய்தி... நினவில்வாழும் உமர்தம்பி அவங்க ஊரில்ல....அதான்...!
    மலிக்கா தான் பிறந்த மண்ணுக்கு... மண்ணில் பிறந்த மனிதருக்கு... போராடியதுதான் highlight...!

    பதிலளிநீக்கு
  44. பார்த்தீர்களா மல்லி.இந்தியா வந்து இந்த அக்காவை சுத்தமாக மறந்து விட்டீர்களே??:-(

    பதிலளிநீக்கு
  45. // காஞ்சி முரளி கூறியது...

    ஒரு முக்கியமான செய்தி... நினவில்வாழும் உமர்தம்பி அவங்க ஊரில்ல....அதான்...!
    மலிக்கா தான் பிறந்த மண்ணுக்கு... மண்ணில் பிறந்த மனிதருக்கு... போராடியதுதான் highlight...!//

    சரியாக சொன்னீர்கள். பிறந்த மண்ணின் மைந்தருக்காக சகோதரரி மலிக்கா போராடியது நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது.

    பதிலளிநீக்கு
  46. தாஜுதீன் கூறியது...
    அன்பு சகோதரிக்கு, சலாம்.

    தேனீ, வைகை ஒருங்குறி எழுத்துருவையும், தானியங்கி எழுத்துவையும் உருவாக்கி கணினி தமிழ் வளர்ச்சியில் ஒரு மவுனப்புரட்சி ஏற்படுத்திய தன்னலமில்லா மனிதர் அதிரை உமர்தம்பி அவர்களை ஒரு சிலர் மற்றுமே அறிந்திருந்தார்கள். மேலும் பலருக்கு அவரின் கணினி சேவையை எடுத்துச் சென்று, அரசின் கவணத்திற்கு சரியான வழியில் கொண்டு சென்றதோடு அல்லாமல், தன் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா என்பதை அடிக்கடி follow up செய்து செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் அங்கீகாரம் கிடைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளை செய்தது எனக்கும், உமர்தம்பி அவர்களின் குடும்பத்துக்கும் தெரியவந்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு அன்பு சகோதரர் காஞ்சி முரளி அவர்களின் பங்கு மிக முக்கியம் என்பதை நினைவு படுத்துகிறேன்.

    பொழுதுபோக்கு தவிர எழுத்துக்களால் எவ்வளவோ நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதற்கு அதிரை உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அன்புடன் மலிக்காவின் எழுத்து சேவை ஓர் உதாரணம்.//

    அன்புச் சகோதரருக்கு. தமிழ் எழுதுக்கள் கணினியில் கொண்டுவந்ததால் தான் என்னைப்போன்றோர்கள்கூட இணையத்தில் வலம் வரமுடிகிறது அதை இவ்விணயத்திற்க்குள் எவ்வித ஆதாயமும் எதிர்பார்க்கமல் கொண்டுவந்த ஓர் ஆத்மாக்காக என்னாலான சிறு உதவிமட்டுதான் இச்செயல்.அவர்கள் பொதுநலத்துடன் செய்த மிகப்பெருய சேவைக்கு முன் இது ஒன்றும் பெரிதில்லை. எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.

    மிக்க நன்றி சகோதரர் அவர்களே!

    சகோ காஞ்சி முரளி அவர்களுக்கு மீண்டும் நன்றிகள் சொல்லிகொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  47. தாஜுதீன் கூறியது...
    முக்கியமான செய்தியை இங்கு அனைவருக்கும் சொல்வதற்கு இது தான் சரியான தருணம்.


    //அன்புடன் மலிக்கா என்னும் நபர் போலி, அதிரை உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வந்தவர்கள், அன்பு சகோதரி மலிக்கா அவர்களின் உமர்தம்பி குடும்பத்தை நேரில் சந்தித்தது என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான நிகழ்வாகவே கருதுகிறேன்.//

    நான் முயற்ச்சிதேனா இலையா என்பதை இறைவன் அறிவான் இன்னும் பல நல்ல உள்ளங்கள் அறியும் .
    நான் போலிதான். இதை நான் செய்யவில்லையே! இறைவன் என்மூலம் இதைசெய்யவேண்டுமென விரும்பி அதை நிறைவேற்றியிருப்பதால் நான் போலிதான் அவந்தானே உண்மையாளன்.

    நல்லவைகள் செய்யும்பொது ஊறரிய அல்லது பிறரிய வேண்டுமென்பதற்கா என்றிருப்பதைவிட நம்மைப்படைத்த இறைவன் அறிவான் அவனறிந்தால் மட்டுமே நன்மை ஈருலகிலும் என நினைத்ததால் அதுவேபோதும் அதைதான் நாங்களும் நினைத்தோம். பிறரின் பாராட்டுதல்களைவிட இறைவனின் பாராட்டுகளையே மிகவும் விரும்புகிறேன். அவன் என்னையறிந்தால் அதுவேபாக்கியம்.

    //சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் எனக்கு எழுதி மடலில் சொன்ன அதே வார்த்தையை இங்கு செல்லுவது சரி என்று கருதுகிறேன்.

    //உண்மைகள் நிஜமுகத்துடன் வரும்... அம்முகங்கள் பூச்சுக்கள் (makeup) ஏதுமில்லாமல் இயல்பாய்... கருப்பாகத்தான் இருக்கும்...

    பொய்கள்... போலி முகத்துடன்... முகத்தில் சாயங்கள் இட்டு... அழகை... வசீகரமாய்... வெள்ளை நிறத்துடன் பளிச்சென்றிருக்கும்... //

    http://thaj77deen.blogspot.com/2010/06/blog-post.html

    அன்பு சகோதரி நீங்கள் நிஜம், உங்கள் அனைவரின் முயற்சி உண்மை என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்கிறேன்.//

    நிச்சயமாக உண்மை ஒருபோதும் மறையாது மறைக்கவும் முடியாது. எப்பொழுதேனும் வெளியுலகம் அறிந்தேதீரும் இதில் சந்தேகமேயில்லை சகோதரர் அவர்களே! ஆதலால் நிஜம் நிஜமாகும் நிழலாகாது.

    //என் சார்பாகவும், உமர்தம்பி அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் அன்பு சகோதரிக்கும், சகோதரர் காஞ்சி முரளி அவர்களுக்கும், உறுதுனையாக இருந்த அனைவருக்கும் மீண்டும் நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

    அன்புடன் சகோதரன்

    தாஜுதீன்.//

    அவர்களின் குடும்பதை கண்டு பேசி வந்தது எங்களுக்கும் மிகுந்த மனதிருப்தியே! எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

    பதிலளிநீக்கு
  48. ஜெய்லானி கூறியது...
    யக்கா..!!ஊர் போன குறுகிய காலத்திலும் வலை தொடர்புகள் , போன் தொடர்புகள்...அசத்திட்டேள் ..!! நட்பூக்கள் தொடரட்டும் :-)

    டெரர் சென்னையா..? மீதி பாதியை அது சொல்லவே இல்லையே..!! அவ்வ்வ்வ்..:-))//

    ஆமா அண்ணாத்தே! குறிய காலமென்பதால் நிறைய விடுபடுவிட்டது அடுத்தமுறை அலசிடவேண்டியதுதான்..

    அதுசரி டெரர் சென்னையின்னு தெரியாதா என்ன போங்க. சொல்லவேயில்லை அண்ணாத்தக்கிட்டகூட இன்னைக்கே கேக்குறேன் ஏன்பான்னு..

    பதிலளிநீக்கு
  49. காஞ்சி முரளி கூறியது...
    //ஆனா... ஒரு முக்கியமான செய்தி... நினவில்வாழும் உமர்தம்பி அவங்க ஊரில்ல....அதான்...!
    மலிக்கா தான் பிறந்த மண்ணுக்கு... மண்ணில் பிறந்த மனிதருக்கு... போராடியதுதான் highlight...!//

    ஹலோ அந்த ஹைலட்டிற்கே கோடுபோட்டதே நீங்கதான்னு நாங்க மறுக்கமுடியாது. மறைக்கவும் முடியாது சகோ..உண்மையை உண்மையாச்சொல்லோனும் அதுதான் நியாயமும் கூட..

