நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒளிவீசும் வெப்பத்தட்டு..
இறையளித்த திருவிளக்கு
வெப்பம் சுமந்துலவும் விசைவிளக்கு
துயிலெழுப்பும் தூண்டாமணிவிளக்கு
தன்  ஒளிக்கதிரால் புவியீர்த்து
இவ்வுலகின் இருளகற்றி
வெளிச்சம் தரவந்த ஒளிவிளக்கு!

உலகில் வாழும் உயிர்களுக்கு
ஊட்டம்கொடுத்து
வாட்டாம்போக்கும் வள்ளலாரே!
உன் வரவில்லையெனில்
வாடிப்போகும் நாரிப்போகும்
உயிர் வாழும் யாவும் சூரியரே!

உன்னொளியில் கடன்வாங்கி
இருள் நீக்கும் வெண்ணிலவும்!
உன் கதிர்வீச்சில்
உடல் பிணிதீர்க்கும் மானிடமும்!
உன் வரவுக்காக
இயற்கைமொத்தம் காத்திருக்கும்!
உன் கதகதப்பில் இவ்வுலகே
குளிர்காயும்!

அதிகாலை உன்வரவு
அமைதி காக்கும் - வானின்
உச்சிமீது நீ அமர்கையில்
உஷ்ண வெப்பம் கூடும்!
அந்தி நீ சாய்கையில்
அழகொளிகூட்டி
அடிவானும் நாணம்கொள்ளும்!

உன் வரவில் மந்தமெனில்
மழைமின்னலிடிக்கு கொண்டாட்டம்!
உன் வரவேயில்லையெனில்
மண்மீதிருக்கும் உயிர்களோ திண்டாட்டம்!

என்வீட்டு முற்றத்தில்
உனது ஒளிக்கீற்று - கண்டதுமெழும்
என்மனக் கூட்டுக்குள்ளே
எண்ணிலடங்கா கவிப்பாட்டு!
உனதொளிக்குள் ஒய்யார  வண்ணமிட்டு!
உலகைச் சுற்றும் நீயொரு வெப்பத்தட்டு!

மறையோனளித்த
இவ்வுலகின் மகத்துவமே
இச்சுடர்விளக்கு!
இச்சூரியரின் கடுஞ்சூட்டில்
இளகி கருக வேண்டாம்
மறுவுலகினில் மானுடமே யென
மன்றாடித் தொழுதிடுதே தினம் என்மனமே...


சூரியன் என்ற தலைப்பிற்கு கவிதை வயல் 202காக எழுதியது...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

 1. உன்னொளியில் கடன்வாங்கி
  இருள் நீக்கும் வெண்ணிலவும்!
  உன் கதிர்வீச்சில்
  உடல் பிணிதீர்க்கும் மானிடமும்!
  உன் வரவுக்காக
  இயற்கைமொத்தம் காத்திருக்கும்!
  உன் கதகதப்பில் இவ்வுலகே
  குளிர்காயும்.../// mika alumni Malikka ugkal kavikalil ellaathukum vilakkamundu mika azala ezuthurigka vazththukalma...

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை அக்கா...
  வலையில் எழுதுவதை குறைத்து விட்டீர்கள் போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தம்பி நலமா.குழந்தைகள் நலமா.வலைகளுக்கு வருகைதரும் சகோகள் குறைந்துவிட்டார்கள்.எல்லாம் சோசியல் நெட்வொர்க் பக்கம் போய்விட்டதால் எனது பதிவுகள் அங்கே பதியப்படுகிறதுமா.இங்கும் வந்துபோகிறேன் ஆனால் முன்போல் இல்லை.நேரம்கிடைல்கும்போது.மனம் கதறுது நீரோடையை காயவிட்டுடாதேன்னு.விடமாட்டேன் முன்புபோல் சீக்கிரம் நீரை நிரப்பி ஓடவிடுவேன் இன்ஷாஅல்லாஹ்.

   நீக்கு
 3. அன்பின் நியாஸுக்கு தங்களின் அன்பான கருத்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது