எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
அண்ட சராசரத்தின் அதிபதியே!
அருளும் அன்பும் நிறைந்தவனே!
ஆதம் நபியை மண்ணால் படைத்து
அவரிலிருந்து பல சந்ததிகளை
அற்புதமாக மனிதரில் விதைத்து
அகிலத்தை வலம் வரவைத்த
ஆற்றல் மிகுந்த மறையோனே!
வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறு காலக் கட்டங்களில்
வெவ்வேறு நபிகளை உலகுக்கனுப்பி
விபரங்கள் விளக்க மக்களுக்கு
வாய்ப்பளித்த வல்லவனே !
தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராஹீம் [அலை]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை
அனைவருக்கும் அறியத்தந்து
மனிதர்களின் பொறுமைக்கும்
மனஉறுதியான இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத் தந்து
மகத்துவத்தை ஏற்படுத்திய
மாபெரும் அருளாளளனே!
இப்ராஹீம் நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும் நாள்வரைக்கும்
இம்மக்கள் மறந்திடாதவன்னம்
இத்தியாகத் திருநாளாம்
ஹஜ்ஜுப் பெருநாளை
ஹிதாயத்தோடு தந்தத் தூயவனே!
இறையில்லமிருக்கு மக்காவிற்கு
இறுதிக் கடமையை நிறைவேற்ற
இனிதே சென்றுள்ள மக்களங்கே
இன்னலை நீக்க கண்ணீர் மல்க
இருகரமேந்திய இறையச்சதுடன்
இறைஞ்சி வேண்டி கேட்போர்க்கு
இன்முகம் நோக்கிப் பார்ப்பவனே!
இன்பத்தை வாரிக் கொடுப்பவனே!
எங்களுக்கும் இதுபோன்றொரு
வாய்ப்பளிக்கச் சொல்லி
எங்களின் கல்பும் இங்குருக
விரும்பி விம்மி விசும்பியழுது
வேண்டி நிற்கிறோம் தினம் தொழுது
வேண்டியதை நிறைவேற்றி
எங்கள் விருப்பங்களை கபுளாக்கி
வசந்தத்தை தந்து வாழ்வளித்து
எங்கள் வாட்டங்கள் போக்க அருள்புரிவாயாக
எங்கள் நாட்டங்கள் நிறைவேற வகைசெய்வாயாக.
எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
உன்னை மட்டும் நாடுகிறோம்
உன்னிடமே உதவி தேடுகிறோம்...
ஹஜ் செய்வதோடு மட்டும் நம் கடமை முடிவதில்லை ஹஜ்ஜின் காரியங்களை முடித்து நாயனின் அருள் கிடைத்து நாடு திரும்பிவந்த பின், அதன்படி நடக்க வேண்டும். நாம் செய்த ஹஜ்ஜின் கடமை இறுதிவரை பலன் தருவதுபோல் நடக்கவேண்டும். பாவங்களைபோக்கிவிட்டு வந்து நல்லதை செய்து நன்மையின் பக்கம் நன்மை முதன்மைப்படுதல் வேண்டும். இதுவே நாம் ஹஜ் செய்ததிற்கான நற்பலனைத்தரும்..
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இப்பாக்கியத்தை தந்து ஈருலகிலும் நமக்கு நல்லருள் புரிவானாக .. ஆமீன்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
பெருநாள் வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபெருநாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நண்பர்களின் நண்பர்களுக்கும், மற்றும் தாயகத்தில் உள்ள உங்களின் பெற்றோருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் உறவினருக்கும் எல்லோருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை அருமை.
ஈத் முபாரக் மலிக்கா..
பதிலளிநீக்குஈதுல் ஃபிதா பெருநாள் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குதியாகப்பெருநாள் வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குதூய இப்ராஹீம், இஸ்மாயில் மனம் கொண்டு நாடுவோம் இறைவனின் பாதத்தை
விஜய்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிலளிநீக்குஅனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇறைவனின் அருள் உன் குடும்பதிற்கு அளவிள்ளாமல் கிடக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.
நீண்ட ஆயுளோடு நற்போதனைகள் பிறருகளித்து வாழ்வாய் மகளே.
என்றும் உன் பாசமுள்ள அன்னை
சாரதா விஜயன்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபெருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி!
அஸ்ஸலாமு அலைக்கும்!!
பதிலளிநீக்குமல்லிகாக்கா உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும், இதை வாசிக்கும் எல்லோருக்கும் எங்களின் மனம் கனிந்த சலாமத்தான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!
உங்கள் எல்லோருடைய நாட்டமும் வேண்டுதலும் பிரார்த்தனையும் நிறைவேறி, இன்ஷா அல்லாஹ், அடுத்த வருட ஹஜ்ஜில் தாங்களும்
தங்கள் குடும்பத்தாரும் இணைந்து ஹஜ்ஜை நிறைவேற்ற (ஆமீன்!!),
துஆ இறைஞ்சிய வண்ணம், அன்புடன் இங்கே நாங்கள்....
மலிக்கா உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புத் தோழி மலிக்கா! உங்களுக்கும், மஃரூஃப் மற்றும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள். கவிதை எப்போதும்போல் அருமையா இருக்கு தோழி!
பதிலளிநீக்குமல்லி உங்களுக்கு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅன்புடன் > ஜெய்லானி <
பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குபெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html
பதிலளிநீக்கு~~~~~ உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் இறைவனின் சாதியும்....~~~~~
பதிலளிநீக்குமேடம், இறைவன் சாதியற்றவன், பாகுபாடற்றவன் என எல்லா மத வேதங்கள் சொல்வதாக பெரியோர் சொல்வர்.
தங்கள் இந்த வரிகளான ~~~~இறைவனின் சாதியும்~~~~ புரியவில்லை மேடம்
சேந்தனமுதன் கூறியது...
பதிலளிநீக்கு~~~~~ உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் இறைவனின் சாதியும்....~~~~~
மேடம், இறைவன் சாதியற்றவன், பாகுபாடற்றவன் என எல்லா மத வேதங்கள் சொல்வதாக பெரியோர் சொல்வர்.
தங்கள் இந்த வரிகளான ~~~~இறைவனின் சாதியும்~~~~ புரியவில்லை மேடம்..//
உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் இறைவனின் சாதியும் அருளும் அளவிள்ளாமல்
மன்னிக்கவும் மன்னிகவும் சார். அது எழுத்துபிழையாகிவிட்டது அதாவது ஓர் எழுத்துவிடுபட்டுவிட்டது அதனால்தான் சாந்தி என்பது சாதி என்று வந்துவிட்டது. இறைவன் எவ்வித தேவையுமற்றவன் சாதியுமற்றவன்.
குற்றம் என் எழுத்துபிழையில். இறைவனும் என்னை மன்னிக்கவேண்டும்.
அதை நீக்கிவிடுகிறேன்..
அன்புடன் மலிக்கா கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக..
அன்புடன் மலிக்கா கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக..