நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலைதளங்கள் இயங்குகிறதா?





 மீண்டும் இணைந்திடுவோம் மீளா அன்புடன்

நீண்ட இடைவெளிகள் வலைதள உள்ளங்களுக்குள் ஏற்பட்டதுபோன்ற ஓர் உணர்வு, முகநூல் மற்றும் டிவிட்டரின் ஆளுமையினாலும் அதனுள் நாமும் அடைமையாகிவிட்டதினாலும்,தனிப்பட்ட நமது வலைதளங்களில் சற்றே அல்ல கொஞ்சம் கூடுதலாகவே இடைவெளிகள் வந்துவிட்டது, நம்மில்பலர் நம்மையே மறந்துவிட்ட நிலைபோல், அதனில் சற்று நின்றுகொண்டும் நம்முடையவைகளையும் நிலைப்படுத்திக்கொண்டும், மீண்டும் நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் அன்பையும், நட்பினையும்  நமது எண்ணங்களையும் கருத்துகளாக பகிர்ந்துகொள்ளவேண்டுமென்பதே ஆவல், என்ன முயற்சிப்போமா?
 ================================================

                         அன்பு


அண்டப் பெருவெளியில்
ஆளற்று நிற்க்கும்போதும்
இறையால் விதைக்கப்பட்ட
இயற்கை விதைகள்
அன்புகொண்டு ஆரத்தழுவும்
ஆனந்தக் காற்றாய்!

ஆயுதமேந்திய ஆபத்துகள்
ஆட்கொல்லி விசமாய்
ஆங்காங்கே பரவியபோதும்
அடிமனக் கருணைகள்
அன்புகொண்டு தேம்பியழுகும்
அந்நியோன்னியமாய்!

மனக் குமுரல்கள்
மண்டிக்கொண்டு
மனிதரையே நிலைகுலைக்கும்போது
மெதுவாய் தலைகோதும் விரல்கள்
மென்மைகொண்ட ஆத்மார்த்தமாய்!

அவ[ன்]ள் போனலென்ன
நானிருக்கிறேன்
என்னுமிடத்தில்
நங்கூரமிட்டிருக்கும்
அன்பாயுதம் ஆணித்தரமாய்!

பாகுபாடின் பேதமற்ற
பச்சோந்திகளின் தோற்றமற்ற
நிறயின பாகுபாடற்ற
நோக்கியதிசையில் தீர்க்கமுற்ற!

வாஞ்சையாய், வசீகரமாய்,,
அரவணைப்பாய், அதட்டுதலாய்,,
தன்மையாய், தாயுள்ளமாய்,,
தோழமையாய், தன்னம்பிக்கையாய்,,

கருணையாய், கனிவாய்,,
அரணாய், ஆதரவாய்,,
இரக்கமாய், ஈகையாய்,,
இளம் புன்னகையாய்,,

வார்தைகளால்
வர்ணிக்க இயலாத
சொற்களால் வாழாமல்
செயல்களில் வாழுகின்ற
சொர்க்கத்தின் திறவுகோல்!

நம்பிக்கை துரோகத்தையும்
நெடுங்கால விரோதத்தையும்
கொடூர உள்ளத்தையும்
நலங்கெட்ட எண்ணத்தையும்
சீர்திருத்தும் நெம்புகோல்!

அன்பென்ற ஒன்றே
இப்புவியை புண்ணியமாக்கி
இயக்கும் பூகோலம்
அன்பென்ற காற்றில்லையெனில்
சுவாசங்களில் கலக்குமே விசவாய்வுகள்!

பலவீனதின் பலமும்,
பலத்தின் பலவீனமும் அன்பே!
அன்பென்ற அணுகுமுறை
அகிலத்தில் இல்லையெனில்
படைப்பினங்கள் மொத்தமும்
பயனற்றவையே!

அன்பின் பரிமாற்றங்கள்
அகம் புறங்கள்
அலவாவிக்கொள்ளும்வரை
ஆன்மாக்களும்
ஆத்மார்த்தங்களும் நிறைவுபெற்றவையே..






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

  1. வருக... வருக...

    பல படைப்புகள் தொடர்க...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ. தங்களின் அன்பான கருத்துகள் முதன்மையாகிவருமென நினைத்தேன், வந்துவிட்டது, மிக்க நன்றி சகோ. வாழ்த்துகளுக்கும் மீண்டும் வரவேற்றமைக்கும்..

      நீக்கு
  2. வருக வருக .
    வலைப்பூக்கள் தழைத்தோங்க வழிசெய்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சியமாக சகோ. தளைத்தோங்க வழிசெய் வகைசெய்வோம்.ஒன்றிணைந்து. தங்களின் வருகைக்கும் ஊக்கமிகு கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ

      நீக்கு
  3. நான் வலைத்தளத்துக்கு லீவு கொடுத்திருந்தேன். இப்ப திரும்ப வந்திட்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ, லீவு முடிஞ்சி வந்தாச்சில்ல இனி ஜமாய்க்கவேண்டியதுதான் தென்றல் வீச சாமரங்கள் இசைக்க வலைதளம் வசந்தம் பாடட்டும்.. மிக்க நன்றி புதுகைத்தென்றல், என்பக்கம் வந்து தென்றல் தலையசைத்து குளிர்வித்தமைக்கு..

      நீக்கு
  4. மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. என்னாச்சு...

    கிணத்தக் காணோம்...
    கிணறு வெட்டின இரசீது என்கிட்ட இருக்கு... ன்ற கதையா
    நான் பதிவிட்ட கருத்துக் காணோம்...

    அவ்வ்வ்வ்வ்...

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் மிகச் சில மாற்றங்கள் தவிர முகநூல் அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது. மாறவேண்டும் .மாறுவோம்..நீரோடைக்கு மீள் நல்வரவு.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது