நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறுதியின் விளிம்பில்


நொடிகளும் நிமிடங்களும்
நாட்களும் மாதங்களும்
வெகுசீக்கிரம் உருண்டோடி
வருடத்தின் விளிம்பில் நின்றபடி
கடந்துவந்தவைகளை மனம்
கலைத்துப்போட்டு நினைக்குதடி!

கசப்புகளும் கஷ்டங்களும்
கலக்கத்தை கொண்டதோ!
சோகங்களும் வருத்தங்களும்
சோர்வுகளை தந்ததோ!
அழுகைகளும் ஆராரணங்களும்
ஆழ்மனம் உண்டதோ!

மகிழ்வுகளும் தித்திப்புகளும்
மனமேற்றுக் திளைத்ததோ! - சில
சந்தோஷங்களும் சகிப்புகளும்
சாந்தியாகி நின்றதோ!
பூரிப்புகளும் புன்னகைகளும்
பூந்தோட்டவாசம் வீசியதோ!

எண்ணியவைகள்
எல்லாம் நல்லவையே!
ஏனோ அவற்றில்
அல்லவைகளும் அண்டிக்கொண்டு
அனுதினமும்
அவதிக்குள்ளாக்கின!

எல்லாம் அன்பல்ல என்பதை
எடுத்துரைத்தவைகளும்
எல்லாமும் நன்மையல்ல என்பதை
அடித்துரைத்தவைகளும்
எல்லாத்திலும் தீமையுமுண்டு என்பதை
படிப்பினை தந்தவைகளுமாய்!

செய்தவைகளில் ஒன்றும்
சொல்லும்படியாக இல்லையோ
சொல்லியவைகளில் எதுவும்
செய்யமுடியவில்லையோ!
சொற்ச்செயல் எவற்றிலும்
சிறப்புகள் பதியவில்லையோ!

உலக நடப்புகளில்
ஓங்கிப்பெருகும் குற்றங்களும்
ஊர்த்தெரு பழக்கங்களில்
ஒய்யாரமிடும் தீங்குகளும்
தனிமனித ஒழுக்கங்களில்
தரம்குறையும் நடத்தைகளும்!

நகர்ந்த நாட்களிலோ
நடைபயின்ற வருடத்திலோ
குறைகளேதுமில்லை!
நாட்களில் நகர்ந்த
வருடங்களில் நடைபயின்ற
மனிதர்களிடமும் மனங்களிலும்
பலகுறைகள் பெருந்திரைகள்

இனிவரும் வருடத்திலாவது
இன்னலில்லா நல்லவைகளையே
சொல்லிலும் செயலிலும் எல்லாரும்
சிறப்பாய் செய்தருள
சங்கைமிகு இறைவனிடம்
சிரம்தாழ்த்தி கேட்கிறேன்...
 =================================


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  HAPPY NEW YEAR 2015 ! :)

  பதிலளிநீக்கு
 3. /////காஞ்சி முரளி29 நவம்பர், 2010 ’அன்று’ 11:42 முற்பகல்

  தங்கள் இன்றைய பதிவில் என்னையும் என் குடும்பத்தாரையும்

  ////தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு///
  எனவும்

  ///வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது//// என்று குறிப்பிட்டு...

  எளியோனனான என்னை...
  மிக உயர்ந்த இடத்தில் வைத்து எழுதியுள்ளீர்கள்...

  அந்தளவிற்கு... தங்களைப்போல நான் ஒண்ணும் பெரியாளில்லை சகோதரி...

  நான் சாதரணமானவன்...!
  உங்களைப் போல பெரிய கவிஞரோ... தத்துவவாதியோ... வலைதள புகழ்பெற்றவனோ இல்லை...

  ஓர் சாமானியன்... தன் உடன்பிறவா சகோதரி வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பெரிய விஷயம் இல்லை...

  இருந்தாலும்

  என்னையும்..
  என் குடும்பத்தையும் வலையுலகத்தில் சிறப்பு சேர்த்தமைக்கு

  மிக்க நன்றி...! நன்றி...!////


  இது 2015...

  நம்
  நட்பின்
  நாட்களை...

  சில
  ஆண்டுகள்....

  பின்நோக்கிப்
  பார்த்தேன்....

  அதுதான் இது கவிஞரே....
  வேறொன்றுமில்லை...

  "பழைய நினைப்புதான்... எல்லாம்
  பழைய நெனப்புதான்....

  பதிலளிநீக்கு
 4. கவிஞருக்கு...
  வணக்கம்...

  நீரோடையில்
  நீந்தி..
  நனைந்து
  நீண்ட நாட்களாகின்றன...
  நான் சொல்வது... தங்கள்
  கவிதை எனும் "நீரோடை"யில்

  பூத்திருக்கும் - இப்
  புத்தாண்டில்....

  எல்லா
  வளமும்....
  நலமும் பெற்று...

  இல்லத்தார் அனைவரும்
  இனிது
  இன்பமுடன்....

  வாழ - நல்
  வாழ்த்துக்கள்....

  - நட்புடன்
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது