வேலியிலேறி ஓடி ஒளியும்
ஓணானில் வேகத்திலோ!
வெள்ளைத்தோல்மீது
கரும்புள்ளி படிந்த கவலையிலோ!
காற்றைக்கிழிக்கொண்டு கொண்டு செல்லும்
காரில் கிலிபிடித்து அமர்ந்திருக்கையிலோ!
நடுஜாம இரவில் கொல்லைப்புரத்து
கருஇருட்டில் கண்ணடிக்கும் நிலவிலோ!
உலைகொத்தித்து ஒருதுளி தெரித்து
மேனி சுடும் சூட்டிலோ!
மூன்றாம்விதியை முழுமூச்சோடு
கையாண்டு பறக்கும் விமானத்திலோ!
பூவில் வண்டமர்ந்து தேன்குடித்து
ரிங்காரமிட்டு பூரித்துச் செல்லும் அழகிலோ
மழையை புணர்ந்து
வயலிடுக்கில் வளரும் புற்க்களின் வேரிலோ!
அப்பாவிகள் பாவிகளால்
சீரழிக்கப்படும் சிதைவிலோ!
முன்பின் அறியாத மனம்
முகவரி தொலைத்தழும் அழுகையிலோ!
ஒளிந்துகிடக்கும் எனது
எண்ணக்கரு முட்டைகள்
முண்டியடித்துக்கொண்டு
உடைந்து வெளியேறத் துடிக்கிறது
நான் முன்னே நீ முன்னே என்று
கவிகொஞ்சு பொரிக்க...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
பதிலளிநீக்குதங்களைப் போன்ற சிறந்த கவிஞர்களுக்கு
எந்த நிகழ்வும் கவிக்கான கருதானே
தலைப்பும் அதற்கான விளக்கமாய் அமைந்த கவிதையும்
மிக மிக அருமை.வாழ்த்துக்கள்
vazthukkal
பதிலளிநீக்குமுண்டியடித்துக்கொண்டு
பதிலளிநீக்குஉடைந்து வெளியேறத் துடிக்கிறது
//
அதான் கண்கூடாக காண்கிறோமே மல்லி தங்களின் கவிதைகளை வரம் வரம் வாங்கிவந்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.
வலிகளின் வழிகளில் பயணிப்பவனுக்குத்தான் படிக்கட்டின் ஆளமும்,நீளமும் தெரியும் என்பது உங்கள் கவிதையில் தெரிகிறது வாழ்த்துகிறேன் தொடரட்டும் பணி...
பதிலளிநீக்கு