நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாஞ்சை!!!

வெள்ளைக்காகிதத்தில்
வரைந்து முடிக்கவில்லை
மலரை
வந்தமர்ந்தது வண்ணத்துப்பூச்சி

வாசத்தை காணவில்லை
வண்ணங்களும் இதற்கில்லை
ஆனாலும்
அழகிய மலராக
ஆடி நிற்பதைக்கண்டு
அது வாடிடக்கூடதென்று
தன் பட்டுச்சிறகை
கருத்த மலரின் உடல்மேல்
மெல்லவிரித்து-தன்
வண்ணங்களை உதறியது

பென்சிலின்
கருநிற உதட்டால்
உடல்பெற்ற மலரோ
வண்ணங்கள் பட்டதும்
உயிர்பெற்று எழுந்தது
வனப்போடு நின்ற
மலர்மேனியைக்கண்டதும்
வண்ணத்துப்பூச்சி
மெளனமாய் -தன்
முகம்கொண்டு
வாஞ்சையோடு உரசிச்சென்றது

வண்ணமில்லா
வாசனை இல்லா
மலர்கூட
வண்ணத்துப்பூச்சியின்
வாஞ்சையினால்
வசந்தம்பாடி நின்றது...

//டிஸ்கி ஒரு நாளுன்னு சொல்லி ஒரு வாரம் லீவ் எடுத்தாச்சி.பள்ளிகூட்டத்தில் எடுப்பதுபோல். லீவில் சும்மா இருந்தா எப்புடி அதான் கொஞ்சம் வரஞ்[ரைந்து]சிபார்ப்போமுன்னு.
அதென்னன்னா இப்படி ஆகிப்போச்சி சரி எவ்வளோ சகிச்சிக்கிட்டீக இதையும் அப்படியே அப்படியேஏ... நல்லாக்குதான்னு சொல்லிட்டுபோங்க//


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

48 கருத்துகள்:

  1. வாடுகின்ற மலர்க்கு கவிதை எழுதி ரசிபதுபோல்,இங்கே வாடாத இந்த காகித "மலருக்கும்" கவிதை எழுதிய
    எங்கள் "கவிக்கு" ஒரு செய்தி
    "ஓவியம் நல்லா இருக்கு"
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஓவிய‌மும் அத‌ற்கான‌ க‌விதையும் ந‌ல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. Pencil Drawing is very very very nice. The other one is colorful and nice too. :-)
    kavithaiyum nallaa irukkunga.

    பதிலளிநீக்கு
  4. "பென்சிலின்
    கருநிற உதட்டால்"

    ஆஹா என்ன ஒரு அற்புதமான கற்பனை

    படமும் ரொம்ப அழகா இருக்கு

    நிறைய திறமைகள் உங்களிடம் இருக்கு சகோதரி

    வாழ்த்துகிறேன் மென்மேலும் வளர

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. வண்ணத்துப்பூச்சிக்கு எத்தணை வாஞ்சை..
    அழகாக எழுதிய உங்களுக்கும்..

    "இறைவனை நேசி..இன்பம் பெறுவாய்" என்று அழகாக எழுதியிருகிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  6. ////அது வாடிடக்கூடதென்று தன் பட்டுச்சிறகை
    கருத்த மலரின் உடல்மேல் மெல்லவிரித்து-தன்
    வண்ணங்களை உதறியது////
    ////பென்சிலின் கருநிற உதட்டால்
    உடல்பெற்ற மலரோ வண்ணங்கள் பட்டதும்
    உயிர்பெற்று எழுந்தது///

    கற்பனையின் உச்சமான 'தல'வரிகள்...
    சிறப்பான வரிகள்...

    அது சரி...
    மலரின் வண்ணகள்தான் பல வண்ணங்களில்....
    நீங்க வரைந்த வண்ணத்துப்பூச்சி கலர் கம்மியா இருக்கே..?
    ஓ... ஒஹோ..... மலிக்கா வரைந்த வண்ணத்துப்பூச்சி அதனால்தானோ...!

    ஆமா... இந்த ஓவியம் தங்கள் மகனார் வரைந்த மாதிரி இருக்கே...?

    இவ்வளவு நாள் லீவு போட்டதற்கு இரண்டு பீரியடு பெஞ்சு மேல நில்லுங்கோ... (தமாசுக்கு.... ஸ்கூல் நெனப்புதான்)

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  7. காஞ்சி முரளி கூறியது...
    ////அது வாடிடக்கூடதென்று தன் பட்டுச்சிறகை
    கருத்த மலரின் உடல்மேல் மெல்லவிரித்து-தன்
    வண்ணங்களை உதறியது////
    ////பென்சிலின் கருநிற உதட்டால்
    உடல்பெற்ற மலரோ வண்ணங்கள் பட்டதும்
    உயிர்பெற்று எழுந்தது///

    கற்பனையின் உச்சமான 'தல'வரிகள்...
    சிறப்பான வரிகள்...//

    மிக்க நன்றி முரளி.

    /அது சரி...
    மலரின் வண்ணகள்தான் பல வண்ணங்களில்....
    நீங்க வரைந்த வண்ணத்துப்பூச்சி கலர் கம்மியா இருக்கே..?
    ஓ... ஒஹோ..... மலிக்கா வரைந்த வண்ணத்துப்பூச்சி அதனால்தானோ...!//

    நான் வரைந்ததால அல்ல அதன் வண்ணங்கள் குறைந்தது. மலருக்கு கொடுத்ததால [ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா தப்புச்சிட்டேன்ன்ன்ன்]

    /ஆமா... இந்த ஓவியம் தங்கள் மகனார் வரைந்த மாதிரி இருக்கே...?//

    ஆங் சொல்லிவீங்களே நானே வரைந்தது நம்புங்கோ. பக்கத்தில் பெயர்கூட போட்டுயிருக்கேனே பாருங்கோ..

    //இவ்வளவு நாள் லீவு போட்டதற்கு இரண்டு பீரியடு பெஞ்சு மேல நில்லுங்கோ... (தமாசுக்கு.... ஸ்கூல் நெனப்புதான்) //

    ஒரு வாரந்தானே அதனால ஒரு பீரியடு போதுமாங்க சார். கருணைகாட்டுங்களேன். வெள்ளகாக்காவுக்கு கால்வலிக்கும்

    நட்புடன்...
    காஞ்சி முரளி..

    மிக்க நன்றி முரளி...

    பதிலளிநீக்கு
  8. ஒரு ஓவியத்தை வார்த்தைகள் கொண்டு அலங்கரித்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. பிரோஷாஅஃப்ஷர்19 ஏப்ரல், 2010 அன்று 10:43 AM

    கவிதையும் உன் கைவண்ணமும் அருமையோ அருமை.

    அதுசரி ஸ்கூலில்கூட பெஞ்சில் நின்னதில்லையே, இப்பபோய் நிக்கப்போற காஞ்சியண்ணா பாவம் எங்க மல்லி அதால பெஞ்சில நின்னுகிட்டே தோப்புகரணம் போடச்சொல்லுங்க, எப்புடி நம்ம ஐடியா.

    ஆத்தாடி அடிக்கவராதே மல்லி.

    பதிலளிநீக்கு
  10. இதெல்லாம் அநியாயம் ஒரு வார லீவுல ஒரே ஒரு படமா நா நம்பமாட்டேன்.

    கவித...கவித...ரொம்போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  11. வண்ண மலர் அழகு. கவிதையில் கண்ட வண்ணத்துப் பூச்சியின் வாஞ்சையோ மிக அருமை.

    பதிலளிநீக்கு
  12. கவிஞரே, பெரிய ஓவியராவும்ல
    இருக்கீங்க!!!

    பதிலளிநீக்கு
  13. இது ரொம்ப மோசம், நல்லாவேஇல்ல..,அப்படின்னு சொல்லமாட்டேன். படமும் கவிதையும் ரொம்ப சூப்பரப்பு... ஓவியம் மிக அழகாக தத்ரூபமா இருக்கு,,, ஓகோ ஓகோ....

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. படமும் கவிதையும் நல்லாத்தானே இருக்கு மல்லிக்கா.படத்துக்கு ஏத்தமாதிரி கவிதை எழுதவும் தெரியணுமில்ல.அசத்தல் !

    பதிலளிநீக்கு
  16. அது என்னாங்க , கவிதை , ஓவியம் ரெண்டுலயும் பின்னி பெடலேடுகுரிக்க (எல்லாம் சொந்த சரக்கு தான ?)

    பதிலளிநீக்கு
  17. /S Maharajan கூறியது...
    வாடுகின்ற மலர்க்கு கவிதை எழுதி ரசிபதுபோல்,இங்கே வாடாத இந்த காகித "மலருக்கும்" கவிதை எழுதிய
    எங்கள் "கவிக்கு" ஒரு செய்தி
    "ஓவியம் நல்லா இருக்கு"
    வாழ்த்துக்கள்.//

    மகராஜன் தாங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி
    கவிக்கு சொன்ன சேதி
    தேனாய் பாய்ந்தது காதில்..

    நன்றி மகராஜன்.

    பதிலளிநீக்கு
  18. அமைதிச்சாரல் கூறியது...
    வாடாத மலரும் வாசம் வீசுகிறது.//

    வீசுகிறதா. அப்பாடா உழைத்தமைக்கு பலன். மிக்க நன்றி அமைச்சாரல்..

    பதிலளிநீக்கு
  19. நாடோடி கூறியது...
    ஓவிய‌மும் அத‌ற்கான‌ க‌விதையும் ந‌ல்லா இருக்கு..//

    மிகுந்த மகிழ்ச்சி ஸ்டீபன்..

    பதிலளிநீக்கு
  20. Chitra கூறியது...
    Pencil Drawing is very very very nice. The other one is colorful and nice too. :-)
    kavithaiyum nallaa irukkunga.//

    சந்தோஷம் தாங்கலை எனக்கு அப்போ இனி நாமே வரைஞ்சி கவிதையும் எழுதிடலாமோ.

    நன்றி சித்ராமேடம்..

    பதிலளிநீக்கு
  21. விஜய் கூறியது...
    "பென்சிலின்
    கருநிற உதட்டால்"

    ஆஹா என்ன ஒரு அற்புதமான கற்பனை

    படமும் ரொம்ப அழகா இருக்கு

    நிறைய திறமைகள் உங்களிடம் இருக்கு சகோதரி

    வாழ்த்துகிறேன் மென்மேலும் வளர

    விஜய்//

    வாங்க சகோதரே. தாங்களின் வருகைக்கும் அழகான கருத்துக்கும்
    அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  22. /மங்குனி அமைச்சர் கூறியது...
    அது என்னாங்க , கவிதை , ஓவியம் ரெண்டுலயும் பின்னி பெடலேடுகுரிக்க (எல்லாம் சொந்த சரக்கு தான ?)//

    அமைச்சரே அதிலென்ன சந்தேகம்.
    வேண்டுமெனில் தாங்களின் அரசவைக்கு தங்களைப்போலவே ஓவியம் ஒன்று வரைந்து அனுப்பட்டுமா.
    அதோடு
    மா[தே]ங்கமடைய கவிகளும் சேர்த்தனுப்பட்டுமா.ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  23. சூப்பரான ஓவியம்...ஒவியத்தினை வைத்து கவிதையும் சூப்பர்ப்...

    பதிலளிநீக்கு
  24. இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

    இந்த ஒண்ணு போதுமே!
    கவிதையும், ஓவியமும் அருமை!

    பதிலளிநீக்கு
  25. உயிர் பெற்றது வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல என் என்னத்து பூச்சியும்தான்...அழகு அக்கா...கலர்புல்லா சுபேரா...இருக்கு...

    பதிலளிநீக்கு
  26. // வண்ணமில்லா
    வாசனை இல்லா
    மலர்கூட
    வண்ணத்துப்பூச்சியின்
    வாஞ்சையினால்
    வசந்தம்பாடி நின்றது//

    உலகில் உள்ள அனைத்து வண்ணப்பூக்களுக்கும் வண்ணத்துபூச்சிகளின் உரசல்களையும் ஒவியக் கவியால் அசத்தீட்டீங்க. வாழ்த்துக்கள்

    வண்டு செய்யும் வேலையை வண்ணத்து பூச்சியும் செய்ய ஆரம்பிச்சிடுச்சு(மகரந்த சேர்க்கை)

    இவ்வளவு அழகாக தமிழை வலைப்பூக்களில் எழுதுவதற்கு காரணமாக இருந்த அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது
    http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html

    தமிழ் நேஞ்சங்களின் ஆதரவுடன் அவர்களுக்கு உலகத்தமிழர்களிடம் நிறந்தர அங்கீகாரம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, ஆதரவு தாருங்கள், பின்னோட்டங்களை பதியுங்கள், முடிந்தால் கவிதை வடிவில் உங்கள் வலைப்பூவில் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தியை பதியுங்கள், சிறு துளி பெரு வெள்ளம்.

    பதிலளிநீக்கு
  27. அலகு பூக்கலும் வண்ணத்துப்பூச்சியிம் அருமை என் மருமக்ன் தான் அதைவரைந்து இருக்கனும் மல்லிபூ உன்கவிதை அருமை உன்கவிதைக்கு தனி அலகும் உண்டு

    பதிலளிநீக்கு
  28. நேத்து பாக்கும்போது இந்த பதிவு இல்லை?..

    பதிலளிநீக்கு
  29. வைகறை நிலா கூறியது...
    வண்ணத்துப்பூச்சிக்கு எத்தணை வாஞ்சை..
    அழகாக எழுதிய உங்களுக்கும்..

    "இறைவனை நேசி..இன்பம் பெறுவாய்" என்று அழகாக எழுதியிருகிறீர்கள்..
    //

    வாங்க வைகறை நிலா.
    உங்கள் பெயரே அழகு.

    தாங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  30. நட்புடன் ஜமால் கூறியது...
    ஒரு ஓவியத்தை வார்த்தைகள் கொண்டு அலங்கரித்துவிட்டீர்கள்.

    மீண்டும் ஜமால்காக்கா வருக வருக.
    தாங்களின் கருத்திற்க்கு மிக்க நன்றி..


    பிரோஷாஅஃப்ஷர் கூறியது...
    கவிதையும் உன் கைவண்ணமும் அருமையோ அருமை.

    அதுசரி ஸ்கூலில்கூட பெஞ்சில் நின்னதில்லையே, இப்பபோய் நிக்கப்போற காஞ்சியண்ணா பாவம் எங்க மல்லி அதால பெஞ்சில நின்னுகிட்டே தோப்புகரணம் போடச்சொல்லுங்க, எப்புடி நம்ம ஐடியா.

    ஆத்தாடி அடிக்கவராதே மல்லி//

    வாம்மா மின்னலு. பென்சில் நின்னு தோப்புக்கரணாமா குட்டிக்கரணமா ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் இந்த கொலவெறி
    ஆத்தாடி அடிமட்டுமல்ல கும்மாங்குத்து விழும் அப்ஷரிடம் போட்டுக்கொடுத்தால். நல்ல புள்ளையாஇருங்கோடிமா..

    பதிலளிநீக்கு
  31. ஜெய்லானி கூறியது...
    இதெல்லாம் அநியாயம் ஒரு வார லீவுல ஒரே ஒரு படமா நா நம்பமாட்டேன்.//

    நம்மபவே வேணாம் இன்னும் இருக்குல்ல போடுவோமுல்ல..

    கவித...கவித...ரொம்போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நல்லாருக்கு//

    நல்ல இழுவ வ வ வ வவவவவ.

    நன்றிங்கண்ணா..

    பதிலளிநீக்கு
  32. ராமலக்ஷ்மி கூறியது...
    வண்ண மலர் அழகு. கவிதையில் கண்ட வண்ணத்துப் பூச்சியின் வாஞ்சையோ மிக அருமை.//

    மிக்க நன்றி ராமுமேடம் தொடர் வருக்கைக்கு மிக்க மகிழ்ச்சி..




    //சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    கவிஞரே, பெரிய ஓவியராவும்ல
    இருக்கீங்க!!!//

    ஹை ஓவியரும் ஆயிட்டோமா. அப்ப சபாஷ் போட்டுக்கோ மல்லி.

    மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா
    தொடர் வருக்கைக்கு மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  33. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    இது ரொம்ப மோசம், நல்லாவேஇல்ல..,அப்படின்னு சொல்லமாட்டேன். படமும் கவிதையும் ரொம்ப சூப்பரப்பு... ஓவியம் மிக அழகாக தத்ரூபமா இருக்கு,,, ஓகோ ஓகோ....//

    இது ரொம்ப மோசம் பிடிக்கவே இல்லை இப்படி கருத்துசொன்னது
    அப்படின்னு நானும் சொல்லமாட்டேனுல்ல.

    மிக்க நன்றி ஷேக்.
    நீங்க நிஜமாலுமே ஷேக்தானே![அரபி ஷேக்]

    பதிலளிநீக்கு
  34. வண்ணத்துப் பூச்சியின் வண்ணம் வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. ///மிக்க நன்றி ஷேக்.
    நீங்க நிஜமாலுமே ஷேக்தானே![அரபி ஷேக்]///

    நன்றி நன்றி நன்றி....

    என்னை அரபி ஷேக் என்றுவாழ்த்திய‌ மலிக்கா வாழ்க வாழ்க...

    பதிலளிநீக்கு
  36. கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..

    பதிலளிநீக்கு
  37. ஹேமா கூறியது...
    படமும் கவிதையும் நல்லாத்தானே இருக்கு மல்லிக்கா.படத்துக்கு ஏத்தமாதிரி கவிதை எழுதவும் தெரியணுமில்ல.அசத்தல் !//

    தோழியே மீண்டும் வருக.
    அன்பான கருத்துக்கு மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  38. Geetha Achal கூறியது...
    சூப்பரான ஓவியம்...ஒவியத்தினை வைத்து கவிதையும் சூப்பர்ப்...//

    மிக்க நன்றி கீதா




    அண்ணாமலை..!! கூறியது...
    இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

    இந்த ஒண்ணு போதுமே!
    கவிதையும், ஓவியமும் அருமை!

    வாங்க அண்ணாமலை. தாங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  39. seemangani கூறியது...
    உயிர் பெற்றது வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல என் என்னத்து பூச்சியும்தான்...அழகு அக்கா...கலர்புல்லா சுபேரா...இருக்கு...//

    எண்ணத்துப்பூச்சிக்கும் சிறகுண்டு இல்லையா சீமாங்கனி.

    கலர்புல் கருதுக்குமிக்க நன்றி கனி.




    சே.குமார் கூறியது...
    வாடாத மலரும் வாசம் வீசுகிறது.

    வீசுகிறதா. நன்றி குமார்..

    பதிலளிநீக்கு
  40. தாஜூதீன் கூறியது...
    // வண்ணமில்லா
    வாசனை இல்லா
    மலர்கூட
    வண்ணத்துப்பூச்சியின்
    வாஞ்சையினால்
    வசந்தம்பாடி நின்றது//

    உலகில் உள்ள அனைத்து வண்ணப்பூக்களுக்கும் வண்ணத்துபூச்சிகளின் உரசல்களையும் ஒவியக் கவியால் அசத்தீட்டீங்க. வாழ்த்துக்கள்

    வண்டு செய்யும் வேலையை வண்ணத்து பூச்சியும் செய்ய ஆரம்பிச்சிடுச்சு(மகரந்த சேர்க்கை)

    இவ்வளவு அழகாக தமிழை வலைப்பூக்களில் எழுதுவதற்கு காரணமாக இருந்த அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது
    http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html

    தமிழ் நேஞ்சங்களின் ஆதரவுடன் அவர்களுக்கு உலகத்தமிழர்களிடம் நிறந்தர அங்கீகாரம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, ஆதரவு தாருங்கள், பின்னோட்டங்களை பதியுங்கள், முடிந்தால் கவிதை வடிவில் உங்கள் வலைப்பூவில் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தியை பதியுங்கள், சிறு துளி பெரு வெள்ளம்.//


    வருக வருக தாஜுதீன்
    தாங்களின் வருகைக்கும்
    அன்பான வேண்டுகோளுக்கும்
    அழகான கருத்துக்கும். மிக்க நன்றி வேண்டுகோளுக்கிணங்கி பதிவிட்டுவிட்டேன் கலைச்சாரலில்..

    பதிலளிநீக்கு
  41. பாப்பு கூறியது...
    அலகு பூக்கலும் வண்ணத்துப்பூச்சியிம் அருமை என் மருமக்ன் தான் அதைவரைந்து இருக்கனும் மல்லிபூ உன்கவிதை அருமை உன்கவிதைக்கு தனி அலகும் உண்டு.//

    என் அன்புச்செல்லமே! வாங்க தமிழ் அழகா வந்துவிட்டதே! அப்படியே முயற்சி செய்யுங்க இன்னும் சிறப்பாய் வரும்.

    அஸ்கு புஸ்கு இது நான் வரைஞ்சது.
    உங்க மருமகன் வரஞ்சதெல்லாம் கலைச்சாரலில் மட்டும்தான் போடுவோம் ஹி ஹி..

    அன்பான அழகான கருத்துக்கள் தந்த பாப்புவுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து வாருங்கள்..




    மின்மினி கூறியது...
    நேத்து பாக்கும்போது இந்த பதிவு இல்லை..//

    இப்போ இருக்குதா இப்போ இருக்குதா.

    பதிலளிநீக்கு
  42. "உழவன்" "Uzhavan" கூறியது...
    வண்ணத்துப் பூச்சியின் வண்ணம் வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது.

    மிக்க மகிழ்ச்சி உழவன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..


    /Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    ///மிக்க நன்றி ஷேக்.
    நீங்க நிஜமாலுமே ஷேக்தானே![அரபி ஷேக்]///

    நன்றி நன்றி நன்றி....

    என்னை அரபி ஷேக் என்றுவாழ்த்திய‌ மலிக்கா வாழ்க வாழ்க...//

    வாழ்க வாழ்கவே வாழ்கவே!
    ஹை நல்லாயிருக்கு பாட்டு.

    நன்றி அரபிஷேக்

    பதிலளிநீக்கு
  43. மின்மினி கூறியது...
    கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..//

    காணப்போனது கிடைச்சுடுத்தா மின்மினி.

    உங்கள் கருத்து ரொம்ப சூப்பர் எத்தன சூப்பர் இருக்குதோ.... அத்தனையும் விட சூப்பர் .. மிக்க நன்றி மின்மினி..

    பதிலளிநீக்கு
  44. ராஜ நடராஜன் கூறியது...
    கவிதைகள் சிலருக்கு வரம்.//


    மிக்க நன்றி ராஜ நடராஜன்.
    அந்த வரத்தை எனக்கும் கொஞ்சம் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்

    பதிலளிநீக்கு
  45. ஓவியமும் அதற்கேற்றார்போல கவிதையும் எழுதி அசத்திடீங்க மலிக்கா..... ! கச்சேரி இங்கே கலை கட்டுகிறது........!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது