நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கனவே கலையாதே! 2

 

இருவிழிகளின் கருவிழிகளுக்குள்ளே
காணும் காட்சியாவும் கண்முன்னே!-அது
கனவாவதும் கலைவதும் தினம் தினம்

இரவுநேர இருளுக்குள்ளே
இனம்புரியாதவைகள் சூழ்ந்திருக்க!
 
அசைந்தாடும் காற்றில் பூக்கள்
அள்ளி வீசும் வாசனைகளை
அமங்கலியான பெண் பூக்களும் நுகர!

மாந்தோப்புக்குள்ளே
மஞ்சள் குருவியின் சிறகு படபடக்க!

பொல்லாத குளிருக்கு மயிலும்
போர்வையில்லாது நடுங்க!

கடலுக்குள் கூடிக்கொள்ளும் அலைகள்
கரைக்குவந்து சண்டையிடுக்கொள்ள!

சாலையோர மரங்கலெல்லாம்
சாதி சண்டைகளற்று வரிசையில் நிற்க!

உலகம் உருண்டுவிடாதவாறு
உயர்ந்திருக்கும் மலைகள் தாங்கி நிற்க!

பொட்டலிலும் பாலையிலும்கூட
பச்சை பசேலென இயற்கை காட்சியளிக்க!

வெள்ளிகம்பிபோல் மின்னல் வந்து
விருட்டென்று பயங்காட்டி மறைய!

வெளிர்நிற மேகங்கள்
கருநிற மேகங்களோடு கொஞ்சிக்குலாவ!

வானவில் வட்டமடித்து
வானத்தை அழகுபடுத்த!

வான்மழையை விரும்பி -மண்
வசியம் செய்து அழைக்க!

வாடிய பயிர்களெல்லாம்
வனப்புகண்டு கூத்தாட!

மண்ணிலுள்ள ஜீவன்கள்
மகிழ்ச்சியில் மகிழ்ந்தாட!

நடுங்கும் குளிர்
நாடியை தொட்டு இசைக்க!

காலைத்தென்றலின்  ரிங்காரம்
காதுகளுக்குள் இதமாய் கேட்க!

மிதமான சூட்டோடு
மேனியை மெல்ல மீட்டிய சூரியன்
சுண்டி இழுத்தும் 

சுறுசுறுப்போடு எழும்பாமல் -ஏனோ
சுணங்கிக்கொண்டு மீண்டும் 

கைகால்களை சுருட்டிகிக்கொண்டு
கனவே கலையாதே! -இயற்கைக்
கனவை கலைக்காதேயென
கண்மூடியே கிடக்கசொல்கிறது மனது...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

  1. //கைகால்களை சுருட்டிகிக்கொண்டு
    கனவே கலையாதே! -இயற்கைக்
    கனவை கலைக்காதேயென
    கண்மூடியே கிடக்கசொல்கிறது மனது...//

    அழகாக ஆரம்பித்து அருமையாக முடிகிறது கவிதை.

    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. //அசைந்தாடும் காற்றில் பூக்கள்
    அள்ளி வீசும் வாசனைகளை
    அமங்கலியான பெண் பூக்களும் நுகர!//

    வித்யாசமான சொல்லாடல்... சகோ நலம்தானே ??

    பதிலளிநீக்கு
  3. ம்ம்..கனவுகள் நிஜத்தைவிட சுகமானது தான்... கனவில் மட்டுமே நாம் நினைக்கும்படி அனைத்தும் நடக்கும்... நிஜத்தில் அப்படி நடப்பது கனவு தான்...

    பதிலளிநீக்கு
  4. கனவுகள்தான் இப்போதைக்குச் சுகமும் இதமும்.உங்கள் வார்த்தைக் கோர்வைகள் இன்னும் அற்புதம் !

    பதிலளிநீக்கு
  5. கலையாத கனவுகள் காணும் கன்னியே!
    உன்கனவுகள் எங்களையும் கனவுலகத்திற்கே அழைத்துச்சென்று நிஜ உலகத்தை மறக்கச்செய்தது..

    மிக அருமையான சொல்லாடல்கள். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ..

    நாங்களும்தான் முட்டிபோட்டு யோசிக்கிறோம் ஜூஹூம் வரமாட்டேங்கிறதே..

    பதிலளிநீக்கு
  6. நனவினில் இருக்கும் இன்பம்
    நிகழ்வினால் இருப்பதில்லை என்பது
    உண்மையான உண்மை சகோதரி...
    சொல்லாட்சி கவியின் தரம் பேசுகிறது...

    பதிலளிநீக்கு
  7. கனவுக் கவிதை நல்லாத்தான் இருக்கு...!

    ஆனால்...!

    "கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்துபோகும் கோலங்கள்...!

    துடுப்புக்கூட பாரமென்று கரையத்தேடும் ஓடங்கள்...!" எனும் வைரமுத்துவின் வைரவரிகள்தான் நினைவுக்கு வருகிறது...!

    பதிலளிநீக்கு
  8. ஆஹா. அருமையான கனவு.
    நிஜமாகட்டும்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது