உலகிலுள்ள அனைத்து தாய்மார்கள். தங்கைகள். தோழியர்கள்.சகோதரிகள். அனைவருக்கும் என் அன்பார்ந்த ”உலக மகளிர்தின நல்வாழ்த்துக்கள்”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என்னடி பெண்ணே!
இன்னும் உறக்கம்
இருள் விட்டு விலகி
எழுந்திரு கண்ணே!
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்
எதுவென்றபோதும்
எதிர்கொள்ளடி பெண்ணே!
விழித்திருக்கும்போதே
திருட்டுப்போகும் உலகம்
விழி உறங்கும்போதும்
விழிப்புணர்வு நெஞ்சுக்குள்
திடமாய் இருத்தல் வேண்டும்
நீ
எட்டுவைத்து நடக்கும்
ஒவ்வொரு அடியும்
ஏகாந்தமாக வேண்டும்
எச்சரிக்கையும் கூட வேண்டும்
இன்னல்கள் களைய வேண்டும்
இருளகன்று ஒளிவீசவேண்டும்
எதையுமே எதிர்கொள்ள
இயலவில்லை யெனச்சொல்லி
இருந்தயிடத்திலே முடங்கிவிடுவதா?
இல்லை
மூலையில் கிடந்து விடுவதா?
முயற்சி செய்!முயற்சி செய்!
முடியாதது என்று
எதுவுமேயில்லை
முன்னேறி வருவது
முக்கியமில்லை!
முன்னேறும்போது
பின்னுக்குள்ளத்தை
முறித்துவிட்டேறினால்
முன்னுக்கு வந்தும்
பயனொன்றுமில்லை!
அடுப்படியாகட்டும்
அரசவையாகட்டும்
ஆட்சிசெய்யும் போது
அளவுக்குமீறிய
அவசரமோ! ஆத்திரமோ!
ஆணவமோ! அதிகாரமோ!
ஆகாதென்பதை
அறிந்து நடந்தால்
பொருமையைக் கொண்டு
பெருமை சேர்த்தால்
புரியாத மனங்களும்
பூரிப்படையும்
பொன்னான
பெண்ணினம் கண்டு
போற்றி வாழ்த்தும்
சீரழிந்து விடுவது சுலபம்
சீராக வாழ்வது சிரமம்
சிரமத்தில் சிரத்தையெடு
சிறப்புகள் சிதறாமல் வரும்
சிந்தனைகளை
செதுக்கி முடிவெடு
செழித்தோங்கும்
வாழ்க்கை வந்து சேரும்
பெண்ணே!
உன்னால் முடியும்
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமகளிர்தின நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு///பெண்ணே!
பதிலளிநீக்குஉன்னால் முடியும்
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்..///
மகளிர் தின வாழ்த்துக்கள்.
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
விபரங்களுக்கு LINK- ஐ பார்க்கவும். இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.
பெண்ணே!
பதிலளிநீக்குஉன்னால் முடியும்
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்..
....பல கோணங்களில் கவிதையில் உள்ள கருத்துக்கள் - அருமை
அடுப்படியாகட்டும்
பதிலளிநீக்குஅரசவையாகட்டும்
ஆட்சிசெய்யும் போது
அளவுக்குமீறிய
அவசரமோ! ஆத்திரமோ!
ஆணவமோ! அதிகாரமோ!
ஆகாதென்பதை
அறிந்து நடந்தால்
அருமை வரிகள்....
வழக்கம் போலவே கலக்கியிருக்கீங்க...
உங்க இனம்ங்கறதுனால கூடுதல் மிளிர்வு தெரியுது கவிதையில..
ம்... எங்களுக்குத்தான் நாளு நட்சத்திரம்ன்னு ஒன்னுமே இல்ல...
ஆமா மேல உள்ள வரிகள் காலத்திற்கு தகுந்த மாதிரி போட்டதா???
இல்ல அரசியல்ல யாராவது இத முன் மாதிரியா எடுக்குறதுக்கு...... வாய்ப்பு இருக்குதான்னு....... கேட்டேன்...................
(ம்.. ஏதோ நம்மலால முடிஞ்சது)
அடிச்சி தூள் கிளப்பீடீங்க மலிக்கா.
பதிலளிநீக்குவரிக்கு வரி சூப்பர்.
அடுப்படி என்ன
அரசவையென்ன
புகுந்தாச்சி பெண்கள் அனைவருக்கும்
நல்லதொரு அறிவுரை..
வாழ்த்துக்கள் உங்களூக்கும். மற்ற அனைத்து மகளீருக்கும்.
ஆம்
பதிலளிநீக்குபெண்ணே!
உன்னால் முடியும்
உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும
மகளிர் தின வாழ்த்துக்கள்.
அருமையான வரிகள்....
பதிலளிநீக்குமகளீர்தின நல்வாழ்த்துகள்
மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குvaazththukkal! But, inru orunaal maddum kondaadurathu enakku thirupthiyilla...............
பதிலளிநீக்குமாண்போடும்...
பதிலளிநீக்குபெண்ணெனும் பண்போடும்...
மண்ணின் கலாச்சாரம் சீரழியாமல்
மாண்பு காக்கும்...
மகளிருக்கு மட்டும்...
மங்களிர்தின வாழ்த்துக்கள்...!
கவிதை அருமை.
பதிலளிநீக்குமகளிர்தின நல்வாழ்த்துக்கள்.
பெண்கள் தினத்தில் அன்புடன் மலிக்கா என்ன சொல்கிறார் என்று அறிய வந்தேன். நீங்கள் ஏமாற்றவில்லை. பாந்தமாக,பதவிசாக, புதுமைப் பெண்ணின் பிரதிநிதியாக உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குமகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபெண்ணே உன்னால் கவிதை நல்லாத்தான் இருக்கு...!
பதிலளிநீக்குஆனா...? கற்பனையில் ஒரு மாத்திரை அதிகம் என நினைக்கிறேன்...!
என்ன நான் சொல்றது...!
anyhave...
கவிஞர் மலிக்காவுக்கும்..
பதிவுலக...வலையுலக நண்பர்களுக்கும்... நண்பிகளுக்கும்...
"மகளிர் தின" வாழ்த்துக்கள்...!
நட்புடன்..
காஞ்சி முரளி....
ஸலாம் சகோ மலிக்கா..
பதிலளிநீக்குவழக்கம் போல் உங்கள் கவிதை
வெயிட்டுதான்...
பெண்களுக்கான தரமான செய்திகள் பொதிந்த சிறப்பான கவிதை..
கவிதாயினி,கவிதாயினிதான்னு நிரூபிக்கிறது உங்களின் ஒவ்வொரு கவிதையும்..
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.//
விழி உறக்கும்போதும்--உறங்கும் போது--என வருமென நினைக்கிறேன்..
இயழவில்லை-இயலவில்லை...--என வரும்///
பின்னுக்குள்ளத்தை--இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சகோ///
அன்புடன்
ரஜின்
ஆஹா...எவ்வளவு அருமையான உண்மையான வரிகள்...வாழ்த்துகள் அக்கா..
பதிலளிநீக்குஉங்களுடைய படைப்பில் வெளிவந்த புத்தகம் பற்றிய பதிவினை இனிமேல் தான் படிக்கனும்..
என்னுடைய ப்ளாகில் சில பிரச்சனை என்பதால் நான் ஒரு வாரமாக ப்ளாக் பக்கமே வரவில்லை...
வாழ்த்துகள்....தொடரட்டும் உங்கள் பணி...
வேடந்தாங்கல் - கருன்
பதிலளிநீக்குr.v.saravanan
தமிழ்வாசி - Prakash
Chitra
isaianban
பர்வின் பானு.
சிவரதி
நேசமுடன் ஹாசிம்
aranthairaja
தங்களை அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
அனுபவம்
பதிலளிநீக்குvaazththukkal! But, inru orunaal maddum kondaadurathu enakku thirupthiyilla...............//
அப்ப வருடத்தில் எல்லா நாளும் மகளீர் தினமாக வைத்துவிடுவோம்.
அப்புறம் ஆடவர்கள் சண்டைக்கு வரக்கூடாது ஓகேவா..
காஞ்சி முரளி.. மிக்க நன்றி சகோ
ஆயிஷா..மிக்க நன்றி ஆயிஷா
Balasubramaniam கூறியது...
பதிலளிநீக்குபெண்கள் தினத்தில் அன்புடன் மலிக்கா என்ன சொல்கிறார் என்று அறிய வந்தேன். நீங்கள் ஏமாற்றவில்லை. பாந்தமாக,பதவிசாக, புதுமைப் பெண்ணின் பிரதிநிதியாக உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.//
வாங்க சார் ரொம்ப சந்தோஷம். தங்களை ஏமாற்றவில்லை என்பதில் மிகுந்த சந்தோஷம். அதுவே மகளீருக்கு ஊக்கம்தானே.. பெரியவர்களின் ஆசியும். ஊக்கமும். புத்திமதிகளும்.வாழ்த்தும். எந்நாளும் எங்களைபோன்றவர்களுக்கு வேண்டும்.
மிக்க நன்றி சார் தங்களின் வருகைக்கும் அன்பார்ந்த கருத்துக்களுக்கும்..
பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்குவானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..//
வாங்க பாரதி. வாழ்த்துக்களும் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி..
S Maharajan கூறியது...
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி மகா..
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு8 மார்ச், 2011 8:08 pm
நீக்கு
பிளாகர் காஞ்சி முரளி கூறியது...
பெண்ணே உன்னால் கவிதை நல்லாத்தான் இருக்கு...!
ஆனா...? கற்பனையில் ஒரு மாத்திரை அதிகம் என நினைக்கிறேன்...!
என்ன நான் சொல்றது...!//
கற்பனையில் மாத்திரையா????????
என்ன நீங்க சொல்றது புரியலையே..
// anyhave...//
என்ன?? வே
//கவிஞர் மலிக்காவுக்கும்..
பதிவுலக...வலையுலக நண்பர்களுக்கும்... நண்பிகளுக்கும்...
"மகளிர் தின" வாழ்த்துக்கள்...!
நட்புடன்..
காஞ்சி முரளி....//
வாழ்த்துக்களும் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ..
பெண்ணே உன்னால் கவிதை நல்லாத்தான் இருக்கு...!
பதிலளிநீக்குஆனா...? கற்பனையில் ஒரு மாத்திரை அதிகம் என நினைக்கிறேன்...!
என்ன நான் சொல்றது...!
anyhave...
கவிஞர் மலிக்காவுக்கும்..
பதிவுலக...வலையுலக நண்பர்களுக்கும்... நண்பிகளுக்கும்...
"மகளிர் தின" வாழ்த்துக்கள்...!
நட்புடன்..
காஞ்சி முரளி....
8 மார்ச், 2011 8:52 pm
நீக்கு
பிளாகர் RAZIN ABDUL RAHMAN கூறியது...
ஸலாம் சகோ மலிக்கா..
வழக்கம் போல் உங்கள் கவிதை
வெயிட்டுதான்...
பெண்களுக்கான தரமான செய்திகள் பொதிந்த சிறப்பான கவிதை..
கவிதாயினி,கவிதாயினிதான்னு நிரூபிக்கிறது உங்களின் ஒவ்வொரு கவிதையும்..
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.//
விழி உறக்கும்போதும்--உறங்கும் போது--என வருமென நினைக்கிறேன்..
இயழவில்லை-இயலவில்லை...--என வரும்///
பின்னுக்குள்ளத்தை--இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சகோ///
அன்புடன்
ரஜின்//
வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.
விழி உறக்கும்போதும்//
அதாவது //அப்போதும் எப்போதும்// எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். அங்கே ம் வரவேண்டும் ..
//பின்னுக்குள்ளத்தை//
முன்னேறும்போது தேவைப்படுபவர்களை
முன்னுக்கு சென்றபின்
பின்னுக்கு தள்ளக்கூடாது
அதாவது பொருட்படுத்தாது அலட்சியம் செய்யகூடாது
என்று பொருள்.
மிக்க நன்றி சகோ தங்கலீன் வாழ்த்துக்கும் விளக்கம்கேட்ட கருத்துக்களுக்கும். மிக்க மகிழ்ச்சி..
ஸலாம் சகோ மலிக்கா..
பதிலளிநீக்குவழக்கம் போல் உங்கள் கவிதை
வெயிட்டுதான்...
பெண்களுக்கான தரமான செய்திகள் பொதிந்த சிறப்பான கவிதை..
கவிதாயினி,கவிதாயினிதான்னு நிரூபிக்கிறது உங்களின் ஒவ்வொரு கவிதையும்..
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.//
விழி உறக்கும்போதும்--உறங்கும் போது--என வருமென நினைக்கிறேன்..
இயழவில்லை-இயலவில்லை...--என வரும்///
பின்னுக்குள்ளத்தை--இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சகோ///
அன்புடன்
ரஜின்
9 மார்ச், 2011 12:50 am
நீக்கு
பிளாகர் GEETHA ACHAL கூறியது...
ஆஹா...எவ்வளவு அருமையான உண்மையான வரிகள்...வாழ்த்துகள் அக்கா..
உங்களுடைய படைப்பில் வெளிவந்த புத்தகம் பற்றிய பதிவினை இனிமேல் தான் படிக்கனும்..
என்னுடைய ப்ளாகில் சில பிரச்சனை என்பதால் நான் ஒரு வாரமாக ப்ளாக் பக்கமே வரவில்லை...
வாழ்த்துகள்....தொடரட்டும் உங்கள் பணி...//
வாங்க கீத்து..அப்படியா உங்கபக்கம் திறக்கவும் வெகு நேரமெடுக்கிறது..
படிச்சிட்டு கருத்தை சொல்லுங்கள்.
ரொம்ப சந்தோஷம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குBelated Women's Day wishes to you!
பதிலளிநீக்குகவிதைய பல கோனத்தில பிச்சி பெடல் எடுத்திருக்கீங்க சூப்பர் :-))
பதிலளிநீக்குமகளிர் தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குvaazththukkal! But, inru orunaal maddum kondaadurathu enakku thirupthiyilla...............//
பதிலளிநீக்கு//அப்ப வருடத்தில் எல்லா நாளும் மகளீர் தினமாக வைத்துவிடுவோம்.
அப்புறம் ஆடவர்கள் சண்டைக்கு வரக்கூடாது ஓகேவா..//
அப்படியே வச்சுக்குவோமே. ஆனா...எங்கமேல கைவைக்காம விட்டாச்சரிதான். ஹீ....ஹீ...