    பதிலளிநீக்கு
  50. ஸாதிகா கூறியது...
    பார்த்தீர்களா மல்லி.இந்தியா வந்து இந்த அக்காவை சுத்தமாக மறந்து விட்டீர்களே??:-(//

    என்னக்கா இப்படி கேட்டுபுட்டீங்க. மறப்பேனா மறக்கூடிய ஆளா.காலமும் நேரமும் மிக குறைவுக்காக ஆனாலும் தொலைபேசி உங்ககிட்டவாங்கிருந்திருக்கனும் இங்கிருந்து கிளம்பும்முன்னே. அதை செய்யாதுபோனதுதான் பெரிய தவறு இல்லையின்னா பேசியாவதுயிருப்பேன். ரொம்ப ரொம்ப சாரிக்கா.
    வரும் லீவில் கட்டாயம் இந்தியா வருவேன் அப்போது நிச்சயம் சந்திப்போம் அதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டுதான் வருவேன் ஓகேவா.. இன்ஷா அல்லாஹ்..

    பதிலளிநீக்கு
  51. கவிதை வாசிக்க வந்த இடத்தில் பாசமும் நேசமுமான இந்த குழுமம் கண்டு மனம் மகிழ்கிறது. தவிர, இங்கே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்களாகத் தெரிவதால் நான் மட்டும் ஜன்னல் வழி உற்று நோக்குபவன் போல நெருடலாய் உணர்கிறேன். எனவே, நானும் என்னை அறிமுகப்படுத்திகொள்கிறேன். ஊர்: அதிரைப்பட்டினம் / வீடு: காலேஜ் ஹாஸ்டலுக்கு எதிரே. வேலை: ஷார்ஜாவில் / வீடு: அஜ்மானில்.

    பதிலளிநீக்கு
  52. தாஜுதீன் கூறியது...
    சரியாக சொன்னீர்கள். பிறந்த மண்ணின் மைந்தருக்காக சகோதரரி மலிக்கா போராடியது நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது
    //

    இது ஓர் கூட்டுமுயற்ச்சி.இறைவன் நாடினான் நல்லது நடந்தது..

    நன்றி சகோதரர் அவர்களே..

    பதிலளிநீக்கு
  53. sabeer கூறியது...
    கவிதை வாசிக்க வந்த இடத்தில் பாசமும் நேசமுமான இந்த குழுமம் கண்டு மனம் மகிழ்கிறது. தவிர, இங்கே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்களாகத் தெரிவதால் நான் மட்டும் ஜன்னல் வழி உற்று நோக்குபவன் போல நெருடலாய் உணர்கிறேன். எனவே, நானும் என்னை அறிமுகப்படுத்திகொள்கிறேன். ஊர்: அதிரைப்பட்டினம் / வீடு: காலேஜ் ஹாஸ்டலுக்கு எதிரே. வேலை: ஷார்ஜாவில் / வீடு: அஜ்மானில்.//

    அதுசரி நீங்களும் அதிரையா. வாங்க வாங்க. சார்ஜாவில் எங்கு வேலைபார்க்குறீங்க.சகோ..

    பதிலளிநீக்கு
  54. நல்ல பகிர்வு மலிக்கா.. சீக்கிரம் புத்தகம் வெளிவர வாழ்த்துக்கள்.. இன்ஷா அல்லா..

    பதிலளிநீக்கு
  55. நல்ல பதிவு அக்கா.. தங்களுக்கு வெற்றி கிட்ட எனது வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  56. ///வெகுவிரைவில் அதுவும் வந்துவிடும்///

    எப்பங்க..?

    பதிலளிநீக்கு
  57. sabeer கூறியது...
    arabian jerusalem eqpt trdg co. GECO signal

    //

    மிக்க நன்றி சகோதரர் அவர்களே..

    பதிலளிநீக்கு
  58. தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
    நல்ல பகிர்வு மலிக்கா.. சீக்கிரம் புத்தகம் வெளிவர வாழ்த்துக்கள்.. இன்ஷா அல்லா..//

    வாத்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி தேனக்கா..

    பதிலளிநீக்கு
  59. வேண்டாம் வரதட்சணை கூறியது...
    உங்கள் ஒவ்வொரு கட்டுரைகளும் அருமை.//

    வாங்க. நல்ல தலைப்பு வச்சிருக்கீங்க.
    வருகைக்கும் கருத்துக்ம் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  60. காஞ்சி முரளி கூறியது...
    ///வெகுவிரைவில் அதுவும் வந்துவிடும்///

    எப்பங்க..?//

    எல்லாம் முடிந்த நிலையில் உள்ளது கூடிய விரைவில் வெளியாகும் சகோ.

    பதிலளிநீக்கு
  61. உங்கள் கட்டுரை பல நல்ல செய்திகளை மக்களுக்கு தருகின்றது .
    மனிதன் நல்லவன் மக்களில் சிலர் பிரிவினை படுத்துகின்றனர் .உங்களுக்கு உதவி செய்த பலர் மாற்று மார்கத்தினை சார்ந்த நல்ல உள்ளம் கொண்டவர்கள் . எல்லோரும் இப்படி இருந்தால் உலகம் அமைதி பூ பூங்கவாக மாறிவிடும் .
    இறவன் தந்த அறிவினை பயன்படுத்தாமல் இருந்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் .
    மாசால்லாஹ் தாங்கள் உங்களுக்கு இறைவன் தந்த அறிவினை அழகாக பயன்படுத்தி வருகின்றீர்கள் .
    அதற்கு எனது வாழ்த்துகள் . ஆனால் அதனை மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ள வழி விடுங்கள் .
    இறைவன் தந்த அறிவு எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் .அது இறைவனுக்கே சொந்தம் .
    JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

    பதிலளிநீக்கு
  62. மாசால்லாஹ் தாங்கள் உங்களுக்கு இறைவன் தந்த அறிவினை அழகாக பயன்படுத்தி வருகின்றீர்கள் .
    அதற்கு எனது வாழ்த்துகள் .//

    ரொம்ப ரொம்ப சந்தோஷம். தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும்.

    ஒரே ஒரு சின்ன சந்தேகம்..

    //ஆனால் அதனை மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ள வழி விடுங்கள் .
    இறைவன் தந்த அறிவு எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் .அது இறைவனுக்கே சொந்தம் //

    இதுமட்டும் இதன் அர்த்தம்
    எனக்கு புரியவில்லை. அதான் கேட்டேன்..

    பதிலளிநீக்கு
  63. புரிந்தும் புரியாமல் இருபவர்களுக்கு சொன்னாலும் புரியவில்லை என்பர்.இருப்பினும் சொல்வது எனது கடமை. ஒரு சிலர் கவிதை அல்லது கட்டுரை எழுதி அதனை தன் வலைபூவில்தான் படிக்க வேண்டும் மற்றவர் பயன்படுத்த கூடாது (even with source)என்பர் அதற்கு அவர்கள் புத்தகம் போட்டு விலை போட்டு விற்கலாம் . மாற்று கருத்து உங்களுக்காக எழுதப்படதல்ல.

    இறைவன் தந்த அறிவு எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் .
    இறைவன் அல்குரானை மக்களுக்கு வழிகாட்டவே இறக்கினான் தனக்காக அல்ல .

    பதிலளிநீக்கு
  64. ~~~~புரிந்தும் புரியாமல் இருபவர்களுக்கு சொன்னாலும் புரியவில்லை என்பர்.இருப்பினும் சொல்வது எனது கடமை. ஒரு சிலர் கவிதை அல்லது கட்டுரை எழுதி அதனை தன் வலைபூவில்தான் படிக்க வேண்டும் மற்றவர் பயன்படுத்த கூடாது (even with source)என்பர் அதற்கு அவர்கள் புத்தகம் போட்டு விலை போட்டு விற்கலாம் . மாற்று கருத்து உங்களுக்காக எழுதப்படதல்ல.~~~

    i can not understand those lines

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது