நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

”கல்”லாப்பெட்டி


நான்தான் கல்லாப் பெட்டி
நானில்லாமல் இதோ இந்த
எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி
எல்லாருக்கும் என் தயவுவேண்டும்
இன்னும் சொல்லபோனால்
என் தயவில்லாத 

வியாபாரமேயில்லை நாளும்

கோடிகள்முதல் தெருக்கோடிகள்வரை 
சுருக்குப்பை தொடங்கி 

இரும்புப் பெட்டிவரை
விதவித கோணங்களில் 

பலபல வகைகளில்
வசதிக்கேற்ப வீற்றிருப்பேன் 

என்னை உருவாக்கியவன் மனிதன்தான்
அவன் மனதிற்கேற்ப 

நான் திறந்து மூடப்படுவேன்
என்மேல் வந்துவிழும் சில்லரையும்
அதன்மேல்வந்துவிழும் 

காகிதங்களில் மட்டும்தான்
என் காதலும் என் கவனிப்பும்

ஏற்றமுள்ள மனதிடம் நானிருந்தால்
இயன்றளவு நிரம்பி வழிவேன்
மனிதனாயிருந்தும் 

மரத்துபோனவனிடம் நானிருந்தால்
என்னை நிரப்புவதே சிரமம் -அடிக்கடி
என்னை  திறக்கப்படாமல் 

திணறியும் போவேன்

கல்லாப் பெட்டி என்று சொல்லியே
”கல்”லாக்கி விட்டார்களோ என்னை
கல்லுக்கு ஏது உணர்வு
கல்லுக்கு ஏது கசிவு

உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே 

எனக்கு உணர்த்தப்பட்டதால்-அது
உழைத்து வருகிறதா? 
ஊரையடித்து வருகிறதா?
என்றெல்லாம் நான் உணர்வதில்லை
அது நல்லபணமா? அல்லது கள்ளப்பணமா?
அதுவும் எனக்குத் தெரிவதில்லை!

நான் திறக்கப்படும்போதெல்லாம்
என்னுள் போடப்படும் 

சில்லரைகளின் சப்தத்தில்
சிலிர்த்து போவேனாயென்றால் 

அதுவுமில்லை
சிரித்து மகிழ்வேனென்றால் 

அதுவும்கூட இல்லை

என்னிடம் வரும் காதிதங்களில் பல
கசங்கியும், கசிந்தும் வந்துவிழும் -அது
கண்ணீரால் கசங்கியதா?

செந்நீரால் கசிந்ததாயென
ஏதும் அறியேன்   

ஏனெனில் ’கல்’ லா நான்

என்றாலும் நான்தான் 

முதலாளி வர்க்கம்
என்னோடு யாரும் 

செய்யமாட்டார்கள் தர்க்கம்

கல்லா[வா]க நானிருந்து
இருப்போரின் இரும்புப் பெட்டியாய்
இதயம் நொறுங்குகிறேன்
இல்லாதோரின் சுருக்குப் பையாய்
இன்பம் காண்கிறேன்

எப்படியாகிலும் ஏதோ ஒருவகையில்
எல்லோருக்கும் உதவிசெய்கிறேன்
’கல்’லாவாக இருந்து
கண்ணியமாய்
என்னை காத்துக்கொள்கிறேன்...




என்ன ”கல்”லாவாகிவிட்டேன் என பார்கிறீர்களா? இந்த கவிதை சங்கமம் டீவியில் கவிராத்திரிக்காக எழுதியது. நான்குபேர்கொண்ட குழுவாக எனக்கு தரப்பட்ட தலைப்பு கல்லாப்பெட்டி. தலைப்பு கொடுத்த மதியமே எழுதிய கவிதையிது. மற்றவர்களுக்கு கொடுத்த தலைப்புகள். அஞ்சரைப்பெட்டி. வாக்குப்பெட்டி. சவப்பெட்டி. இரு ஆண்கள் இருபெண்கள் என தேர்வுகள். கடைசியில் ஒரு பெண் வரயியலாச்சூழல், அதனால்ஆண்களுக்கு மத்தியில் நான் தனித்து  சென்று கவிபாட விருப்பமில்லாததால் போகவில்லை.சூழலை தெரிவித்துக்கொண்டேன்..  அக்கவிராத்திரி நிகழ்ச்சி  இரண்டு நாள்களுக்கு முன் துபை டைம் இரவு 10,மணிக்கு தமிழன் டீவியில் ஒளிப்பரப்பானதாம்.நான்கு ஆண்கவிகளோடு.[அதையும் பார்க்கமுடியவில்லை]  நிகழ்ச்சியில் சென்றுதான் கலந்துகொள்ளயியலவில்லை இதோ இங்க நீந்தவிடுவோமுன்னு ”கல்”லையே ஓடையில் நீந்தவிட்டாச்சி.. எப்புடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

37 கருத்துகள்:

  1. என்றாலும் நான்தான்
    முதலாளி வர்க்கம்
    என்னோடு யாரும்
    செய்யமாட்டார்கள் தர்க்கம்//

    சூப்பரோ சூப்பர். எல்லாதுக்கும் எழுதிடுவீங்களோ அசத்துறீங்க..

    பதிலளிநீக்கு
  2. அருமையோ அருமையக்கா. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. எக்ஸ்குச்மி...!

    நீங்க இந்த கவிதைய டிவில படிக்கறதா இருந்ததா?

    இத நாங்க நம்பனும்...!

    சரி...! சரி...!
    கவித நல்லாத்தான் இருக்குங்க....
    "டிவி" புகழ் கவிஞர் மலிக்கா

    (எங்க ஊர்ல ரேடியோல குரல் கொடுத்தா "ரேடியோ" புகழ்...! டிவில மூஞ்ச காட்டுனா "டிவி" புகழ்.......... ஹி....! ஹி....! ஹி....! )

    பதிலளிநீக்கு
  4. //காஞ்சி முரளி கூறியது...

    எக்ஸ்குச்மி...!

    நீங்க இந்த கவிதைய டிவில படிக்கறதா இருந்ததா?

    இத நாங்க நம்பனும்...!//

    ஏன்சாமி டீவியில எங்க கவித வராதா இல்ல நாங்க படிக்கக்கூடாத நக்கலு.. நம்பகாட்டி போங்க..பெரிய பெரிய கவிஞர் சொன்ன ஒத்துகுவீங்க நாங்க என்ன பச்சக்கொயந்த இது சொன்ன நம்மபுமா இந்த உலகம் ..

    //சரி...! சரி...!
    கவித நல்லாத்தான் இருக்குங்க....
    "டிவி" புகழ் கவிஞர் மலிக்கா/

    ஏங்கப்பு ஏன் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் நல்லாத்தானே போய்கிட்டுயிருந்திச்சி..

    //(எங்க ஊர்ல ரேடியோல குரல் கொடுத்தா "ரேடியோ" புகழ்...! டிவில மூஞ்ச காட்டுனா "டிவி" புகழ்.......... ஹி....! ஹி....! ஹி....! )//

    நாங்கதான் மூஞ்சக்காட்டவேயில்லயே அப்புறம் எப்புடி ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  5. காஞ்சி முரளி கூறியது...

    ஹையாஆஆஆஆஆஆ....//

    என்ன ஜாலியா நான் படிக்காமபோனது இல்லன்னா காதுல புகைவந்திருக்குமே..
    இந்த ஹைய்யாஆஆஆஆஆஆ வா..

    பதிலளிநீக்கு
  6. சிவா கூறியது...

    என்றாலும் நான்தான்
    முதலாளி வர்க்கம்
    என்னோடு யாரும்
    செய்யமாட்டார்கள் தர்க்கம்//

    சூப்பரோ சூப்பர். எல்லாதுக்கும் எழுதிடுவீங்களோ அசத்துறீங்க..//

    என்ன செய்ய சிவா பொலப்பு அதில்லாட்டியும் அதுவா வந்துடுது.. நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  7. சுகா கூறியது...

    அருமையோ அருமையக்கா. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க வாழ்த்துகள்..// ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றிப்பா..

    பதிலளிநீக்கு
  8. ///கல்லாப் பெட்டி என்று சொல்லியே
    ”கல்”லாக்கி விட்டார்களோ என்னை
    கல்லுக்கு ஏது உணர்வு
    கல்லுக்கு ஏது கசிவு///


    அற்புதமான கவிதை தலைப்பை முடிக்கும் முன்னமே தொடங்கிவிடுவீர்கள் கவிதையை என நினைக்கிறேன், இதல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம் , வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  9. A.R.ராஜகோபாலன் கூறியது...

    ///கல்லாப் பெட்டி என்று சொல்லியே
    ”கல்”லாக்கி விட்டார்களோ என்னை
    கல்லுக்கு ஏது உணர்வு
    கல்லுக்கு ஏது கசிவு///


    அற்புதமான கவிதை தலைப்பை முடிக்கும் முன்னமே தொடங்கிவிடுவீர்கள் கவிதையை என நினைக்கிறேன், இதல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம் , வாழ்த்துக்கள் சகோதரி//

    தலைப்புகள் தரப்படும்போதே சிந்திக்கும் திறன்வந்துஒட்டிக்கொள்கிறது அண்ணா.

    எல்லாம் வல்லவனுக்கே புகழ் அனைத்தும் அவன் தந்த அருள் அதனை சிறப்பாக்கவே முயல்வேன்..

    தங்களின் அன்பார்ந்த கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  10. ///என்ன ஜாலியா நான் படிக்காமபோனது இல்லன்னா காதுல புகைவந்திருக்குமே..இந்த ஹைய்யாஆஆஆஆஆஆ வா..////

    ச்சே... ச்சே...! அதில்லைங்க....!

    பஸ்டா வந்து ரொம்ப நாளாச்சா....! அதான்...!

    நீங்க என்னன்னா...!

    பதிலளிநீக்கு
  11. அருமயான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,நன்றிகளும்....

    பதிலளிநீக்கு
  12. காஞ்சி முரளி கூறியது...

    ///என்ன ஜாலியா நான் படிக்காமபோனது இல்லன்னா காதுல புகைவந்திருக்குமே..இந்த ஹைய்யாஆஆஆஆஆஆ வா..////

    ச்சே... ச்சே...! அதில்லைங்க....!

    பஸ்டா வந்து ரொம்ப நாளாச்சா....! அதான்...!

    நீங்க என்னன்னா...!//

    அது எங்களுக்குத்தெரியாதா. சும்மா லோலாயிதான். ரொம்பாஆஆஆஅ நாளைப்புறம் சகோவின் விஜயம் சந்தோஷம்தரதா இந்த சகோவிற்க்கு.. அதுகுதான் இந்த கலாய்ப்பு..

    பதிலளிநீக்கு
  13. vidivelli கூறியது...

    அருமயான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,நன்றிகளும்....//

    தொடர் வருகைதந்து ஊக்கம் தந்துகொண்டிருக்கும் விடிவெள்ளிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  14. //நான்தான் கல்லாப் பெட்டி
    நானில்லாமல் இதோ இந்த
    எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //


    தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))

    பதிலளிநீக்கு
  15. கவிதை நீளமாக இருக்கிறதே என்று பார்த்தேன்.அத்தனை வரிகளும் தேவையான வரிகளே.நிறைவான கல்லாப்பெட்டி !

    பதிலளிநீக்கு
  16. அருமையான நிறைஞ்சிருக்கிற கல்லாப்பெட்டி :-))))

    பதிலளிநீக்கு
  17. மரத்துப்போனவர்களிடம் நான் இருந்தால்
    நிரம்புவதே கஷ்டம் என
    கல்லாப் பெட்டிக்கும் மனதிற்கும் ஆன தொடர்பை
    சூசகமாக சொல்லிப் போவதை
    ரசித்து மகிழ்ந்தேன்
    வழக்கம்போல தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. கல்லா பெட்டி கவிதை அருமை.அருமையான வ்ரிகள் பிராவகம் எடுத்து கல்லாபெட்டியை களைகட்ட வைத்துவிட்டீர்கள் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  19. ////ஜெய்லானி சொன்னது…
    //நான்தான் கல்லாப் பெட்டி
    நானில்லாமல் இதோ இந்த
    எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //


    தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))////


    Yarathu...!
    Pudusaa Vandhirukkaanga...!

    பதிலளிநீக்கு
  20. ஜெய்லானி கூறியது...

    //நான்தான் கல்லாப் பெட்டி
    நானில்லாமல் இதோ இந்த
    எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //


    தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))//

    அடடா யார்ப்பாயிது பரங்கிப்பேட்டை முத்துப்பேட்டைபக்கம் முகங்காட்டுவதுபோலத்தெரியுது.

    பேட்டைக்காரங்களுக்கு தத்துவத்த சொல்லியாக்கொடுக்கனும்..

    பதிலளிநீக்கு
  21. ஹேமா கூறியது...

    கவிதை நீளமாக இருக்கிறதே என்று பார்த்தேன்.அத்தனை வரிகளும் தேவையான வரிகளே.நிறைவான கல்லாப்பெட்டி !//

    ஆமாம் தோழி சற்று நீளமான கவிதைதான் இதுவே குறைவு ஒரு ஆளுக்கு 10 15 நிமிடங்கள். அதனால்தான் .. மிக்க நன்றி தோழி..

    பதிலளிநீக்கு
  22. அமைதிச்சாரல் கூறியது...

    அருமையான நிறைஞ்சிருக்கிற கல்லாப்பெட்டி :-))))//

    ரொம்ப சந்தோஷம் சாரல்.. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  23. //Ramani கூறியது...

    மரத்துப்போனவர்களிடம் நான் இருந்தால்
    நிரம்புவதே கஷ்டம் என
    கல்லாப் பெட்டிக்கும் மனதிற்கும் ஆன தொடர்பை
    சூசகமாக சொல்லிப் போவதை
    ரசித்து மகிழ்ந்தேன்
    வழக்கம்போல தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்.//

    ரசித்து மகிழ்ந்தமைக்கும் ரசிக்கத்தக்க கருத்துகளை தந்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள் அய்யா..

    பதிலளிநீக்கு
  24. /ஸாதிகா கூறியது...

    கல்லா பெட்டி கவிதை அருமை.அருமையான வ்ரிகள் பிராவகம் எடுத்து கல்லாபெட்டியை களைகட்ட வைத்துவிட்டீர்கள் மலிக்கா.//

    கல்லாவையும் களைகட்டவைக்கும் தங்களைபோன்றவர்களின் மனமிருந்தால்
    அன்பான கருதுகளுக்கு மிக்க மகிழ்ச்சிக்கா..

    பதிலளிநீக்கு
  25. காஞ்சி முரளி கூறியது...

    ////ஜெய்லானி சொன்னது…
    //நான்தான் கல்லாப் பெட்டி
    நானில்லாமல் இதோ இந்த
    எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //


    தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))////


    Yarathu...!
    Pudusaa Vandhirukkaanga...!//

    அதானே காணபோயிட்டாங்கன்னு வெளம்பரமெல்லாம் கொடுத்துமுல்ல சகோ. அவாளாட்டம்முல்ல தெரியுது.
    உள்ளூர் பஞ்சாயத்துபோடுகாரவுங்களுக்கே தெரியாத ஆளுங்களாம். கொஞ்சம் என்னான்னு விசாரிங்க..

    பதிலளிநீக்கு
  26. /////அடடா யார்ப்பாயிது பரங்கிப்பேட்டை முத்துப்பேட்டைபக்கம் முகங்காட்டுவதுபோலத்தெரியுது.
    பேட்டைக்காரங்களுக்கு தத்துவத்த சொல்லியாக்கொடுக்கனும்../////

    ஆஹா....!
    ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!
    ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!

    யாரு இல்லன்னு நினைச்சே...!
    ஆனா....! ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!

    பதிலளிநீக்கு
  27. உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே
    எனக்கு உணர்த்தப்பட்டதால்-அது
    உழைத்து வருகிறதா?
    ஊரையடித்து வருகிறதா?
    என்றெல்லாம் நான் உணர்வதில்லை
    அது நல்லபணமா? அல்லது கள்ளப்பணமா?
    அதுவும் எனக்குத் தெரிவதில்லை!

    இது ரொம்ப நல்ல இருக்கு.

    பதிலளிநீக்கு
  28. சே.குமார் கூறியது...

    அருமையக்கா.//

    மிக்க நன்றி குமார்..

    பதிலளிநீக்கு
  29. காஞ்சி முரளி கூறியது...

    /////அடடா யார்ப்பாயிது பரங்கிப்பேட்டை முத்துப்பேட்டைபக்கம் முகங்காட்டுவதுபோலத்தெரியுது.
    பேட்டைக்காரங்களுக்கு தத்துவத்த சொல்லியாக்கொடுக்கனும்../////

    ஆஹா....!
    ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!
    ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!

    யாரு இல்லன்னு நினைச்சே...!
    ஆனா....! ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!//

    ஆகா அப்ப யாருமில்லேன்னா கும்மிடுவிங்களா இருங்க அண்ணிகிட்ட சொல்லிகொடுக்கிறேன்..

    ஒண்ணுகூடி ஒண்ணுகூடி நாட்டுலகொஞ்சம் பங்குகேக்கலாமுன்னாதன் [எந்த நாடுன்னுமட்டும் கேக்கப்புடாது]நீங்களும் கூடிக்கிங்க ஆளாளுக்கு பங்குபோட்டுகலாம்..

    பதிலளிநீக்கு
  30. RIPHNAS MOHAMED SALIHU கூறியது...

    உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே
    எனக்கு உணர்த்தப்பட்டதால்-அது
    உழைத்து வருகிறதா?
    ஊரையடித்து வருகிறதா?
    என்றெல்லாம் நான் உணர்வதில்லை
    அது நல்லபணமா? அல்லது கள்ளப்பணமா?
    அதுவும் எனக்குத் தெரிவதில்லை!

    இது ரொம்ப நல்ல இருக்கு.//

    வாங்க சகோ வாங்க தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  31. Jaya Raman கூறியது...

    superp

    http://www.usetamil.net///

    வாங்க ஜெயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  32. என்ன மலிக்கா, இப்படி பண்ணிட்டீங்க? வந்த வாய்ப்பை இப்படி விட்டுட்டீங்களே? என்ன சமாதானம் சொன்னாலும் ஆறாது. நீங்க சொல்ற காரணம் ஏத்துக்க முடியல. போங்கப்பா!! ;-(((((

    பதிலளிநீக்கு
  33. ஹுஸைனம்மா கூறியது...
    என்ன மலிக்கா, இப்படி பண்ணிட்டீங்க? வந்த வாய்ப்பை இப்படி விட்டுட்டீங்களே? என்ன சமாதானம் சொன்னாலும் ஆறாது. நீங்க சொல்ற காரணம் ஏத்துக்க முடியல. போங்கப்பா!! ;-(((((

    // என்ன செய்ய ஹுசைனம்மா. இரு பெண்கள் இரு ஆண்கள் என சொன்னதால்தான் ஒப்புக்கொண்டேன். கடைசி நிமிடத்தில் இன்னொருபெண்ணால் வரமுடியவில்லை. ஆண்களுக்கு மத்தியில் நான்மட்டும் சற்று சங்கோஜமாக இருந்தது அதான் அன்றிரவே போன்செய்து நாளைக்கு நான் வரயில்லையின்னு சுழ்நிலையை விளக்கினேன். ஒத்துக்கொண்டார்கள்..

    இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கமால போய்விடும் அப்போது பார்ப்போம் ஹுசைனம்மா..

    பதிலளிநீக்கு
  34. வித்யாசமான தலைப்பு, வித்தியாசமான சிந்தனை... கல்லப்பெட்டியே கவி பாடுகிற மாதிரி அமைத்திருப்பது அற்புதம்..
    ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவரவிட்டுவிடீர்களே????

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது