நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மகனே! என்னை மன்னித்துவிடு!


பத்துமாதங்கள் சுமந்து
பலசிரமங்களுக்கிடையில்  வளர்த்து
மழையிலும் வெயிலிலும்  
மார்பிலும் தோளிலும் சாய்த்தபடி
ஏறாத ஆஸ்பத்திரிகளெல்லாம் ஏறி
கண்ணயறாது பார்த்து காத்தபோது
கனக்காத மனம் அறியாத பாரம்!

எங்கோ! யாரி மேற்பார்வையிலோ!
எனதன்பு மகனை விட்டு விட்டு
எடுதடி வைக்கும்போது
ஏற்பட்ட மனபாரமதை
என்னவென்று  சொல்வேன்!
தொப்புள்கொடி உள்ளுக்குள்ளே
துடிதுடித்ததே ஒரு துடிப்பு!
ஆயிரம் குடம்கொண்டு
அமிலத்தை ஊற்றியதுபோல்
அந்நேரம் கருகியதே உன்னுடம்பு!
உள்ளங்காலில் நரம்புக்குள்ளே
ஊர்ந்து ஏறியதே விசப்பாம்பின் கொத்து!
நாடித்துடிப்பெல்லாம் அடங்கிபோக
வெற்றுடம்புமட்டும் சேர்ந்ததே ஊர்வந்து!

நடைபயிலும் வயதில்
உன் நடைகண்டு ரசித்தவள்!
வாய்பேசும் வயதில்
உன் வார்த்தைகள் கேட்டு வியந்தவள்!
ஓடியாடும் வயதில்
உன்னை ஓடவிட்டு மகிழ்ந்தவள்!
ஒருநொடி உன்முகம் சுணங்கினாலும்
ஊரைக்கூட்டி அழுதவள்!

”ஆனாலின்றோ”
ஏடெடுத்து படித்து ஏற்றமோடு வளர
கல்வியென்னும் ஒளியைக்கொண்டு-இந்த
கலியுலம் வென்றிட
தரணியிலே எனது மகன்
தவப்புதல்வனாய் வாழ்ந்திட
தனியே விட்டு வந்தேனே
பள்ளி விடுதியில்
தவிக்கவிட்டு விட்டேனே!
விட்டு விட்டு வீட்டில் வந்து
விளக்கில் விழுந்த
விட்டிலாகிப் போனேனே!

மகனே என்னை மன்னித்துவிடு!
மடிசுமந்தாய் மாற்றாரிடத்தில்
விட்டுவிட்டாளே என மருகிவிடாதே!
எல்லாம் உனது நன்மைக்குத்தான்
என்றெண்ணி எடுத்து ஓதிப்படி!
எள்ளளவும் இருக்காது
என்றைக்குமே தாய் தந்தையன்பில் கலப்படி!

இது அறிவியல் உலகமடா கண்ணே!
இதில் அறிவில்லாமல் வாழ
இயலாதடா மகனே!
அதனால்தானடா உன்முன்னே!
அழுகையெல்லாம் அடக்கிக்கொண்டு
அலறும் உணர்வையெல்லாம் ஒடுக்கிக்கொண்டு
ஆறுதாலாய் பேசுவதுபோல் நடித்தேன்
அலறித்துடிக்கும் உயிரின் வலியை பொறுத்தேன்
அதனைமீறியும் உதிர்ந்துவிட்ட கண்ணீர் துளியை
நீ அறியுமுன்னே துடைத்தேன்!

தவிப்புகள் இருக்கத்தான் செய்யும்
தாங்கிக்கொள்ளடா அன்பு மகனே! என
உனக்காறுதல் சொல்லி வந்தேனே
தாரை தாரையாய் கண்ணீர் வருதே
தாங்கவில்லையே எனது நெஞ்சமே!

அன்பு மகனே!
அங்கிருந்துகொண்டு
அழுதுமட்டும் விடாதே!
அடங்கிபோய்விடும் எனது
அத்தனை உணர்வுகளும்!
அணுவளவும் குறையாது எப்போதும்
அலைபாயும் எனக்குள் உனது நினைவுகளும்!


ஈன்றவர்களின் இருதயங்கள்
ஈனப்பட்டு அழுதபோதும்
ஈருலக வாழ்க்கையிலும் எங்கள் மகன்
எவ்வித சிரமங்களும் படக்கூடாதென்றே
எண்ணுவதே பெற்றோர்களின் உள்ளம்

ஈ எறும்பு அண்டாமல்
ஈரக்குலைக்குள் காத்த உன்னை
தீயவைகள் எதுவும் தீண்டிடாது
தாய்தந்தையின் பிராத்தனைகள் உனைக்காக்கும்!

ஐந்து வேளையும் தொழுதிடு!
அகிலம் ஆளும் இறைவனை
அழுத்தமாய் மனதில் நினைத்திடு!
அதோடிந்த அன்னைதந்தையையும் சேர்த்திடு!
அங்குள்ளோரிடமும் அன்பு கொண்டு நடந்திடு!
அறிவை வளர்த்து அகிலம் போற்ற கற்றிடு!
இம்மை மறுமை இரண்டிலும்
இன்பமாக வாழ்ந்திடு-எங்கள்
இதயங்கள் குளிர்ந்திட வாழ்ந்திடு...

 ------------------------------------------------------------
எனது அன்பு மகனை நேற்றைய முந்தினம் குற்றாலம் சையத் ரெசிடன்சஸ் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்த்துவிட்டு வந்துள்ளோம். முதல் முறையாக வேற்றிடத்து வாசம் என் குழந்தைக்கு. எனக்கோ வெற்றிடமானது வீடும் மனமும்.. என்ன செய்ய காலத்தோடு படுவேகமாக ஓடவேண்டிய சூழலில் பெற்று வளர்க்கும் பிள்ளைகளை கூடயிருந்தே படிக்கவைக்கமுடியா சூழ்ச்சியும் உருவாகிவிடுகிறது. இருதயம் இளகி விட்டு வரவில்லை இதயம்  இறுகி விட்டுவந்தேன் என்னைபோன்று எத்தனை பெற்றோர்கள் தவித்திருப்பார்கள்.
இன்று அலைபேசியில், காலை எழுந்ததும் குளித்து, தொழுதுவிட்டு,  குர்ஆன் ஓதிவிட்டு, நானாக டிரஸ் போட்டுகொண்டு சாப்பிடபோகிறேன்மா என்றதும் தொண்டைக்குள் ஏதோ அடைத்ததுபோன்று எனக்கு பேச்சே எழவில்லை இருந்தபோதும்.அதனை மறைதுக்கொண்டு அன்பாய் பேசிவிட்டு இரவு போன் செய்கிறேன்டா செல்லம் என்று வைத்துவிட்டு  சற்றைக்கே சற்று மனம் சமாதானத்தை ஏற்றுக்கொண்டதும் இதை எழுதுகிறேன்.. என் மகனின் நற்படிப்புக்காவும் மற்றும் அவனின் மனதைரியத்திற்க்கு தாங்கள் அனைவரின் பிராத்தனைகளையும் துஆக்களையும் வேண்டுகிறேன்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

29 கருத்துகள்:

  1. மல்லிக்கா சூப்பர் ,படிக்கும் போது இரு சொட்டு கண்ணீர் கண்களிலே, காலப் போக்கில் சரியாகிவிடும்.. மரூபிற்கு எங்களது ஆசிர்வாதங்கள்

    பதிலளிநீக்கு
  2. சகோ....அருமையான கவிதை...இதை படித்ததும் 9 ம் வகுப்பில் முதன் முறையாக என்னை ஹாஸ்டலில் என் பெற்றோர் விட்டுச் சென்ற நாள் கண் முன்னே வந்தது....அன்றிலிருந்து நான் படித்தது அனைத்தும் ஹாஸ்டலில் தான்.... விடுமுறைக்கும் மட்டும் தான் வீடு... கொடுமையான கால கட்டம் அது...ஆனால் அது தான் எனது இன்றைய நிலைக்கு காரணாம்..உங்கள் மகனும் எதிர்கால்த்தில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வான்.. ஆமீன்...

    பதிலளிநீக்கு
  3. அக்கா...

    சலாம்

    கவிதை வரிகளை படிக்கும் போது உடலெல்லாம் துடித்தது. 4 மணி நேரம் மகனை பிரிந்திருக்கவே காலையிலும் இதே போல் தான் துடித்தேன். அதே உணர்வை உங்கள் கவிதை வரிகளில் வெளீபடுத்தியிருக்கீங்க.

    கடைசியாய் அந்த விளக்கம் பார்த்ததும் "நானாக ட்ரஸ் போட்டுக்கொண்டேன் என மகன் சொன்னதும் என்னையும் மீறி கண்ணில் நீர் வந்தது. தம்பிக்கு இறைவன் கல்வி செல்வத்தை சிறப்பாக்கி தந்து தலை சிறந்து வாழ தாய் தந்தைக்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. அன்பு சகோதரி,
    மகவைப் பிரிந்த சோகம்
    வரிகளில் தெரிகிறது...

    மேன்மையாக படித்து
    நற்குணத்தோன் எனப்பெயர்பெற்று
    எதிர்வரும் வாழ்வு தனில்
    இன்புற்று இருக்கு
    மருமகனுக்கு
    அன்பு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  5. தாய்..தன் மகன் மீது கொண்ட அன்பை

    நேரடியாக காட்டாமல் ..அவன் எதிர் காலம்

    சிறக்க..தன் சொந்தக் காலில் நிற்க ..,

    படித்த பண்புள்ள அன்ப்புள்ள தாய் கல்வி கண்

    திறக்க மகனை பிரிந்து கண் கலங்கும் தாய் கவிதை

    பாடி எங்கள் மன கண்ணை கசிய வைத்து விட்டீர்கள் . எனக்கு

    ராஜாளி பறவையின் ஞாபகம் வருகிறது கொஞ்சம்

    வளர்ந்து ஆளாகிய பறவை குஞ்சை ஆகாயத்துக்கு

    கொண்டு சென்று பறக்க பயிற்சி கொடுக்கும்

    பறக்க முடியாத பச்சத்தில் மீண்டும் கூட்டுக்கு

    அழைத்து வரும் ..பறக்க தெரிந்த பின்னர்

    இரையை பறக்கும் போதே பிடிக்க செய்யும்

    ராஜாளி பறவைகளின் ராஜா

    தங்கள் பிள்ளை கல்வியில் ராஜாவாக மின்னிட

    வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  6. தாய்..தன் மகன் மீது கொண்ட அன்பை

    நேரடியாக காட்டாமல் ..அவன் எதிர் காலம்

    சிறக்க..தன் சொந்தக் காலில் நிற்க ..,

    படித்த பண்புள்ள அன்ப்புள்ள தாய் கல்வி கண்

    திறக்க மகனை பிரிந்து கண் கலங்கும் தாய் கவிதை

    பாடி எங்கள் மன கண்ணை கசிய வைத்து விட்டீர்கள் . எனக்கு

    ராஜாளி பறவையின் ஞாபகம் வருகிறது கொஞ்சம்

    வளர்ந்து ஆளாகிய பறவை குஞ்சை ஆகாயத்துக்கு

    கொண்டு சென்று பறக்க பயிற்சி கொடுக்கும்

    பறக்க முடியாத பச்சத்தில் மீண்டும் கூட்டுக்கு

    அழைத்து வரும் ..பறக்க தெரிந்த பின்னர்

    இரையை பறக்கும் போதே பிடிக்க செய்யும்

    ராஜாளி பறவைகளின் ராஜா

    தங்கள் பிள்ளை கல்வியில் ராஜாவாக மின்னிட

    வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  7. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

    கவிதையை படித்ததும் மனம் ஏனோ கனத்தது சகோதரி...பார்த்து பார்த்து வளர்க்கும் பிள்ளைகளை எதன் காரணமாக என்றாலும் தனியாக விட்டு வருவது என்பது மிக கடினம்..ஆனால் அவர்களின் இரு வாழ்க்கையை எண்ணும் போது நமதான கடைமையை சரியாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.அல்லாஹ் உங்களுக்கு பொறுமையை கொடுக்கட்டும்.

    அருமை தம்பிக்கு அவர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க கருணையாளனிடம் என்னுடைய துஆ

    பதிலளிநீக்கு
  8. தாய்ப் பாசம்
    என்ன சொன்னால் உங்கள் மனதுக்கு இதமாகும்
    அதை சொல்ல தெரியாமல் இதோ நானும் ....ம்ம்ம்

    நல்ல முறையில் படித்து பட்டங்கள் பெற
    என் துஆ க்களும் சகோ

    பதிலளிநீக்கு
  9. தாய்மையின் அன்பை கண்டேன், பாசம், நேசம் ஆகிய வாசம் கண்டேன் உங்கள் உணர்வில்....... உங்கள் மகன் நன்றாக படித்து அறிவியலை வென்று சாதிக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. சமீபத்தில் நான் படித்த பதிவுகளில் மிகச் சிறந்தப் பதிவு ......

    புதிய வரவுகள்:
    பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

    எனது தள கட்டுரைகளில் சில:
    அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-தளத்திற்கு வந்து உங்க கருத்தை தெரிவியுங்கள்........www.tvpmuslim.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. அழுகையெல்லாம் அடக்கிக்கொண்டு
    அலறும் உணர்வையெல்லாம் ஒடுக்கிக்கொண்டு
    ஆறுதாலாய் பேசுவதுபோல் நடித்தேன்
    அலறித்துடிக்கும் உயிரின் வலியை பொறுத்தேன்
    அதனைமீறியும் உதிர்ந்துவிட்ட கண்ணீர் துளியை
    நீ அறியுமுன்னே துடைத்தேன்!//

    அழுதே விட்டேன் அக்கா.
    அன்னையின் உணர்வுகள்
    அப்படியே வார்த்தைகளில் வடித்துவிட்டீர்கள்
    உங்களைபோன்றே அனைத்து அம்மாக்களும் இருந்தால் எப்படியிருக்கும் இப்பூமி..

    ஹாஸ்டலில் இருந்து நான் பட்ட வேதனைகள் எனக்குத்தான் தெரியும். பாசங்களுக்கா ஏங்கியுள்ளேன் தெரியுமாக்கா.
    தம்பியை அப்படியெல்லாம்,ஏங்கவிடமாட்டீங்க நீங்கன்னு இதிலிருந்தே தெரியுதுக்கா..

    கடவுள் பத்திரமா பார்த்துகொள்வார்
    நன்றாக ப்டித்து பெரிய ஆளாய் வருவான் கவலைப்படாதீங்கக்கா..

    பதிலளிநீக்கு
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பள்ளிப் பிராயத்தில் பிள்ளைகளை விடுதிகளில் தங்க வைத்துப் படிக்க வைப்பதில் உடன்பாடில்லாதவன் நான்.

    எனினும், சரியான காரணங்களால் அப்படி இட நேர்கையில் அதில் குறை கூறவும் இயலாதுதான்.

    உங்கள் சோகத்தை எங்களுடன் பகிர்ந்ததில் உங்கள் பாரம் குறையலாம். எங்களுக்கோ தங்கள் மகனின் படிப்புக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியில் உதவ வழியில்லை.

    வாழ்க்கை எத்தனை திருப்பங்களையும் 'திடுக்'களையும் கொண்டது, இல்லையா சகோ?

    கவிதை மனத்தைக் கனக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பள்ளிப் பிராயத்தில் பிள்ளைகளை விடுதிகளில் தங்க வைத்துப் படிக்க வைப்பதில் உடன்பாடில்லாதவன் நான்.

    எனினும், சரியான காரணங்களால் அப்படி இட நேர்கையில் அதில் குறை கூறவும் இயலாதுதான்.

    உங்கள் சோகத்தை எங்களுடன் பகிர்ந்ததில் உங்கள் பாரம் குறையலாம். எங்களுக்கோ தங்கள் மகனின் படிப்புக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியில் உதவ வழியில்லை.

    வாழ்க்கை எத்தனை திருப்பங்களையும் 'திடுக்'களையும் கொண்டது, இல்லையா சகோ?

    கவிதை மனத்தைக் கனக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. மனம் கனக்கிறது மல்லிக்கா.சரி...குழந்தையின் எதிர்காலம் நல்லதுக்குத்தானே.ஆறுதல் கொடுங்கள் அவருக்கும் !

    பதிலளிநீக்கு
  15. இந்த
    இயந்திர வாழ்க்கையில்

    இது
    இயல்பான ஒன்றுதான் என்றாலும்...!
    மனது மறுக்கும்...! துடிக்கும்...!


    கண்ணதாசனின் "கண்ணிலே என்ன உண்டு... கண்கள்தான் அறியும்...!" வரிகளில் சொன்னதைப்போல...

    அவன் எதிர்கால நல்வாழ்க்கைக்கென்றாலும்....
    மகனின் தற்காலிகப் பிரிவு என்பது "வலி" தாங்குபவர்களே உணர முடியும்...!
    "வரி"களில் வடித்தல் இயலாது...!


    மரூப் வாழ்க்கையில் பலபல வெற்றிபடிகளைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  16. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.நபிமொழி
    சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.

    எனது மகனை ஐந்தாவது படிப்பதற்கு சென்னை கிரசென்ட் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்த போது நீங்கள் நினைத்தபடியே நானும் மிகவும் பிரிவு ஆற்றாமையால் வருத்தம் கொண்டேன். அல்லா அனைத்தையும் நன்றாக ஆக்கி வைத்தான். நல்ல காரியங்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்க முடியாது.நல்லதற்காக நீங்கள் சில நேரங்கள் பிரிந்து இருப்பது தவிர்க்க முடியாது . பொருள் நாடி மற்ற நாடுகளுக்கு செல்லும் நிலை. வீட்டில் இருந்தால் பொருள் கிடைக்காது. கல்வியை நாடி போவது உயர்ந்த செயல். இது இஸ்லாம் விரும்புகின்றது. அதனால் அதை மகிழ்வாக ஏற்று மன நிம்மதி அடைவது சிறப்பு . அல்லாஹ தங்கள் மகனுக்கு சிறந்த கல்வியும் உடல் ஆரோகியத்தையும் தந்தருள பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் என்னால் இதை ஏற்க முடியவில்லை அக்கா. விரிவாக இதைப் பற்றிப் பேசினால், ஏற்கனவே வதங்கியிருக்கும் உங்கள் மனம் இன்னும் வருத்தப்படும். இறைவன் உங்களுக்கும், மகனுக்கும் பொறுமையைத் தரட்டும்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் பையன் எங்கே படிக்கிறான் என்பதை விட அவன் எப்படி படிக்கிறான் என்பதுதான் அதை விட முக்கியம்.
    அவன் படிப்புக்காக எதை இழக்கிறான் இதனையும் நாம் சித்திக்க வேண்டும்.
    Please visit
    http://nidurseasons.blogspot.in/2012/06/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  19. எனது உணர்வுகளின் ஓசைகளுக்கு செவிசாத்ததோடு ஆறுதல்களையும் அன்பையும் அள்ளித்தந்து என செல்லத்திற்க்கு பிராத்தனைகளையும் ஆசிகளையும் வழங்கிய அன்பார்ந்த பாச நெஞ்சங்களுக்கு எனது உணர்ப்பூர்வமாக நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பள்ளிப் பிராயத்தில் பிள்ளைகளை விடுதிகளில் தங்க வைத்துப் படிக்க வைப்பதில் உடன்பாடில்லாதவன் நான்.//

    அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

    நானும் அவ்வகையை சார்ந்தவளாகத்தான் இருந்தேன் எனக்கும் இதனோடு உடன்படில்லை. சூழல் சில நேரம் சூழ்ச்சி செய்துவிடுகிறது வேறு வழியில்லாமல் சிலவற்றுக்கு ஒப்புக்கொள்ளும்படியாகிறது..

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. பிளாகர் ஹுஸைனம்மா கூறியது...

    நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் என்னால் இதை ஏற்க முடியவில்லை அக்கா. விரிவாக இதைப் பற்றிப் பேசினால், ஏற்கனவே வதங்கியிருக்கும் உங்கள் மனம் இன்னும் வருத்தப்படும். இறைவன் உங்களுக்கும், மகனுக்கும் பொறுமையைத் தரட்டும்.//

    வாங்கம்மா..

    காரணம் சொல்லப்போவதில்லை ஹுசைனம்மா. எனக்கு காரணம் சொல்லத்தெரியவுமில்லை. காலம் சிலநேரம் கணகிடமுடியாதவைகளையும் கணக்கிடவைக்கிறது.
    எதை ஒன்றை செய்யக்கூடாதென்று சிலவற்றோடு மல்லுக்கு நின்றாலும் நடப்பதுதானே நடக்கும். அதுபோல் இதுவும்
    நாளை நடப்பதை நாயன் அறிவான் ஆனால். நாளை இன்னது நடக்கவேண்டுமானால் அதற்க்கு இன்றே என்னதென்று சிறு முயற்ச்சியாவது செய்துவை. யாரோ சொன்னாங்களாம் [யாரதுன்னெல்லாம் கேட்கக்கூடாது எனக்கு தெரியாது]

    இறைவன் நாட்டம் எதுவோ இது நல்லதாக நடக்கவேண்டும். என்று எண்ணியபடியே! மனவேதனையின் துடிப்போடு என்றும் வேண்டியபடியே! தாயாக தனித்திருக்கிறேன் என் தவப்புதல்வனை ஈருலகிலும் சிறப்புமிக்கவனகாக காண..

    இதை சொல்வதை தவிர வேறெதுவும் சொல்லத்தெரியவில்லை ஹுசைனம்மா..

    !!!!!!!!!!!அதுசரி சந்தடி சாக்கில் அக்காவா நடக்கட்டும் நடக்கட்டும்.. ஹி ஹி[சிரிக்க முயல்கிறேன்]

    பதிலளிநீக்கு
  23. அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்கா!

    முழுமையாக படித்து முடிக்கும் முன் கண்ணீர் துளிகள் கண்களை மறைத்துவிட்டன தோழி :( எத்தனையோ தாய்மார்கள் தன் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி, பிரிந்து வாழ்கிறார்களே... என்னால் அதெல்லாம் எப்படி சாத்தியமாகும்.. ஒருவேளை நான் மட்டும்தான் ஓவரா ஃபீல் பண்ணுகிறேனோ என்று நினைப்பேன். ஆனால் அதிகபட்ச தாய் உள்ளங்கள் இப்படிதான் இருக்கின்றன!!

    கவலைப்படாதீங்க தோழி! தினமும் அவருடன் ஃபோனில் பேசுங்கள். உங்களுக்கு இயலும்போதெல்லாம் போய் பார்த்து வாருங்கள். உங்கள் நல்லெண்ணங்கள் நிறைவேறி, இன்ஷா அல்லாஹ் உங்க மகன் சிறந்த கல்விமானாக வர துஆ செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. இந்த கவிதையை வாசித்துவிட்டு மனது மிகவும் கனத்துவிட்டது மலிக்கா.... எனக்கும் இதே நிலைமை வந்துவிடுமோன்னு ஒரு நடுக்கம். நம் பிள்ளைகள் நல்ல ஒழுக்கத்தோடு வாழ்ந்து ஈருலகிலும் நல்வாழ்க்கை அடைய இறைவன் கிருபை செய்வானாக.

    பதிலளிநீக்கு
  25. Arumaiyaana kavidhai Aanaal ippoadhellaam pala veettil indhak kavidhaigaldhaan arangaerugindrana

    பதிலளிநீக்கு
  26. akka tenkasi nama oor than yatha problem nalum sollunga,inshallah pakthu kellam,
    by sulaiman
    Duabi

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. திருச்சி சையது24 ஆகஸ்ட், 2012 அன்று 4:45 PM

    அன்பான உங்க மகன் அறிவானவனாய் வளருவான்!

    - திருச்சி சையது

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது