நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அழுகிய பரிசு!

தன்னிநிலை மறந்து
தீய வழியை
தேடிப்போகும் உடலுக்கு
தனக்குத்தானே கிடைக்கும்
தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
தேடிய திரிந்த இன்பத்திற்கு
இறைவன் தந்த பரிசு
திக்குமுக்காட வைக்கும்
தீராவியாதி

மாற்றான் தோட்டத்து
மல்லிகையில்
தேனெடுக்க சென்ற
மதியிழந்த வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
அழுகவைக்கும் இந்த எய்ட்ஸ்

தான்பெற்ற இன்பத்திற்கு
தன்துணைக்கும் தன்வாரிசுக்கும்
துன்பத்தைதரும்
திட்டமிட்ட சதிவாதியே!

தவறென்று தெரிந்தும்
தத்தித்தாவி
தித்திப்பென்று தீங்கில் விழுந்து
தீயில் கருகும் மதிகளே!

உயிருள்ளவரை
உள்ளச்சத்துடன் வாழுந்து
உங்களை நம்பியுள்ளோர்களையும்
உருக்குழையாமல் வாழவிடுங்களேன்...

டிஸ்கி// ஏற்கனவே பரிசு என எழுதிய கவிதைதான் இது.
 கூடுதல் வார்தையோடு தற்போது மீண்டும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வலுவிழந்த எந்திரங்கள்!..

ஆளவரமில்லா
அடிமரத்தில் அமர்ந்தபடி
ஆண்ட நினைவுகளை
அடிபிரளாமல்
அசைபோடக் கற்றுக் கொடுத்த
சந்ததிகளை நினைத்துக் கொண்டு
சிதைந்துபோன நாட்களை
சிலிர்ப்போடு
சீண்டிப் பார்க்கும் உள்ளங்கள்

ஆலமர விழுதைப் பார்த்து
அதிசயிக்க முடியவில்லை
அதேபோல் தானிருந்தும்
அதிலிருந்து உதிரும்
இலைகளைபோல்
இன்றைய நிலையானதே யென
இடித்துரைத்த மனச் சோகங்கள்

எண்ணிலடங்கா துன்பச் சுமைகளின்
எல்லைகளைக் கடந்து
இயன்றைவரை
இயந்திரங்கள் போலிருந்து
இளைத்து உழைத்தவர்களையின்று
ஏறெடுத்து பார்ப்பதற்கோ
ஏதென்று கேட்பதற்கோ
இருந்தும் ஆளில்லாத
இன்னல்கள் கொல்லும் ஏக்கங்கள்

ஆட்டம் முடிந்ததும்
கூட்டம் கலைந்ததால்
அதிரும் மனதுக்குள்
ஆயிரம் வருத்தங்கள்
அடுத்தடுத்து சிந்தனைகளென
ஆட்க்கொள்ளும் மனக்கவலைகள்

சுறுங்கிய தோல்களும்
சுறுக்கமில்லா நினைவுகளும்
சுமைகளாய் கூடிநின்று
வெளிறிக் கிடந்த
வெற்றுப் பார்வையில்
வெளிச்சமிடும் வேதனைகள்

தழைக்க வைக்கும் வாழைமரம்
தன்னுயிரை தந்துவிட்டு
தானறுந்து கிடப்பதுபோல்
தன்னந் தனிமையின் தாக்கங்களால்
தனலில் வேகும் தவிப்புகள்

பச்சை புல்வெளிக்கெல்லாம்
பனித்துளிகளின் பிரவேசங்கள்
பாவம் இவர்களுக்கோ
பாடுபடுத்தும் முதுமையின்
ஆசுவாசுவாசங்கள்

வசந்தம் தொலைந்து வலுவுமிழந்து
வயது கடந்து வழுக்கை வந்து
வாழ்க்கையை கழி[ளி]த்து
வாஞ்சை தேடும் மனங்கள்-இனி
வரபோவதையும் வரவேற்க
விதிவிட்ட வழியென
விரக்தியோடு காத்திருக்கும்
வலுவிழந்த எந்திரங்கள்..

டிஸ்கி// என்னுடைய இக்கவிதை  திண்ணை.காம் மில் வெளியாகியுள்ளது..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கவிதையே! உன்னை காதலித்ததால் எனக்குமுதலிடம்..




















முக நூலில் கவிதை சங்கமம் நடத்திய கவிதைப்போட்டியில்
எனது கவிதையான ”வாய்ப்பும் வியப்பும்” கவிதை
முதலிடத்தை பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காற்றாய்...மலராய்...
நீராய்... நெருப்பாய்...
என்னுள் குடிக்கொண்டு...
என்னை
என்னாலேயே தேடவைக்கும்....!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

அழுகையாய்... சிரிப்பாய்...
யதார்த்தமாய்... இயந்திரமாய்...
இப்படி
எல்லா நிலையிலும்
எனை வடிக்கும்..!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

உலக உருண்டைக்குள்
ஓடிவிளையாடி...
ஓயாது விடைதேடி
ஒளிந்து மறந்து வியப்பூட்டும்...
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்...

கனவில் கருகொண்டு...
நினைவில் நிலைகொண்டு....
நெஞ்சத்தில்
நீங்காயிடங்கொண்டு... எனை
நிலைகுலையச் செய்யும்
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காணும் காட்சியாவும்
கண்ணுக்குள் குடிகொள்ள
நிகழும் நிகழ்ச்சியாவும்
நெஞ்சிக்குள் புதைந்துகொள்ள
புலனுக்கு புலப்படா
புதிர்களையும்
தோண்டிப் பார்க்கவைக்கும்
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்

கவிதை சங்கமத்தில்-எனக்கொரு
வாய்ப்பாய் கவியெழுத வைத்து
விருதாய் முதலிடத்தை
வியக்கும்படி தந்து
விழிநீர் வழிய வழிய
வசந்தத்தைத் தேடித்தந்த
கவிதையே.. உன்னைக்
காதலிக்கிறேன்..

இறைவன் எனக்களித்த
இந்த இன்றியமையா
வாய்ப்புதன்னை
போற்றி காப்பதுடன்
இதில்வரும்
புகழில் மயங்கிடாமல்
இருதயத்தை பாதுகாத்துக்கொண்டே
கவிதையே!... உன்னைக்
காதலிப்பேன்......

டிஸ்கி// இரண்டாம் இடம்.
திரு இராமன் அப்துல்லா அவர்களுக்கு.
மூன்றாம் இடம்.
திரு கோயம்புத்தூர் பால சுப்பிரமணியன் அவர்களுக்கு.
இருவருக்கும் மனமார்ந்த பராட்டுக்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது