நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கொண்டவனல்ல கொடும்பாவி..


கட்டிய மனைவி
கண்மணிக் குழந்தைகள்
கதறும்படி செய்துவிட்டு
காணாதூரம் போன உன்னை

காவல் காக்கவேண்டியவன்
காக்கும் கவலையை மறந்து
கஷ்டப்பட வைத்துவிட்டு
காணாமல் போன உன்னை

ஊரார் பேசும்படி
உடம்பெல்லாம் கூசும்படி
ஒற்றையாய் தவிக்கவிட்டு
ஓடிப்போன உன்னை

ஏனென்று கேட்க
ஏறெடுத்தும் பார்க்க
நாதியற்றுப்போய்
நடுத்தெருவில் விட்ட உன்னை

என்ன சொல்வேன்
நான் உன்னை
என்ன செய்வேன்

மனமில்லா உன்கூட
மணமுடித்துக் கொடுத்ததினால்
மற்றவர் சொல்கேட்டு
மணந்தவளை பிரிந்தாயே

ஆயிரம்பேர் சொன்னாலும் -உன்
அறிவெங்கே போனதடா
அன்பு வச்சேன் உன்மேல
அத்தனையும் கானலடா

பரிதவிக்கவிட்டு போய்விட்ட-நான்
படும்பாடு பார்க்காம
பிள்ளைகளும் என்கூட
படுகிறதே பலவேதனைகள்

கொண்டவனே உன்னை நம்பி
கைப்பிடித்து வந்ததற்கு
கொடுத்துவிட்டாய் கைமேல்கூலி
கழுத்தை நெறித்துவிட்டு

பந்த பாசங்கள் மறந்துவிட்டு
பாதியில போனவனே
சீர்கெட்டு போவேன்னு
சிறிதளவும் நினைக்காதே!

தன்னந் தனியாக நின்று
தங்கங்களை வளர்த்திடுவேன்
தரம்கெட்டுப் போகாம
தன்மானம் உள்ளவளாய்
தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

18 கருத்துகள்:

  1. நாட்டுப்புறப்பாட்டு நடை... நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
  2. தன்னந் தனியாக நின்று
    தங்கங்களை வளர்த்திடுவேன்
    தரம்கெட்டுப் போகாம
    தன்மானம் உள்ளவளாய்
    தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவேன்..

    ...very well-written.

    பதிலளிநீக்கு
  3. என்ன ஒரு உணர்ச்சி பிளம்பான கவிதை....ஆஹா ஓகோ அருமை சகோதரி....தன்னம்பிக்கை பீரிட்டு வர வைக்கும் கடைசிவரிகள்.....ரொம்ப பிடிச்சுருக்கு

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்குக்கா

    தன்னந் தனியாக நின்று
    தங்கங்களை வளர்த்திடுவேன்
    தரம்கெட்டுப் போகாம
    தன்மானம் உள்ளவளாய்
    தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவேன்..

    தன்நம்பி்க்கை வரிகள்..
    வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  5. சந்தகவி... தாள நயத்துடன் தங்களின் கவிதை ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளக் குமுறலாய் நகர்ந்து செல்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா இருக்கு அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரம், கவிதை வரிகள் சந்த நடையில் தாள நயத்துடன் ஒரு பிரிவின் துயரிலும் தன் நம்ப்பிக்கையுடன் வாழும் பெண்ணின் மன ஓட்டத்தைப் பாடி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  8. பொற்குணமான மங்கைஇருக்க
    பொக்கிசமாய் குழந்தைகள் இருக்க,
    விட்டு போன அந்த கழிசடையை என்ன செய்ய?
    என்ன சொல்ல?
    ஊர்பேச்சை கேட்டு உருபாடாம போனவனே!
    உறவின் அருமை அறியாமல் போன அறிவிலியே!
    நான் முடங்கி உயிர் அடங்கிபோவேன் என நீ நினைத்தாயா பதரே!
    குத்துகாலிட்டு தலை குனிந்து அழுது காலம் கழிப்பேன் எனவும்,பிறரிடம் இரந்து வாழ்வேன் எனவும் நீ நினைத்தால் அது உன் சிறும் புத்தி.
    கத்தி கூர்மையாடா என் உருதியும் உழைப்பும்,வேடிக்கை கானும் சில மனிதர்போல்
    நான் வீழ்ந்துவிடுவேன் என நினைத்தாயா?
    நெருப்பிலும் எழுவேன்.
    பொருப்பாய் நம் இல்லை,இல்லை என் கண் மணிகளை கரைசேர்பேன்.

    பதிலளிநீக்கு
  9. ஜெ.ஜெ கூறியது...

    :(//

    நன்றி ஜெ. ஜெ

    //சி.பி.செந்தில்குமார் கூறியது...

    நாட்டுப்புறப்பாட்டு நடை... நல்லாருக்கு.//

    ஆகா அப்படியா:} மிக்க நன்றி சி.பி

    பதிலளிநீக்கு
  10. //chitra கூறியது...

    தன்னந் தனியாக நின்று
    தங்கங்களை வளர்த்திடுவேன்
    தரம்கெட்டுப் போகாம
    தன்மானம் உள்ளவளாய்
    தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவேன்..

    ...very well-written.//

    ரொம்ப சந்தோஷம் சித்ரா க்கா..

    பதிலளிநீக்கு
  11. // Yasir கூறியது...

    என்ன ஒரு உணர்ச்சி பிளம்பான கவிதை....ஆஹா ஓகோ அருமை சகோதரி....தன்னம்பிக்கை பீரிட்டு வர வைக்கும் கடைசிவரிகள்.....ரொம்ப பிடிச்சுருக்கு

    வாங்க காக்கா நலமா? அப்படியா ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றிக்காக்கா..

    பதிலளிநீக்கு
  12. // isaianban கூறியது...

    நல்லா இருக்குக்கா

    தன்னந் தனியாக நின்று
    தங்கங்களை வளர்த்திடுவேன்
    தரம்கெட்டுப் போகாம
    தன்மானம் உள்ளவளாய்
    தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவேன்..

    தன்நம்பி்க்கை வரிகள்..
    வாழ்த்துக்கள் அக்கா.//

    இது உண்மை சம்பவம். தன்னம்பிக்கையோடு வாழும் ஒரு பெண்மணியின் மனதில் எழுந்த வரிகளே என் கவிதையில் கிறுக்கள்களாய்..
    மிக்க நன்றி தம்பி..

    பதிலளிநீக்கு
  13. // நிரூபன் கூறியது...

    சந்தகவி... தாள நயத்துடன் தங்களின் கவிதை ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளக் குமுறலாய் நகர்ந்து செல்கிறது.

    உள்ளத்தின் மனக்குமுறல் வெடித்துசிதறுவதை பார்த்தபோது எழுந்த வேதனையின் வரிகளே இவைகள்..இதுபோன்ற சுயநலவாதிகளை என்ன செய்ய.

    மிக்க நன்றி நிரூபன்..

    // தமிழ்த்தோட்டம் கூறியது...

    ரொம்ப நல்லா இருக்கு அருமையான வரிகள்.//

    மிக்க நன்றி தமிழ்தோட்டம்..

    பதிலளிநீக்கு
  14. // கமலேஷ் கூறியது...

    எதார்த்தம் என்றாலும் வலி//

    வலி. வலி நிலைக்கும்படி செய்த கொடும்பாவி.இதுபோன்றவர்கள்.

    மிக்க நன்றி கமலேஷ்.



    //நிரூபன் கூறியது...

    வணக்கம் சகோதரம், கவிதை வரிகள் சந்த நடையில் தாள நயத்துடன் ஒரு பிரிவின் துயரிலும் தன் நம்ப்பிக்கையுடன் வாழும் பெண்ணின் மன ஓட்டத்தைப் பாடி நிற்கிறது..//

    அப்படியா நிரூபன் மிகுந்த வலிகொண்ட வேதனைகள் வெடிக்கும்போது கவனம் வேண்டும் வார்த்தைகளில் என்பதால் மிககவனமாக எழுதினேன்.

    மிக்க நன்றி நிரூபன் அன்புநிறைந்த கருத்துக்களுக்கு..

    //ஜெய்லானி கூறியது...

    :-( :-( :-(//

    ஓ சோகமா. இருக்கட்டும் இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  15. // crown கூறியது...

    பொற்குணமான மங்கைஇருக்க
    பொக்கிசமாய் குழந்தைகள் இருக்க,
    விட்டு போன அந்த கழிசடையை என்ன செய்ய?
    என்ன சொல்ல?
    ஊர்பேச்சை கேட்டு உருபாடாம போனவனே!
    உறவின் அருமை அறியாமல் போன அறிவிலியே!
    நான் முடங்கி உயிர் அடங்கிபோவேன் என நீ நினைத்தாயா பதரே!
    குத்துகாலிட்டு தலை குனிந்து அழுது காலம் கழிப்பேன் எனவும்,பிறரிடம் இரந்து வாழ்வேன் எனவும் நீ நினைத்தால் அது உன் சிறும் புத்தி.
    கத்தி கூர்மையாடா என் உருதியும் உழைப்பும்,வேடிக்கை கானும் சில மனிதர்போல்
    நான் வீழ்ந்துவிடுவேன் என நினைத்தாயா?
    நெருப்பிலும் எழுவேன்.
    பொருப்பாய் நம் இல்லை,இல்லை என் கண் மணிகளை கரைசேர்பேன்.//

    இதுபோன்ற புத்திகெட்ட மானிடனை என்ன செய்ய என்ன செய்ய . மதியை விற்றவன் மழுங்கடித்தான் தன்புத்தியை. வாழ்க்கையை வாழதெரியாத வாழ்க்கையின் கஷ்டநஷ்டங்களை எதிர்கொள்ளத்துணியாத கோழை.

    நம்பிக்கைக்கு துரோகமிழைத்துவிட்டு
    எங்கோ நடைபிணமாக வாழும் மனிதன்..

    தங்கள் வரிகள் அருமை சகோ..

    பதிலளிநீக்கு
  16. கவிதையும், படமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது