நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தனிமை

 


தவிக்கவைக்கும் நினைவுகள்
தவிடுபொடியாகி
தகிடுதத்தோம் பாடியபடி
தலைகீழாய் தொங்கும் வவ்வாலானது!

உயிரின் நிலவறைக்குள் ஒருவித
உணர்ச்சிகளின் தாக்கம்
நிலை[ல]நடுக்கம் கண்டதுபோல்
நிலவறை நிலைதடுமாறியது!

நாவறண்டு உதடு
உமிழ்நீரைத் தடவியது
நீருண்ட மயக்கத்தில்
நீண்டது நிலவொளியில் இரவு!

நிம்மதி நாடிய நெஞ்சுக்குள்
நீட்டி முழங்கிய மெளனம் மட்டும்
நிம்மதியாய்
நித்திரைகொண்டது

நெஞ்சம்மட்டுமேனோ!
நித்திரையை தொலைத்து
நெடுநேரம் கண்விழித்திருந்து
கானல் உண்டது!..அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

22 கருத்துகள்:

 1. "தனிமை" என்பதே ஓர் வரம் என எண்ணுபவன் நான்...!

  எனக்குள் நானே
  என்னை நுழைத்து...
  ஓர் பார்வையாளனாய்...!
  ஓர் விமர்சகனாய்...!
  என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நிலையை..
  என் "தனிமை"
  எனக்களிக்கும்...!

  எவன் ஒருவன் "தனிமை"யில் மூழ்கி...!

  தன்னோடு தானே...!

  தன் நடத்தையை...
  தான் நடந்துகொண்டதை...
  தற்பரிசோதனைக்கு உள்ளாக்கிக் கொள்கிறானோ.... அவனே

  "மனிதன்"...!

  ஒருவன் தன்னைப் படைத்த இறைவனிடமும் பொய் சொல்லலாம்...!

  ஆனால்..!

  தனிமையில் தன்னைத்தான் கேட்கும் கேள்விகளுக்கு... பதிலாய் தான் பொய் சொல்லமுடியாது...!

  காரணம்...!

  தான் செய்த செயலின் காரணியாய்... உடந்தையாய்... அல்லது செய்கையை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது... தன் மனது என்பது தனக்கே தெரியும்...!

  எனவே...!

  "தனிமை"யை நான் நேசிக்கிறேன்...!

  பதிலளிநீக்கு
 2. நண்பர்களே...!

  ஆனால்...!

  இப்போது...
  இன்றைய இளைஞர்கள்...
  குறிப்பாய் இளைஞ்சிகள்...!

  "தனிமை"யில்
  தன்னைத்தானே சிந்தித்து...!

  நல்லவனா...!
  தன் நடவடிக்கைகள் சரிதானா...!
  தான் நடந்துகொள்ளும் விதம் சரிதானா..! என
  தன்னையே தான்
  "தனிமை"யில்
  சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்புவதே இல்லை...!

  எப்போதும்...!

  மொபைல் "ஹெட் போன்" ஒயரை சொருகி...!

  தன்னைப் பற்றி சிந்திக்காமல்

  இரவும் பகலும்...!
  பணியிலும்...! ஓய்விலும்...!
  பேருந்து பயணத்திலும்...!
  நிற்கும்போதும்...
  நடக்கும்போதும்...
  வாக்கிங் என்று ஓடும்போதும்

  கனவுகளிலேயே...!
  பாடல் எனும் கனவுகளிலேயே...!
  தன் சிந்தனையை செலுத்திக்கொண்டிருக்கிரார்​கள்...!

  இதனால்...!

  இவர்கள்... தன்னை பற்றி சிந்திப்பதையே மறந்துபோகிறார்கள்...!

  "தனிமை"யில் சிந்திப்பதால்...

  இன்று நாம் செய்த நல்லவைகள் என்ன? கெட்டவைகள் என்ன? என்று தனக்குள்ளேயே தான் கேள்வி எழுப்பினால்... தன் மனதே தகுந்த பதில் அளிக்கும்... அதற்கொரு வாய்ப்பை "தனிமை" அளிக்கும்...! சிந்தனை சக்தி வளரும்...!

  ஆனால்...!

  இவர்கள்...

  "பாதை இங்கே...
  பயணம் எங்கே...!
  மயங்கும் நெஞ்சே...!" என்று பாடல் வரிகளைப் போல...!

  மயக்கத்திலே உலவி வருகிறார்கள்...!

  பதிலளிநீக்கு
 3. சரி...!

  என்னாச்சு...

  "அரவா(ணி)நீ ஆளுமை ஞனியா".........!

  பதிலளிநீக்கு
 4. அருமையான வரிகள் //

  நிம்மதி நாடிய நெஞ்சுக்குள்
  நீட்டி முழங்கிய மெளனம் மட்டும்
  நிம்மதியாய்
  நித்திரைகொண்டது//

  வாழ்த்துக்கள் தொடர்ந்த்ம் எழுதுங்கள் சகோ...:)

  பதிலளிநீக்கு
 5. அப்பாடா வாங்கய்யா வாங்க முரளி அய்யா ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப நாளைக்கப்புறம் முதல் வருகையாத்தெரியுது அதுவும் வரிசையா கருத்து ம் ம்ம்

  பதிலளிநீக்கு
 6. அதுக்குத்தேன் அடிக்கச்சொல்லுதேன் கவிதை நூல் வெளியிடுங்கன்னு கேட்டாதனே..

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. //காஞ்சி முரளி கூறியது...

  சரி...!

  என்னாச்சு...

  "அரவா(ணி)நீ ஆளுமை ஞனியா".........!//


  அதுவா. என் எழுத்துகள் பிறரை காயப்படுத்தவோ அல்லது அவர்களின் உணர்களை சீண்டும்படியோ இருக்கக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருப்பவள். அக்கவிதை என்னைக்கேட்டுக்கொண்ட ஓர் குழந்தைக்காக அறிவுரையின்பேரில் எழுதினேன்.

  அதேகவிதை மற்றொரு மனதை சங்கடப்படுத்தியதையும் உணர்ந்தேன். [உண்மைகள் கசந்தபோதும் அதை உலக்குச்சொல்வது சரிதான்] ஆனால்;; சிலவிசயங்களை சொல்வது சங்கடத்தை ஏற்படுத்துமென்றதால் அதனை நீக்கிவிடுங்கள் தோழி என்ற வேண்டுதலின் பேரில் அதனை நீக்கிவிட்டேன் சகோ..

  இதைவைத்து சிலர் தர்க்கம்பண்ண முனைகிறார்கள். மதச்சாயம்பூசி மல்லுக்குநிற்க்கப்பார்க்கிறார்கள்.முகநூலின் வாயிலாக..

  நான் யாரிடமும் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. இக்கவிதை சம்மந்தபட்டவர்களின் கேள்விகளுக்கு பதிலத்துவிட்டு இப்பதிவை நீக்கிவிடுங்கள் என்ற கோரிக்கைக்கு நீக்கிவிட்டேன்.அதற்க்கு நன்றி தோழி என்று கருதளித்தமைக்கும் நன்றிசொல்லிவிட்டேன்..

  ஆனால் இப்பதிவை நீக்கியது சரியாம். ஆனால் இதற்க்கு அங்கு[முகநூலில்] ஒரு இழை திறந்து நடத்திய கருத்துப்பரிமாற்றங்களை நீக்கியது கோலைத்தனமாம் என்று வேறொரு சகோதரர் என்னை வம்புக்கு இழுக்கிறார். வாதம் விவாதம் தவறல்ல வீணான வாதங்கள் வீண்விபரீதங்களை உண்டுபண்ணும் என்று நான் முட்டாள்தான் நீங்களே அறிவாளியாக இருங்கள் என சொல்லி அக்குழுவிலிருந்து நீங்கிவிட்டேன்

  பதிலளிநீக்கு
 9. Rathnavel Natarajan கூறியது...

  அருமை.
  வாழ்த்துகள்//

  மிக்க நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 10. // சிட்டுக்குருவி கூறியது...

  அருமையான வரிகள் //

  நிம்மதி நாடிய நெஞ்சுக்குள்
  நீட்டி முழங்கிய மெளனம் மட்டும்
  நிம்மதியாய்
  நித்திரைகொண்டது//

  வாழ்த்துக்கள் தொடர்ந்த்ம் எழுதுங்கள் சகோ...//

  வாங்க சகோ. தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 11. நான் ஒரு காலத்தில் முதல் வருகையாய் வந்தவன்... வந்ததினால் மிக மகிழ்ச்சியடைன்தவன்...!

  ஆனால்...!

  "அது ஒரு நிலாக்காலம்" என்பதைப்போல பதிவருக்கும் பின்னூட்டமிடுபவர்களுக்கும் ஓர் நட்பு.. அதனால் ஓர் உறவு... அதுவும் நல்லுறவு இருந்தது...! ஆனால்...! இந்த முகநூல்... ட்விட்டர்... வந்ததும்... அவற்றில் பல பதிவர் கும்மியடிக்க சென்றுவிட்டதால்...

  அதோடு... உதாரணமாய்...!

  பாரதிராஜாவின் முதல் படமான "16 வயதினிலே" ஆரம்பித்து... "வேதம் புதிது" வரை நல்ல கருத்தாழமும்... புதுபுது கோணங்களில் படம் கொடுத்தார்...பின்னால் அவர் படங்கள் சொல்லும் அளவுக்கு இல்லை... காரணம்.. சரக்கு இல்லாமல் போய்விட்டதோ? என்ற எண்ணம் எனக்கு உண்டாகியது...! அதுபோலவே...! 2009 இறுதியிலிருந்த பதிவுலத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவுகள்.. அது கட்டுரையோ... கவிதையோ... எதுவாய் இருந்தாலும் மிகமிக சிறந்ததாய் இருந்தது..! அதனால்.. ஆரோக்கியமான போட்டி இருந்தது...! அதில் யார் முதல் கருத்து பதிவிடுவது என்று ஓர் ஆரோக்கியமான போட்டி இருந்தது...! அதோடு..! அப்போது எத்தனை பதிவர்கள்... ஒவ்வொருவரும் ஓர் கருத்தை பதிவிடுவதில் வல்லவர்கள்...! எந்த பதிவை முன்னாள் படிப்பது... எதை பின்னாடி படிப்பது என்ற குழப்பம் நிலவிய "அது ஒரு நிலாக்காலம்... கனாக்காலம்....!". அப்போது இந்த பதிவுலகம் ஓர் ஆரோக்கியமானதாய் இருந்தது... இப்போது நோய் பீடித்த உலகமாய் உள்ளது...

  இப்போதோ...

  பதிவர்களில் பலர் முகநூல்... ட்விட்டர்... என்று சென்று அதில் தங்கள் "முனை மழுங்கிய கத்திகளாய்"... தங்கள் ஆற்றலை வீணடித்துகொண்டிருக்கிரார்கள் என்பது என் கருத்து...! அதிலும் சில நல்ல பதிவர் கும்மி அடிப்பதில் (நீங்களும் மற்றும் சிலர் அல்ல ) ஆர்வம் காட்ட துவங்கிவிட்டது வேதனையாய் உள்ளது...!

  அதனால்தான் சிலபல நாட்கள் இந்த பதிவுலகம் பக்கமே வராமல் இருந்தேன்...!

  இந்த "தனிமை" கவிதை... நீன்ன்ன்னன்ன்ன்ன்ன்ட நாட்களுக்குப் பின் ஓர் நல்ல கவிதை...!

  அதனால்தான் என் முதல் கருத்து...!

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. ////அன்புடன் மலிக்காசொன்னது…அதுக்குத்தேன் அடிக்கச்சொல்லுதேன் கவிதை நூல் வெளியிடுங்கன்னு கேட்டாதனே../////

  கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
  தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
  பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
  கல்லாதான் கற்ற கவி. என மூதுரையில் - ஒளவையார் சொன்னதைப் போல...

  "உணர்வுகளின் ஓசை" எனும் கவிதை நூல் கவிஞர் மலிக்கா எனும் மயில் நடனமாடுவதை பார்த்து...

  வான்கோழியாகிய "காஞ்சி முரளி" ஆடமுயற்சித்தால்...!!!!!!!!!!!!!!!!!!!!!

  குயில் பாடும் பாடலைக் கேட்டு...
  கோட்டான் கத்தினால்..
  கல்லெறிவார்கள்....!


  அது... அதுவாகவும்...!
  இது... இதுவாகவும்....! இருந்தால்தான் மரியாதை...

  அதது அததுவாய்த்தான் இருக்கவேண்டும்...!

  எல்லாரும் கவிஞர் மலிக்கா ஆகிவிடமுடியுமா...?

  பதிலளிநீக்கு
 14. பக்கம் பக்கமா

  பதில் எழுதினா...!

  ஒரே வரில பதில் போட்டா... என்ன அர்த்தம்...!

  உங்களுக்கு மட்டும்தான் வேல இருக்கா..??????????

  கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது...!

  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்................வ்வ்வ்வவ்வ்வ்வவ்..!

  பதிலளிநீக்கு
 15. காஞ்சி முரளி கூறியது...

  பக்கம் பக்கமா

  பதில் எழுதினா...!

  ஒரே வரில பதில் போட்டா... என்ன அர்த்தம்...!

  உங்களுக்கு மட்டும்தான் வேல இருக்கா..??????????

  கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது...!

  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்................வ்வ்வ்வவ்வ்வ்வவ்..!//

  பெரியவாள் அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கியிருகும்போது அதுவும் கவிதைகளைக்கொண்டு சுட்டிக்காட்டிருக்கும்போது இந்த சின்னவாளுக்கு அதை பார்த்து ஆனந்தபடவே தெரிந்தது பெரியவாளின் பேச்சுக்கு சின்னவாள் எதிர்பேச்சு பேசலாமோ அதேன் அப்படியே மலைச்சுபோய் நின்னுட்டேன் ஒத்தவரியில் பதிலைபோட்டுவிட்டேன்..

  இது ஒரு குற்றமா?

  பதிலளிநீக்கு
 16. //பதிவர்களில் பலர் முகநூல்... ட்விட்டர்... என்று சென்று அதில் தங்கள் "முனை மழுங்கிய கத்திகளாய்"... தங்கள் ஆற்றலை வீணடித்துகொண்டிருக்கிரார்கள் என்பது என் கருத்து...! அதிலும் சில நல்ல பதிவர் கும்மி அடிப்பதில் (நீங்களும் மற்றும் சிலர் அல்ல ) ஆர்வம் காட்ட துவங்கிவிட்டது வேதனையாய் உள்ளது...! //

  அங்கே நல்லதும் நடக்குது கெட்டதும் நடக்குது!

  அங்கே சிலர் சண்டைக்கென்றே கங்கனம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் மிக எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஆளே காலியாகிவிடுவோம்..
  இதில் நாம் வேதனைப்படவேண்டியதில்லை .. அது அவரவர்களின் விருப்பம் சார்ந்தது அதில் நாம் தலையிட வேண்டாமென நினைக்கிறேன் அய்யா..

  பதிலளிநீக்கு
 17. தமிழ்த்தோட்டம் கூறியது...

  கலக்கல்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in//

  வாங்க தம்பி வருகைக்கும் கலக்கலுக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது