நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்புள்ள தமிழ்நாடே...

இரண்டு வருடங்கள் கழித்து
இளைப்பாற வருகிறேன்
இனிப்பாய் இளநீர் தந்து
இன்பமுறச் செய்வாயென

தங்கத்தமிழ்நாடே உனைக்கான
தகதகக்கும் வெயிலை
துடச்சி எரிஞ்சிவிட்டு
தவிப்பாய் ஓடிவருகிறேன்

தாய் தங்கைகண்டு எனைத்
துரத்தி விளையாண்ட
தோழிகளைக் கண்டு
சுகத்தையும் சோகத்தையும்
பகிர்ந்துவிட்டு

மீண்டும்
பாலைவனம் வந்துசேரவேண்டும்
பட்டினியில்லா சோறுதிங்கவும்
பந்தங்கள் பாசமாய் எங்களோடு
ஒட்டி உறவாடவும்

மீண்டும்
ஓடிவரவேண்டும்
ஓயாது உழைக்கும் என்னவனுக்கு
ஒத்தாசையாக இருக்கவேண்டும்

ஆகையால்

அன்புள்ள தமிழ்நாடே-என்னை
ஆசையாய் வரவேற்று
அன்போடு உபசரித்து
இன்முகத்தோடு திரும்ப அனுப்பிவை

ஏனெனில் நான் என்றுமே
என் தாயகத்தின் திருமகளே....
நீரோடையில் நீந்த மீண்டும் 15 நாள் கழித்து வருவேன் அதுவரை மறந்துவிடாதீங்கப்பா நீங்க மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். மீண்டும் வருவேன் எழுத்தாய். வரியாய். கவிதையாய். கவிதைகள் அப்பப்ப வந்துகொண்டிருக்கும். கருத்துக்கள் எழுதாமல் போய்விடாதீர்கள். அனைத்துக்கும் திரும்பியதும் பதில் தருவேன்.
அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுவது

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனைநேசி இன்பம் பெறுவாய்.

34 கருத்துகள்:

  1. வாங்க வாங்க.. தமிழகத்தின் சார்பாய் வரவேற்கிறேன் .. விமான நிலையத்திற்கு ஒரு பெரிய கூட்டமே வரப் போகிறது உங்களை வரவேற்க,. கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  2. எழுத்துக்களல் எங்கலை கட்டிப் போட்டும் சகோதரியை எப்படி மறொப்போம்.நீரோடையில் மீண்டும் சந்திக்க காத்து இஉக்கோம்.(காஞ்சி முரளி பாய் நான் தான் 1st)

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்க‌ள்...ப‌ய‌ண‌ம் ந‌ல்ல‌ ப‌டியாக‌ அமைய‌ட்டும்....

    பதிலளிநீக்கு
  4. Dear Malika realy your poets good and i am also in Dubai with lot of expectation from tamilnadu.

    ADIRAI ASHRAF

    பதிலளிநீக்கு
  5. தமிழாய்ந்த
    தஞ்சைத் தரணியின்
    தமிழ் மண்ணில் பிறந்து....

    எந்நாடு போனாலும்
    தன்நாடு மறவாமல்....

    பாலைவனத்தில்
    பைந்தமிழ்க் கவிதை நீரோடையால்
    புகழ் பெற்று...

    தாய்மண்ணின் தாலாட்டில்
    தந்தைவானத்தில் இளைப்பாற...
    தமிழகம் திரும்பும்...

    கவிஞர் மலிக்காவை வரவேற்க
    அன்போடும்... ஆவலோடும்...
    காத்திருக்கிறாள்...
    தமிழன்னை...

    அன்புடன்
    தமிழ்நாட்டான்....

    பதிலளிநீக்கு
  6. ///தாய் தங்கைகண்டு எனைத்
    துரத்தி விளையாண்ட
    தோழிகளைக் கண்டு
    சுகத்தையும் சோகத்தையும்
    பகிர்ந்துவிட்டு////

    இந்த பாராவில் தாயைத் தேடி வரும் குழந்தையின் இன்பமும்... மகிழ்ச்சியும்...

    ////மீண்டும்
    பாலைவனம் வந்துசேரவேண்டும்
    பட்டினியில்லா சோறுதிங்கவும்
    பந்தங்கள் பாசமோடு எங்களோடு
    ஒட்டி உறவாடவும்
    மீண்டும்
    ஓடிவரவேண்டும்
    ஓயாது உழைக்கும் என்னவனுக்கு
    ஒத்தாசையாக இருக்கவேண்டும்////

    இந்த பாராவில் காதலனை பிரியும் காதலியின் வேதனையும்... வலியும்...

    அருமையான கவிதை....



    வாருங்கள்...!


    இப்புவியில்...
    இப்பூகோளத்தில் ...
    பூங்குயில்களும்...
    அழகு மயிலும் உலவிடும்
    பூஞ்சோலை... என் நாடு...

    வாருங்கள்...!
    வாருங்கள்.....!
    கவிஞரே...!

    எந்நாட்டிற்கும் ஈடாகா
    எந்செந்தமிழ் நாட்டிற்கு
    வருகை தரும் தங்களை
    அகமகிழ...
    அன்போடு வரவேற்கிறேன்...

    வருக...! வருக...!
    தாங்கள் வரவு நல்வரவாகுக...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  7. //தாய் தங்கைகண்டு எனைத்
    துரத்தி விளையாண்ட
    தோழிகளைக் கண்டு
    சுகத்தையும் சோகத்தையும்
    பகிர்ந்துவிட்டு//

    மனசுக்குள்ள இருந்த வரிகள் மலிக்கா கவிதையில் அழகு ரசித்தேன்... நாளா??கஷ்ட்டம்தான்...

    //இழைப்பாற//பிழையை பார்க்கவும்...

    பதிலளிநீக்கு
  8. தாய் நாட்டில், தாய் வீட்டில், துள்ளி ஓடும் குழந்தையாய்......
    விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. சாரதாவிஜயன்24 ஜூலை, 2010 அன்று 10:17 PM

    வாடிச்செல்லமே வா.
    உன்னைக்காணத்தான் ஆவலாய் உள்ளேன். என்னைசந்திப்பாயென நினைக்கிறேன் இரு ஜீவன்கள் உனகக்காக காத்திரூக்கு மனதில் நினைத்துக்கொண்டுவா,

    வசதியில்லையே உன்னை வரவேற்க விமான நிலையம்வர. பிராத்திக்கிறேஎன் கடவுளீடம் நல்லபடியாக வா.

    தமிழன்னையாக உன்னை வரவேற்றுகும்
    அன்னை சாரதாவிஜயன்..

    பதிலளிநீக்கு
  10. அன்பு மல்லியே உனைகானக்காத்திருக்கிறோம் சென்னை வருவாய்தானே. இப்பவே என் கணவரிடம் சொல்லிவிட்டேன் சென்னையில் நீ எங்குவந்தாலும் உடனே தெரிவி அங்கே வருகிறேன் வீட்டுக்கு வருவாயா இந்ததோழியைக்கான. ஆவலாய் உள்ளேன்..உனைக்கான

    பதிலளிநீக்கு
  11. விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்க‌ள்...ப‌ய‌ண‌ம் ந‌ல்ல‌ ப‌டியாக‌ அமைய‌ட்டும்...

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்க‌ள்...ப‌ய‌ண‌ம் ந‌ல்ல‌ ப‌டியாக‌ அமைய‌ட்டும்....

    பதிலளிநீக்கு
  14. varuka varuma thamizmakalee unnai varaveeRkiroom.

    kavikal padaiththu engkalai kollaikkonda kavimakalee thamizwaaddin saarpaaka naan varaveerkireen..

    neesamudan sineekithi

    பதிலளிநீக்கு
  15. என்னது பதினஞ்சி நாள் போதுமா.....???

    இருந்தாலும் தாய் மன்னின் வாசம் ,அதை விட்டு பிரிந்திருப்பவர்கே புரியும்...

    பயணங்கள் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. தமிழ்நாட்டுக்குச் சென்று,
    திரும்பி வருக நன்று-
    நலமுடன் நீங்கள் என்று
    வாழ்த்துகின்றேன் இன்று!

    பதிலளிநீக்கு
  17. இனிதாக இந்தியப்பயணம் அமைய வாழ்த்துக்கள்.ஏன் மலிக்கா இத்தனை லேட்?இவ்வளவு குறைந்த நாள் விடுமுறை?யாமிருக்கும் பகுதிக்கு வருவீர்களா?

    பதிலளிநீக்கு
  18. தாய்நாட்டுப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. ரொம்ப சந்தோசமாக உள்ளது.. உங்களுடைய பயணம் இனிய பயணமாக அமையட்டும். என்னுடைய வாழ்த்துகள் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  20. மகிழ்ச்சியுடன் பயணம் போகும் தாங்கள் மகிழ்ச்சியுடன் விடுமுறையை கழிக்க துவா சலாம்.

    ஊரில் உறவுகள் அனைவவறையும் விசாரித்ததாக சொல்லவும் .

    இன்ஸா அல்லாஹ் பயணக்கட்டுரையை கவிதையில் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க வாங்க தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

    பதிலளிநீக்கு
  22. varuka varuka kavithaayini avarkalee varuka ungkalai varaveerpathil makizssiyadaikiroom.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் பயணம் இறைவன் அருளால் நலமாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்...

    பிறந்த உங்களை இனிதாய் உபசரிக்காமலா போய்விடும்...

    அன்புடன் வரவேற்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  25. அங்கும், இங்கும் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதியும், மகிழ்வும் தங்க இறைவனை இறைஞ்சுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  26. எப்படி மறப்பது தாய் மொழியை அது போலத்தான் மலிக்கா உங்கள் கவிதயையும் முடியுமா மறக்க...

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. இரண்டு வருடங்கள் கழித்து
    இளைப்பாற வருகிறேன்
    இனிப்பாய் இளநீர் தந்து
    இன்பமுறச் செய்வாயென

    ஹி..ஹி ..காசு கொடுத்தால் கிடைக்கும்க்கா


    மீண்டும்
    பாலைவனம் வந்துசேரவேண்டும்
    பட்டினியில்லா சோறுதிங்கவும்
    பந்தங்கள் பாசமாய் எங்களோடு
    ஒட்டி உறவாடவும்.

    எங்கக்கா பாலைவனம் ..அதான் எல்லாம் சோலைவனமா ஆகிருச்சே.

    கவிதையே சோகத்திற்காக எழுதப் படுவதுதானே.

    பதிலளிநீக்கு
  28. என்னை அன்போடு வரவேற்ற அத்தனையுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    உங்கள் அன்புமழையில் பாசமாக நனைந்தெழுந்தேன். ஆனந்தகண்ணீர் அதனுள் கரைவது உங்களுக்கு தெரிந்துவிடாமல்.

    நீண்ட நாள்கழித்து பதிலிடுவதற்காக என்னை மன்னிக்கவும் அன்போடு..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது